1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

கௌரவம் vs மனிதனும் தெய்வமாகலாம்

நடிகர்திலகத்தின்  இந்த இரண்டு படங்களும் ரெண்டு டைரக்ஷன்லே டிராவல் பண்ற கதையமைப்பை கொண்ட படங்கள்.
இந்த ரெண்டு படங்களிலும் நடிகர்திலகத்துக்கு இரட்டை வேடங்கள் .இரட்டை வேடங்களில் ஒரு சிவாஜி கேரக்டர் நாத்திகத்தை பேசும்.இன்னொரு சிவாஜி .அதற்கு எதிரானது.
இரட்டை வேடங்களில் ஒரு சிவாஜிக்கு மழு மழு ஷேவ் செய்யப்பட்ட முகம்.மீசையில்லாமல்.பளிச் பளிச் முகம்.
கௌரவம் படத்துலே அப்பா சிவாஜி கேரக்டர் கடவுளை கிண்டல் செய்யும் கேரக்டர்.
இதற்கு நேர் மாறா மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் தம்பி சிவாஜி கேரக்டர்.
இந்த இரண்டு படங்களை பற்றி இதில் பேசினாலும்,நடிப்பை பொறுத்த வரையில் கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்ம ராட்சதன்.மிரட்டோ மிரட்டென்று மிரட்டியிருப்பார்.வாய்ப்பு சிவாஜியிடம் இருந்தே வராத போது மற்றவர்கள் நோ...சான்ஸ்...
இந்த கேஸில் ஜெயிக்கப் போறது பாரிஸ்டர் ரஜினிகாந்ந்ந்தா...இல்லை மிஸ்டர் கண்ணனா என்று அவரே சவாலுக்கு ஜூனியரை அழைத்த நடிப்பாயிற்றே....ஆதலால் நடிப்பவர்கள்  எல்லாம் பார்க்க மட்டுமே முயற்சி செய்தல் நல்லது..

மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் கோயில் குருக்கள் 
குமரய்யாவாக சிவாஜி.இரட்டை  வேடத்தில் அண்ணன் கேரக்டர் இது.
.கோவில் குருக்கள் முருக கடவுளிடம் நேரிடையாக பேசும்   காட்சிகளை   மறைமுகமாக உணர்த்துவது போலே வைத்திருக்கலாம். இருந்தாலும்,முருகன் பேசும் வசனங்கள் சுவாராஸ்யமானவை.
முருகனிடம் சிவாஜி பேசுவதான வசனங்களில் அன்றைய அரசியல் 
அமர்க்களப்படும்.
உதாரணமாக,
விலைவாசி எல்லாம் ஏறி போச்சாமே ,  என்று முருகன் கேட்க,
அதற்கு கோவில் குருக்கள் சிவாஜி, உப்பு சர்க்கரை விலைக்கு வந்துருச்சு, அரிசி விலை தங்கம் விலைக்கு வந்துருச்சு, தங்க விலை எங்கேயோ போய்விட்டது ...
தர்மகர்த்தா மகனை பரீட்சையில்  பாஸ் செய்ய வைத்தால் முருகனுக்கு தங்கத்தால் வேல் செய்து வைப்பதாக சொல்ல, அதற்கு முருகன் ,எனக்கே லஞ்சமா ?என்பது போன்றவை...
உன் தம்பி எப்படி இருக்கிறான் என்று முருகன் கேட்க,
அதற்கு சிவாஜி ,
கடவுளே இல்லையாம் மனுஷன் தான் தெய்வமாம், என்று சொல்கிறான் என்று முருகனிடம் சொல்ல, அதற்கு முருகன் அவன் சொல்வது கூட உண்மையாகத்தான் இருக்குமோ ? நான் கூட பொய்யோ என்று கிண்டல் அடிப்பார் ..

இதே தெய்வம் நம்பிக்கை கௌரவம் படத்தில் ...
ஏண்டா கண்ணா! நீ கோயில்ல தினம் காசு போடறியே ,அந்த காசு டைரக்ட்டா சாமிக்கு போய் சேர்ந்து விடுதா ,என்று பாரிஸ்டர் கண்ணனிடம் கேட்க, கண்ணன் சொல்லும் பதில் தான்  ஹைலைட் ..
நாம காசு கொடுத்துட்டோம்ங்கறதுக்கு அத்தாட்சியாத்தா கோவில்ல ரசீது கொடுக்கிறார்களே ,அந்த அத்தாட்சி தான் நம்பிக்கை என்று சொல்வார்...

கௌரவம் கண்ணனும் மனிதனும் தெய்வமாகலாம் சுந்தரம் ,இரண்டு பேரும் எதிர் குண பாத்திரங்கள்.
இரண்டு பாத்திரங்களும் நல்ல குண அமைப்பை கொண்ட பாத்திரங்களாக இருந்தாலும் சொல்லும் விதத்தில் வேறு வேறாக காட்டிய பாத்திரங்கள்.
கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர் கண்ணன்.சுந்தரம் மனித மேம்பாட்டில் அக்கறை கொண்டவர்.
கண்ணன் பகவத்கீதை படிப்பார்.சுந்தரம் ராமாயணத்தையே கொளுத்துவார்.
கண்ணன் வீபூதியை பட்டை பட்டையாக போடுவார்.சுந்தரம் விபூதியை தொடவே கூசுவார்.
கண்ணன் சுந்தரம் இரண்டு பேருக்கும் நாயகி உஷாநந்தினி.
பாரிஸ்டர் ரஜினிகாந்துக்கு பண்டரிபாயும் குமரய்யாவுக்கு சௌகார் ஜானகியும் ஜோடிகள்.இரண்டு பாத்திரங்களும் ஒன்று போல்தான்.

கௌரவத்தில்,மோகன்தாஸ் கேஸை ஜெயிக்க வேண்டும் என்ற சவால் பாதையில் போவார் கண்ணன்.ஆனால்
மனிதனும் தெய்வமாகலாம் படத்தில்  கடவுள் இருப்பதை நிரூபிக்கிறேன் என்று சவால் விடுவார் கோயில் குருக்கள் குமரய்யா..

மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை நிருபித்து காட்டுகிறேன் ஒன்று ஒரு சவால் விடுவார். ஒரு குறிப்பிட்ட நாள் அன்று கோபுரத்தின் கலசத்தை கடவுளின் அருளால் அசைத்துக் காட்டுகிறேன் என்ற சவால் தான் அது. இந்த விஷயம் உண்மையில் நடக்க வாய்ப்பில்லை என்று குமரய்யாவின் தம்பி சுந்தரம் அண்ணனின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தானே கோபுரத்தின் மேல் ஏறி அந்த கோபுர கலசத்தை அசைத்து அது இயற்கையாக நடப்பது போல படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இருக்கும். தம்பி சுந்தரம் கோபுர கலசத்தை அசைப்பதை அண்ணன் குமரய்யா பார்த்து விடுவார் .ஏண்டா இப்படி செஞ்ச என்று தம்பியிடம்  கேட்பார் .அதற்கு தம்பி சுந்தரம் கடவுள் இருக்கிறாரோ இல்லையோ ஆனால் உங்களுடைய நம்பிக்கை வீண் போகக்கூடாது என்பதற்காக தான் அதை செய்தேன் என்று கூறுவார். அதற்கு குமரய்யா, எட்டடி சுவத்துலே கூட  உன்னால மேல ஏற முடியாது .
இப்போ இவ்வளவு பெரிய கோபுரத்துல உன்னால எப்படி ஏற முடிஞ்சுச்சு என்று கேட்க, அதற்கு தம்பி சுந்தரம், ஏதோ ஒரு சக்தி என் உடம்புல இருந்து இந்த காரியத்தை செய்ய வெச்சிடுச்சு என்று சொல்ல அதற்கு குமரய்யா அந்த சக்தி தான்டா தெய்வ சக்தி என்று சொல்வார்.
கௌரவம் படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த்துக்கு கடவுள் பக்தி இல்லை என்றாலும், மோகன்தாஸ் கேசில் இருக்கும் சில பிரச்சினைகளை எண்ணி அவரும் படத்தில் ஒரே ஒரு காட்சியில் கடவுளை தலை பொழுது வணங்குவது போல 
ஒரு காட்சி இருக்கும்.

பாரிஸ்டர் ரஜினிகாந்த் தன்னுடைய வக்கீல் தொழிலில் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர். கோவில் குருக்கள் குமரய்யா தன்னுடைய கடவுள் பக்தியில் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்.

மேலே குறிப்பிட்ட கௌரவம் மனிதனும் தெய்வமாகலாம் இந்த இரண்டு படங்களிலும் சில ஒற்றுமைகள் வேற்றுமைகள் இருந்தாலும் நடுவர் திலகம் அந்த இரண்டு வேடங்களையும் தன் தனிப்பட்ட திறமையான நடிப்பால் வேறுபடுத்தி காட்டி இருப்பார்.
கௌரவம் திரைப்படம் 1973-ல் வெளிவந்தது. மனிதனும் தெய்வமாகலாம் திரைப்படம் 1975-ல் வெளிவந்தது .

செந்தில்வேல் சிவராஜ் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்