1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சாப்பாட்டு ராமன்

மாதவன் டைரக்ஷன்லே சிவாஜி 10000 வாலா  சரவெடி மாதிரி நடிப்பை கொளுத்தி போட்ட படம்தான் 
ராமன் எத்தனை ராமடி.

நாலஞ்சு சின்ன பசங்க,ஒரு ஆயாதான் உலகம்னு வாழ்ந்துகிட்டிருக்கிற கேரக்டர்தான் ஆரம்ப பாதி சாப்பாட்டு ராமனா நடிச்ச சிவாஜிக்கு.
அரை டவுசர் ,கொஞ்சம் அரை வேக்காட்டுத்தனமான கேரக்டர் .கொஞ்சம் ஏமாந்தா சிரிக்க வெச்சிடும்.ஆனா பிரமிக்க வெச்சிட்டாரே.

படத்துலே காக்கா வலிப்பு நோய் ராமனுக்கு இருக்கும் .
அந்த காக்கா வலிப்பு நோய் வந்து பாதிக்கப்படறமாதிரி படத்துலே நாலு காட்சி இருக்கும்.

முதல் காட்சி  குளத்துக்கு பக்கத்துலே வலிப்பு வரும்.அப்போ அங்கே வர்ற கே ஆர் விஜயா தன்னோட சாவிக் கொத்தை கொடுத்து காப்பாத்துவார்.

அதுதான் கே.ஆர்.வி உடனான முதல் சந்திப்பு. (குளத்தின் படிகளில் ஏறும்போது கே.ஆர்.வி தலையை தூக்கும் போது, ​​அங்கே மல்லிகைப் பூக்கள் விழும், அதை சிவாஜி எடுத்து ஒரு பக்தியுடன் வைச்சுக்குவார்).

 இரண்டாவது முறை, நம்பியார் அவரை சவுக்கால அடிச்சு பங்களாவை விட்டு வெளியே தூக்கி எறியுப்போ அவருக்குப் வலிப்பு வரும், நம்பியார் தன்னோட  வேலைக்காரனை சிவாஜிக்கு உதவ அனுமதிக்க மாட்டார். பங்களாவின் இரும்புக் கதவைப் பிடித்துக் கொண்டு வலியைக் குறைப்பார். 


3 வது "சத்ரபதி சிவாஜி" படப்பிடிப்பில அவர் ரொம்ப உணர்ச்சிவசப்படறப்போ வலிப்பு வரும். 

நான்காவது முறை, பானுமதியோட பாய் ப்ரெண்டோட   சண்டை போடறப்போ வரும். ​​ஒரு பார்ட்டியில அவளை பலாத்காரம் செய்ய முயற்சிப்பார். அப்ப நடக்கற சண்டையிலே அவனை கொல்லும்படி சூழ்நிலை வந்துடும்.அங்க இருக்கற கம்பியை பிடிச்சு அதனாலே வலிப்பு நிக்கறமாதிரி அந்த நாலாவது வலிப்பு காட்சி இருக்கும்.

இந்த படத்துலே சாப்பாட்டு ராமனோட ஒரு சூப்பர் காட்சி...
முதன்முறையாக, 'மைனர்' நம்பியாருடன் சிவாஜி அப்பாவித்தனமாகப் பேசறகாட்சி இன்னும் தெனாவெட்டாக இருக்கும். "உங்க தங்கச்சிக்கு நீங்க கல்யாணம் ஏற்பாடு பண்றதா, பயலுவா (பையன்கள்) சொன்னானுவோ. அது விஷயமா பேசிட்டு போகலாம்னு வந்தேன். ஞானயிற்று கிழமைதான் (ஞாயிறு) பள்ளிக்கூடம் லீவுன்னு பயலுவா சொன்னானுவ. அன்னிக்கே கல்யாணம் வச்சிக்கலாம்... என்ன சொல்றீங்க". 
என்பார் சாப்பாட்டு ராமன் சிவாஜி.
இப்படிஆரம்பத்துலே பேசறசிவாஜிதான்..

நம்பியாரை இரண்டாவது முறை சந்திக்கும் போது பணக்கார நடிகராகப் பேசும் பாணியே வேற மாதிரி இருக்கும் ...

நம்பியார் தனது மற்ற பணக்கார நண்பர்களை அறிமுகப்படுத்தும் போது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்... செந்தாமரை காட்டி. நம்பியார்: "இவர்தான் அல்லியூர் மல்லியப்பன். சொல்ல முடியாத அளவுக்கு சொத்து இருக்கு ..இவருக்கு பெரிய பால் பண்ணையே இருக்கு" என்பார் நம்பியார்.அதுக்கு சிவாஜி: "டெல்லி எருமை" என்பார் சிவாஜி.
நம்பியார்: "இவர்தான் சிங்கம்பட்டி சின்னப்பர். இவரோட ஊருலே இவருக்கு வடக்கே பாத்தா வாழத்தோப்பு,தெற்கே பாத்தா தென்னந்தோப்பு,மேற்கே பாத்தான்னு..
 நம்பியார் முடிக்கறதுக்குள்ளேயே சிவாஜி: "மாந்தோப்பு" ன்னு முடிப்பார்

நம்பியார்: "இவர்தான் முத்துபந்தல் முருகானந்தம். இவருடைய தொழில்...." சிவாஜி: "வைர வியாபாரம்" ம்பார்.
நம்பியார்: "ஓ.... இவங்களையெல்லாம் உங்களுக்கு முன்னே தெரியுமா?." 
அடுத்ததா சிவாஜீ...
தெரியலையா?...தெரியலை..?, 
நல்லா ,யோசனை பண்ணு..
உன்னாலே அடிச்சு  விரட்டப்பட்ட அதே சாப்பாட்டு ராமன்'. லட்சாதிபதியா வந்தா உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணி தாரேன்னு சொன்னியே, இதோ...இப்ப கோடீஸ்வரனா வந்திருக்கேன். எங்கே உன் தங்கச்சி?" நம்பியார்:"மன்னிச்சிடுங்க ... 
இப்ப நானே விருப்பபினா கூட அவளை உங்களுக்கு கல்யாணம் பண்ணி தர முடியாது.
 
சிவாஜி:ஏன் ?
நம்பியார்:அவளுக்கு கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போயிட்டா...
நம்பியாரோட இந்த பதிலை கேட்டு அப்படியே நொறுங்கி போவார் சிவாஜி 

அப்புறம் தான்...
அந்த பாட்டு வரும்.
சோகமான பாட்டு..
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு..
வெகுளியா சின்ன பசங்களோடவிளையாடியதும் ,
கே ஆர்  விஜயாவோடா பழகுன நினைவுகளும் வரும்..
சோகமா சிவாஜி நடிக்க ,அதை பாக்கற நம்ம  மனசெல்லாம் பிரமை புடிச்ச மாதிரியாயிடும்.

எத்தனை தடவை பாத்தாச்சு.
எத்தனை தடவை பாத்தாலும் ஏதோ ஒண்ண கிரகிக்க முடியாம தவிக்கற மாதிரி பீலிங் இருக்கும்.ஏன்னா ஒவ்வொரு தடவையும் பாக்கறப்போ அவரோட நடிப்பு இன்னும் எதையோ சொல்ற மாதிரி இருக்கும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்