1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

மலைக்கள்ளன்

நடிகர்திலகம் சிவாஜிகணேசனை பொறுத்தவரை தான் நடிக்கணும்னா ஒரு நல்ல கதை இருக்கணும்.சம்பளம் எல்லாம் மத்தபடிதான்.படத்தோட கதை நல்லா இருந்தா வாங்கற சம்பளத்தை கூட அட்ஜஸ்ட் பண்ணிக்குவார்.
எந்த நல்ல கதையும் சிவாஜிகிட்டே சொன்னா அது சினிமாவா மாறிடும்.யாரு படம் தயாரிக்க வந்தாலும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவார்.இந்த மாதிரி குணம் கொண்ட சிவாஜி கணேசன் ஒரு நல்ல கதை வந்தும் அதுலே நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுச்சு.அந்த கதையிலே நடிச்சா தன்னோட பேரும் புகழும் இன்னும் அதிகமாகும் , படமும் நல்லா  வசூல் செய்யும்னு அவருக்கு தெரியும்.இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சிருந்தும் சிவாஜி அந்த படத்துலே நடிக்க முடியலே.அதே சமயம்
சிவாஜியேஅந்த கதையிலே இந்த பிரபல ஹீரோவை போட்டு படம் எடுங்க அப்பிடின்னு சொல்லியிருக்கார்.ஒரு நல்ல கதை வந்தும் அவராலே ஏன் அந்த படத்துலே நடிக்க முடியாம  போச்சு,அது என்ன படம் எதனாலேஅப்படிங்கற விவரங்களை இந்த வீடியோவுலே பார்க்கலாம்.

சிவாஜி சார் 1952 லே பராசக்தி படத்துலே நடிச்ச பிறகு பயங்கர பிஸி ஸெட்யூலிலே நடிச்சுகிட்டு இருந்தார்.வரிசையிலே 4,5 வருஷத்துக்கு நிறைய படங்களில் நடிக்க கமிட் ஆயிருந்தார்.எல்லா தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் சிவாஜியை வச்சு எப்படியாச்சும் ஒரு படத்தையாவது எடுக்ககணும் அப்படிங்கற எண்ணத்துலே இருந்தாங்க.அதுலே ஒருத்தர்தான் ஸ்ரீராமுலு நாயுடு.இவரோட ஸ்டுயோதான் பட்சிராஜா ஸ்டுடியோ.அந்த காலத்துலே இவர் ஒரு பிரபலமான படத்தயாரிப்பாளர் ஆவார்.
தமிழ்  தெலுங்கு மலையாளம் ஹிந்தி சிங்கள மொழிகளில் எல்லாம் படம் தயாரிச்சிருக்கார் ராமுலு நாயுடு.
பட்சிராஜா ஸ்டுடியோ கோயமுத்தூர்லே பிரபலமா இருந்த ஸ்டுடியோ ஆகும்.
இவர் சென்னைக்கு வந்தார்னா அவரோட நண்பர் லேனா செட்டியார் ஆபீசில்தான் தங்குவார்.
அப்படி ஒருசமயத்துலே லேனா செட்டிட்டார் கிட்டு நாயுடு பேசிட்டு இருக்கறப்போ தான் புதுசா எடுக்கப்போற படத்தை பத்தி பேசுனார்.
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதுன ஒரு பிரபலமான நாவல் மலைக்கள்ளன்.அந்த நாவலை மையப்படுத்தி தான் படம்தயாரிக்க விரும்பறதா லேனா செட்டியார் கிட்ட சொல்லியிருக்கார்.அந்த படத்துலே சிவாஜியை கதாநாயகனா போட்டு படம் தயாரிக்கலாம்னு இருக்கறதா தன்னோட ஐடியாவை லேனா செட்டியார் கிட்டே சொல்லியிருக்கார்.

அந்த நேரத்துலே லேனா செட்டியார் தன்னோட சொந்த பட நிறுவனமான கிருஷ்ணா பிக்சர்ஸ் மூலமா சிவாஜியை கதாநாயகனா போட்டு காவேரி படத்தை எடுத்துக்கிட்டு இருந்தார்.நாயுடு சொன்ன யோசனையை கேட்டு ,அது சரியா இருந்ததாலே ,8சிவாஜி கிட்ட பேசி தானே கால்ஷீட் வாங்கித் தர்றதா செட்டியார் சொல்லிட்டார்.

