1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சந்திரமுகி உருவானதின் பிண்ணனி

ரஜினிக்கு கை கொடுத்த அன்னை இல்லம்..சந்திரமுகி...

சந்திரமுகிக்கு எப்ப பூஜை போட்டாங்களோ அப்ப இருந்து இதே பேச்சு வந்துகிட்டே இருக்கு.
அன்னை  இல்லம்  ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கிறதாகவும் அந்த டயத்துல ரஜினி கால் சீட் கொடுத்ததுனால சிவாஜி புரொடக்ஷன்ஸ் சந்திரமுகி படத்தை தயாரிச்சு அந்தக் கஷ்டத்தை எல்லாம் போக்கிட்டதாகவும்  பேச்சு வந்துகிட்டே இருக்கு.இப்ப கூட யூடியூப் சேனல்ல செய்யார் பாலு அப்படிங்கறவரு ரஜினி கால் சீட் கொடுத்ததாலே தான் அன்னை  இல்லம்  கஷ்டத்திலிருந்து மீண்டு வந்துருச்சு அப்படின்னு பேட்டி கொடுத்து இருந்தார்.
ஏதோ அந்த ஒரு படத்தை தயாரிச்சு வெளியிட்டு அதுல வந்த லாபத்தில் தான் அன்னை இல்லம் ரொம்ப செழிப்பா வளர்ந்துருச்சு அப்படிங்கிற அர்த்தத்திலேயே அந்த சைடு இருக்கிறவங்க பேசிக்கிட்டே இருக்காங்க.
இத பேசறதுக்கு முன்னால ரஜினி அதுக்கு முன்னால நடிச்ச பட சங்கதியை கொஞ்சம் நினைச்சு பாக்கணும். அந்தப் படம் பாபா ...அது எப்படி ஓடுச்சு.. அதுக்கு என்னவெல்லாம் பிரச்சனை வந்துச்சு ,அப்படிங்கறத அவங்க பேச மாட்டேங்குறாங்க! 

அந்த கால கட்டத்துல நடந்த ஒரு சம்பவம்.கர்நாடகாவில் நடந்த ஒரு விழாவுல பாபா ரிலீசாகுறதுக்கு சில நாட்கள் முன்னாலே  நடந்தது.சந்தன வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி அதுக்கு பின்னாலே ராஜ்குமார் விடுதலை ஆன பின்னாலே ரஜினி பேசுன விஷயம்தான்.
ரஜினி பேசுனது பெங்களூர்ல..
சந்தன வீரப்பன் தமிழ் ஆளு..
இங்க பொழப்பு நடத்திகிட்டு அங்க போயி அப்படி பேசிட்டாரே அப்படீன்னு பாமகாவுக்கு கோபம்.


ரஜினி சந்தன வீரப்பனை கொலை செய்யணும் அப்பிடீன்னு பேசி இருந்தார்.இதை கேட்ட  பாமக ராமதாஸ் அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சார்.வன்னியர்கள் யாரும் இந்த படத்தை 
பாக்காதீங்கனு ஒரு சொல்லி விட்டார்.
 இது பெரிய பிரச்சினை ஆயிடுச்சு.

பாபா படத்தை ஓடறதை தடுப்போம்னு சொல்லிச்சு.
பாபா படம் ஓடுற தியேட்டர்ல எல்லாம் அவங்க ரகளை பண்ணுனாங்க. ரஜினியோட படத்தை ஒரு தியேட்டர்ல கூட ஓட விடமாட்டோம்னெல்லாம் சொன்னாங்க. பிரச்சனை பெருசாயி ரஜினியோட அடுத்த படத்தை எந்த தியேட்டர்லயும்  வெளியிடவே விடமாட்டோம் அப்படின்னு அறிக்கை கொடுத்தாங்க .
ரஜினிக்கு அது ஒரு சிக்கலான காலகட்டம். 
பாட்டாளி மக்கள் கட்சிக்காரங்க ஒரு தியேட்டர்ல பிச்சர் பெட்டியவே எரிச்சிட்டாங்க .அந்த தியேட்டருக்கு மறுபடியும் பிக்சர் பெட்டி அனுப்புறதற்கு ரஜினி பல முயற்சிகள் செஞ்சார். பாட்டாளி மக்கள் கட்சியோட தீவிரமான எதிர்ப்பும் அப்ப ரொம்பவே அதிகமா இருந்துச்சு. ஏதோ ஒரு ஆம்புலன்ஸ்ல பிக்சர் பெட்டியை வச்சு அனுப்பிச்சாதா எல்லாம்  பின்னால ஒரு செய்தி வந்துச்சு. 

ரஜினி மேல பாமகவுக்கு இன்னொரு கோபமும் இருக்கு. ரஜினி சிகரெட் பிடிக்கிற காட்சிகளை திரைப்படங்கள் காமிச்சு இளைஞர்களை கெடுக்கிறதா பாமக சொல்லிட்டு வந்திருக்கு.இத பாமக ரெண்டு மூணு தடவை சொல்லியும் ரஜினியும் கேட்கவில்லை.இதெல்லாம் பாமாவுக்கு ரஜினி மேல இருந்த கோவங்கள்.

பாமக செய்த இடைஞ்சல்களுக்கு பதில் அடியா ரஜினியும் ஒரு காரியம் பண்ணினார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பை  காட்டுங்க அந்தக் கட்சிக்கு ஓட்டு போடாதீங்க அப்படின்னு ஒரு அறிக்கை விட்டார்.
இதைக் கேட்ட பாமக சும்மா இருக்குமா. அதனால ரஜினியோட அடுத்த படத்தை நாங்க ஓட விட மாட்டோம் அப்படின்னு சொல்லுச்சு ..இந்த விஷயங்கள் பாபாவுக்கும் சந்திரமுகிக்கும் இடைப்பட்ட காலங்களில் நடந்த விஷயங்கள் .இப்ப தன்னோட அடுத்த படத்தை விட்டா பாமக பிரச்சினை பண்ணும்,அதை சமாளிக்கிறது எப்படி அப்படீன்னு எல்லாம் ரஜினிக்கு சங்கடங்கள்.

இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க,ரஜினி சொன்னது என்னான்னா...
பாமக ராம்தாஸ் புகை பிடிக்கறதப் பத்தி சொன்ன விஷயங்கள் நல்லதுதான்.அதனால சினிமால இந்த காட்சிகள்ல இனிமேல் நான் வைக்கறதிலேன்னு ரஜினியே பின்னாலே சொல்லிட்டார்.இது ரஜினி அப்ப பேசுன விஷயம்.


இந்த விஷயங்கள்  நமக்கு தேவை இல்லை..
இருந்தாலும் அன்னை இல்லம் பெயரை இழுத்ததால இதை சொல்ல வேண்டி இருக்கு. 
 பல பிரச்சினைகள் பாபாவுக்கு வந்துச்சு.படமும் சுமாரா போச்சு.அடுத்த படம் வெளி ஆகட்டும் அப்ப  பார்த்துக்கலாம்னு
அப்படின்னு பாட்டாளி மக்கள் கட்சியும் சொல்லியிருந்தது. 
தன்னோட அடுத்த படத்தை தமிழ்நாட்டுல ரிலீஸ் பண்றது ரொம்ப கஷ்டம் அப்படிங்கிற நிலைமை தான் அந்த அந்தக் காலகட்டம் இருந்துச்சி ரஜினிக்கு ..


ரஜினிக்கு ரசிகர் கூட்டம் இருக்கலாம்.ஆனா ரஜினிக்கு ஒரு பிரெஸ்டீஜ் தேவைப்பட்டுச்சு 
அந்த கால கட்டத்துல..
அந்த ப்ரெஸ்டீஜுக்கு ரஜினி என்ன பண்ணினார், அப்படிங்கறதுலதான் சந்திரமுகி உருவாச்சு அப்படீன்னு கூட சொல்லலாம்.பாபாவுக்கு சந்திரமுகிக்கும் இடைப்பட்ட காலம் மூணு வருஷம் .
மூணு வருசம் ரஜினி ஒண்ணும் பண்ணலே.
பாபா ரிலீசானது 2002 லே.
2005 ல ரஜினி ஒரு கன்னடப் படம் பாத்திருக்கார்.அது ஆப்தமித்ரா.
இந்த நேரத்துல  மறுபடியும் ஒரு படத்தில் நடிக்கணும் அப்படிங்கற ஆர்வம் ரஜினிக்கு வந்துச்சு .
இப்ப படத்துல நடிக்கிறது பற்றி பிரச்சனை இல்லை. ஆனா அதை எப்படி வெளியிடுவது என்று தான் பிரச்சனை. ரஜினி பழைய படியே படம் பண்ணுனா அதுக்கு பிரச்சனை வரும் .கண்டிப்பா எதிர்ப்பு இருக்கும்னு ரஜினிக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தெரியும். பிரச்சனை இல்லாம இந்தப் படத்தை இப்படி கொண்டு வர்றது அப்படின்னு பலவிதமா யோசிச்சு இருக்கார். அதனால அடுத்த படத்துல சிகரெட் பிடிக்கிற ஸ்டைல நாம வைக்க கூடாது. நாம நடிக்கற அந்தப் படத்தை ஒரு கௌரவமான பட நிறுவனம் வெளியிடுற மாதிரி நாம முயற்சி செய்யணும் .இப்படி பல வித யோசனைகளை  ரஜினி பண்ணி இருக்கார்.
எல்லா கட்சித் தலைவர்களும் மதிக்கிற ஒரு நடிகர் சிவாஜி. சிவாஜிக்குன்னு ஒரு தனி மரியாதையும் கௌரவமும் இருக்கு .அதனால சிவாஜி புரொடக்சன்ல நாம படம் பண்றதுதான் சரியான செயல்னு ரஜினி முடிவு எடுத்திருக்கிறார்.

யாரையும் வெச்சி படம்  எடுக்கிற ஐடியா எல்லாம் சிவாஜி புரொடக்ஷன்ஸ்க்கு அப்ப இல்ல .
இந்த டயத்துல ரஜினி கிட்ட இருந்து போன் வருது. நான் ஒரு கன்னட படம் பார்த்து இருக்கேன் அந்தப் படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணி வெளியிடலாம் அப்படின்னு ரஜினியேசொல்றாரு.
அந்தப் படம் தான் கன்னடத்தில் வெளிவந்து நல்லா ஓடுன விஷ்ணுவர்த்தன் நடிச்ச ஆப்தமித்ரா .தமிழுக்காக கதாநாயகன்  ரஜினி ஃபுல்லா வர மாதிரி திரைக்கதை தயார் பண்ணுனாங்க .
இந்த விஷயத்துல ரஜினியோட பங்களிப்பு சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ்க்கு கால்ஷீட் கொடுத்தது மட்டும்தான். சிவாஜி புரொடக்ஷன்ல இருந்து யாரும் கால்ஷீட் கேட்கல.
சந்திரமுகி படம் ரிலீஸ் ஆகறப்போ பாட்டாளி மக்கள் கட்சி உள்பட எந்த கட்சியோட எதிர்ப்பும் வரலை.
அதுக்கு முன்னாலே  எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சியே பாராட்டும்  சொல்லி இருக்கு .
இதுல யாருக்கு யாரால சேப்டி கிடைச்சது?
செய்யார் பாலு சொன்ன அந்தப் பதிவில்  அவர் கடைசியாக சொன்ன ஒரு கருத்து என்னான்னா ,ரஜினி செய்த இந்த ஒரு உதவி பத்தாதா அவரோட சிறப்பை பத்தி பேசறதுக்கு அப்படின்னு முடிச்சிருக்காரு .
சந்திரமுகி ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாலே ரஜினி என்ன சொன்னாரு நான் இனிமேல் சிகரெட் குடிக்கிற காட்சிகளில் நடிக்க மாட்டேன் அப்படின்னு சொல்லி இருந்தார்?
ஆனா இப்ப ரிலீஸ் ஆன ஒரு படத்துல ரஜினி என்ன செஞ்சு இருக்கார் ? இது நம்மளுக்கு தேவையில்லாத விஷயம் ..இதை  ஏன் இங்க சொல்றேன் அப்படினா, ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் பட்டம் கிடைக்கிறதுதுக்கு காரணம் பீம்சிங் நாகராஜன் பந்துலு
 பி மாதவன் படங்கள்ல நடிச்சதால கிடைத்தது அப்படிங்கற அர்த்தத்துல பேசி இருந்தார். இதே எவ்வளவு பெரிய தப்பு அப்படின்னு இதுக்கு முன்னால ஒரு பதிவுல நாம சொல்லி இருந்தோம்.
சமயத்துக்கு தகுந்த  மாதிரி இவங்க பேசறதானால ,...
அவங்க எப்படியோ பேசிட்டு போகட்டும். அத பத்தி நம்மளுக்கு தேவை  இல்லை ..நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட  புகழுக்கு 
களங்கம் கற்பிக்கிற வகையில அவங்க கருத்து சொல்லறப்ப நாம நடந்த உண்மைகளை சொல்றோம்.
சிவாஜி புரொடக்சன்சோட பேரு என்ன கௌரவம் என்ன அது தயாரிச்ச படங்கள் என்னென்னன்னு அவங்களுக்கு தெரியாம போகுமா? 
 சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ்க்கு கௌரவம் சிவாஜி நடித்த படங்களால தான் ..
சந்திரமுகியை பொருத்தவரைக்கும்...ரஜினியே கூப்பிட்டு கால்ஷீட் கொடுத்தார் ..
அவரே கூப்பிட்டு கால்ஷீட் கொடுக்கிறதுனால நாம படத்தை தயாரிக்கலாம்னு சிவாஜி ப்ரொடக்ஷன் தயாரித்தது ..அவ்வளவுதான் அதுல மேட்டர் ...


செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்