1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தவர்கள்

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் இரட்டை வேடம் செய்தவர்கள் யார் யார் ? அவை என்னென்ன திரைப்படங்கள் என்று இதில் பார்க்கலாம்.

முதலில் சந்திரபாபு.
சந்திரபாபு இரட்டை வேடத்தில் நடித்த சிவாஜி படம் சபாஷ் மீனா.3.10.1958 ல் வெளியான படம் இது.சிவாஜியை விட சம்பளம் அதிகம் வேண்டும் என்று சந்திரபாபு நிபந்தனை விதித்த படம் .தயாரிப்பாளர் பந்துலு சிவாஜியிடம் சந்திரபாபு கேட்டதைச் சொல்ல சிவாஜியும் ,அவன் கேட்ட சம்பளத்தை கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டார்.சபாஷ்மீனா காமெடி காட்சிகளை  பல திரைப்படங்கள் நகலெடுத்து உருவாகியுள்ளன.சந்திரபாபு அப்பாவி இளைஞன் ,மெட்ராஸ் பாஷை பேசம் கை ரிக்ஷா இழுக்கும் தொழிலாளி என இரு வேடங்களில் சிவாஜியுடன் இந்த படத்தில் நடித்துள்ளார்.அப்பாவி சந்திரபாபுவுக்கு ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.சபாஷ் மீனா சூப்பராக ஓடி நல்ல வசூல் செய்து 100 ஓடிய வெற்றி திரைப்படம் ஆகும்.

பார்த்தால் பசி தீரும்.
கமலஹாசன்.
சிவாஜியின் 75 வது படம்.ஏவி.எம் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
A.C.திருலோகசந்தரின் இந்த கதையை இயக்கியவர் பீம்சிங்.கமல்ஹாசன் ஜெமினிக்கு மகனாக நடித்திருப்பார்.

பலே பாண்டியா.
M.R.ராதா.
சிவாஜி அவர்கள் மூன்று வேடத்தில் நடித்த இந்த திரைப்படத்தில் M.R.ராதா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.இப் படத்தின் டைரக்டர் பந்துலு.சிவாஜி அவர்கள் 11 நாட்களில் நடித்து முடித்து சாதனை செய்த படம்.அமெரிக்கப் பயணம் செல்ல வேண்டி இருந்ததால் சிவாஜி தினம் 4 மணிநேரம் மட்டுமே தூங்கி 11 நாட்களில் நடித்து முடித்தது பெரிய சாதனையாகும்.பலே பாண்டியாவில் சிவாஜி M.R.ராதா இணைந்து பாடும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடல் மிகவும் பாப்புலரான பாடல் ஆகும்.  சிவாஜி மூன்று வேடம் எம்ஆர் ராதா இரண்டு வேடம் செய்த இந்த திரைப்படம் ஒரு மகத்தான காமெடி சித்திரம்.

சௌகார் ஜானகி.
புதிய பறவை .
சிவாஜி புரொடக்ஷன் தயாரித்த வண்ண திரைப்படம் புதிய பறவை. சௌகார் ஜானகி இரட்டை வேடத்தில் நடித்த படம் இது.இந்தத் திரைப்படத்தில் சௌகார் ஜானகி பாடும் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல் மிகவும் பாப்புலரான பாடல்.
இந்தத் திரைப்படத்தில் சரோஜா தேவியும் நடித்திருப்பார் .

சொர்க்கம்.
R.S.மனோகர் இரண்டு வேடம்.
MRR.வாசு ஐந்து வேடம்
சச்சு ஐந்து வேடம்.
ஒரு திரைப்படத்தில் அதிகமான வேடங்களில் நடிகர்  நடிகைகள் நடித்தது இந்த படம்தான்.எந்த சினிமாவிலும்  செய்யப்படாத  புதுமை இது 
T.R.ராமண்ணா இயக்கிய படம் இது.100 நாள் ஓடி வெற்றி கண்ட திரைப்படம் இது.
சொர்க்கம் படம் வெளியான தேதி 29.10.1970.இந்த படத்தோடு இணைந்து வெளியானது எங்கிருந்தோ வந்தாள்.  இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி 100 நாட்கள் ஓடியது என்ற சாதனையை செய்தது .

தங்கைக்காக.
லட்சுமி இரு வேடம்.
6.2.1971 ல் வெளியான படம் இது. சிவாஜியின் தங்கை பாத்திரத்தில் லட்சுமி நடித்திருப்பார் இந்தப் படத்தில் லட்சுமி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் .இந்தப் படத்தின் இயக்குனர் D.யோகானந்த். இப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா .

ராஜா
சந்திரபாபு.
1972ல் வெளியான படம் ராஜா. இந்தப் படத்தில் சந்திரபாபு மூன்று வேடத்தில் நடித்திருப்பார் .கே பாலாஜி தயாரித்த  இந்த திரைப்படம் வசூல் சாதனை செய்த திரைப்படம் .

வாணிஸ்ரீ
வாணிராணி.
வாணிஸ்ரீ இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் வாணி ராணி. 1974 இல் வெளியான படம் இது. இரட்டை வேடத்தில் நடித்த வாணிஸ்ரீ சிவாஜி, முத்துராமனுக்கு ஜோடியாக நடித்திருப்பார் .

சோ.
தங்கப்பதக்கம்.
காவல்துறை அதிகாரியாக நடித்து மிரட்டிய சிவாஜி செய்த எஸ்பி சௌத்திரி கதா பாத்திரமான தங்கப்பதக்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சோ இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். போலீஸ் கான்ஸ்டபிள்  ஆகவும் ,அரசியல்வாதியாகவும்  'சோ 'இரட்டை வேடத்தில் நடித்த படம் தங்கப்பதக்கம். சிவாஜி புரொடக்ஷன் தயாரித்த படம் இது .சிவாஜி நடித்த ரோஜாவின் ராஜா படத்திலும்  சோ இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் .

ஸ்ரீபிரியா ..
வசந்தத்தில் ஓர் நாள் ..
1982ல் வெளியான வசந்தத்தில் ஓர் நாள் திரைப்படத்தில் ஸ்ரீபிரியா இரட்டை வேடம் செய்திருப்பார் .சிவாஜியின் காதலியாகவும் மகளாகவும்
 ஸ்ரீ பிரியா இரட்டை வேடம் செய்த படம் இது.

ஒய் ஜி மகேந்திரன்.
 பரீட்சைக்கு நேரமாச்சு .
1982ல் வெளியான படம் பதிவு செய்து பரீட்சைக்கு நேரமாச்சு. முக்தா சீனிவாசன் இயக்கிய இந்த திரைப்படத்தில்
 ஒய் ஜி மகேந்திரன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். சிவாஜியின் இறந்து போகும் மகனாகவும், ரவுடியாகவும் எல் ஜி மகேந்திரன் நடித்த படம் இது .

இளைய திலகம் பிரபு.
தராசு .
1984 இல் வெளியான படம் தராசு. இந்தத் திரைப்படத்தில் இளைய திலகம் பிரபு இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
கோழையாகவும் வீரனாகவும் பிரபு இரட்டை வேடங்களில் நடித்த படம் இது .
வம்ச விளக்கு திரைப்படத்திலும் பிரபு இரட்டை வேடங்கள் செய்திருப்பார். 

தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயக நடிகரின் திரைப்படங்களில், மற்ற நடிகர் நடிகைகள் இரண்டு  அல்லது அதற்கு மேற்பட்ட வேடங்களில்  நடித்து வகையிலும்  சாதனை செய்தது சிவாஜி படங்கள் தான்.

செந்தில்வேல் சிவராஜ்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்