காவேரி பட ஷுட்டிங் நடந்துட்டு இருந்த நேரத்துலே சிவாஜியை பாத்து பேசுன லேனா செட்டியார்,மலைக்கள்ளன் கதையை சொன்னார்.கதையை கேட்ட சிவாஜி ,தனக்கு அந்த கதை பிடிச்சிருக்கிறதா செட்டியார் கிட்டே சொல்லிட்டார்.
ராமுலு நாயுடுவுக்கு சிவாஜியை வெச்சு படம் தயாரிக்க போறோம்னு ரொம்ப சந்தோசம்.
நாயுடு சிவாஜியை சந்திச்சு ,மலைக்கள்ளன் படத்தை பிரமாண்டமா எடுக்கப் போறதாகவும் ,ஷூட்டிங் முழுதும் கோயமுத்தூர்லே இருக்கற பட்சிராஜா ஸ்டுடியோவுலே படமாக்கப் போறதாகவும்  ,எப்படியும் சிவாஜி 4 !மாசம் கோயமுத்தூர்லே தங்க வேண்டிய சூழ்நிலை இருக்க வேண்டியது வரும்னு சொல்லியிருக்கார்.

சிவாஜி அந்த சமயத்துலே நிறைய படங்கள்லே நடிச்சிட்டு இருந்தார்.ஷிப்ட் மாத்தி ஷிப்ட் முறையிலே நாள் பூராவும் பிசியா இருந்தார்.இந்த ஒரு படத்துக்காக தான் கோயமுத்தூர்லே தங்குனா மற்ற தயாரிப்பாளர்கள் ,மற்ற படங்கள் ரொம்ப பாதிக்குமேன்னு யோசனை பண்ணினார்.
மலைக்கள்ளன் படத்துலே நடிக்க ஒப்புகிட்டு மத்த படங்கள் பாதிப்படைய சிவாஜி விரும்பலே.அதனாலே அந்த படத்துலே நடிக்கறதுலே இருந்து விலக முடிவு பண்ணினார்.
இருக்கற நிலைமையை ராமுலு நாயுடுகிட்டே விளக்கமா சிவாஜி எடுத்து சொல்லிட்டார்.
நாயுடுவுக்கு சிவாஜி நடிக்க முடியாதுங்கறதுலே ரொம்ப வருத்தம்.
ராமுலுவோட வருத்தத்தை பாத்த சிவாஜி அவருக்கு ஒரு யோசனையும் சொன்னார்.அப்போ இருந்த ஒரு நடிகரோட பேரைச் வொல்லி அவர வெச்சு படத்தை எடுங்க. அந்த படத்துக்கு அவர் சரியா இருப்பார் ,அவர் கிட்டே கேட்டுப்பாருங்க அப்படின்னு சொன்னார்.சிவாஜியோட யோசனைபடியே மலைக்கள்ளன் படத்துலே ராமுலு நாயுடு அந்த நடிகரை நடிக்க வெச்சு படத்தை எடுத்து வெளியிட்டார்.சிவாஜியோட கணிப்பு படியே அந்த படம் ராமுலு நாயுடுவுக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்துச்சு.
மலைக்கள்ளன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்காம போயிருந்தா என்னோட திரைப்பட வாழ்க்கை என்னும் கப்பல் தரை தட்டியோ பாறைகளில் மோதியோ விபத்துக்கு ஆயிருக்கும்னு அந்த படத்துலே நடிச்ச அந்த நடிகர் பின்னாளிலே சொல்லியிருந்தார்.
சிவாஜி தனக்கு வந்த ஒரு நல்ல வாய்பை சொன்னதோட மட்டுமில்லாம அந்த படத்தை இப்படி முடிங்கன்னு ஒரு ஐடியாவும் சொன்னார்.இது சிவாஜியோட பெருந்தன்மை.

ராமுலு நாயுடு சிவாஜியை வெச்சு பின்னாலே மரகதம் கல்யாணியின் கணவன் படங்களை எடுத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்