1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி ஒரு ஹீரோவா?

தமிழ் சினிமாவுலே கதாநாயகன்ங்கற  இமேஜே எப்படியிருக்குன்னா ஜோடி இருக்கணும் ,டூயட் பாட்டு இருக்கணும் ,சண்டை காட்சி இருக்கணும் .இப்படித்தான் இருக்குது கதநாயகன்ற இமேஜ்.ஆனா இதையெல்லாம் பொருட்படுத்தாமே ,
கதாநாயகன் வேஷத்தை இந்த வரையறைக்குள்ளே வராம கதையோட நாயகன் அப்படிங்கற பாதையிலே போனவர் நடிகர்திலகம்.
1955 ஆம் வருஷம் வந்த முதல்தேதி படத்துலே சிவாஜி நடிச்சப்போ அவருக்கு வயசு 27 தான்.அதுலே 50 வயசு குடும்பஸ்தரா நடிச்சிருப்பார் சிவாஜி.இந்த மாதிரி வயசு வித்தியாசத்துலே வேற யாரும்
நடிக்கலையான்னு கேள்வி வராம இருக்காது.ஏதோ சில படங்கள்லே அந்த மாதிரி நடிச்சிருப்பாங்க.
அவங்களெல்லாம் நடிச்சாங்க.சிவாஜி தன்னோட கொள்கையாகவே வெச்சிருந்தார்.உதாரணம் சொல்லறதுக்கு ஒரு படமோ ரெண்டு படமோ இல்லே.ரொம்ப படங்கள்லே சிவாஜி இதை செஞ்சதாலே தான் இந்த மேட்டர்.

1956 லே வெளிவந்த ரங்கோன் ராதா படத்துலே சிவாஜி ரொம்ப வயசான வேஷத்துலே நடிக்கலேதான்.ஆனா அப்ப இருந்த இமேஜுக்கு செய்ய வேண்டிய வேஷமா அது? கட்டுன மனைவியையே நரபலி கொடுக்க துணியற வேஷத்துலையா நடிக்கணும்.தமிழ்சினிமாலே கதாநாயகனோட இலக்கணம் அவருக்கு மட்டும் இருக்காதா? நீங்க கதாநாயகனா பாக்காதீங்க ,கதையோட நாயகனா பாருங்கன்னு ,நம்மை ரசனையை மாத்த வெச்சவர்தானே சிவாஜி.

குழந்தைகள் கண்ட குடியரசு படத்துலே ஒரு வயசான விஞ்ஞானி வேஷம் செஞ்சிருப்பார்.கூன் விழுந்து ,ஆள் குட்டையா மூக்கெல்லாம் நீட்டமா வெச்சுகிட்டு ,இது நம்பவே முடியாத மாதிரி இருந்துச்சே.
மேக்கப் யாருக்கு வேணாலும் போட்டுக்கலாம்.அந்த நடிப்பை பாருங்க.ஒரு கௌரவ வேஷத்துக்காக எப்படி மாறியிருப்பார்.அந்த மாதிரி வித்தியாசமான வேஷத்தை தான் சிவாஜி விரும்பினார்.அதை கதாநாயகனா இருந்து தான் பாக்கலே.ஒரு நடிகனா இருந்து பார்த்தார்.செஞ்சார்.
இந்த விஷயந்தான் சிவாஜியை நடிகர்திலகம்னு சொல்ல வெச்சது.சிவாஜியோட எண்ணம் அது .
அது  டைரக்டர் கதாசரியர்களை வித விதமா யோசிக்க வெச்சது.

பலே பாண்டியாவுலே மூணு வேஷத்துலே ஒண்ணு விஞ்ஞானி வேஷம் .அந்த படத்துலே இளமையா நடிச்ச ஹீரோ வேஷத்தை விட அந்த விஞ்ஞானி கேரக்டர் நடிப்பு தான் ரொம்ப வித்தியாசமான நடிப்பு.
நடிகர்திலகம் கிட்டத்தட்ட  20 படங்கள்லே டபுள் ரோல் பண்ணியிருக்கார்.இந்த படங்கள்லே ரெண்டு வேஷத்துலே ஒரு வேஷத்தை வயசான கெட் அப்லே அதிக படங்கள்லே பண்ணியிருப்பார்.மூணு நாலு படத்தை தவிர ..

ஹீரோ இமேஜுக்காக இதைத்தான் செய்யணுங்கற வரைமுறை எல்லாம் சிவாஜிகிட்டே கிடையாது.ஒரு நடிகன் எந்த வேஷமா இருந்தாலும் செய்யணும்ங்கற இலக்கணம்தான் சிவாஜிகிட்டே இருந்தது.மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்துலே 13 குழந்தைகளுக்கு அப்பாவா நடிச்சத நினச்சுப் பாக்கணும்.நடிக்கறதுலே என்ன இமேஜ் .சொசைட்டியிலே எல்லா வயசுக்காரங்களும் இருக்கறாங்களே.அவங்களோட  ஸ்பெசாலிட்டி தான் அவங்க அவங்க ஹீரோயிசம்.
காதலி ப்ளஸ் மனைவியை கொன்ன அப்பாவோட வில்லத்தனத்தை எதுக்க முடியாத ஒரு ஹீரோவா ? நிஜத்துலேயே பெரிய மிராசுதாரர்களோட பரம்பரையிலே இதெல்லாம் சர்வ ஜகசமா நடந்த வியங்கள்தான்.
மிராசுதார்களோட வெறித்தனம் அப்படித்தான் இருந்திருக்கு.கோழையாதான் சில  வம்ச வாரிசுகள் இருக்க முடிஞ்சது.இது நிஜக் கதையா ரொம்ப இருக்குது.இதானே உயர்ந்த மனிதன்.அங்க ஹீரோ இல்லே.கதையோட நாயகன்.நடிப்புலே தெறிக்க விட்டாரில்லே ! வாணிஸ்ரீயோட காதலனா வந்ததை விட தொழிலதிபர் ராஜலிங்கம் கமுக்கமா வந்து கலக்குனதா விடவா !சௌகார் ஜானகிகிட்டே பேசற ,ராஜலிங்கம் ஓனர் ஆப்னு ...ஆரம்பிச்சு வெடிச்சுத் தள்ளுவாரே ! அதை எந்த ஹீரோயிசம் பீட் பண்ண முடியும்.

காவியப்படம்னா திருவருட்செல்வர்.மன்னனா சேக்கிழரா நடிச்சதை விட வயசான அப்பர் வேடம் செய்யறப்போ அந்த உடல் தோற்றத்தை அப்படியே மாத்தியிருப்பாரு.கொஞ்சம் வயிறு சதையெல்லாம் தொங்குன மாதிரி முகத்துலே சுருக்கத்தை வெச்சுகிட்டு அப்பரா மாறுனுதுலே சிவாஜிங்கற கதாநாயகனாவா நமக்கு தெரிஞ்சார்?

எங்க ஊர் ராஜா படத்தை நினைக்கயிலே விஜயரகுநாத சேதுபதிதானே தெரியறார்.இன்னொரு வேஷம் இளமையான ஹீரோவா அதுவும் சிவாஜி .மனசுலே நின்னது யாரு? இதே விஷயம் தானே கௌரவம் படத்துலேயும். 

ஹூரோயிசமா? அதை தூக்கி குப்பையிலே போடு.இதோ , இந்தா ரிக்ஷாக்காரன் வேஷத்த பாருங்கன்னு பாபுலே பண்ணினாரே! கூடவே ரிலீசான ஹீரோயிசம் படங்க எதுக்க முடியலையே!

போலீஸ் ஆபிசர்னாலே கதாநாயகன்களுக்கு இளமையான வேஷந்தான் .
அதுலே கூட சௌத்ரீ  கொஞ்சம் வயசான ஆளுதான்.பின்னாலே வந்த போலீஸ் கதாநாயகன்களுக்கு 
டிக்க்ஷனரியா அந்த வேஷம் அமைஞ்சிடுச்சு.சௌத்ரீ என்னைக்குமே நெம்பர் ஒண்ணாத்தான் இருக்கார்.

நாம் பிறந்த மண் ,அந்தமான் காதலி ,ஜஸ்டிஸ்கோபிநாத்,
பைலட் பிரேம்நாத்னு எல்லாம் அந்த வயசுக்கு ஏத்த வேஷமா பண்ணுனார்.

