1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

நம்ப முடியாத சிவாஜி பட வெளியீடுகள்

நம்ப முடியாத சிவாஜி பட வெளியீடுகள்..

நடிகர் திலகத்தைப் பற்றி பெரும்பாலானவர்கள் பேசும் போது அவர் கர்ணனாக நடித்தார்,கட்டபொம்மன் ஆக நடித்தார், கப்பலோட்டிய தமிழனாக நடித்தார் என்று சொல்லி விடுவார்கள்.   ஆனால் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களும் எப்படிப்பட்டது, ஒரு படத்துக்கும் அடுத்தபடியாக வெளியாகும் படத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் காட்டி நடித்துள்ளார் என்பதை பார்க்கும்போது அது ஆச்சரியமாக மட்டுமல்ல, அதிசயமாகவும் உள்ளது.
அது பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

3.2.56 இல் வெளிவந்தது தெனாலிராமன் திரைப்படம்.
 17 .2. 56-ல் வெளியான படம் பெண்ணின் பெருமை .தெனாலிராமன் ஒரு நகைச்சுவை விதூஷகன்.அதே சமயம் ஒரு ராஜதந்திரியும் கூட. நகைச்சுவை கலந்த இந்த தெனாலிராமன் பாத்திரத்தை செய்த நடிகர் திலகத்தின் அடுத்த படத்தைப் பார்த்தால் அது பெரிய பிரமிப்பை உண்டாக்கும் .ஆமாம், நடிகர் திலகம் தெனாலிராமனுக்கு அடுத்து செய்த படம் பெண்ணின் பெருமை. இந்தப் பெண்ணின் பெருமை படத்தில் நடிகர் திலகம் ஏற்ற வேடம் கிட்டத்தட்ட வில்லன் வேடமே.கூட பிறந்த சகோதரனையே துன்புறுத்தும் தம்பியாக நடித்திருப்பார் சிவாஜி கணேசன் .முதலில் செய்த தெனாலிராமன் பாத்திரத்துடன் இந்தப் பெண்ணின் பெருமை படத்தில்  செய்த வேடத்தையும் பார்த்தால் ஒரே மனிதரா இப்படி செய்திருக்கிறார் என்ற ஆச்சரியத்தை கொடுக்கும். பெண்ணின் பெருமையில் அந்த வில்லத்தனமான சிவாஜி கணேசன் பாத்திரத்தை பார்க்கும்போது தெனாலிராமன் படத்தில் நடித்தது வேறொரு நடிகரா?  என்ற எண்ணத்தை வரவழைக்கும். முகத்தோற்றத்திலேயே படு வித்தியாசத்தை காட்டி இருப்பார் நடிகர் திலகம் இந்த இரு படங்களில்.


1. 11.56-ல் வெளியான படம் ரங்கோன் ராதா. 22/2/57ல் வெளியான படம் மக்களைப் பெற்ற மகராசி. ரங்கோன் ராதாவில் தாலி கட்டிய மனைவியையே  கொல்ல  துடிக்கும் கேரக்டர் .நடை உடை பாவனைகளில் எத்தனை வித்தியாசத்தை காட்டி நடித்து இருப்பார் நடிகர் திலகம். இதற்கு அடுத்தபடியாக மக்களைப் பெற்ற மகராசியில் கொங்கு தமிழ் பேசும் செங்கோடனாக நடித்திருப்பார். முகத்தோற்றத்திலும் உடல் தோற்றத்திலும் அங்க அசைவுகளிலும் இந்த இரண்டு படங்களிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல் இருக்கும். இவற்றை அதிசயம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும் ?

17 .5. 57 இல் வெளியான மணமகன் தேவை படமும் 29. 6 .57 இல் வெளியான தங்கமலை ரகசியம் படமும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றது தான். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இந்த படத்தையும் பாருங்கள். யாரால் நம்ப முடியும் ?தங்கமலை ரகசியம் படத்திலியே
முதலில் வரும்  டார்ஜான் வேடத்திற்கும் பிற்பகுதியில் வரும் வேடத்திற்குமே ஏகப்பட்ட வித்தியாசங்களை காட்டி நடித்திருப்பார் நடிகர் திலகம்.


7 .2 .58 இல் வெளியான படம் உத்தமபுத்திரன். 14 .3.58 ல் வெளியான படம் பதிபக்தி. ஒன்று சரித்திர படம் .ஒன்று சமூக படம்.
விக்ரமனாகவும் பார்த்திபனாகவும் நடித்த நடிகர் தான் பதிபக்தியில் நடித்துள்ளாரா  என்ற சந்தேகம் வராமல் தான் இருக்கின்றதா ? நடிகர் திலகத்தைப் பற்றிய எந்த விவரமும் இல்லாமல் இந்த இரண்டு படங்களையும் வெளியிட்டு மக்களைப் பார்க்கச் சொல்லி இருந்தால் அப்போது தெரிந்திருக்கும் நடிகர் திலகத்தின் அதிசய ஆற்றல்.நடிகர் திலகம் தொடர்ந்து படங்களை வெளியிட்டுக் கொண்டே வந்தார். நாமும் அதை பார்த்துக்கொண்டே  இருந்தோம். அந்த அந்த படங்களை பார்த்து ரசித்து விட்டு செல்வதோடு சரி. மேற்கொண்டு எங்கே யோசிக்க விட்டார் நடிகர் திலகம். வரிசையாக படங்களை கொடுத்து கொடுத்து ஏதும் யோசிக்க விடாமல் செய்துவிட்டார். அந்த அந்த படத்தில் நடித்த பெருமை ஆளுமைகளே  நம்மை ஆளுகின்றன .

3. 10 .58 ல் வெளிவந்த படம் சபாஷ் மீனா .7 .11 .58 ல் வெளிவந்த படம் காத்தவராயன்.
இந்த சபாஷ் மீனாவுக்கும் காத்தவராயனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா ?
இது அவரை படைத்த பிரம்மனுக்கே  வெளிச்சம். இதில் சபாஷ் மீனாவில் பேச்சு மொழி வேறு. காத்தவராயினில் பேச்சு மொழி வேறு. திக்கு முக்காட வைத்து விடுகின்றது சிவாஜி பட ஆராய்ச்சி .

16.5. 59இல் வெளியான படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.
 21 .8 .59 இல் வெளியானவுடன் மரகதம்.
ஆசிய ஆப்பிரிக்கப்பட விழாவில் விருதுக்காக நடிகர் திலகத்தை தேர்வு செய்த பின் அவர் மேடையில் தோன்றிய போது நடிகர் திலகத்தின் உருவத்தை பார்த்து அங்கே கூடியிருந்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டார்களாம். இவரா வீரபாண்டிய கட்டபொம்மன் ஆக நடித்தது என்று! அதே மேடையில் அவர்களுக்கு மரகதம் படத்தை காட்டி இருந்தால் கண்டிப்பாக நம்பி இருக்க மாட்டார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி ஒரு படத்தை செய்துவிட்டு அடுத்ததாக மரகதம் போன்றதொரு படத்தை செய்ய எந்த நடிகர்கள் முன் வருவார்கள் என்பதும் இங்கே கேள்வியாகின்றது ?

31. 10. 59 இல் வெளியான படம் பாகப்பிரிவினை. 14 .1 .60 ல்
வெளியான படம் இரும்புத்திரை.
பாகப்பிரிவினை கை விளங்காத கண்ணையன் தான் இரும்புத்திரை மாஸ்டரா?
இந்த இரண்டு படங்களிலும் அந்த உடல் தோற்றத்தில் கூட எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை மனதில் நினைத்திருக்கிறீர்களா தமிழ் மக்களே ! 

16.6. 61 ல் வெளியான படம்
பாவமன்னிப்பு. 21. 4 .61 இல் வெளியான படம் புனர்ஜென்மம்.
பாவ மன்னிப்பு படத்தில் நடிகர் திலகம் சற்று குண்டாக இருப்பார். பூசினாற்  போல முகம் .அடுத்த படத்தில்ல இதற்கு நேரெதிர்.
ஐயா எதைத்தான் நம்புவது ?
சாந்தமே உருவாக எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாத தூய்மையே உருவமாக பாவமன்னிப்பு படத்தில் நடித்த நடிகர் திலகம் அடுத்து நடித்த இந்த புனர்ஜென்மம் படத்தில் ஏற்ற கேரக்டர் பக்கா குடிகாரனாக.? இதையெல்லாம் எப்படி சாத்தியப்படுத்தினாரோ நடிகர் திலகம் ?


9.9.61 ல் வெளியான படம் பாலும் பழமும். 7. 11 .61 இல் வெளியான படம் கப்பலோட்டிய தமிழன்  .
அடடா என்னத்த சொல்ல.?
கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளாமல் இருக்கத்தான் முடிகின்றதா ? இந்த இரண்டு கேரக்டர்கள் தான் எப்படிப்பட்ட கேரக்டர்கள். பாலும் படமும் படத்தில் அடக்கமான உடல்வாகு. கப்பலோட்டிய தமிழன் படத்தில் சற்று பருமனான உடல்வாகு.
இதுவே பெரிய வித்தியாசத்தை காட்டுகின்றது. அப்புறம் அந்த நடிப்புகள்? இப்போது  இருக்கும் இளவட்ட பசங்கள் எல்லாம் இப்போது  வரும் ஒரு சாதாரண மசாலா படத்தையே வேற லெவல் வேற லெவல் என்று என்று கூறுகிறார்களே? இதையெல்லாம் என்னவென்று சொல்வது ?


14..4.62ல் வெளியான படம் படித்தால் மட்டும் போதுமா. 26 5 62 இல் வெளியான படம் பலே பாண்டியா. படித்தால் மட்டும் போதுமாவில் காட்டுகின்ற முரட்டு நடிப்பையும், பலே பாண்டியாவில் அந்த மூன்று வேட நடிப்புகளையும் 
செய்ய அந்தக் குறுகிய கால இடைவெளியில் நடிகர் திலகம் என்னதான் சிறப்பு பயிற்சி எடுத்திருக்க முடியும். அதுவும் பலே பாண்டியாவை 11 நாளில் முடித்தாராம்.அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் தான் எவ்வளவு வித்தியாசங்கள் ? நடிகர் திலகம் ஓர் அதிசய மனிதராகத்தான் தோன்றுகிறார். 

14 1 64 ல் வெளியான படம் கர்ணன்.
கர்ணனாக ஒரு நடிகர் நடிக்க வேண்டும் என்றால் எவ்வளவு உழைப்பை தர வேண்டியது இருக்கும் ,எவ்வளவு பயிற்சி செய்ய வேண்டும். கர்ணன் படத்தில் நடிகர் திலகம் செய்திருப்பதை பார்த்தால் வேறு நடிகராக இருந்தால் இரண்டு வருடம் பயிற்சி செய்திருந்தாலும் அதற்கு இணையாக அல்ல அடுத்தபடியாக கூட நினைத்துப் பார்க்க முடியுமா ? கர்ணனுக்கு அடுத்தபடியாக வெளியான படம் பச்சை விளக்கு( 3 4 64). கர்ணனாக நடித்தவர் அடுத்த படத்தில் ரயில் சாரதியாக நடித்திருக்கிறார் .
பச்சை விளக்கு படத்தில்.அடுத்தபடியாக புரபசராக ஆண்டவன் கட்டளையில் நடிக்கிறார். 
கர்ணன் ,ரயில் சாரதி, புரபசர் ?
இவையெல்லாம் எப்படி அமைந்தது ? எப்படி செய்தார் நடிகர்திலகம்?
ஆச்சரியங்கள் ஆச்சரியங்கள் ஆகவே இருக்கின்றது. யோசிக்க ஆரம்பித்தால் அது அதிசயமாக மாறிவிடுகிறது.

12 9 64 வெளிவந்த இடம் புதிய பறவை.
3.11 .64 வெளிவந்த படம் முரடன் முத்து.
கதாநாயகன் செய்த குற்றத்தை காதலுடன் சொன்ன படம் புதிய பறவை. அதில் நடித்த கதாநாயகன் தான் முத்துவாக முரட்டு தோற்றத்தில் அதிலும்  ஒரு நளினத்தையும் கலந்து முரடன் முத்துவில் செய்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது பெரும் வியப்பு ,மலைப்பு.புதிய பறவை கதை என்ன? காட்சி என்ன? நடிப்பு என்ன? அடுத்த படமான முரடன் முத்துவில் அவையெல்லாம் அப்படியே தலை கீழ்.நடிகர் திலகம் ஒரு மேஜிக் மேன். 

3.11.64 ல் வெளியான படம் நவராத்திரி. இது நடிகர் திலகத்தின் நூறாவது படம் .
14. 1. 65-ல் வெளியான படம் பழனி.
நவராத்திரி படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த ஒன்பது வேடங்களையும் நவராத்திரியில் செய்துவிட்டு அடுத்ததாக பழனியில் அவர் செய்த கேரக்டர் ஒரு விவசாயி கேரக்டர். பழனி படத்தில் நடிகர் திலகத்தின் உருவ அமைப்பை பார்க்கும் போது அது எவ்வளவு பெரிய வித்தியாசத்தை காட்டுகின்றது. உடல் மொழி அங்கஅசைவு, பேச்சு என்று சகலத்திலும் படு வித்யாசத்தை காட்டி இருப்பார் நடிகர் திலகம். நவராத்திரி படத்தில் கூட ஒரு விவசாயி கேரக்டரை செய்திருப்பார் சிவாஜி. அந்த விவசாயி கேரக்டருக்கும் அடுத்த படியாக செய்த இந்த பழனி விவசாயி கேரக்டருக்கும் எத்தனை எத்தனை வித்தியாசங்கள் ? 


31. 7.65 ல் வெளியானது திருவிளையாடல். நீல வானம் வெளியானது 10.12.65.
திருவிளையாடல் படம் ஒரு தமிழ் சினிமாவின் மிகப் பிரமாண்டமான புராண படம்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிவனின் உருவத்தை காட்டிய நடிகர் திலகம் நீல வானத்தில் சாந்தி தியேட்டரில் டிக்கெட் கிடைக்கும் ஏழை இளைஞராக நடித்து நம்மை நம்பாமல் செய்தார். நீல வானத்தில் வந்த அந்த  அப்பாவி இளைஞர்தான்  திருவிளையாடலில் வந்த கம்பீரமான சிவனா? 
திருவிளையாடலில் அந்த மிடுக்கு நடை எல்லாம் நீலவானத்தில் இல்லாது போய்  இருக்கும் .

28/7/67-ல் வெளியானது திருவருட்செல்வர் 1. 11 .67-ல் வெளியானது இருமலர்கள் .
அப்பராக வந்தார். சேக்கிழாராக வந்தார். சுந்தரராக வந்தார் .சலவை செய்யும் சிவனடியாராக கூட வந்தார்.மன்னராக வந்தார்.திருவருட்செல்வரில்.. அந்த எல்லா வேடங்களுக்கும் கூட பல  வித்தியாசங்களை காட்டியிருப்பார் நடிகர் திலகம் .அதிலும் அந்த அப்பர் வேடம் எல்லாம் படத்தின் ஆரம்பத்தில் மன்னராக வந்த சிவாஜியா என்று மலைக்க வைத்த பாத்திரம் .அந்த அப்பர் பெருமானாக  நடித்தவர் தான் அடுத்த படமான இருமலர்கள் படத்தில் பத்மினியுடன் டூயட் பாடி நடித்தார் என்பதை நினைக்கும் போதுதான் வியப்புக்கு மேலே வியப்பு வரத்தானே செய்கின்றது.

11.4. 68 ல் வெளியான படம் ஹரிச்சந்திரா .12. 4. 68 ல் வெளியான படம்  கலாட்டா கல்யாணம் .
அரிச்சந்திரா ஒரு சீரியஸ் கதை. கலாட்டா கல்யாணம் காமெடி கதை.
அடுத்தடுத்து வெளியான இந்த இரு படங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது?
இரு படங்களிலும் டைட்டில் கார்டில் சிவாஜி கணேசன் என்று போடுவார்களே அது தான் சம்பந்தம் !

27.7.68ல் வெளியான படம் தில்லானா மோகனாம்பாள்
 21 .10. 68 ல் வெளியான படம் எங்க ஊர் ராஜா ..
சிக்கல் சண்முக சுந்தரத்தை அடுத்த படமான எங்க ஊர் ராஜாவில்  விஜய ரகுநாத சேதுபதியாக எப்படி மாற்றிகாட்டியிருப்பார் நடிக மேதை. சிக்கலாருக்கு மீசை இல்லை .அதை விடுங்கள். ஆனா விஜய  ரகுநாத சேதுபதியின் கம்பீரத்தை எப்படி மறைத்திருப்பார் பாருங்கள் .வெகுளியான சிக்கலார் வெகுண்டெழும் சேதுபதியாக மாற நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் ? 


20. 2.70-ல் வெளியானவுடன் விளையாட்டு பிள்ளை .11.4.70 ல்  வெளியான படம்  வியட்நாம் வீடு .
விளையாட்டுப் பிள்ளையில்  வீரர் .
வியட்நாம் வீட்டில் ஐயர்.
விளையாட்டுப் பிள்ளை படத்தில்  எல்லா காட்சிகளிலும் நடிகர் திலகம் நெஞ்சை நிமிர்த்தியே நடித்திருப்பார் .அந்த கெஞ்சு நிமிர்த்தல் வியட்நாம் வீட்டில் எந்த ஒரு காட்சியிலும்  இருக்காது .இதுபோல பல வித்தியாசங்கள் இரண்டுக்கும்.

11 3 7 2 இல் வெளியான படம் ஞானஒளி.
6 5 72 இல் வெளியான படம் பட்டிக்காடா பட்டணமா.
ஞான ஒளி ஆண்டனிக்கும் பட்டிக்காடா பட்டணமா மூக்கையா சேர்வைக்கும் 100 வித்யாசங்கள்.

29 9 72 இல் வெளியான படம் வசந்த மாளிகை. 7 12 72 இல் வெளியான இடம் நீதி .
வசந்தமாளிகையில் ஜமீன் கம்பீரத்தை காட்டியிருப்பார் நடிகர் திலகம் .நீதியில் லாரி டிரைவரின் கம்பீரத்தை காட்டி இருப்பார் நடிகர் திலகம் .இந்த இரண்டு கம்பீரங்களும் வேறு வேறானவை.
நடிகர் திலகத்தின் உடல், முக ,பாவனை அம்சங்களை நடிகர் திலகம்  தன்னுடைய மற்ற படங்களில் கூட காட்டி இருக்க மாட்டார் .

15 7 73 ல் வெளியான படம் எங்கள் தங்க ராஜா. 25 10 73 ல் வெளியான படம் கௌரவம் .
பட்டாக்கத்தி பைரவரை பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆக மாற்ற நடிகர்திலகத்துக்கு  சிரமம் இல்லை தான் .ஏனென்றால் அவர்தான் கூடு விட்டு கூடு பாயும் வித்தை அறிந்தவர் ஆயிற்றே.

 தமிழ் சினிமாவின் ரசிகப் பெருமக்களே ! சினிமாவை நீங்கள் விரும்புவராக இருந்தால் ,நடிப்பை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இருந்தால் 
முதலில் இந்த திரைப்படங்களை பாருங்கள் ...

நன்றி வணக்கம்.
செந்தில் வேல் சிவராஜ் ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்