உடலுக்கு உச்சம் தலை.
தலைக்கு உச்சம் கேசம்.
அழகான அடர்த்தியான கேசம் கொண்டவர் நடிகர்திலகம்.
இறுதிவரை உதிராத நடிப்பு கொண்ட நடிகர் திலகத்துக்கு கடைசி வரை உதிராத முடியும் கூட.
பாத்திரங்களுக்கு வித்தியாசமான ஒப்பனைகள் வேண்டும் என்பதற்காக அவர் நிறைய படங்களில் விக் அணிந்து நடித்தார்.நடிகர் திலகம்
'விக் 'அணியாமல் சொந்த முடியுடன் நடித்த சில திரைப்படங்களை பார்க்கும் போது
இவ்வளவு அழகான தலைக் கேசத்தை கொண்ட நடிகர்திலகம்
இவர் இப்படியே நடித்திருக்கலாமே பல படங்களில் என்ற ஆசை பெரும்பாலான ரசிகர்களுக்கு இருந்தது.
விக் வைத்து நடிக்கும் பழக்கம் அதிகமாக 1970 களுக்குப் பின் தான் அதிகம் இருந்தது.அதற்கு முந்தைய கால கட்டங்களில் விக் வைத்து நடித்திருந்தாலும் நடிகர்திலகம் அதற்கேற்ற வித்தியாசமான கதா பாத்திரங்கள், புராண சரித்திர படங்களுக்குத் தான் வேறுபாடு தெரிய வேண்டும் என்பதற்கு உபயோகப்படுத்தினார்.
நடிகர் திலகம் ' விக் ' அணியாமல் தன் சொந்த முடியுடன் நடித்த திரைப்படங்கள் :
நடிகர்திலகம் தான் நடித்த முதல் படத்திலேயே தன் ஒரிஜினல் முடியுடன் தான் நடித்தார்.அது படத்திற்கும் நன்றாக பொருந்தி விட்டது.
அதற்குப் பின் பூங்கோதை திரும்பிப் பார் அன்பு கண்கள் மனிதனும் மிருகமும் மனோகரா இல்லாத ஜோதி ஆகிய படங்களிலும் தன் ஒரிஜினல் முடியுடன் நடித்தார் நடிகர்திலகம்.
இதற்கு முன் வெளிவந்த
'அந்த நாள்' ஹேர் ஸ்டைல் எல்லோரையும் கவர்ந்தது. படிய மேல் வாரி தூக்கிய சிலை அலங்காரத்துடன் கல்லூரி இளைஞன் வேடத்திற்கு அது கச்சிதமாக பொருந்தியது.
அடுத்ததாக கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி துளி விஷம் கூண்டுக்கிளி தூக்குத்தூக்கி எதிர்பாராதது உலகம் பலவிதம் கோடீஸ்வரன் கள்வனின் காதலி படங்கள் எல்லாம் நடிகர்திலகம் தன் ஒரிஜினல் முடியுடன் நடித்த படங்கள்.
நல்ல வீடு நானே ராஜா பெண்ணின் பெருமை ராஜா ராணி அமரதீபம் மக்களைப் பெற்ற மகராசி வணங்காமுடி புதையல் மணமகன் தேவை தங்கமலை ரகசியம் அம்பிகாபதி பாக்கியவதி உத்தமபுத்திரன்
பதி பக்தி படங்களிலும் ஒரிஜினல் முடியுடன் நடித்தார்.இவற்றில் குறிப்பாக உத்தமபுத்திரன் ஹேர்ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அழகு மிகுந்த முகத்துடன் இரு வேறு ஹேர் ஸ்டைலுடன் இரு தோற்றங்களிலும் அட்டகாசமாக இருந்தார். புராணப்படமான சம்பூர்ண ராமாயணம் படத்திலும் தன் ஒரிஜினல் முடியுடன் நடித்தார் நடிகர் திலகம்.
பொம்மை கல்யாணம் சாரங்கதாரா சபாஷ் மீனா காத்தவராயன் தங்கப்பதுமை நான் சொல்லும் ரகசியம் போன்ற படங்களில் தன் ஒரிஜினல் முடியுடன் நடித்தார் சிவாஜி.
வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை தெய்வப்பிறவி பாவ மன்னிப்பு பாசமலர் மருதநாட்டு வீரன் பாலும் பழமும் கப்பலோட்டிய தமிழன் பார்த்தால் பசி தீரும் வளர்பிறை பலே பாண்டியா செந்தாமரை
பந்த பாசம் ஆலயமணி சித்தூர் ராணி பத்மினி பார் மகளே பார் கர்ணன் ,இவற்றுடன் இன்னும் சில படங்கள் அந்தக் கதைகளுக்கு தேவையான வித்தியாசமான ஒப்பனைகள் வேண்டும் என்பதற்காக விக் பயன்படுத்தினார் .
நவராத்திரி படத்திற்காக ஒன்பது வேடங்களுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக அந்த வேடங்களுக்கு ஏற்றவாறு பொருத்தமான விக்கை பயன்படுத்தினர்.
ஊட்டி வரை உறவு என்ற கலர் படத்தில் நடிகர் திலகம் தன் சொந்த முடியுடன் நடித்தார் .
என் தம்பி கலாட்டா கல்யாணம் போன்ற படங்களுக்கும் சொந்த முடியுடன் நடித்தார் .
லட்சுமி கல்யாணம் படத்திலும் நடிகர்திலகம் தன் சொந்த முடியுடன் நடித்தார் .
இந்தப் படத்தில் நடிகர் திலகத்தின் மிக மெலிந்த தோற்றம் உடல்வாகு சிகை அலங்காரம் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது.
தங்கச் சுரங்கம் அஞ்சல் பெட்டி 520 சிவந்தமண் மூன்று தெய்வங்கள் போன்ற படங்களிலும் நடிகர் திலகம் தன் சொந்த முடியுடன் நடித்தார்.
சிவந்த மண் மூன்று தெய்வங்கள் படங்களில் நடிகர் திலகத்தின் ஒரிஜினல் முடியுடன் கூடிய தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது .
இந்தக் காலகட்டத்திற்கு பின்னால் தான் நடிகர் திலகம் ஏராளமான படங்களில் விக் வைத்து அணிந்து
நடிக்க தொடங்கினார் எனலாம்.
இதற்குப் பின் நீண்ட காலத்திற்குப் பின் 1985 இல் வெளியான முதல் மரியாதை படத்தில் பாரதிராஜா நடிகர் திலகத்தை அவருடைய ஒரிஜினல் முடியுடன் நடிக்க வைத்தார்.
அதற்குப் பின் நடிகர் திலகம் கடைசியாக தன் ஒரிஜினல் முடியுடன் நடித்தது தேவர் மகன் படத்தில்.
பிற்காலத்தில் நடிகர்கள் ஏராளமான படங்களில் விக் வைத்து அணிந்து நடித்தாலும் குறிப்பிட்ட சில வேடங்களைத் தவிர பெரும்பாலும் ஒரிஜினலாகவே தோற்றமளிக்கும் படியான வித்தியாசம் தெரியாத விக்குகள் வைத்து அணிந்து நடித்தார்.
விக் வைத்து நடித்தாலும் ,
தன் சொந்த முடியுடன் நடித்தாலும்
எந்த ஒரு வேடம் ஏற்றாலும்,
அந்த வேடத்திற்கு பொருந்தும் படியான தன் முகத்தோற்றத்தை அமைப்பதில் பெரும் சிரத்தை எடுத்துக் கொள்வார் நடிகர் திலகம்.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக