உலகை நோக்கும் உங்கள் விழிகளுக்கு ஓர் அலங்கார பொருளாகவும் இருப்பது கண்கண்ணாடிகள்,கூலிங் கிளாஸ்கள்.இந்த கண் கண்ணாடி மற்றும் கூலிங் கிளாஸ்களை டிசைன் டிசைனாக அணிந்து நடித்ததிலும் சிவாஜியே முன்னோடி .முதல் படமான
பராசக்தி படத்திலேயே கறுப்பு கலர் கூலிங்கிளாஸ் அணிந்து நடித்ததால் என்னவோ கண்கண்ணாடிகளை வித விதமாக அணிந்து படங்களில் நடித்திருப்பார் நடிகர்திலகம்.பராசக்தி படத்தில் பர்மாவில் இருந்து வந்து சென்னையில் கால் மிதித்ததும் அவர் பேசும் முதல் வசனம் 'தமிழ்நாட்டின் முதல்குரலே நன்றாயிருக்கிறதே' என்பதுதான்.இந்த வசனம் பிச்சை கேட்பவனைப் பார்த்து சிவாஜி பேசம் வசனம்.சிவாஜி காருக்குள் இருந்து காசுகளை போடுவார்.அப்போது அவர் அணிந்திருப்பார் கறுப்பு நிற கூலிங் கிளாஸ்.
புனர்ஜென்மம் படத்தில் என்றும் துன்பமில்லை பாட்டிலும் முழுக்க கூலிங்கிளாஸ் அணிந்து வருவார்.அன்றைய கால கட்டத்தில் பேன்சியாக விளங்கிய ஒரு கூலிங்கிளாஸ் அணிந்து வருவார் சிவாஜி.
நவராத்திரி படத்தில் டாக்டராக வரும் வேடத்திற்கு 'ரிம்லெஸ்' கண்ணாடி அணிந்து வருவார்.இது புல் ரிம்லெஸ் கண்ணாடியாகும்.லென்ஸின் இரு புறமும் துளையிட்டு பிரேம் சைடு கம்பிகளை அந்த துளையில் மாட்டி ரிவிட் செய்து தயாரிக்கப்படுவது.இன்றைய நாகரீக உலகில் கூட இந்த மாடல் வெகு மாடர்ன் ஆன மாடல் .நிறைய வேலைகள் செய்ய வேண்டியது இருக்கும் இந்த கண்ணாடி உருவாக்குவதில்.இதை அந்த காலத்திலேயே சிவாஜி அணிந்து நடித்திருப்பார் நவராத்திரி படத்தில்.
அவள் யார் படத்தில் சிவாஜி பவர் கண்ணாடி அணிந்திருப்பார்.இந்த மாடல் அப்போது அதிகம் பேர் அணிந்த மாடல் தான்.அதிகமான பவர் ,கண்ணாடியின் தடிமனுக்காக இந்த டைப்பை தேர்ந்தெடுப்பார்கள்.இது Shell டைப் பிரேம் வகையை சேர்ந்தது.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் வட்டம் ஓவல் இரண்டும் சேர்ந்த மாடலில் கறுப்பு கலர் கூலிங்கிளாஸ் அணிந்திருப்பார் நடிகர்திலகம்.சற்று கவர்ச்சியான மாடல் இது .பேஷனுக்காகவும் அணிவார்கள்.
எங்கள் தங்க ராஜா படத்தில் சிவாஜி அணிந்த கூலிங் கிளாஸ் புகைப்படம் மிக பிரபலமானது .இந்த மாடலை பற்றி சொல்லுவதை விட இதை நடிகர்திலகம் அணிந்து நடித்தததுதான் அழகு என்று சொல்ல வேண்டும்.சில கண்ணாடி மாடல்கள் எல்லோருக்கும் சிறப்பாக பொருத்தமாக இருக்காது .ஆனால் சிவாஜியவர்கள் இதை அணிந்த தோற்றத்தை பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறது என்று.
செல்வம் திரைப்படத்தில் சிவாஜிஅவர்கள் பிளைட்டில் இருந்து இறங்கி வரும் முதல் காட்சியில் கூலிங்கிளாஸ் அணிந்து வருவார்.கையில் தொப்பியுடன் காட்சி தரும் இந்த புகைப்படம் பிரபலமான ஒன்று.அவர் அணிந்திருப்பது Shell டைப் கறுப்பு நிற கூலிங்கிளாஸ் வகையை சேர்ந்தது.
கிழக்கும் மேற்கும் என்ற வெளிவராத திரைப்படத்தில் சிவாஜி நடித்த தந்தை வேடத்தில் அவர் அணிந்திருப்பது கோல்ட் கலர் பிரேம் டிசைன் வகையை சேர்ந்தது..இந்த வகை மாடலை பெரிய பணக்காரரர்கள் தான் அதிகமாக செலக்ட் செய்வார்கள்.
இரும்புத்திரை படத்தில் சிவாஜி அணிந்திருக்கும் இந்த டைப் கண்ணாடியை சேப்டி கிளாஸ் என்றுசொலலாம்.
தொழிற்சாலைகளில் ,மற்றும் தூசி கிளம்பும் இடங்களில் இதை அணிவார்கள்.கண்களை பாதுகாப்பதற்காக இந்த மாடல் அணிவார்கள்.
ஞானஒளி படத்தில் தொழிலதிபர் அருண் அணிந்து வருவது உயர்தரமான பிராண்டட் சன் கிளாஸ்.இந்த மாடல் உலகப்புகழ்பெற்ற ரேபான் கம்பெனியின் தயாரிப்பு ஆகும்.ரேபானுக்கு அழகு சேர்க்கின்றது அருண் அவர்களின் கம்பீர முக வெட்டு.
அன்னையின் ஆணை படத்தில் சிவாஜி கூலிங்கிளாஸ் அணிந்த மாடலானது வட்டம் ,ஓவல் இரண்டு சைசும் இணைந்த Shell பிரேமில் தயாரிக்கப்பட்ட கூலிங்கிளாஸ் மாடல் .
ராஜபார்ட் ரங்கதுரையில் ஒரு வித்தியாசமான மாடலில் கூலிங்கிளாஸ் அணிந்து வருவார் ரங்கதுரை.Full பிரேமும் கோல்ட் கலரிலும்,மேலே டாப்பில் மட்டும் கறுப்பு கலர் பிளாஸ்டிக் இணைக்கப்பட்ட அன்றைய நவீன மாடல் கூலிங்கிளாஸ் கண்ணாடி இது.ரங்கதுரை அணிந்த பின் அதன் ரேஞ்சே தனிதான்.
வசந்தமாளிகை படத்தில் சிவாஜிஅணிந்து வரும் இந்த கூலிங்கிளாஸ் மாடல் பெரும்பாலானவர்களுக்கு செட் ஆகாது .புல் கவரேஜ் Brown நிற கூலிங்கிளாஸ் பிளாஸ்டிக் வகை தயாரிப்பு இது.இந்த மாடலை சிவாஜி அணிந்து எப்படி அட்டகாசமாக இருக்கிறார் பாருங்கள் .
தீர்ப்பு படத்தில் இரண்டு காட்சிகளில் கூலிங்கிளாஸ் அணிந்து வருவார் சிவாஜி.நீல நிற புல் ஷுட்டில் இருட்டு பிண்ணனியில் கறுப்பு நிற கூலிங்கிளாஸ் அணிந்து அட்டகாசமாக காட்சி தருவார் சிவாஜி.கிளப்பில் தாடியுடன் கறுப்பு நிற பெரிய சைஸ் கூலிங்கிளாஸ் அணிந்து அது ஒரு விதமாக ...
அந்தமான் காதலி படத்தில் நினைவாலே சிலை செய்து பாடலில் சிவாஜி அணிந்து வருவது புல் அண்ட் புல் பிளாக் கூலிங்கிளாஸ் கண்ணாடி.கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருக்கும் இந்த வகை Shell டைப் கண்ணாடிகள்.மேலும் நோஸ் பேட் எனப்படும் பட்டன்கள்இந்த டைப் கண்ணாடிகளில் இருக்காது.அதனால் மூக்கில் பிரேமின் பாதிப்பு அழுத்தம் தராமல் ,அணிவதற்கு இதமாக இருக்கும்.நடிகர்திலகத்திற்கு பாருங்கள் இந்த கூலிங்கிளாஸ் எப்படி அருமையாக இருக்கிறதென்று...
வெள்ளை ரோஜா திரைப்படத்தில் கருப்பு கலர் ப்ரேமில் பவர் கிளாஸ் அணிந்து நடித்திருப்பார். இந்த வகை கண்ணாடி ஆட்டோமேடிக் எனப்படும் டே நைட் கண்ணாடி வகையைச் சேர்ந்தது.இந்த வகை கண்ணாடிகள் வெயிலுக்கு கருப்பு நிறமாக மாறும். அறைக்குள் வந்ததும் வெள்ளையாக மாறும். இதைத்தான் நடிகர்திலகம் வெள்ளை ரோஜா படத்தில் அணிந்து நடித்திருப்பார்.
கீழ்வானம் சிவக்கும் படத்தில் பவர் கிளாஸ் அணிந்து நடித்திருப்பார். அது பவர் கிளாஸ் என்று தெரியக்கூடாது என்பதற்காக கூலிங் கிளாஸ் டைப்பில் கலர் கண்ணாடி போன்று அணிந்து நடித்திருப்பார். நடிகர் திலகத்தை பாருங்கள் சமையல் கட்டில் கூட கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து நடித்திருப்பார் .
வசந்தத்தில் ஒரு நாள் திரைப்படத்தில் பவர் கண்ணாடியை புல் ரிம்லெஸ் பிரேமாக அணிந்து நடித்திருப்பார்.இந்த டைப் பிரேம்களில் பாலி கார்பனேட் அல்லது ஏர்வேர் எனப்படும் கண்ணாடிகளை இணைத்து தயாரித்தால் தான் கண் கண்ணாடி உடையாது.காலில் போட்டு மிதித்தாலும் ,எடுத்து வீசினாலும் இந்த டைப் கண்ணாடிகள் உடையாது.இது புல் ரிம்லெஸ் கண்ணாடிகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்தினால் போதுமானது.சாதாரண டைப் பிரேமுக்கு இந்த வகை கண்ணாடிகள் அவசியம் இல்லை. மற்ற கண்ணாடிகளை காட்டிலும் இது கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்கும். வசந்தத்தில் ஒரு நாள் திரைப்படத்தில் நடிகர் திலகம் பயன்படுத்தியது இந்த டைப் கண்ணாடி தான்.
பாவை விளக்கு படத்தில் கறுப்பு நிற பைபர் கூலிங்கிளாஸ் ,
மூன்று தெய்வங்கள் பெரிய வட்ட வடிவ பேன்சி சன் கிளாஸ்,
சுமதி என் சுந்தரி படத்தில் ரெக்டேங்கிள் கோல்ட் பிரேம் பிராண்டட் சன்கிளாஸ் ,
வைர நெஞ்சம் படத்தில் புல் கவரேஜ் மெட்டல் பிரேம் கூலிங் கிளாஸ் ,
தங்கச் சுரங்கம் படத்தில் Shell டைப் பிளாஸ்டிக் பிரேம் கண் கண்ணாடி,
பாட்டும் பரதமும் படத்தில் பெரிய சைஸ் பிளாஸ்டிக் டைப் பவர் கண்ணாடி,
ரோஜாவின் ராஜா படத்தில் ஸ்கொயர் வடிவ Shell டைப் பிரேமுடன் பவர் கண்ணாடி ,
அண்ணன் ஒரு கோவில் படத்தில் அன்றைய காலகட்ட பெரிய சைஸ் கறுப்பு நிற பிரேமுடன் கூடிய பவர் கிளாஸ்,
பைலட் பிரேம்நாத் படத்தில் ரேபான் பிராண்டின் புகழ்பெற்ற மாடலான ஏவியேட்டர் டைப் கோல்ட் பிரேம் சன் கிளாஸ்,
திரிசூலம் படத்தில் பிக் சைஸ் Brown நிற சன் கிளாஸ் ,
நான் வாழ வைப்பேன் பேன்சி டைப் கறுப்பு நிற கூலிங் கிளாஸ் ,
ரிஷிமூலம் படத்தில் ஏவியேட்டர் மாடல் பிளாஷ்டிக் டைப் சன் கிளாஸ்,
ரத்தபாசத்தில் பைபர் டைப் டார்க் நிற பிரேம் ,லைட் கலர் சன் கிளாஸ்,
அமரகாவியம் படத்தில் டிரான்ஸ்ப்ரண்ட் பிரேமில் light கலர் சன் கிளாஸ்,
நீதிபதி படத்தில் டபுள் பார் கோல்ட் பிரேம் பவர் கண்ணாடி ,
சந்திப்பு படத்தில் க்ளைமாக்ஸ் பாடலில் பேன்சியான கறுப்பு நிற சன் கிளாஸ் ,
சாதனை படத்தில் பாப்புலரான சன் கிளாஸ் மாடல்,
தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் பெரிய சைஸ் சன் கிளாஸ் ,
தேவர்மகன் படத்தில் போற்றி பாடடி பெண்ணே பாடலில் ஒரே ஒரு ஷாட்டுக்கு மட்டும் பவர் கண்ணாடி அணிந்து நடித்திருப்பார்.
பூப்பறிக்க வருகிறோம் படத்தில் பவர்கண்ணாடி அணிந்திருப்பார்.ஒரு பாடலுக்கு பேன்சியான கறுப்பு நிற சன் கிளாஸ் அணிந்து நடித்திருப்பார்.
சிவாஜி நடிக்க வந்த கால கட்டத்தை வைத்து பார்த்தோமானால் சிவாஜியளவுக்கு வித விதமான கூலிங் கிளாஸ் ,கண் கண்ணாடிகள் அணிந்து நடித்த நடிகர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக