சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியுடன் நடிகைகள் நடித்த முதல் படங்கள்

 சிவாஜியுடன் நடிகைகள்  நடித்த முதல் பட விபரங்கள்:

பண்டரிபாய்.சிவாஜியுடன் நடித்த முதல் படமே சிவாஜியின் முதல் படமான பராசக்தி.இந்த படம் 250 நாட்கள் ஓடிய திரைப்படமாகும்.

பத்மினி.சிவாஜியுடன் நடித்த முதல் படம் பணம்.இந்த படத்தை டைரக்ட் செய்தவர் N.S.கிருஷ்ணன்.

நடிகை வசந்தா சிவாஜியுடன் நடித்த முதல்படம் பூங்கோதை.
இதில் நாகேஸ்வரராவும் சிவாஜியுடன் நடித்திருப்பார்.

நடிகை கிரிஜா நடித்த முதல் படம் திரும்பிப்பார்.தமிழ் சினிமாவில் டிரைலர் காட்டப்பட்ட முதல் திரைப்படம் என்ற சிறப்பு பெற்றது. 

நடிகை மைனாவதி  சிவாஜியுடன் நடித்த முதல் படம் கண்கள் .இவர் நடிகை பண்டரிபாயின் சகோதரி ஆவார்.

நடிகை சாவித்திரி சிவாஜியுடன் நடித்த முதல் படம் பெம்புடு கொடுகு என்ற  தெலுங்கு திரைப்படம் ஆகும் .இந்தப் படத்தின் இயக்குனர் எல் வி பிரசாத்.

நடிகை T.R.ராஜகுமாரி சிவாஜியுடன் நடித்த முதல் படம் மனோகரா.மூன்று மொழிகளில் வெளியான படம் இது.


நடிகை மாதுரி தேவி சிவாஜியுடன் நடித்த முதல் திரைப்படம் மனிதனும் மிருகமும்.சிவாஜி வக்கீல் வேடத்தில் தோன்றிய முதல்  படம் .

நடிகை பி எஸ் சரோஜா சிவாஜியின் நடித்த முதல் திரைப்படம் கூண்டுக்கிளி.

நடிகை லலிதா சிவாஜியுடன் நடித்த முதல் படம் தூக்குத்தூக்கி. இவர் நடிகை பத்மினியின் சகோதரி ஆவார்.

நடிகை அஞ்சலி தேவி சிவாஜியுடன்  நடித்த முதல் படம் பூங்கோதை.

நடிகை எம் என் ராஜம் சிவாஜியுடன் நடித்த முதல் திரைப்படம் மங்கையர் திலகம். 
இந்த திரைப்படத்தில் சிவாஜிக்கு அண்ணியாக பத்மினி நடித்திருப்பார் .

நடிகை பானுமதி சிவாஜியுடன் நடித்த முதல் படம் கள்வனின் காதலி. இது கல்கி அவர்களின் நாவலாகும் .

நடிகை G.வரலட்சுமி சிவாஜிக்கு ஜோடியாக நடித்த முதல் படம் நான் பெற்ற செல்வம்.

நடிகை ஜமுனா சிவாஜியுடன்  நடித்த முதல் திரைப்படம் தெனாலிராமன் .இந்தப் படத்தில் என் டி ராமராவும் நடித்திருப்பார் .

நடிகர் ராஜ சுலோசனா சிவாஜியுடன் நடித்த முதல் திரைப்படம் ராஜா ராணி. இந்த படத்தில் இடம்பெற்ற சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகத்தில் ராஜ சுலோசனா
 தான் நடித்திருப்பார் .

நடிகை மாலினி சிவாஜியுடன் நடித்த முதல் படம் சபாஷ் மீனா.
சந்திரபாபு சிவாஜியை விட அதிக சம்பளம் கேட்ட படம்.

நடிகை S.வரலட்சுமி சிவாஜியுடன் நடித்த முதல் படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.வெள்ளிவிழா ஓடிய படம்.

நடிகை சரோஜாதேவி சிவாஜியுடன் நடித்த முதல் படம் பாகப்பிரிவினை.இது 216 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் ஆகும்.

நடிகை வைஜெயந்தி மாலா சிவாஜியுடன் நடித்த முதல் படம் இரும்புத்திரை.SS .வாசன் இயக்கிய திரைப்படம் இது.

நடிகை சௌகார் ஜானகி சிவாஜியுடன் நடித்த முதல் படம் படிக்காத மேதை.

நடிகை தேவிகா சிவாஜியுடன் நடித்த முதல் படம் பாவ மன்னிப்பு.

நடிகை குமாரி ருக்மணி சிவாஜியுடன் நடித்த முதல் படம் கப்பலோட்டிய தமிழன்.

நடிகை சந்தியா சிவாஜியுடன் நடித்த முதல் படம் பலே பாண்டியா .இவர் ஜெயலலிதாவின் தாயார் ஆவார்.

நடிகை சந்திரகாந்தா சிவாஜியுடன் நடித்த முதல் படம் பந்தபாசம்.

நடிகை விஜயகுமாரி ,நடிகை சாரதா  இருவரும் சிவாஜியுடன் நடித்த முதல் படம் குங்குமம்.

நடிகை கே.ஆர்.விஜயா சிவாஜியுடன் நடித்த முதல் திரைப்படம் கை கொடுத்த தெய்வம்.

நடிகை ராஜஸ்ரீ சிவாஜியுடன் நடித்த முதல் படம் நீலவானம்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் நடிகை மணிமாலா ,நடிகை ஜெயலிதா இருவரும் சிவாஜியுடன் முதன்முதலாக நடித்திருப்பார்கள்.மணிமாலா ஜோடி,ஜெயலலிதா மகளாக நடித்திருப்பார்கள்.

நடிகை காஞ்சனா சிவாஜியுடன் நடித்த முதல் படம் தங்கை.இது கே.பாலாஜி சிவாஜியை வைத்து தயாரித்த முதல் தயாரிப்பு.

நடிகை விஜயலலிதா சிவாஜியுடன் முதல் படம் எதிரொலி.சிவாஜியை வைத்து கே.பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம்.

நடிகை வெண்ணிறஆடை நிர்மலா சிவாஜியுடன் நடித்த முதல் படம் லட்சுமி கல்யாணம்.

நடிகை வாணிஸ்ரீ சிவாஜியுடன் நடித்த முதல் படம் உயர்ந்த மனிதன்.சிவாஜியின் 125 வது திரைப்படம் இது.

நடிகை விஜய நிர்மலா சிவாஜியுடன்  நடித்த முதல் படம் அன்பளிப்பு. சிவாஜியை வைத்து இயக்கிய இரண்டு பெண் இயக்குனர்களில் இவரும் ஒருவர் .

நடிகை பாரதி சிவாஜியுடன் நடித்த முதல் படம் தங்கச்சுரங்கம்.

நடிகை விஜயஸ்ரீ சிவாஜியுடன் நடித்த முதல் படம் பாபு.போட்டியாக வந்த கலர் படங்களை விட நன்றாக ஓடிய கறுப்பு வெள்ளை காவியம் .

நடிகை உஷாநந்தினி சிவாஜியுடன் நடித்த முதல் படம் பொன்னூஞ்சல் .

நடிகை பிரமிளா சிவாஜியுடன் நடித்த முதல் படம் மனிதரில் மாணிக்கம் .


நடிகை மஞ்சுளா சிவாஜியுடன் நடித்த முதல் படம் எங்கள் தங்க ராஜா.

நடிகை லதா சிவாஜியுடன் நடித்த முதல் படம் சிவகாமியின் செல்வன்.

நடிகை பத்மபிரியா சிவாஜி நடித்த முதல் படம் வைர நெஞ்சம். தொடக்கத்தில் இந்த படத்துக்கு  வைக்கப்பட்ட தலைப்பு ஹீரோ 72 .

நடிகை லட்சுமி சிவாஜியுடன் நடித்த முதல் படம் தங்கைக்காக.

நடிகை ஜெயசுதா சிவாஜியுடன் நடித்த முதல் படம் மன்னவன் வந்தானடி. 

நடிகை சுஜாதா சிவாஜியுடன் நடித்த முதல் படம் தீபம்.

நடிகர் திலகத்துடன் இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே ஒரு படம் பைலட் பிரேம்நாத் .

நடிகை ஸ்ரீபிரியா சிவாஜியுடன் நடித்த முதல் படம் பாட்டும் பரதமும்.

நடிகை சுமித்ரா சிவாஜியுடன் நடித்த முதல் படம் அண்ணன் ஒரு கோவில். 

நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் நடித்த முதல் படம் பாபு.

நடிகை ஸ்ரீவித்யா சிவாஜியுடன் நடித்த முதல் படம் இமயம்.

நடிகை மாதவி சிவாஜியுடன் நடித்த முதல் படம் சத்திய சுந்தரம். 


நடிகை சரிதா சிவாஜியுடன் நடித்த முதல் படம் கீழ்வானம் சிவக்கும். 

நடிகை ரீனா சிவாஜியுடன் நடித்த முதல் படம் திரிசூலம்.

நடிகை வடிவுக்கரசி சிவாஜியுடன் நடித்த முதல் படம் வா கண்ணா வா.

நடிகை அம்பிகா சிவாஜியுடன் நடித்த முதல் படம் கருடா சௌக்கியமா .

நடிகை ராதா சிவாஜியுடன் நடித்த முதல் படம் துணை.

நடிகை ராதிகா சிவாஜியுடன் நடித்த முதல் படம் நீதிபதி.

நடிகை ரேவதி சிவாஜியுடன் நடித்த முதல் படம் மருமகள்.

நடிகை ஜீவிதா சிவாஜியோடு நடித்த முதல் படம் ராஜமரியாதை .

நடிகை நதியா சிவாஜியுடன் நடித்த முதல் படம் அன்புள்ள அப்பா.

நடிகை ரூபினி சிவாஜியுடன் நடித்த முதல் படம் புதிய வானம்.

நடிகை தீபிகா சிவாஜியுடன் நடித்த முதல் படம் நாங்கள். இவர் ராமாயணம் டெலிவிஷன் தொடரில் சீதையாக நடித்தவர்.

நடிகை மோகினி சிவாஜியுடன் நடித்த முதல் படம் சின்ன மருமகள்.

நடிகை கனகா சிவாஜியுடன் நடித்த முதல் படம் முதல் குரல். இவர் நடிகை தேவிகாவின் மகள் ஆவார்.

நடிகை கௌதமி சிவாஜியுடன் நடித்த முதல் படம் தேவர்மகன்.

நடிகை சிம்ரன் சிவாஜியின் நடித்த முதல் படம் ஒன்ஸ்மோர்.

நடிகை ரோஜா சிவாஜியுடன் நடித்த முதல் படம் என் ஆச ராசாவே.

நடிகை சௌந்தர்யா சிவாஜியுடன் நடித்த முதல் படம் மன்னவரு சின்னவரு.

நடிகை ரம்யாகிருஷ்ணன் சிவாஜி படத்தில் நடித்த படம் படையப்பா.

நடிகை மாளவிகா சிவாஜியுடன் நடித்த முதல் படம் பூப்பறிக்க வருகிறோம்.

தொகுப்பு:
செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற