1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

கேட்டுக்கோடி உருமி மேளம்

ஒரு டூயட் பாட்டு .அந்த பாட்டு ஒரு குத்துப்பாட்டு மாதிரி.அதோட கதாநாயகன் கதாநாயகியோட கேரக்டரோட குணத்தையும் சொல்லற மாதிரி.அதே சமயம் படத்தோட கதைக்கு பொருத்தமான விஷயத்தை சொல்லற மாதிரி ஒரு பாட்டு.இவ்வளவும் சொல்லற பாட்டு இது.இந்த பாட்டுக்கு மேலே இதே மாதிரி அமைப்புலே ஒரு பாட்டு இல்லேன்னு சொல்ல வெச்ச பாட்டு.என்னதான் இன்டர்நெட் காலம்னு உலகம் வளந்துட்டு இருந்தாலும் இந்த பாட்டை கேட்டா எந்திரிச்சு ஆட வெச்சுடும்.இந்த பாட்டுலே பல சிறப்பான விஷயங்களை சேத்து இசையமைச்சு இருப்பாரு மெல்லிசை மன்னர்.என்ன பாட்டு என்ன சிறப்பான விஷயங்கள் அப்படிங்கறதை இதுலே பாக்கலாம்.
அதுக்கு முன்னாலே இதே மாதிரி டைப்புலே அமைஞ்ச சில பாட்டுகளையும் பாத்துடலாம்.

இது முரடன் முத்து படத்துபாட்டு. சிவாஜி தேவிகா நடிச்சது.

இது புனர்ஜென்மம். சிவாஜி பத்மினி நடிச்ச பாட்டு.


இது எங்க மாமா படத்து பாட்டு.சிவாஜி ஜெயலலிதா.

இப்படி பல பாட்டுக இருந்தாலும் இதுலே பாக்கப்போற பாட்டு வேற லெவல் பாட்டுன்னுதான் சொல்லணும்.
இது ஒரு கிராமியப்படம்.
கறுப்பு வெள்ளையிலே வந்த சூப்பர்ஹிட் படம்னு சொல்லலாம்.தமிழ் சினிமாலே கறுப்பு வெள்ளை படத்துலே அதிகமான வசூல் செஞ்ச படமும் கூட. வெள்ளிவிழா ஓடி ரெக்கார்ட் பண்ணுன படமும் கூட.

படத்தோட கதாநாயகன் நடிகர்திலகம் தமிழ் பண்பாட்டுலே ரொம்ப மரியாதை வெச்சிருக்கிற மனுசன்.கதாநாயகி ஜெயலலிதா லண்டன்லே படிச்சுட்டு வந்து அந்த ஊர் கலாச்சாரத்தை பெருமையா பேசிட்டு இருக்கற ஒரு கேரக்டர்.
கதைப்படி நடிகர்திலகம் ஜெயலலிதாவுக்கு முறை மாமன் முறை.
ஜெயலலிதாவோட அப்பா விகே ராமசாமி .
ஜெயலலிதாவோட அம்மா சுகுமாரி.

ஜெயலலிதாவை சிவாஜி கல்யாணம் செஞ்சுக்குவார்.சிவாஜியோ கிராமத்துலே பிறந்து வளந்தவர்.ஜெயலலிதா மேல் நாட்டுலே படிச்ச பொண்ணு.
மேல்நாட்டு கலாச்சாரத்தையே பெருமையா பேசிட்டு இருக்கற கேரக்டர் ஜெயலலிதாவுக்கு.
கதைப்படி பட்டணத்து கலாச்சாரமும்  பட்டிக்காட்டு கலாச்சாரமும் இணைஞ்சா அது  எப்படி அமையப் போகுதுன்னு ஆரம்பத்துலேயே சொல்ல வேணும்.இப்படி ஒரு சிச்சுவேசனில் கதாநாயகனும் நாயகியும் பாடற மாதிரி ஒரு பாட்டுலே அந்த விஷயத்தை சொல்லற மாதிரி பாட்டு.

இந்த பாட்டுலே சொல்ல வந்த விஷயத்தையும் சொல்லணும்.வழக்கமான  டூயட் பாட்டுக மாதிரி  இல்லாமே  பண்ண வேணும்.அதை சாதிச்சதுதான் இந்த பாட்டு .
MS.விஸ்வநாதன் பண்ணுன அந்த வித்தியாசந்தான் பாட்டுலே பெரிய விஷயம்.

கல்யாணம் முடிஞ்சதும் 
கநாநாயகனும் நாயகியும் சந்தோசமா இருக்கற மாதிரி நேரத்துலே படத்துலே இந்த பாட்டு.இதை வழக்கமான டூயட் பாட்டா இல்லாமே அந்த ரெண்டு கேரக்டரோட குணங்களை பாட்டா சொல்லிட்டா கதை என்ன போக்குலே போகும்னு பாக்கறவங்களுக்கு புரிய வைச்சுடலாம்.
நம்ம மண் கலாச்சாரம் பாரம்பர்யம் தான் பெரிசுன்னு நாயகன் பாட,நாயகி மேல் நாட்டு நாகரீகந்தான் பெரிசுங்கற மாதிரி  பதில் சொல்லற  பாட்டா இது அமைஞ்சிருக்கும்.

பட்டிக்காடா பட்டணமா படத்துலே வர்ற கேட்டுக்கோடி உருமிமேளம் பாட்டுலே கண்ணதாசன் தன்னோட பங்குக்கு அருமையா வார்த்தைகளை எழுதியிருப்பார்.
மெல்லிசை மன்னரோ பிரிச்சு மேஞ்சிருப்பார்.
கதாநாயகன் பாடற கிராமிய வரிகளுக்கு பேக்ரவுண்ட் மியூசிக்கா வெஸ்டர்ன் டைப் மியுசிக்கா போட்டு பின்னியிருப்பார்.கதாநாயகி பாடற மேல்நாட்டு நாகரீக வரிகளுக்கு கிராமிய மியூசிக்கை போட்டு அதகளம் பண்ணியிருப்பார் மெல்லிசை மன்னர்.
பட்டிக்காட்டு பாட்டு வரிகளுக்கு பட்டணத்து மியுசிக்கையும்,பட்டணத்து பாட்டு வரிகளுக்கு பட்டிக்காட்டு மியூசிக்கையும் மிக்ஸ் பண்ணி தடதடன்னு அடிச்சு நொறுக்கியிருப்பார்.

கேட்டுக்கோடி உருமி மேளம் போட்டுக்கோடி கோகோ தாளம்னு பாட்டு ஆரம்பிக்கும்.
கேட்டுக்கோடி உருமிமேளம்னு ஆரம்பிக்கறப்போ மட்டும் உருமிமேளத்தை அதிர விட்டு அதுக்கு பின்னாலே வெஸ்டர்ன்லே டிரம்ஸ் எல்லாம் அதிர அதிர அடிச்சுத் தூக்குவார் மெல்லிசை மன்னர்.
பேக்ரவுண்ட் மியுசிக்லே வெஸ்டர்ன் மியூசிக் இருக்கும்.நடிகர்திலகமும் பட்டிக்காட்டு டான்ஸை ஆடுவார்.
சிவாஜி ஆடறது பாடறது எல்லாம் ஜெயலலிதா கிண்டல் செஞ்சு பாடற  மாதிரி அடுத்த வரி இருக்கும்.இந்த இடத்துலே கவிஞர் ஒரு விஷயம் செஞ்சிருப்பார்.பாட்டு தமிழ் பாட்டா இருந்தாலும் ,ஜெயலிதா  மாடர்ன் டைப் பொண்ணு .அவங்க எடுத்த உடனே தமிழ்லே பாடற மாதிரி வரி இருந்தா அது ஜெயலிதாவோட கேரக்டரை பொருத்தமா சொல்லற மாதிரி இருக்காது ,அப்படிங்கறதுக்காக
ஒரு ரெண்டு வரியை இங்கிலீசுலே பாடற மாதிரி அமைச்சிருப்பாங்க.
இதுக்கு அடுத்து ,தமிழ்லே பாடுவாங்க.
கதாநாயகிக்கு கிராமத்து கலாச்சாரம் காட்டுத்தனமா தெரியற மாதிரி குணம்.

அதனாலே ,
உங்கள் தாளங்கள் ஜங்கிள்
என்னை பாருங்கள் அங்கிள்னு பாடுவார்.இதுலே பாருங்கள் கவிஞர் ஜங்கிள்னு ஒரு இங்கிலீஸ் வார்த்தையை போட்டு ,சொல்ல வந்ததை அந்த ஒரே வார்த்தையிலே முடிச்சிருவார்.

இதுக்கு பதில் சொல்லறமாதிரி நடிகர்திலகம் ஆரம்பிப்பார்
கோவிலில் கேட்டா
ஒருவகை மேளம்
கொட்டாக கொட்டுமடீ
அடி அம்மாடி
கொட்டாக கொட்டுமடி
கோவலன் நாடக
பாடலை கேட்டால்
தட்டாமல் தட்டுமடீ
கை தட்டாமல் தட்டுமடீ
சந்திரமதியை காட்டில் விட்டு
பாட சொல்லட்டா
சங்கதியெல்லாம் புட்டு புட்டு
போட சொல்லட்டா...
நம்ம தமிழ்மண்ணோட இசை சங்கதிகளும்,அதுக்கு இருக்கற வரவேற்பும் ரொம்ப அலாதிதான்னு பதில் சொல்லற  மாதிரி முடிப்பார்.
ஆட்டம் பாத்தா சிவாஜி கிராமத்து டான்ஸ் ஆட ஜெயலலிதா மாடர்னாவும் ஆடுவாங்க.வழக்கமா கதாநாயகிக்கு பாட சுசீலாவைத்தான் பாட வைப்பாங்க. ஆனா இந்த பாட்டு  கொஞ்சம் வித்தியாசமா இருக்கறதாலே ,இடையிலே 
சில வார்த்தைகள் டாடா டுடுடுன்னெல்லாம் வர்றதாலே L.R.ஈஸ்வரி பாடுனா நல்லா செட் ஆகும்னு அவங்களை பாட வெச்சிருப்பாங்க. நடிகர்திலகத்துக்கு TMS தான்.அதை சொல்லவே வேணாம்.TMS கிளப்பி இருப்பாரு.

ஓ மை ஸ்வீட்டி
ஓ குடுமி அங்கிள்
என் ஆசை உன்னோடு
ஓ மை பியூட்டி
அஹ உன் கையில்
என் ஆட்டம் என்னோடுன்னு அடுத்த வரி.
நாயகியோட குணத்துக்கு ஏத்த மாதிரி பாதி இங்கிலீஸ் பாதி தமிழ்னு வார்த்தைகளை போட்டு கண்ணதாசன் தன்னாலேஇப்படி கூட பாட்டு எழுத முடியும்னு காட்டியிருப்பார்.

நாரம்பம் ராரம்பம்
லாரம்பம் ராரம்பம்
லாலா லாலாலான்னு 
பாட்டோட இடையிலே வரும்.வார்த்தைகளை மட்டும் போட்டு பாட்டை முடிக்காமே ஜாலியா இருக்கணும்னு டம்மியா வார்த்தைகளை சேத்து    பாட்டை பரபரன்னு பாக்க வைச்சிருப்பாங்க.

மேலை நாடெங்கும் போவோம்
நாகரீகங்கள் காண்போம்
ஆடை மாற்றுங்கள் இங்கே
ஆளை மாற்றுங்கள் அங்கேன்னு ஜெயலலிதா அடுத்ததா பாடுவாரு.நாயகன் தன்னோட தோற்றத்தை மாத்த வேணும்னு நாயகி பாட,நாயகன் அதுக்கு பதில் சொல்லற மாதிரி அடுத்த வரி வரும்.

முன்னோர் எல்லாம்
மூடர்கள் அல்ல
நமக்குண்டு பண்பாடு
அடி அம்மாடி
நமக்குண்டு பண்பாடு
முழங்கால் தெரியும்
ஆடையை மாற்றி
தமிழ் மகள் நடை போடு
அம்மா தமிழ் மகள் நடை போடு
கண்ணகி போலே
எண்ணி இருந்து
காதல் பேசம்மா
எண்ணிய தெல்லாம்
பேசி பேசி
ஆசை தீரம்மான்னு நம்ம தமிழ் பாரம்பர்ய பெருமையை பேசற மாதிரி பாட்டு முடியும்.

கதாநாயகன் தன்னோட கருத்தை வலுக்கட்டாயமா நாயகி மேலே திணிக்காத மாதிரி அதே சமயம் இப்படி இருக்கறதுதான் நம்ம பாராம்பர்யத்துக்கு நல்லதுன்னு சொல்லற மாதிரி பாட்டு அமைஞ்சிருக்கும்.

இந்த பாட்டை கச்சேரி ,மேடைன்னு எங்காவது போட்டா இதுக்கு கிடைக்கற வரவேற்பே தனிதான்.இந்த மாதிரி  அமைப்புலே பல பாட்டுக வந்திருந்தாலும் இந்த பாட்டோட ரேஞ்சுக்கு எந்த பாட்டும் அமையலே.ஒரே ஒரு சின்ன இடத்துலே மட்டும் பாட்டை எடுத்து பயங்கரமா ஹிட் செஞ்சிருப்பாங்க .
இளையராஜா கூட இந்த அமைப்புலே பிரபு குஷ்பு நடிச்ச உத்தமராசா படத்துலே செஞ்சிருப்பாரு.அந்த பாட்டு உன்னை மாத்தி காட்டாமே மச்சானே தூங்க மாட்டேன்னு இருக்கும்.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்