1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியின் வைரவிழா வருட திரைப்படங்கள்

முரடன்முத்து நவராத்திரி இந்த ரெண்டு படம் ரிலீசாகி  60 வருஷம் ஆச்சு.1964 தீபாவளி படங்க.
தமிழ் சினிமாலே ஒரு ஹீரோ  9 வேஷம் கட்டி முதல் தடவையா வருது.எவ்வளவு பெரிய விஷயம் இது.ஒரு சாதாரண ரசிகனை கேட்டா கூட,சிவாஜியோட 100 வது படமா எதை வெளியிடலாம்னு கேட்டா அந்த சாதாரண ரசிகனே சொல்லிடுவான்.பந்துலு எவ்வளவு பெரிய ஆளு அவர் ஒத்துக்கலையே ..
எல்லாரும் தங்களோட படத்தைதான் பெரிசா நினைப்பாங்க.ஆனா இது யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா.உலகத்துக்கே தமிழனோட பெருமையை சொல்ல வெக்கற படம்.அந்த மாதிரி அவரு யோசிக்கலையே.
பந்துலு இந்தியாவிலேயே பெரிய ஆளுன்னுதான் சொல்லணும் .வீரபாண்டிய கட்ட பொம்மன் கர்ணன் கப்பலோட்டிய தமிழன் இந்த மூணு படம் போதும் ..
.அவர் யார்னு சொல்லறதுக்கு.
அதே மாதிரி  ஒரு படத்தை எடுத்துட்டு 100 வது படமா இதை வெளியிடுங்கன்னு சொல்லியிருந்தா கூட அதுலே ஒரு அர்த்தம் இருக்கும்.முரடன்முத்து படத்தை நவராத்திரியோட கம்பேர் பண்ண முடியாதே.அது தான் விஷயம்.அது அதோட முடிஞ்சிடுச்சு.

நவராத்திரி .9 பாகமா போற படம்.ஒரு பாகம் வீரம்னா இன்னொரு பாகம் சோகம்.அடுத்ததா ஒவ்வொரு பாகமும் ஒரு வெரைட்டியிலே போகும்.
தேங்காசோறு புளிச்சோறு தக்காளி சோறுன்னு பல வகை சோறு சாப்பிடற மாதிரி இருக்கும் .அந்த போலீஸ் கேரக்டர் மட்டும் கறி விருந்து மாதிரி.எல்லாமே டேஸ்ட்டா பண்ணியிருப்பார் நடிகர்திலகம்.
9 வேஷம் என்ன ,இதோ..
 கூட ஒண்ணா இந்த வேஷத்தையும் பாத்து ரசிங்கன்னு அன்பளிப்பா அந்த சத்தியவான் சாவித்திரி கூத்தை கொடுத்திருப்பார் A.P..நாகராஜன்.
பொதுவா தமிழ்சினிமாலே இன்னொரு வேஷம்னா முகத்துலே ஒரு மச்சம் இல்லேன்னா ஒட்டு தாடி ,இல்லேன்னா மீசை இல்லாமே அப்பிடின்னு சாதாராணமா நடிச்சிட்டு போயிருவாங்க.சரி என்னதான் மேக்கப் போட்டாலும் முகத்தை அவ்வளவா மாத்த முடியாது .இங்க சொல்ல வேண்டியது நடிப்பைத்தான் .அதுலே சிவாஜி ஏதாச்சும் வஞ்சகம் வெச்சு குறை வெச்சாரா ?
வாங்குன காசுக்கு மேலே நடிச்சுக் கொடுத்தாரே .ஏன் இதை கேக்கறனா ,அந்த படத்தோட வெளியான ஒரு சாதாரண படத்தையெல்லாம் அப்படி ஓடுச்சு, இப்படி ஓடுச்சுன்னு இன்னைக்கு வரைக்கும் கூவிட்டு இருக்காங்களே.
அவங்களுக்காகத்தான் இந்த கேள்வி.

யாரைய்யா நம்பச் சொல்றீங்க? ஒரே நடிகனா இந்த 9 வேஷமும்.அப்பிடின்னு வெளிநாட்டுக்காரனே கேட்டானே .அவங்கிட்டே இருக்கு ரொம்ப டெக்னாலஜி .அந்த டெக்னாலாஜியை வெச்சிட்டு அவன் என்னவெல்லாம் பண்ணி உலகத்தையே மிரட்டிட்டு இருந்தான்.அவனே கம்யூட்டர் எல்லாம் வெச்சு செக் பண்ணுன பிறகு தானே நம்புனான்.அத நம்புனவன் மிரண்டு போயிருப்பானல்லே.
யாருக்கு கிடைச்சது பெருமை.
மொத்த உலகத்துலே குட்டியூண்டு இருக்கற ஒரு சின்ன பிரதேசம் ,தமிழ்நாட்டுலே இருக்கற தமிழனுக்குத்தானே ..
வேற மொழிக்காரன் தட்டறான் தட்டறான் ,தட்டிட்டே இருக்கான். சிவாஜியோட சிறப்பை பாத்து.
நடிப்பை பாத்து..
யாராலயும் முடியாதுங்கறான்.
அந்த சிவாஜி நடிச்ச நவராத்திரியை இன்னும் கொண்டாடி இருக்கணும் இல்லே.
பெரிய செலவு வெக்காமயே ரொம்ப சிம்பிளா எடுத்து பிரமிக்க வெச்சாரில்லே.நாகராஜன் யாரைய நம்பி அதை செஞ்சாரு.அவங்க நெனச்சத விட அதிகமா கொடுத்தாரே.

நவராத்திரி ..ஒரு நடிகன் கிராபிக்ஸை வெச்சு 100  வேஷமா போட்டாலும் அங்க பேசறதுக்கு நவராத்திரி வரும்.
வெறித்தனத்தை காட்டறதுக்கு ரௌடியா நடிச்ச சிவாஜி போடற அந்த கை சொடுக்கு போதும் .காதை கிழிக்கற மியூசிக் தேவையில்லே.பயம் காட்டறதுக்கு.ரெண்டு பல்லையும் நறநறன்னு கடிச்சு காமிச்சே பாக்கறவங்களை தொடை நடுங்கச் செய்ய வெச்ச நடிப்பாச்சே.

கூத்து கலைஞனா நடிச்ச சிவாஜியை பாக்கறப்போ அதுக்கு முன்னாலே வந்த சிவாஜியா இதுன்னு வாயை பொளக்க வெச்சிருவார்.

நானும் எத்தனையோ டாக்டர்களை பாத்திருக்கேன் .
நவராத்திரியிலே வர்ற ஒரு சாந்தமான கருணையான டாக்டரை உலகத்துலே பாக்க முடியலையேன்னு நண்பர் ஒருத்தர் சொல்வாரு.எல்லா டாக்டரையும் குத்தம் சொல்லற மாதிரி இதை எடுத்துக்க கூடாது.ஒரு வஞ்சப் புகழ்ச்சியாவும் சொல்லலாம் இல்லையா? 

அற்புதராஜாவா அற்புதமா ஸ்டைல் காட்டி நடிச்ச வேஷமாகட்டும்,
குடிகாரனா நடிச்ச வேஷமாகட்டும், ஏழை விவசாயியா சிவாஜி நடிச்ச நடிப்பாகட்டும்..எல்லாமே சாதாரணமான ஒரு பிரேம்கள் தான்.ஆனா சிவாஜி நடிச்ச நடிப்பு அதை அதிசயமா வெச்சிருக்குது.

நவராத்திரி சினிமா தமிழ் சினிமாவுக்கு ஒரு பிரமிப்பு தந்த படைப்பு. கால காலத்துக்கும் பேசற ஒரு சினிமா நவராத்திரி.
இந்த படத்தை விமர்சனம் பண்ண நினைக்கறவங்க ரொம்ப உயர்வான வார்த்தைகளை தேடி தேடி தான் விமர்சனம் பண்ண முயற்சி செஞ்சிருக்காங்க.
நம்மாலே முடிஞ்சது அதுதான் அவங்களோட பெஸ்ட்டா அத எல்லோரும் சொல்லி இருக்காங்க.அது தான் தலை சிறந்த படைப்புக்கு கிடைக்கற உயர்வான அங்கீகாரம்.
நவராத்திரி பழுத்த பழம். அடி பட்டுக் கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு காவிய சினிமாவோட போட்டி போட வந்த சிவாஜி சினிமாவே முரடன் முத்துதான்.
முரடன்  முத்து படத்தை பந்துலு தயாரிச்சு டைரக்ஷன்னும் பண்ணுன படம்.கூடவே சிவாஜியோட அண்ணனா நடிச்சும் இருப்பார்.கதாநாயகி தேவிகா.
முரடன் முத்து கொஞ்சம் கேப் விட்டு தனியா வந்திருந்தா இன்னும் கொஞ்சம் அதிகப்படியான வரவேற்பு கிடைச்சிருக்கும்.
படம் 100 நாள் ஓடலேன்னாலும் நல்லா ஓடி நிறைவா வசூல் செஞ்ச படம்தான்.படம் ஜனரஞ்சகமா ரசிச்சு பாக்க வெக்கற படம்.

நவராத்திரி முரடன்முத்து இந்த ரெண்டு படங்களும் வெளியாகி  இந்த வருஷத்தோட 60 வருஷம் ஆச்சு.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்