1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி இருக்கறப்போ எனக்கென்ன கவலை -பீம்சிங்



பாவமன்னிப்பு படத்துல சிலர் அழுவார்சிலர் சிரிப்பார் பாடலை அந்த பிளாக் அண்ட் படத்துலேயே பிரமாதமா எடுத்திருப்பாங்க.இந்த பாடலில சிரிப்பார் ஒரு உணர்ச்சி பாவம் அழுவார்ங்கற ஒரு உணர்ச்சி பாவம் இந்த ரெண்டும் சேந்த ஒரு உணர்ச்சி பாவம்னு வரிகளா விவரிச்சிருப்பார் கவிஞர் .
கவிஞர் எழுதுன இந்த பாட்டை சாதாரணமா எடுத்தாலே பாட்டோட பெர்பார்மன்ஸால பாக்கறதுக்கு நல்லாவே இருக்கும். ஒரு ரிஸ்க் எடுக்க வேணுண்ணு எடுக்க வேண்டிய அவசியமும் இல்லே.ஆனா சிவாஜிய வெச்சுகிட்டு அப்படி இருக்க முடியாதுல்லே .பீம்சிங்குக்கு இப்படி பல யோசனைகள் வந்துச்சு.பாட்டை எப்படியாச்சும் டிபரெண்டா எடுக்கணும்னு அவருக்கு விருப்பம்.
பாவமன்னிப்பு படத்துலே பாட்டுக எல்லாம் பிரமாதமாக போட்டு கொடுத்திருப்பாரு மெல்லிசை மன்னர்.ஒவ்வொரு பாட்டையும் ரொம்ப பிரமாதமா எடுத்திருப்பாரு பீம்சிங்.
வந்தநாள்முதல் பாட்டை சிவாஜி சைக்கிள் ஓட்டிடிகிட்டே பாடிட்டு வர்றமாதிரியும் பேக்கிரவுண்டா இயற்கை காட்சிகளா ஆறு ஆகாயம் குளத்து மேடு அப்படியே ரம்மியமா எடுத்திருப்பாரு.
காலங்களில் அவள் வசந்தம் பாட்டை ஒரு கார்டன்ல அழகா எடுத்திருப்பாரு.எல்லோரும் கொண்டாடுவோம் பாட்டை டேப்ங்கற வாத்தியத்தை சிவாஜி வாசிச்சுகிட்டே பாடற மாதிரியும் இடையிலே அழகா அம்சமா கோரஸெல்லாம் சேத்து பிரமாதப்படுத்தியிருப்பாரு.
பாலிருக்கும் பழமிருக்கும்  பாட்டை சிவாஜி ஹம்மிங் மட்டும் குடுக்கற மாதிரியும் சுசீலா, தேவிகா பாடற மாதிரியும் கவிதை மாதிரி எடுத்திருப்பாரு.
இப்படி எல்லா பாட்டையும் ரசிகன் எந்திரிச்சு போகாத மாதிரி  அட்டகாசமா எடுத்த பீம்சிங்குக்கு சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் பாடலை ஒரு வித்தியாசமா எடுக்கணும்னு விருப்பமா இருந்துச்சு.படத்துல எல்லா பாட்டுகளும் சுகமான ராகங்கள்.ஆனா இந்த பாட்டோ சோகப் பாட்டு.இதையும் வித்தியாசமா எடுத்துக் காமிக்கணும்னு அவருக்கு விருப்பம் இருந்துச்சு.

இந்த பாட்டோட வரிகளுக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு ஷாட்டையும் ஒவ்வொரு பிரேமையும் வித்தியாசமா அதே சமயம் அசத்தலாவும் எடுக்கணும்னு பெரிய எண்ணம்.

பாட்டோட வரிகளான சிரிப்பார் அழுவார் சிரித்துக்வொண்டே அழுவார் வரிகளுக்கு சிவாஜி பிரமாதமா பாவனை கொடுத்துருவாரு. சிரிக்கறதுக்கு ஒரு ஷாட் அழுகறதுக்கு ஒரு ஷாட் அடுத்ததா சிரிச்சுகிட்டே ஒரு ஷாட்டுன்னு சிவாஜிய வெச்சு குளோசப் எடுத்துரலாம்.
இந்த மூணையும் ஒரே பிரேம்ல காண்பிக்கணும்னு பீம்சிங்க்கு ஒரு ஐடியா இருந்துச்சு.இப்ப இருக்கற மாதிரி டெக்னிகல் உத்தியெல்லாம் இருந்தா இது ஈசியா எடுத்துடலாம்.ஆனா அந்த காலத்துல இதுக்கு கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாகணும்.ஷீட் பண்றப்போ சிவாஜியோட ரெண்டு சைடு போஸ் ,நேரா ஒரு குளோசப் ஷாட்டூனு எடுத்தாகணும்.
இந்தமூணையும் ஒரு பிரேமுக்குள்ள காட்டறப்போ பேக்கிரவுண்ட் எபக்ட் வித்தியாசமா இல்லாம ஒரே மாதிரிஎடுக்கணும் .பிரேமுல காட்டணும்.

பாவமன்னிப்பு திரைப்படத்தில் வரும் , "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்" என்ற இந்த பாட்டை  இந்த படத்தின் இயக்குனர் A பீம்சிங் அவர்கள் என்ன நினைத்தாரோ என்னவோ, ஒரு காட்சியில், ஒரே முகம் வெவ்வேறு கோணத்தில், பாடலுக்கேற்ற மாதிரி வெவ்வேறு உணர்ச்சியில் ,அதுவும் ஒரே இடத்தில் வைத்தால் எப்படியிருக்கும் என்று நினைச்சார் அவரோட கற்பனையில..

அப்போது கிராபிக்ஸ் இல்லாத காலம் அது ...எல்லாமே manual Work தான்.. பிலிம் சுருள்களை வைச்சு இதை செய்யணும்.ஷுட் பண்றதுக்கு முன்னாலே இந்த ஐடியாவை ஏவி எம் கிட்டேசொன்னாரு பீம்சிங்

பிரேம் சரியாக இருந்தால் போதும்... ,உடனடியாக செய்துவிடலாம் என்று ஏவிஎம் நிறுவனம் சொல்லிருச்சு.
உடனே தயாராயிட்டாரு பீம்சிங்.
சிவாஜி கிட்டேயும் இந்தபாட்டை 
எப்படி எடுக்கப் போறேன்னு அந்தகாட்சியை விவரிச்சு சொல்லிட்டாரு பீம்சிங்.


, 10 நிமிடம் direction ,10 நிமிடம் framing ...பாட்டை எடுத்து முடிச்சாச்சு..........எப்படி சாத்தியம் ஆச்சு இது ? நான் எதோ ஒருநாள் வீணாகிவிடும் என்று கவலைப்பட்டேன்டா பீமு என்றாராம் மெய்யப்ப செட்டியார் 

இதுக்கு
..பீம்சிங் சொன்ன ஒரே பதில் என்னான்னா ,சிவாஜி
கணேசன் இருக்கும்போது நான் ஒரு நடிகரை பத்துன கவலையை விட்டுருவேன்.
framing மட்டும்தான் பார்ப்பேன் , காரணம் , சிவாஜி கணேசன் மீது உள்ள நம்பிக்கையோ இல்லை என்னவென்று தெரியவில்லை , அவரது ஒவ்வொரு நாடிதுடிப்பும் கேமரா முன்னால் யாரையும் ஏமாற்றாது .எவ்வளவு வேணும்னாலும் வாரிக்கொடுக்கும் அவரது நடிப்பு என்ற ஒரே காரணத்தால்தாலதா இது ரொம்ப ஈசியா சாத்தியாமாச்சுன்னார் பீம்சிங்.... .. நினைச்சதை விட மிக அருமையாக செஞ்சுட்டார் .முதலில சிவாஜி கணேசனுக்குத்தான் நன்றி சொல்லணும்  என்றார் பீம்சிங் .

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்