சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

TMS பாடலை விட ஹிட்டான ஜேசுதாஸ் பாடல்

பொதுவா சிவாஜி படத்துல Tms ஒரு பாட்டு பாடிட்டா அதுக்கு மேலே வேற மத்த பாடகர்கள் வேற எந்த பாட்டு பாடியிருந்தாலும் Tms பாடுன பாட்டுக்கு மேலே அந்த பாட்டு பிரபலம் ஆகாது .இது தான் சரித்திரம்.
இப்படி ஒரு விஷயம் இருந்தாலும் ஒரு சில படங்களில்ல மட்டும் விதி விலக்கா சில பாட்டுக அமைஞ்சிருக்கு .அப்படி ஒரு விஷயத்தை தான் இந்த பதிவுல நாம பாக்க போறோம்.
1978 லே சிவாஜி நடிச்சு வெளியான படம் அந்தமான் காதலி.டைட்டில் எவ்வளவு அழகா இருக்கு பாருங்க.இந்த  படத்தோட டைரக்டர் தயாரிப்பாளர் முக்தாசீனிவாசன்.படம் முழுக்க முழுக்க அந்தமான்லேயே எடுக்கப்பட்ட படம்.

காதலர்களா இருக்கற சிவாஜி சுஜாதா, கல்யாணத்துக்கு முன்னாலேயே சுஜாதா கர்ப்பம் ஆக,பிரசவத்துக்கு சிவாஜி டாக்டரை கூப்பிட போக ,டாக்டரா வர்ற தேங்காய்சீனிவாசனுக்கும் சிவாஜிக்கும் ஒரு விவாதம் ஆரம்பிக்க ,கோபத்துல சிவாஜி தேங்காயை அடிக்க தேங்காய் மூச்சு பேச்சில்லாம போக ,அவரு செத்துட்டாருன்னு சிவாஜி பயந்து அந்தமானை விட்டு ஓடிப் போய் விடுவார்.
ஒரு செல்வந்தரோட சொத்தாலே பெரிய பணக்காரரா சிவாஜி ஆகி விட,இது முன் பாதி கதை.
 பல வருஷம் கழிச்சு அந்தமானுக்கு வர்ற சூழ்நிலை சிவாஜிக்கு வருது.அப்பத்தான் தன் காதலி சுஜாதாவை தேடறார்.சிவாஜி சுஜாதா சேந்தாங்களா அப்படிங்கறதுதான் மீதி கதை.

இந்த படத்துல நாலு பாட்டுக.
ரெண்டு பாட்டு TMS பாடியிருப்பார்.
ரெண்டு பாட்டு ஜேசுதாஸ் பாடியிருப்பார்.
சிவாஜி படத்துல இளம் ஹீரோக்கள் நடிச்சிருந்தா அவங்களுக்கு  பாட்டு காட்சி இருந்தா வேற பாடகர்கள தான் பாட வெப்பாங்க.விதி விலக்கா சில படங்கள்ல இது மாறியிருக்கு.அதுப்படி இந்த படத்துல தெலுங்குநடிகர் சந்திரமோகன் பாடற மாதிரி  ஒரு பாட்டு படத்துலே.இந்த பாட்டை TMS பாடியிருப்பார்.
பணம் என்னடா பணம் பணம் பாட்டையும் TMS சிவாஜிக்காக பாடியிருப்பார்.
மத்த ரெண்டு பாட்டுக சிவாஜி சுஜாதாவுக்கான காதல் பாட்டு.
பணம் என்னடா பணம் பணம் பாட்டு ஒரு கம்பீரமான ஆளுமையில இருந்து பாட வேண்டிய பாட்டு.அதனால் இதுக்கு சாய்ஸா வேற யாரையும் அதுவும் சிவாஜிக்கு நினைச்சு பாக்க கூடாது.
TMS சும் வழக்கமா சிவாஜிக்காக பாடி "சிவாஜிக்கு நாந்தாண்டா "அப்படிங்கற மாதிரி பொளந்து கட்டியிருப்பார்.அதுலயும் பாட்டோட இடையில 'ஹா' அப்படின்னு ஒரு உறுமுவாரே ,அதுக்கெல்லாம் TMS தான் சரி.பாட்டையும் பக்காவா மியுசிக் பண்ணியிருப்பாரு M.S.விஸ்வநாதன் .இந்த பாட்டும் எல்லோரயும் ரொம்பவே ரசிக்க வெச்சது.
இப்படி படத்துல வந்த நாலு பாட்டுல ரெண்டு TMS பாடியாச்சு. பாட்டும் நல்லாவே அமைஞ்சு போச்சு.
இப்ப அடுத்ததா இருக்கறது ரெண்டு பாட்டுகதான்.ரெண்டுமே காதல் பாட்டு .ரெண்டுமே மெலடி டைப் வேற.
TMS சோலோவா சிவாஜிக்கு கம்பீரமா பாட்டு பாடியிருந்தா  அந்த படத்துல வர்ற மத்த பாட்டுக எவ்வளவு நல்லா இருந்தாலும் அந்த பாட்டுக்கு முன்னாலே அடி பட்டு போயிடும்.இதுக்கு உதாரணமா பல பாட்டுகளை சொல்லலாம்.
 அந்தமான் காதலி படத்துல வர்ற ரெண்டு காதல் பாட்டும் சிவாஜி சுஜாதா பாடற மாதிரியான பாட்டுக.
இதுல ஒரு பாட்டு இளமை காலத்துல பாடற பாட்டு.இன்னொரு பாட்டு வயசான பின்னாலே வர்ற காதல் பாட்டு.
ஏகப்பட்ட காதல் பாட்டுகளை TMS சிவாஜிக்காக பாடி எல்லாமே பெரிய ஹிட்டாயிருக்கு.
இந்த நிலைமையிலே ஜேசுதாஸை சிவாஜிக்கு  பாட வெச்சா எப்படியிருக்கும்  .
ஜேசுதாஸை பாடுன அந்த ரெண்டு பாட்டு ..
ஒண்ணு,அந்தமானை பாருங்கள் அழகு ,ரெண்டாவது நினைவாலே சிலை செய்து பாட்டு.
இந்த ரெண்டு பாட்டுமே மெலடி டைப் பாட்டுக.இந்த ரெண்டு பாட்டுலேயும் எந்த கம்பீரமும் வெளிப்படக்கூடாது,ரொம்ப மென்மையா இருக்கணும் அப்படிங்கறதுக்காகவே ஜேசுதாஸை பாட வெச்சுருக்கலாம்.இந்த ரெண்டு பாட்டுலேயும் ஜேசுதாஸோட குரல் ரசிகர்களை ரொம்பவே திருப்தி பட வெச்சது அப்படின்னு சொல்லலாம்.இதை எல்லாத்தையும் விட படத்துல நாம பாக்கறப்போ சிவாஜி  தன்னோட குரலுக்கு ஏத்த மாதிரி  தன்னோட பாவனைகளால மேட்ச் பண்ண வெச்சிருப்பாரு.

அந்தமான் காதலி பட பாட்டுகளை ரேடியோல ஒலி பரப்புன சமயத்துல எல்லாம் அதிகமா இந்த ரெண்டு பாட்டைத்தான் அதிகமா ஒலி பரப்புனாங்க.இந்த ரெண்டு பாட்டுலேயும் அந்தமானோட மொத்த அழகையும் படத்துல நாம பாத்த மாதிரி இருக்கும் .
அந்த மானை பாருங்கள் அழகு பாட்டுல ஆரம்பத்துல வர்ற அந்த ஹம்மிங்கே  நம்மள மயக்கற மாதிரி இருக்கும்.
Tms பாடுன பணம் என்னடா பணம் பணம் பாட்டை விட இந்த ரெண்டு பாட்டுக அதுக்கு மேலே மஹா ஹிட்டாயிடுச்சு.
பாட்டுகள ஜேசுதாஸ் சிறப்பாக பாடி இருந்தாலும் இந்த படம் வந்த புதுசுல ஒரு குறையை சொன்னாங்க தமிழ் ஆர்வலர்கள்.அது என்னான்னா ,நினைவாலே சிலை செய்து பாட்டுல வர்ற திருக்கோவிலே ஓடிவா அப்படிங்கற வரிகளை ஜேசுதாஸ் தெருக்கோவிலே ஓடிவா அப்பிடின்னு பாடியிருக்காரு அப்படின்னெல்லாம் அந்த சமயத்துல விமர்சனம் வந்துச்சு.

ஜேசுதாஸ் பாடுன இந்த ரெண்டு பாட்டுமே பெரிய பேமஸா இருக்கு.
இன்னைக்கு வலைதளத்துல சில கமெண்டுகளை பாத்தா இந்த பாட்டுகளுக்காகவே நான் படம் பாத்தேன் அப்பிடின்னு பல பேரு கமெண்ட் போட்டிருக்கறதா நீங்க பாக்கலாம்.டிவிலயும் அடிக்கடி ஒலி பரப்பு செய்யற பாட்டுகளும்  இது தான்.

டிஎம்எஸ் இந்த படத்துல பாடுனத தாண்டி ஜேசுதாஸ் பாடுன இந்த ரெண்டு பாட்டுக பெரிய ஹிட்டான பாட்டுக.

செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற