பிளாக் டிக்கட்..
இந்த தலைமுறைக்கு இது தெரியாத விஷயம்.இப்பல்லாம் புதுப்பட ரிலீஸ்னா தியேட்டர்லேயே அதிக விலையிலே விக்கறாங்க.
2000 வருஷம் வரைக்கும் இந்த வியாபாரம் இருந்துச்சு.
அதிக தியேட்டர்கள்லே படம் வெளியிடற முறை எப்போ வந்துச்சோ ,மால்,
மல்ட்டிபிளக்ஸ் வந்த பின்னாலே, தொலைஞ்சு போன வியாபாரந்தான் இந்த பிளாக்டிக்கெட் பிசினஸ்.என்னாடா ,இதை போய் வியாபாரம்னு சொல்றானேன்னு நெனக்காதீங்க.இது அப்பிடித்தான் நடந்துச்சு அந்த டயத்துலே.
புதுப்படம் ரிலிசாச்சுன்னா,குறிப்பா ஸ்டார் வேல்யூ படங்கள்..அந்த நடிகனோட ரசிகன் வர்றானோ இல்லையோ ,முதல்லே தியேட்டர்லே நிக்கறது இந்த பிளாக் டிக்கெட் கும்பல்தான்.ரிலீசாகற புதுப்படம் எத்தனை நாள் ஹவுஸ்புல்லா ஓடுதோ அத்தனை நாளும் இவங்க ஆஜர் ஆயிடுவாங்க.
முதல் ஷோ ரிசல்ட்டை பட தயாரிப்பாளரை விட இவங்க எதிர்பார்ப்பாங்க.முதல் ஷோ இடைவேளை டயத்துலேயே படத்தை பத்தின ரிப்போர்ட் ஓரளவு இவங்களுக்கு தெரிஞ்சுடும்.
படம் பயங்கர ஹிட்டுன்னா டிக்கெட் விலை தாறு மாறா ஏறிடும்.
ஒரு ஷோ ஓடிட்டு இருக்கறப்போ ,அடுத்த ஷோவுக்காக பெரிய வரிசையிலே நிப்பாங்க .50 பேரு கூட டிக்கட் வாங்கியிருக்க மாட்டாங்க. அதுக்குள்ளே கவுண்டர்லே Houseful போர்டு மாட்டிருவாங்க.கவுண்டர்லே கொடுக்க வேண்டிய டிக்கட் அதுக்கு முன்னாலே பிளாக் டிக்கட் விக்கறவங்க கைக்கு வந்துடும்.ஓடிட்டு இருக்கற படம் முடியற டயத்துலே ,பிளாக் டிக்கெட் சேல்ஸை ஆரம்பிச்சிருவாங்க.
தியேட்டரோட மொத்த டிக்கெட் பிசினசை இவங்க குத்தகைக்கு எடுத்துட்டாங்களோன்னு நினைக்க வைக்கும் அங்க நடக்கற களேபரங்கள் .
படம் கால்வாசி ஓடற டயம் வரைக்கும் கூட இந்த பிசினஸ் நடக்கும்.
தியேட்டர் மேனேஜர்லே இருந்து எல்லோருக்கும் கமிஷன் போகும்.
இந்த பிளாக் டிக்கட் பிசினஸ் செஞ்சே வீடு வாங்குனவங்க இருக்காங்க.
சில சமயம் விபரம் தெரியாதவங்க,இந்த பிளாக் டிக்கட் விக்கற ஒரு ஆளை எதுத்தாலோ ,பேச்சு மீறி கை வெச்சாலே ,அங்கங்கே இருந்து பிளாக் டிக்கட் விக்கறவங்க ஒண்ணு சேந்துருவாங்க.பெரிய அளவுலே கை கலப்பு நடந்து குத்து ,வெட்டுன்னு ரொம்ப நடந்துருக்கு.போலீஸ் கேஸ் வரைக்கும் போகும் சிலசமயம்.போலீஸ் புடிச்சிட்டு போன ஆளு அடுத்த ஷோவிலேயே டிக்கட் வித்துட்டு இருப்பான்.
எல்லா புதுப்பட கூட்டத்துக்கும் போலீஸ் இருப்பாங்க.அவங்க ஒரு சைடுலே நின்னுட்டு ,கண்டுக்காம இருப்பாங்க.ஏன்னா அவங்களுக்கும் காசு போகும்.டிக்கட் வித்து முடிச்ச பின்னாலே ,போலீஸ் ,பிளாக் டிக்கட் பேர்வழிகள் எல்லாம் தியேட்டர் பக்கத்துலே இருக்கற டீக்கடையிலே நின்னு ஜாலியா பேசிட்டு இருப்பாங்க.
பிளாக் டிக்கட் விக்கறவங்க சாதாரணமா இருந்தாலும்,கத்தி ,
பிளேடுன்னு பலதும் வெச்சிருப்பாங்க.எதுக்கும் துணிஞ்சுதா அவங்க இருப்பாங்க..கை நிறைய பணம்..பணம்..எத்தனை வருஷம்..எத்தனை தியேட்டர்கள்..
ஒரு பிளாக் டிக்கட் விக்கறவனோட சட்டைய புடிச்சா,அவஞ் சட்டைய புடிக்க பல பேரு ஓடி வருவாங்க.
இந்த பிசினெசிலும் 'Peak hours'ன்னு இருக்கு.அவங்க Fix பண்ணுன ரேட்டுக்கு டிக்கட்டை எல்லாம் வித்தாகணும்.ரொம்ப விலை வெச்சுத்தான் அவங்களும் தியேட்டர்காரங்க கிட்ட இருந்து வாங்கறாங்க.டிக்கட் ஏதாவது விக்காம மிச்சமாச்சுன்னா ,அதை தியேட்டர்காரங்க கிட்ட திருப்பி கொடுக்க முடியாது.தியேட்டர்காரங்களும் வாங்க மாட்டாங்க. .அது சில சமயம் லாபத்துலே நஷ்டம் ஆகும்.அதனாலே ஓடிட்டு இருக்கற படம் விடறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாலே அது சாதாரணமா ஆரம்பிச்சு ,போகப் போக பரபரக்கிற வியாபாரமா நடக்கும்.கூட்டம் இருந்தா டிக்கட் ரேட் அவங்க சொன்னதுதான்.ஒரு ரூபா குறையாது.கூட்டம் ஜாஸ்தியாச்சுன்னா ,டிக்கட் ரேட்டும் இன்னும் அதிகமாகும்.
ஒரு பிளாக் டிக்கட்டை எப்ப கம்மியா வாங்க முடியும்னா,கூட்டம் குறைஞ்சு இனி வாங்க ஆள் வராதுன்னு தெரிஞ்சா,படம் ஆரம்பிச்சு நேரம் ஆச்சுன்னா ,இருக்கற டிக்கட்டை கேட்ட விலைக்கு கொடுப்பாங்க.இந்த மாதிரி சிச்சுவேஷன்தான் பிளாக் டிக்கட் விக்கறவனுக்கு நஷ்டம் ஆகற சிச்சுவேசன்.அதனாலே தான் அவங்க மொதல்யே ரேட்டை தாறுமாறா ஏத்தி விப்பாங்க.பின்னாலே நஷ்டம் ஆச்சுன்னா கூட முன்னாடி வந்த லாபத்தாலே சமாளிச்சுக்கலாம்னுதான் ..
அந்த காலத்துலே 1000 சீட்டு இருக்கற ஒரு தியேட்டரோட ஒரு ஷோ வசூல் 4000 ரூபாய்ன்னா பிளாக் டிக்கேட்லே விக்கறவங்களுக்கு
8000,10000 ம்னு வித்துடுவாங்க.
100 ,200,டிக்கெட்டை தியேட்டர்காரங்க கவுன்டர்லே விக்கறதுக்கு வெச்சுக்குவாங்க.ஒரு கண் துடைப்புக்காக...பிரச்சினை ஆகக் கூடாதுன்னு இந்த விஷயம்.
தியேட்டர்லேயே சில மேனேஜருங்க ,சூபர் வைசருங்க பிளாக் டிக்கெட் விக்கறதுக்கு ஆளுகளைப் போட்டு கமிஷன் அடிப்படையிலே வியாபாரம் பண்றவங்களும் இருக்காங்க.
இந்த பிசினசுக்கு எது தோதான காலகட்டம்னா ,ஒரு தியேட்டர்லே House full போர்டு மாட்டற காலகட்டம் வரை தான்.Housfull போர்டு எப்ப தேவையில்லையோ அவங்களுக்கும் வேலையில்லை.பிசினசும் இல்லை.அவங்களோடஅடுத்த டார்கெட் அடுத்த பெரிய படம் .அடுத்த புதுப்படம்..
ஒரு செயின் மாதிரி அவங்களோடகூட்டம் ஒவ்வொரு தியேட்டர்லேயும் இருக்கும் ..
அடி தடி சண்டையெல்லாம் சர்வசாதாரணமா ,சகஜமா நடக்கற தொழில் இந்த பிளாக்டிக்கெட் பிசினஸ்..
எதற்கும் துணிந்தவர்கள் இந்த தொழிலில் இருப்பார்கள்.
இப்ப ,இந்த காலத்துலே யோசிச்சு பாத்தா, அந்தகாலத்துலே பிளாக் டிக்கட்டை ,இரண்டு ரூவா டிக்கட்டை 5 ரூபா ,சில சமயம் 10 ரூவான்னு சொல்வாங்க..
அவ்வளவு விலை கொடுத்து வாங்கணும்மான்னு பேசாம இருந்துருக்கேன்.
இந்த காலத்துலே 1000 ரூபா 2000ரூபாயை கூட யாரும் பெரிசா நினைக்கறதில்லே ...
செந்தில்வேல் சிவராஜ்...
கருத்துகள்
கருத்துரையிடுக