சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி புரொடக்சன்சின் 100 நாள் வெள்ளிவிழா படங்கள்

சிவாஜி பிலிம்ஸ்  சிவாஜி புரொடக்சன் தயாரித்து 100 நாள் வெள்ளிவிழா ஓடிய திரைப்படங்கள் :

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல திரைப்படங்கள் சிவாஜிபிலிம்சால் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இது போக ,ராஜா மணிபிச்சர்ஸ், சாந்தி பிலிம்ஸ் ,பிரபு ராம் பிக்சர்ஸ் ,ராம்குமார் பிக்சர்ஸ் என்ற பெயர்களில் நடிகர் திலகம் நடித்த பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 
இந்தப் பதிவில் சிவாஜி பிலிம்ஸ் சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்த படங்களை மட்டும் நாம் பார்க்கலாம் 

1956 இல் சிவாஜி நடித்த படம் அமரதீபம். ஸ்ரீதர் கதை வசனத்தில் டி பிரகாஸ்ராவ் இயக்கிய படம் இது .தமிழில் வெற்றி அடைந்த இந்த படத்தை  இந்தியில் தயாரிக்க சிவாஜி கணேசன்  முடிவு செய்தார்.சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு தேவானந்த் ,வைஜெயந்தி மாலா நடிக்க இந்தப் படம் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டது. அமர்தீப் என்பது இந்தி பட தலைப்பாகும் .
சிவாஜி ப்ரொடக்சன் தயாரித்த முதல் படம் இது .இந்தியிலும் இது நல்ல வெற்றி பெற்றது. தமிழ் அமரதீபம் 100 நாள் ஓடி வெற்றி கண்ட படம்.

1964ல் நடிகர் திலகம் தனது சிவாஜி பிலிம்ஸ் என்ற பேனரில் மிகுந்த பொருட் செலவில் வண்ணத்தில் 
ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டார். அப்படி சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த முதல் படம் புதிய பறவை.மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்தப் படம் 100 நாள் ஓடி வெற்றி கண்ட படமாகும்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் இன்று பார்த்தாலும் வியப்பை தராமல் இருக்காது.

1970இல் சிவாஜி புரெடக்ஷன்ஸ் பேனரில்  முதல் முறையாக நேரடியாக தமிழில் தயாரிக்கப்பட்ட படம் வியட்நாம் வீடு. இந்தப் படம் கருப்பு வெள்ளையில்தான் தயாரிக்கப்பட்டது. இந்தப் படம் 100 நாள் ஓடி வெற்றி கண்ட படமாகும்.

1974 இல் வெளியான படம் தங்கப்பதக்கம். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான படம் இது. போலீசாக நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஆசையை விதைத்த படம் தங்கப்பதக்கம். 
சென்னையில் இந்தப் படம் மூன்று திரையரங்குகளில் வெளியாகி மூன்று திரையரங்குகளிலும் வெள்ளி விழா ஓடி சாதனை படைத்தது .மேலும் திருச்சி சேலம் ஆகிய ஊர்களிலும்  வெள்ளி விழா ஓடி சாதனை படைத்த படம் தங்கப் பதக்கம். 

1977-இல் சிவாஜி புரொடக்ஷன்தயாரிப்பில்  வெளியான படம் அண்ணன் ஒரு கோயில். இந்தப் படத்தை இயக்கியவர் கே. விஜயன். பாசமலர் போலவே இதுவும் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை தான். நல்ல வசூலை செய்த இந்த படம் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம்.

சிவாஜி ப்ரொடக்சன் தயாரித்த தமிழ் திரை உலகின் மாபெரும் வெற்றி வசூல் திரைப்படம் திரிசூலம். இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1979.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த படம் இது. சென்னையில் மூன்று திரையரங்குகளில் வெள்ளி விழா கண்ட இந்த படம் மொத்தம் எட்டு அரங்குகளில் வெள்ளிவிழா ஓடி முதன் முதலாக 8 அரங்குகளில் வெள்ளிவிழா ஓடிய தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது .

சிவாஜி புரொடக்சன்ஸின் தயாரிப்பான வா கண்ணா வா வெளியான ஆண்டு 1982. இந்தப் படமும் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படமாகும். இந்த படத்தை இயக்கியவர் யோகானந்த். நல்ல ஒரு வித்தியாசமான குடும்ப பின்னணியில் உருவான திரைப்படம் இது .

1983ல் சிவாஜி புரொடக்ஷன்ஸ்  தயாரித்து வெளியான படம் சந்திப்பு .ஏராளமான நட்சத்திரங்கள் நடித்த படம் இது. நடிகர் திலகத்துடன் இளைய திலகம் இணைந்து நடித்த படம் இது. சந்திப்பு மதுரையில் வெள்ளி விழா ஓடி வெற்றி கண்ட படமாகும்.


இனி சிவாஜி ப்ரொடக்ஷன் தயாரித்து 100 நாட்களும் வெள்ளி விழாவும் ஓடி நடிகர் திலகம் நடிக்காத திரைப்படங்கள் :
1986 இல் வெளிவந்த படம் அறுவடை நாள். இளைய திலகம் பிரபு கதாநாயகனாக நடித்த படம். ஜி எம் குமார் இயக்கிய திரைப்படம். பல புதிய கலைஞர்களை சிவாஜி புரொடக்ஷன்ஸ் அறிமுகப்படுத்திய படமும் கூட.
நல்ல ஒரு கிராமிய குடும்ப வித்யாசமான திரைக்களத்தில் வெளிவந்த படம் அறுவடை நாள்.
இந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படமாகும் ..

சிவாஜி புரொடக்ஷன் தயாரித்து 1987-ல் வெளிவந்த படம் மை டியர் மார்த்தாண்டன். 'கம்மிங் டு அமெரிக்கா 'என்ற ஆங்கில கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் மைடியர் மார்த்தாண்டன். இயக்குனர் பிரதாப் போத்தன்.
சமூகக் கதையுடன் ஒரு ஜமீன் கதையையும் இணைத்து படு வித்தியாசமாக அந்தக் காலகட்டங்களில் வெளிவந்த படம் இது ஒன்றே.இளையராஜாவின் அதிரடி இசையில் 10 பாடல்கள் இடம் பெற்ற படம் இது.மை டியர் மார்த்தாண்டன் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படமாகும். 

சிவாஜி புரொடக்‌ஷன் தயாரித்து கமலஹாசன் இளைய திலகம் பிரபு இணைந்து நடித்து வெளிவந்த படம் வெற்றி விழா .படம் வெளிவந்த ஆண்டு 1989. படம் வெளிவருவதற்கு முன்பே  பாடல்கள் மிகுந்த பிரபலமான படம் இது .
இந்தப் படத்தின் ஆடியோ கேசட் விற்பனை ஒரு லட்சத்துக்கு மேல் விற்பனையாகி பிளாட்டினம் டிஷ்க்  பெற்றது என்ற சிறப்பு பெற்ற படம். இந்தப் படமும் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படமாகும்.

1991ல் இளைய திலகம் பிரபு நடித்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம் தாலாட்டு கேக்குதம்மா. அந்த நேரத்தில் இதன் வெற்றி குறிப்பிட வேண்டிய ஒன்று. அப்போது ரஜினியின் தளபதி கமலஹாசனின் குணா இந்த இரண்டு படங்களுடன் மேலும் பல படங்களுடன் வெளியானது தாலாட்டு கேக்குதம்மா .மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்ததுடன் நல்ல பெயரையும் பெற்று தந்தது.

சிவாஜி புரோடக்சன் தயாரித்து 1992ல் வெளிவந்த படம் ரஜினிகாந்த் நடித்த மன்னன். இந்த படம் சிவாஜி புரடக்ஷன்ஸ் என்ற பெயரில் இளைய திலகம் பிரபு தயாரித்த  படம். இளைய திலகம் பிரபு ஒரே ஒரு காட்சியில் பெயருக்காக நடித்திருப்பார்.நடிகர் திலகம் இளைய திலகம் ஆகிய இருவரும் நடிக்காமல் முதன்முதலாக வேறு கதாநாயகனை வைத்து சிவாஜி புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்ட  முதல் படம். இந்தப் படம் வெள்ளி விழா ஓடிய படமாகும். 

இளைய திலகம் பிரபுவின் நூறாவது படம் ராஜகுமாரன். இந்தப் படம் நாகர்கோவிலில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 

சிவாஜி புரொடக்சன் தயாரித்து 2005 இல் வெளிவந்த படம் சந்திரமுகி. இதில் இளைய திலகம் பிரபு ரஜினிகாந்த் இணைந்து நடித்திருந்தார்கள். இயக்குனர் பி வாசு. அதிகமான திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை செய்த படம் இது.இந்த படம் சென்னை சாந்தி திரையரங்கில் மூன்று வருடங்கள் ஓடி மாபெரும் சாதனையை செய்தது.


செந்தில் வேல் சிவராஜ் ..




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற