1நவராத்திரி 3.11.1964
2.தங்கசுரங்கம் CID 28.3.69
3.ராஜா 26.1.72...
4.தங்கப்பதக்கம் 1.6.74
5.என்மகன்21.8.74
6.வைர நெஞ்சம்CID 2.11.75
7.திரிசூலம்27.1.79
8.ரிஷிமூலம் 26.1.80
9.ரத்தபாசம்14.6.80
10.சங்கிலி14.4.82
11.தீர்ப்பு 21.5.82
12.தியாகி 3.9.82
13.வெள்ளைரோஜா 4.11.83
14.திருப்பம் 14.1.84
15.நீதியின் நிழல் 13.4.85
16.விடுதலை11.4.86
17.புதியவானம்.10.12.88
சிவாஜி போலீஸ் வேஷத்துலே தமிழ்லே நடிச்ச படங்கள் 17.இதுலே 100 நாள் ஓடுன படங்கள் 10.
இதுலே வெள்ளிவிழா ஓடுன படங்கள் மூணு.தங்கப்பதக்கம் ,
திரிசூலம்,தீர்ப்பு
இரண்டு படத்துலே CIDயா நடிச்சிருப்பார்.தங்கச்சுரங்கம்,வைரநெஞ்சம்.
சிவாஜி போலீஸ் டிரஸ் போட்டுட்டு நடிச்ச படங்கள் 14.
போலீஸ் வேஷமா ..தன்னை விட யாருமில்லேன்னு சொல்ல வெச்சவர் நடிகர்திலகம்.ஆனா இந்த போலீஸ் வேசத்தை தன்னோட 100 வது படமான நவராத்திரியிலேதான் முதன்முறையா செஞ்சார் சிவாஜிங்கறது ஆச்சர்யம்.நவராத்திரியிலே கூட பத்து வேஷத்துலே ஒரு வேஷமா தான் செஞ்சிருப்பார்.அதுலே கூட கடைசி ஒரே ஒரு சீனுலே மட்டும்தான் போலீஸ் டிரஸ்ஸோட வருவார் .
சிவாஜி நடிச்ச தங்கப்பதக்கம் படம்தான் போலீஸ் வேஷங்களுக்கே ஒரு முன்னுதாரணமா இருக்குது.இந்த படம் கூட நாடகமா நடத்தப்பட்ட கதைதான் .அப்படி நாடகமா நடந்த கதை தான் தங்கப்பதக்கம் சினிமாவா உருவாச்சு.
பெஜவாடா பெப்புலி ..இந்த தெலுங்கு படத்துலேயும் சிவாஜி போலீசா நடிச்சிருப்பார் .தமிழ்லே இந்த படம் சட்டம் ஒரு சக்கரம்னு வெளி வந்துச்சு.சிவாஜியோட கிருஷ்ணா நடிச்ச படம் இது.
ஸ்கூல் மாஸ்டர்..இந்த படம் கன்னடம் இந்தி மலையாளம்னு மூணு மொழியிலேயும் வெளியான படம்.இந்த படத்துலே போலீசா கௌரவ வேஷத்துலே சிவாஜி நடிச்சிருப்பார்.
சிவாஜி கொஞ்ச நேரமே போலீஸா நடிச்ச படம் ரிஷிமூலம்.போலீஸ் வேஷம் போட்டு அது பேமிலி டிராமாவா மாறின கதையமைப்பைக் கொண்ட ஒரே படம் இதுதான்.
சிவாஜி போலீசா நடிச்சு சண்டைக்காட்சி இல்லாத ஒரே படம் இதுதான் .
படம் முழுதும் போலீஸ் கேரக்டர்னா அந்த போலீஸ் ஆபிசருக்கு குடும்பம் மனைவி இருக்கறதும் ,அந்த மனைவி ,வீட்டுக்கு வர்ற போலீஸ் கிட்டே ,ஏன் லேட்டுன்னு கேக்கறதும்,அதுக்கு பதிலா போலீஸ் ஸ்டேசன்லே ரொம்ப முக்கியமான வேலை இருந்துச்சு,அதான் லேட்டுன்னு பொண்டாட்டிகிட்ட சொல்லறதும் ,பொண்டாட்டி கோவப்படறதுமான இந்த சீன் இல்லாத போலீஸ் படங்க ரொம்ப கம்பி.இந்த கான்செப்டுக்கு முன்னோடியா இருந்தது தங்கப்பதக்கம் சிவாஜி கே ஆர் விஜயா பேசற காட்சி.எத்தனை டெக்னாலஜி வந்தும் ,
படம் தயாரிச்சாலும் ,போலீஸ் ,
குடும்பம் மனைவின்னு கதை இருந்தா இந்த சீனு மேக்ஸிமம் இருக்கும்.
K.பாலாஜி தயாரிச்ச படங்களில் சிவாஜி நான்கு படத்துலே போலீசா நடிச்சிருப்பார்.அந்த நாலு படங்கள்
ராஜா என்மகன் தீர்ப்பு விடுதலை...
சிவாஜி புரொடொக்சன் தயாரிச்ச தங்கப்பதக்கம் ரத்த பாசம் நீதியின் நிழல் திரிசூலம் ஆகிய 4 படங்கள்லே சிவாஜி போலீசா நடிச்சிருப்பார்.
சிவாஜியோட 171 வது படம் தங்கப்பதக்கம் .இதுக்கு அடுத்ததா 172 வது படம் என்மகன் .தொடர்ச்சியா வெளியான ரெண்டு படங்களிலேயும் சிவாஜி போலீசா நடிச்சிருப்பார்.
அதே மாதிரி 238 வது படம் வெள்ளை ரோஜா,239 வது படமான திருப்பம் ..இந்த ரெண்டு படத்துலேயும் போலீஸ் கேரக்டர்தான்.
,அதே மாதிரி சிவாஜியோட 225 படம் தீர்ப்பு,226 வது படம் தியாகி..அடுத்தடுத்து வெளியான இந்த ரெண்டு படத்துலேயும் போலீஸ் கேரக்டர் செஞ்சிருப்பார் சிவாஜி.
நடிகர்திலகம் இளையதிலகம் ரெண்டு பேரும் போலீசா நடிச்ச படம் ரெண்டு :
திருப்பம்,நீதியின் நிழல்.
சிவாஜியோட100 வது படமான நவராத்திரி,
200 வது படமான திரிசூலம் படம்,
225 வது படம் தீர்ப்பு,
275 வது படம் புதிய வானம் ..
சிறப்பு நெம்பர் வரிசையிலே உருவானஇந்த படங்க எல்லாம் சிவாஜி போலீசாக நடித்த படங்கள்.
ராஜா 26.1.72
ரிஷிமூலம் 26.1.80
இந்த ரெண்டு படங்களும் குடியரசு தின வெளியீடா வந்த படங்கள்.
சங்கிலி ,நீதியின் நிழல் ,விடுதலை ..இந்த மூணு படமும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியான படங்கள்.
நவராத்திரி வைர நெஞ்சம் வெள்ளை ரோஜா ..இந்த மூன்று படங்களும் தீபாவளிக்கு வெளியான படங்கள் ..
போலீஸ் ஏட்டு ,இன்ஸ் பெக்டர்,DSP,சூப்ரிடென்ட் ஆப் போலீஸ்னு பல பதவிகள்லே சிவாஜி நடிச்சிருக்கார்.
சிவாஜி போலீசா நடிச்சு வெளிநாட்டில் எடுத்த ஒரு படம் விடுதலை. படம் முழுதும் இல்லைன்னாலும் படத்தோட கொஞ்சம் காட்சிகள் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது.
சிவாஜி CID வேஷத்துல ஜேம்ஸ் பாண்ட்டா நடிச்ச படம் தங்க சுரங்கம். இந்த படத்துலே சிகரெட் பத்த வைக்கறதுக்காக தீக்குச்சியை எடுத்து நடிகை பாரதியோட தோள்லே தீக்குச்சிய உரசி தீப்பற்ற வைப்பார்..சிவாஜி இந்த ஒரே படத்துலே ஒரே ஒரு சீனுலே பண்ணுனதை பின்னாலே வந்த ஒரு முன்ணணி நடிகர் பல படங்கள்லே இந்த மாதிரி காட்சி வெச்சு நடிச்சார்.
சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமில்லே பெரும்பான்மையான ரசிகர்களுக்கு புடிச்ச நல்ல உற்சாகமான விறு விறுவிறுப்பான படம் ராஜா.சிவாஜி தான் வர்ற எல்லா காட்சியிலேயும் பலப்பல ஸ்டைல்களை காட்டி எல்லாரையும் ரசிக்க வெச்ச படம் இது .
சங்கிலி தீர்ப்பு தியாகி இந்த மூணு படங்களுமே சிவாஜி போலீசா நடிச்சு ஒரே வருஷத்துலே வந்த படங்கள் வருஷம் 1982..
போலீசா நடிச்ச எந்த படத்திலயும் ஒரு படத்துலே நடிச்ச நடிப்போட சாயலை இன்னொரு படத்துலே காட்டி நடிச்சிருக்க மாட்டார் சிவாஜி.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக