நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு மகளாக நடித்த நடிகைகள் பற்றிய விவரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம் .
முதல் தேதி. 12 3 1955 இல் வெளியான படம் இது. சிவாஜி முதன்முதலாக வயதான தோற்றத்தில் நடித்த படம் இது.சிவாஜியின் 21வது திரைப்படம் இதுவாகும்.இந்தப் படத்தில் சிவாஜிக்கு மகளாக பேபி உமா என்பவர் நடித்திருந்தார். சிவாஜிக்கு மகளாக முதன் முதலில் நடித்த நடிகை என்று இவரை சொல்லலாம்.
12 7 63 ல் வெளியான படம் பார் மகளே பார். இந்தப் படத்தில் சிவாஜியின் மகள்களாக விஜயகுமாரி புஷ்பலதா இருவரும் நடித்திருந்தார்கள்.
தனக்குப் பிறந்த இரு மகள்களில் ஒரு மகள் தனக்கு பிறந்தவர் இல்லை என்ற பிரச்சனை எழுவதும் அதற்குப் பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதையாகும்.
மோட்டார் சுந்தரம் பிள்ளை. 13 குழந்தைகளுக்கு தந்தையாக நடித்தார் சிவாஜி கணேசன் .
ஜெயலலிதாவும் காஞ்சனாவும் அந்த 13 குழந்தைகளில் இரு மகள்களாக நடித்திருந்தார்கள்.
திருமால் பெருமை படத்தில் பெரியாழ்வார் என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் திலகம்.
கே ஆர் விஜயாவின் வளர்ப்பு தந்தையாக சிவாஜி நடித்திருப்பார். சிறு வயது மகளாக குட்டிபத்மினி நடித்திருப்பார் .
சிவாஜி இரு வேடங்களில் நடித்து வெளிவந்த படம் எங்க ஊர் ராஜா. வெளிவந்த தேதி
21 10 1968 .இதில் தந்தையாக நடித்த சிவாஜிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் நடித்திருப்பார்கள். இரண்டு மகன்களாக சிவாஜியும் நாகேஷும் அந்த மகள் வேடத்தில் கனகதுர்கா என்ற நடிகையும் நடித்திருப்பார்.
1.5. 1969 இல் வெளியான திரைப்படம் காவல் தெய்வம் .
ஜெயகாந்தனின் நாவலான கை விலங்கு என்ற கதையை வைத்து எடுக்கப்பட்டது இந்த திரைப்படம் எஸ் வி சுப்பையா தயாரித்த திரைப்படம். சாமுண்டி கிராமணி என்ற வேடத்தில் மரம் ஏறும் தொழிலாளியாக சிவாஜி நடித்திருப்பார். சிவாஜி மகளாக லலிதா என்ற நடிகை நடித்திருப்பார் ஒரு சிறு பாத்திரத்தில்.
வியட்நாம் வீடு திரைப்படத்தில் சிவாஜி மகளாக அகிலா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பத்மா நடித்திருப்பார் .
11 3 1972 இல் வெளிவந்த திரைப்படம் ஞான ஒளி.
இதில் சிவாஜியின் மகளாக சாரதா நடித்திருப்பார். தந்தை மகள் என்று சொல்லும்போது இது ஒரு முக்கியமான திரைப்படம் ஆகும்.
24 3 1973 இல் வெளிவந்த பாரத விலாஸ் திரைப்படத்தில் சிவாஜியின் மகளாக ஜெயசித்ரா நடித்திருப்பார்.
31 3 1973-ல் வெளிவந்த ராஜராஜ சோழன் திரைப்படத்தில் ராஜராஜ சோழன் மகளாக குந்தவை பாத்திரத்தில் சிவாஜியின் மகளாக லட்சுமி நடித்திருப்பார்.
25 6 1978ல் வெளியான ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படத்தில் சிவாஜி மகளாக நடிகை கவிதா நடித்திருப்பார்.
30 10 1978-ல் வெளியான பைலட் பிரேம்நாத் திரைப்படத்தில் சிவாஜி மகளாக ஸ்ரீதேவி நடித்திருப்பார் .கவரி மான் திரைப்படத்திலும் சிவாஜியின் மகளாக ஸ்ரீதேவி நடித்திருப்பார் .
ஹிட்லர் உமாநாத் திரைப்படத்தில் சிவாஜிக்கு மகளாக நடிகை சாதனா நடித்திருப்பார் .
கருடா சௌக்கியமா திரைப்படத்தில் சிவாஜிக்கு மகளாக நடிகை அம்பிகா நடித்திருப்பார்.
வசந்தத்தில் ஒரு நாள் திரைப்படத்தில் சிவாஜிக்கும் மனைவியாகவும் மகளாகவும் ஸ்ரீப்ரியா நடித்திருப்பார் .
தீர்ப்பு திரைப்படத்தில் சிவாஜியின் மகளாக நடிகை நித்யா நடித்திருப்பார் .
நீதிபதி திரைப்படத்தில் சிவாஜியின் மகளாக நடிகை மேனகா நடித்திருப்பார்.
பந்தம் திரைப்படத்தில் சிவாஜியின் மகளாக இந்தி நடிகை காஜல் நடித்திருப்பார்.
முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி மகளாக நடிகை அருணா நடித்திருப்பார்.
ஆனந்தக் கண்ணீர் திரைப்படத்தில் சிவாஜி மகளாக நடிகை தேவி லலிதா நடித்திருப்பார்.
தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் சிவாஜி மகளாக நடிகை இளவரசி நடித்திருப்பார்.
அன்புள்ள அப்பா திரைப்படத்தில் சிவாஜியின் மகளாக நடிகை நதியா நடித்திருப்பார்.
தாம்பத்தியம் படத்தில் சிவாஜிக்கு மகளாக நடிகை துளசி நடித்திருப்பார்.
ஞானப் பறவை திரைப்படத்தில் சிவாஜியின் மகளாக நடிகை ராஜ்வி நடித்திருப்பார்.
பாரம்பரியம் திரைப்படத்தில் சிவாஜி மகளாக நடிகை நிரோஷா நடித்திருப்பார்.
படையப்பா திரைப்படத்தில் சிவாஜியின் மகளாக நடிகை சித்தாரா நடித்து இருப்பார் .
செந்தில்வேல் சிவராஜ் ...
கருத்துகள்
கருத்துரையிடுக