1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ஒவ்வொரு காலகட்டத்திலும் சிவாஜியின் முக உடல் தோற்றங்கள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் வித விதமாக வடிவெடுத்த சிவாஜி கணேசனின் முக தோற்றம் மற்றும் உடற் தோற்றங்கள் :

முதலில் 1952ல் வெளியான பராசக்தி திரைப்படத்தில் இருந்து 1956ல் சிவாஜி கணேசன் நடித்து வெளியான அனைத்து திரைப்படத்திலும் ஒரே மாதிரியாகவும்

ஆனால் அதற்கு இடையே 1954ல் சிவாஜி கணேசன் லேசான திடகாத்திரமான உடற் தோற்றத்தில் கொஞ்சம் பூசினாற் போல் தோற்றத்தில் நடித்தார். 

அதன் பின் 1957 முதல் 1960 வரையிலான அனைத்து திரைப்படங்களிலும் சிவாஜி கணேசன் முக தோற்றமும், உடல் தோற்றமும் இன்னும் சற்று மாறி இருந்தது.
ரசிக மக்களை தனது நடிப்பின் முக பாவத்தாலும், உடல் மொழியாலும் (பாடி லாங்வேஜ்)லும் வெளுத்து வாங்கியிருப்பார்.

அதன் பிறகு 1961 முதல் 1966 வரையிலான காலகட்டத்தில் சிவாஜி கணேசன் ஒரு அழகான உடற்தோற்றத்தில் அமூல் பேபி என்று சொல்லமாக நமது குழந்தைகளை அழைப்பது போன்றான குண்டான உடற்தோற்றத்தில் சிவாஜி கணேசன் நடித்து அசத்தியிருப்பார்.

இன்னும் தெளிவாக சொல்ல போனால் அந்த காலகட்டத்தில் ரத்ததிலகம், புதிய பறவை, கர்ணன், ஆண்டவன் கட்டளை, பச்சை விளக்கு படங்களில் கொஞ்சும் முக தோற்றத்திலும் உடற் தோற்றாலும் நடித்திருப்பார். 

அதன் பிறகு 1966ல் டைபாய்டு சுரத்தால் சிவாஜி கணேசன் உடல் மெலிந்து 1966 முதல் 1969 வரையிலான 4 வருட காலகட்டத்தில் சிவாஜி கணேசன் ஸ்லிம்மாக யூத் மேனரிசத்தில் நடித்து அப்போது ஸ்டைல் திரைப்படங்களில் தனது முத்திரையை பதித்தார். 

பிறகு 1970 முதல் 1977 வரையிலான அவன் ஒரு சரித்திரம் திரைப்படம வரையிலான காலகட்டத்தில் சிவாஜி கணேசன் ஒரு சாக்லேட் பாயாகவே மாறி போனார். 

 1970களில் 
வித்தியாசம் வித்தியாசமாக ஹேர் ஸ்டைல் முக தோற்றங்களில் நடிக்க சிவாஜிஆர்வம் காட்டினார்.ஏற்கெனவே இல்லாததாக இருக்க வேண்டும் புதிதாக ஒவ்வொரு படங்களிலும் தன் முகத் தோற்றத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக விக்குகளை அணிந்து நடிக்க ஆரம்பித்தார்.
சிவாஜி கணேசன் ஹெர் ஸ்டைல் விக்குகள்  வைத்து நடித்த மெனரிசம் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதுடன் எல்லோரலும் ரசிக்கவும் பட்டது.

அந்த காலகட்டத்தில் சிவாஜி கணேசனின் மேனரிசத்தை கண்டு மயங்கியவரின் மயக்கமே இன்று வரை தெளியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். 

அதை தொடர்ந்து 1977ல் அண்ணன் ஒரு கோயில் திரைப்படத்தில் இருந்து 1979 திரிசூலம் படம் வரையில் கொஞ்சம் உடற் தோற்றம் கூடியது போல் நடித்தார். 

அதன் பிறகு 1979 முதல் 1986 வரையிலான காலகட்டத்தில் சிவாஜி கணேசனுக்கு போட்டி இல்லாமல் சவாலே இல்லாமல் தன்னிகரற்ற நடிகராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வலம் வந்தார். 

அந்த காலகட்டத்தில் தான் கிராமத்து நாயகனாக திகழ்ந்த பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் கள்ள கபடம் இல்லாத கிராமத்து பெரியவராக நடித்து அசத்தியது இன்று பலருக்கும் சிவாஜி கணேசன் நடிப்பு எட்டாத கனியாக மாறிவிட்டது. 

1987 முதல் 1991 வரை சிவாஜி கணேசனின் மனசாட்சியாக விளங்கிய அவரது தம்பி வி. சி. சண்முகம் அவர்களின் எதிர்பாராத மரணம் சிவாஜி கணேசனை மனதளவில் பாதித்ததால் உடல் இளைத்து போனார். 

அதுவும் இல்லாமல் அக்காலகட்டத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த காலம் அதனால் நாளும் பொழுதும் நடிப்பையும் தாண்டி அரசியலில் அதிகமான கவனம் செலுத்தினார். பல அலைச்சல்களால் சிவாஜியின் உடல் தோற்றத்திலும் மாற்றம் ஏற்பட்டது.

அதன் பிறகு சிவாஜி கணேசன் அவர்கள் 1992 தேவர் மகன் திரைப்படத்தில் தனது சிம்மகுரலால் கர்ஜித்த போது தமிழ் ரசிகர்கள் வியந்து போனர்கள்.

அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் விஜய் உடன் ஒன்ஸ் மோர், ரஜினிகாந்த் உடன் படையப்பா என்று இன்னும் பல இளைய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்தார். 

இறுதியாக 1999ல் வெளிவந்த பூ பறிக்க வருகிறோம் திரைப்படமே சிவாஜி நடித்த கடைசி படமாக அமைந்தது. 

 ஏ. வெங்கடேஷ் அவர்கள் அதற்கு முன்பே விஜயை வைத்து இயக்கிய " செல்வா " திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சரோஜாதேவி இணையாக படத்தின் கதாநாயகி சுவாதிக்கு பெற்றோராக நடிக்க வைப்பாதாக இருந்தும் அப்போது சரோஜாதேவி கால்ஷீட் இல்லாமல் போகவே அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகர்கள் நடிக்க வேண்டியது ஆயிற்று என்று ஏ. வெங்கடேஷ் கூறியிருந்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்