சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியுடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்த நடிகைகள்


சிவாஜியுடன் 60  கதாநாயகிகளுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ளார்கள்.இவர்களில்
கே ஆர் விஜயா பத்மினி சிவாஜிக்கு ஜோடியாக 30 படங்களுக்கு மேலும் நடித்துள்ளார்கள்.K.R.விஜயா சிவாஜியின் முதல் 100 படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க வில்லை.ஆனால் பத்மினி சிவாஜியின் இரண்டாவது படத்தில் இருந்தே ஜோடியாக நடித்துள்ளார்.


நடிகர்திலகத்தோடு ஜோடியாக நேரடியாக நடித்த கதாநாயகிகள்:
 ஜெயலலிதா-18,
சரோஜாதேவி-17,சுஜாதா-16
,தேவிகா-12, ஸ்ரீப்ரியா 10,
சௌகார்ஜானகி 11,
சாவித்திரி-11,
வாணிஸ்ரீ-9, 
மஞ்சுளா-9,
பண்டரி பாய்-8,
பானுமதி-7,
லக்ஷ்மி-7,ஜமுனா-7
,எம்.என்.ராஜம்-6,
உஷா நந்தினி-5,
வடிவுக்கரசி 2, -ஸ்ரீவித்யா-2
வைஜயந்தி மாலா-3,
ஜி.வரலக்ஷ்மி-3
,பாரதி-2,விஜயகுமாரி-2,
அம்பிகா-2,ராதா-2,
ஸ்ரீதேவி-2,ஸ்ரீரஞ்சனி-2,
கிருஷ்ணகுமாரி-2,வசந்தா-2,
சாரதா-2,அஞ்சலிதேவி-2
,மைனாவதி-2,லலிதா-2,
ராஜசுலோச்சனா-2,,- படங்களிலும் நடித்துள்ளார்கள்.

சிவாஜிக்கு கதாநாயகியாக ஒரே ஒரு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்த நடிகைகள் யார் யாரென்று பார்க்கலாம். 

மாலினி-1,
சிவாஜி சந்திரபாபு நடித்து 
1958 ல் வெளிவந்த  சபாஷ் மீனா திரைப்படத்தில் சிவாஜிக்கு இந்த ஒரே படத்தில் ஜோடியாக நடித்தவர் மாலினி.
இந்த படம் 100 நாள் ஓடிய வெற்றித் திரைப்படமாகும்.

P.S.சரோஜா..
1954ல் வெளியான கூண்டுக்கிளி திரைப்படத்தில் இவர் நடித்திருப்பார்.

மாதுரிதேவி.
1953ல் வெளிவந்த சிவாஜி கணேசனின் ஒன்பதாவது திரைப்படமான மனிதனும் மிருகமும் என்ற இந்த ஒரே படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார் இவர்.

மணிமாலா-1966 ல் வெளிவந்த மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் மட்டும் மணிமாலா சிவாஜிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இதுவும் 100 நாள் வெற்றிப்படமாகும்.

1959 ல் வெளிவந்த மிக பிரமாண்டமான மாபெரும் வெற்றி பெற்ற சிவாஜியின் கனவுப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.இந்த ஒரே படத்தில் 
S.வரலட்சுமி ஜோடியாக நடித்திருப்பார்.இவர் சிவாஜிக்கு அம்மா வேடத்தில் தங்கசுரங்கம் படத்திலும்,
அக்காவாக ராஜ ராஜ சோழன் படத்தில் நடித்திருப்பார்.

ருக்குமணி.
1961-ல் வெளியான சிவாஜியின் மிகச்சிறந்த காவியப் படைப்பு கப்பலோட்டிய தமிழன். இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ருக்மணி நடித்திருப்பார். இவர் ஜோடியாக நடித்த ஒரே திரைப்படம் இதுதான். 

சந்தியா.
1962 இல் வெளியான திரைப்படம் பலே பாண்டியா. இதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சந்தியா.இவர் ஜெயலலிதாவின் தாயார் ஆவார். இவர் நடிகர் திலகத்துடன் சில படங்களில் நடித்திருந்தாலும் ஜோடியாக நடித்த படம் இது மட்டும்தான்.

குமாரிகமலா .
பாவை விளக்கு திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார் இவர்.ஒரே படம் இதுவே.

பாரதி.
1969 ல் வெளியான திரைப்படம் தங்கச்சுரங்கம்இவர் சிவாஜியுடன் ஜோடியாக நடித்த திரைப்படம் இது ஒன்றே.

வெண்ணிற ஆடை நிர்மலா.
1971 ல் வெளியான திரைப்படம் தங்கைக்காக.இந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் சிவாஜிக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார்.
1974 ல் வெளியான சிவகாமியின் செல்வன் திரைப்படத்திலும் இவர் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பும் சில நாட்கள் நடைபெற்றது.படப்பிடிப்புக்கு இவர் தாமதமாக வந்ததால் இவர் நீக்கப்பட்டு நடிகை லதா நடித்தார்.நடிகை லதாவும் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த ஒரே திரைப்படம் சிவகாமியின் செல்வன்தான்

காஞ்சனா-1
சிவந்தமண் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.இவர் மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜிக்கு மகளாகவும் ,தங்கை படத்தில் தங்கையாகவும் நடித்திருந்தாலும் வேறு படத்தில் ஜோடியாக நடிக்க வில்லை.பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 140  நாட்கள் ஓடிய வெற்றிச் சித்திரம் ஆகும்.

விஜயஸ்ரீ
1971 ல் வெளியான சிவாஜியின் உணர்ச்சிமிகு நடிப்பில் வெளியான காவியம் பாபு. ஓலை குடிசை கைரிக்க்ஷா கந்தல் துணி படத்தின் பிரதான அம்சங்களாக விளங்கிய திரைப்படம் பாபு. விஜய் ஸ்ரீ சிவாஜியுடன் ஜோடியாக நடித்த ஒரே படம் இதுதான். படத்தில் இவர் வரும் காட்சிகளும் சிறிது நேரமே. 100 நாள் ஓடிய அபார வெற்றிபெற்ற திரைப்படம் பாபு. 

விஜய நிர்மலா
1972ல் வெளியான நடிகர் திலகத்தின் சிறந்த படம் ஞான ஒளி. விஜய நிர்மலா சிவாஜியுடன் ஜோடியாக நடித்த ஒரே படம் இது.100 நாள் ஓடி அபார வெற்றி கண்ட படம் ஞான ஒளி. 

பத்மப்ரியா-
1975 ல் ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் வைரநெஞ்சம்.நீண்ட நாள் தயாரிப்பாக இருந்த இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக  நடித்தவர் பத்மப்ரியா.இவர் இந்த ஒரே படத்தில் மட்டும் சிவாஜிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


மாலினி பொன்சேகா-
இவர் இலங்கை நாட்டைச் சேர்ந்த நடிகை.இவர் 1978 ல் வெளியான பைலட் பிரேம் நாத் என்ற ஒரே ஒரு படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.தமிழகத்தில் 100 நாள் ஓடிய இந்த படம் இலங்கையில் வருடக் கணக்கில் ஓடிய திரைப்படமாகும்.மேலும் இந்த படம் இந்தியா இலங்கை கூட்டுத் தயாரிப்பில் உருவான படம்.

ரீனா..
தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெங்கும் ஆர்ப்பாட்டமான வெற்றி பெற்ற வெள்ளிவிழா திரைப்படம் திரிசூலம்.சிவாஜி புரொடொக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தில் சிவாஜி மூன்று வேடத்தில் நடித்திருப்பார்.கே.ஆர் விஜயா ,ஸ்ரீப்ரியாவும் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த இந்த படத்தில் ரீனாவும் ஒரு சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சிலோன் கீதா-
1981 ல் ஸ்ரீதர் இயக்கி 
வெளியான படம் மோகனப்புன்னகை.இந்த ஒரே படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர்.

ஜெயசுதா-
1979 ல் வெளியான பட்டாக்கத்தி பைரவன் என்ற இந்த திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஜெயசுதா. இதுவும் 100 நாள் ஓடிய திரைப்படம். 

பிரமிளா-
இவர் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த ஒரே திரைப்படம் கவரிமான். 1979 ல் வெளியான திரைப்படம் இது .

சரிதா-,
சிம்ம சொப்பனம் திரைப்படத்தில் சிவாஜியை ஒரு தலையாக காதலிக்கும் வேடத்தில் நடித்திருப்பார் சரிதா 

ராஜஸ்ரீ
1965 ல் வெளியான நீலவானம் திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக தேவிகா ,ராஜஸ்ரீ இருவரும் நடித்திருப்பார்கள்.ராஜஸ்ரீ சிவாஜிக்கு ஜோடியாக நடித்த ஒரே திரைப்படம் இது.
மனோரமா-
நடிகர்திலகத்துடன் ஒரே ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற மனோரமாவின் ஆசை நிறைவேறியது 
1991 ல்.ஞானப்பறவை என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார் மனோரமா.

சுமித்ரா-
வீரபாண்டியன் திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார் சுமித்ரா.

ராதிகா
1998 ல் வெளியான என் ஆச ராசாவே படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ராதிகா.ஜோடியாக நடித்த ஒரே படம் இது.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற