1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜின்னா யாரப்பா?


இதுவரைக்கும் வந்த ஹீரோக்கள்ல நடிப்புல யாருப்பா டாப் ஹீரோ ?
சிவாஜிதான்ப்பா! 
தமிழ்நாட்டுல யாருப்பா டாப்?
சிவாஜிதான்ப்பா
இந்தியாவிலே? 
அதுவும் சிவாஜிதான்ப்பா!உலகத்துல ..
அதுவும் 
சிவாஜிதான்ப்பா ..


சூட்டிங் ஸ்பாட்டுக்கு கரெக்ட் டையத்துக்கு  வர்ற நடிகன்  யாரப்பா?
சிவாஜிதானப்பா...

பெரிய வசனங்களாக இருந்தாலும் அதை தங்கு தடை இல்லாம பேசறதல  யாருப்பா டாப்பு? 
சிவாஜிதானப்பா...

அதிகமா வேஷம் போட்டு நடிச்ச ஒரு நடிகரை சொல்லுப்பா? 
சிவாஜி தவிர வேற யாரப்பா! ..

தமிழ் வந்து ஒரு மாநில மொழி,
அப்படி தமிழ்ல வெளியான ஒரு படம் வெளிநாட்டு விருது வாங்கியிருக்கா? 
இது 1959லயே சிவாஜி
செஞ்சுட்டாருப்பா...

விருது வாங்குற படமா இருந்தா கமர்சியலா ஓடி இருக்காதேப்பா? 
அந்தப் படம்  கொட்டற மழை மாதிரி வசூல் செய்த படமப்பா! ..

சிவாஜி நடிப்ப புடிச்ச பல பெரிய நடிகர்கள் இருந்தா  பேர சொல்லுப்பா?
நடிக்கிற எல்லா நடிகர்களும் சிவாஜியோட நடிப்பதாப்பா நடிக்கிறாங்க.

சிவாஜி படம் ஒரே மாதிரியா ,இல்லே,  பல மாதிரியாப்பா? 
ஒரே படத்துல பல மாதிரிப்பா!

சிவாஜி நடிச்ச நடிப்புல எதுப்பா பெஸ்ட் ?
அந்த வேஷத்தை அதுக்கு மேல யாரும் செய்ய முடியாது அப்படிங்கறதாப்பா பெஸ்ட் ...

சிவாஜிக்கு அடுத்தது யாரையாச்சும் சொல்ல முடியுமாப்பா ?
அப்படி யாரும் இல்லையேப்பா !...

கவர்மெண்ட்டு சிவாஜிக்கு நல்ல விருது கொடுத்திருக்காப்பா ?
நடிகர் திலத்தை விட நல்ல விருது வேறு எதுப்பா!..

இவ்வளவு காலமாகியும் சிவாஜியோட புகழ் எப்படியப்பா?
அது வருஷா வருஷம் கூடிகிட்டே தான் இருக்குதப்பா !...

சிவாஜி எந்த வேசத்தையாவது நடிக்க முடியாதுன்னு சொல்லி இருக்காராப்பா ?
இன்னும் நடிக்க வேண்டிய வேஷம் இருக்குன்னுதான்  சொல்லி இருக்காரப்பா! ..

சிவாஜியோட நடிச்சு பேர் வாங்கின நடிகைகள் இருக்காங்களாப்பா ?
அவரோட நடிச்ச பின்னாடி தான் பேரே வாங்கினார்களப்பா !...

சினிமா பார்க்காதவங்க சிவாஜியோட படத்தை பார்த்திருக்காங்களாப்பா ?
அவரு நடிச்சதால தான் படமே பார்த்து இருக்காங்கப்பா!..

சிவாஜியோட பஞ்சுவாலிட்டிக்கு உதாரணம் ஒண்ணு சொல்ல முடியுமாப்பா?
சில நாள் சூரியன் கூட லேட்டா தான் உதிக்குது. சிவாஜி லேட்டா வந்து யாரும் பார்த்ததில்லையப்பா !...

சிவாஜி போட்ட மேக்கப்புல சுவாரஸ்யமான சம்பவம் ஏதாச்சு ஒண்ணு சொல்லுப்பா ?
பெத்த தாய்க்கு முன்னால பரதேசி வேஷம் போட்டுக்கிட்டு அம்மா கிட்ட பிச்சையா வாங்கி சாப்பிட்டாருப்பா  .பெத்ததாய் கூட அப்ப அது யாருன்னு தெரியாம இருந்தாங்கப்பா.இதுக்கு மேல வேற என்னப்பா !...

புராணப் படங்கள்ல நடிச்சதால தமிழ்படங்களுக்கு என்ன சிறப்பப்பா ?
சாமியே கும்பிடாதவனும் சாமியா நடிச்ச  சிவாஜியை ரசிச்சானே! இது போதாதாப்பா!...

நடிப்புக்கு வேற பேரு இருக்காப்பா ?
அது சிவாஜின்னு மாறிப்போச்சேப்பா !...

சிவாஜியோட பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம் சொல்ல முடியுமாப்பா ?
ஓரு படத்துல சிவாஜியோட  நடிச்ச நடிகனுக்கு ரொம்ப நேரமா நடிப்பே வரல.! அப்ப சிவாஜி எப்படி நடிக்கணும்னு சொல்லி கொடுத்தாரு .சிவாஜி சொல்லிக் கொடுத்த நடிப்புல அந்த நடிகனாலே பத்து சதவீதம்  தான் நடிக்க முடிஞ்சது .அந்த நடிப்பை பார்த்த ஜனங்க ஆஹா ஓஹோன்னாங்க .
இதிலே ஒரு என்ன விசேஷம் அப்படின்னா சிவாஜியும் அந்த நடிகரும் உண்மையிலேயே அந்த டயத்துல பேசிக்க மாட்டாங்க. இது எப்படி இருக்குப்பா !..

தமிழ் சினிமானாலே பாட்டு தானே. பாட்டு இல்லாத படத்துல சிவாஜி நடிச்சிருக்காராப்பா? 
படத்துல பல பாட்டுக்கள் இருந்தும் சிவாஜிக்கு பாட்டே இல்லாம கூட நடிச்சிருக்காருப்பா.

சிவாஜியோட அர்ப்பணிப்புக்கு ஒரு உதாரணம் சொல்ல முடியுமாப்பா ?
ஒரு சமயம் ஷூட்டிங்க்கு வந்தாரு சிவாஜி. அங்க இருந்தவங்க கிட்ட எல்லாம் சிரிச்சுகிட்டே வணக்கம் சொல்லிவிட்டு போனாரு. ரொம்ப சாதாரணமா வந்தாரு ,சாதாரணமா போனாரு. மேக்கப் ரூமுக்குள்ள போயிட்டு வந்ததுமே யாருகிட்டயும் ஒண்ணும் சொல்லாம மிடுக்கா கம்பீரமா நடந்து போனாரு.இதப் பாத்த ஒருத்தரு ,என்ன இவர் இப்படி இருக்கிறாரு? போறப்போ ஒரு மாதிரி , இப்ப வந்தப்போ வேற  மாதிரி ,அப்படின்னு கேட்டு இருக்காரு, பக்கத்துல இருந்தவர் கிட்ட. அப்ப அவர் சொன்னாரு. மேக்கப் ரூம்குள்ள போறப்ப அவரு சிவாஜி. வெளிய வந்தார் இல்லையா. அப்ப அவரு இந்த படத்துல நடிக்கிற ஜமீன்தாரு.அதனால தான் அப்படி இருக்காரு ,அப்படின்னு கேள்வி கேட்டவருக்கு பதில் சொன்னார். பதில் சொன்னவர் யார் தெரியுமாப்பா ! நம்பியார் சாமிப்பா...

இந்த காட்சியில எப்படி சிவாஜி  நடிச்சாரு அப்படிங்கறதுக்கு  உதாரணமா ஒரு சம்பவத்தை சொல்ல முடியுமாப்பா ?
அப்போ வசந்த மாளிகை சூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அவங்க அம்மா ராஜாமணி  அம்மா தவறிட்டாங்க. 16 வது நாள் காரியம் கூட முடியல. வீட்டில இருந்தா அம்மாவோட ஞாபகம் வந்துகிட்டே இருக்கு  அப்படின்னு வசந்த மாளிகை சூட்டிங்ல கலந்துகிட்டாரு. அப்ப அவர் நடிச்ச காட்சி என்ன தெரியுமா. அது ஒரு பாட்டு ..மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன.? அப்படிங்கற காதல் பாட்டு ..அதுவும் ஊட்டி லொகேஷன்ல. அந்தப் பாட்ட பாரப்பா , உனக்கே புரியுமப்பா.

சிவாஜி நடிப்பில் என்னப்பா அதிசயம் ?
சிவாஜி நடிப்ப ரசிச்சு பார்த்தவனோட கண்ணு  வேற எந்த நடிப்பையும் ரசிக்காது  .இதைவிட வேற என்னப்பா !

செந்தில்வேல் சிவராஜ் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்