1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

காலம் மாறலாம், சிவாஜியின் கௌரவம் மாறுமா?

காலம் மாறலாம் 
சிவாஜியின் கௌரவம் மாறுமா?
எத்தனை காலம் ஆனாலும்
எத்தனை நடிப்பு வந்தாலும்
அத்தனை அடியும் முடியும் அவர் கொடுத்ததில் தானே?
காலம் மாறலாம் 
சிவாஜியின் கௌரவம் மாறுமா? 

எங்கே என்று
நடிப்பை எங்கே என்று
தேடதேட அது ஊற்றாய் காட்டுமே 
பார்க்க பார்க்க
அதை பார்க்க பார்க்க
நெஞ்சம் பூவாய் மலருமே 
காலம் மாறலாம்
சிவாஜியின் கௌரவம் மாறுமா?

திலகமெல்லாம்
நெற்றியில் இட்ட திலகமெல்லாம்
வட்டப் பொட்டாக
முகத்தில் வட்டப் பொட்டாக
பொலிவாக ஒரு சிறப்பாகுமே 
நடிப்புக்கெல்லாம் அவர் தான் திலகமே 
அவர் போல் இல்லை எவருமே 
காலம் மாறலாம் 
சிவாஜியின் கௌரவம் மாறுமா 

நடிப்பினிலே 
சிவாஜியின் நடிப்பினிலே
வேடத்திலே
போட்ட வேடத்திலே 
நெஞ்சத்திலே
மக்கள் நெஞ்சத்திலே 
மறக்குமா
உயிருள்ளவரை மறக்குமா 
காலம் மாறலாம்
சிவாஜியின் கௌரவம் மாறுமா? 

கொடுத்ததெல்லாம்
அவர் கொடுத்ததெல்லாம்
அது ஓர் உயர்ந்த வரமே
பார்த்தவருக்கு
அதை பார்த்தவருக்கு
அது ஓர் பிச்சை வரமே
எல்லாம் வல்ல கடவுளே
அவரில் கலந்தது தெளிவுடனே 
காலம் மாறலாம்
சிவாஜியின் கௌரவம் மாறுமா? 

குணத்திலே
ஓர் கள்ளமில்லை
பேச்சினிலே
ஓர் வஞ்சமில்லை
பண்பினிலே
ஓர் தவறுமில்லை
கொடுப்பதிலே
ஓர் குறையுமில்லை
உயர்ந்தமனிதன்
வாழ்ந்த மகான் வாழ்ந்ததிலே
காலம் மாறலாம் 
சிவாஜியின் கௌரவம் மாறுமா?

செந்தில்வேல் சிவராஜ்






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்