கொஞ்சவருஷம் கழிச்சு ஒரே ஒரு குத்தாட்டப் பாட்டுக்கு நடிச்சார்.இவ்வளவு பண்ணியிருந்தும் அதை நெனக்காமே இதை ரொம்ப விமர்சனம் பண்ணுணாங்க.இன்னைக்கு வரைக்கும் இந்த விமர்சனம் வந்துட்டு இருக்குது.லாரி டிரைவர் ராஜாகண்ணு படத்து பாட்டுதான்.
 
இதுக்கு அப்புறம் மாடி வீட்டு ஏழையிலே டபுள் ரோல் பண்ணினார்.திரைக்கதை சுமாரா இருந்து படமும் சுமாரா இருந்தது.

அடுத்ததாதான் ஒரு காவியம் படைச்சார்.கண் டாக்டர் துவாரகநாத்னு படம் முழுக்க முழுக்க பட்டைய கிளப்போ கிளப்போன்னு கிளப்புனார்.
அந்த வயசுல அவரோட அப்போதைய உடல் தோற்றத்துக்கு கச்சிதமா ரொம்பவே பொருந்திப் போன வேஷம் அது.
அந்த கால கட்டத்துலே நடிகர்திலகம் இருந்த உடல் அமைப்பை கூட பல பேர் விமர்சனம் செஞ்சிருக்காங்க.சிவாஜி இருந்த மாதிரி வேற யாராச்சும் இருந்திருந்தா சினிமா பீல்டு அவங்களை வீட்டுலே உக்கார வெச்சிருக்கும்.தன்னோட அசாத்தியமான ,வேற யாருமே செய்ய முடியாத பாடி லாங்குவேஜ்,முக பாவனைகளை வெச்சிட்டே சிவாஜி தன்னோட இடத்தை யாராலயும் நிரப்ப முடியாதுன்னு நடிச்சுட்டு வந்தார்.

 வா கண்ணா வா ,நீதிபதி ,கருடா சௌக்கியமா ,தீர்ப்பு,துணை,
பரீட்சைக்கு நேரமாச்சு,நீதிபதி,மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா ,வாழ்க்கை,தாவணிக் கனவுகள், பந்தனு ஒவ்வொரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்பந்தமே இல்லாத படங்களா வெரைட்டி வெரைட்டியா செஞ்சுட்டு வந்தார்.
இந்த கால கட்டத்துலே புதுசா வளந்துட்டு வந்த இளம் ஹீரோக்கள் படங்கள் வந்துட்டு இருந்தாலும் ஹீரோயிசம் காட்டுன அந்த படங்கள் எல்லாமே  ஒரே அமைப்புலதான் இருந்துச்சு.
எல்லாமே ஒரு வட்டம் போட்டு ஹீரோயிசமா அமைஞ்ச படங்கள்.அந்த வட்டத்தை விட்டு வெளியில வர்ற தைரியம்  யாருக்குமே  இல்லை. நடிப்பு மேல அக்கறையும் இல்லை. வசூல் சம்பளம் ரெண்டும் தான் முக்கியமா இருந்துச்சு.

முதல் மரியாதை படத்து மூலமா 
நடிப்புலே ராஜாதி ராஜா, ராஜ மார்த்தாண்ட, ராஜ விக்ரம ,
ராஜ தெய்வீக 'நடிப்புலக தேவன்னு' சொல்ல வெச்சார் சிவாஜி .
சிவாஜியை  யாரெல்லாம் குறை சொன்னாங்களோ, அவங்களே  சாமரம் எடுத்தும் வீசும் படி, அவங்களோட விமர்சனங்கள் இருந்துச்சு.உடல் தோற்றமாவது ,மண்ணாவது..
பத்திரிக்கையெல்லாம் பாராட்டி தள்ளுனாங்க.
எழுதுனாங்க..எழுதுனாங்க ..
சிவாஜி நடிப்பை பத்தி..
ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே தானிருக்கிறது என்ற முதல் மரியாதை பாட்டு கேசட்லே வந்த கவிதை மாதிரி இன்னைக்கு வரைக்கும் யாராச்சும் எழுதிட்டே தான் இருக்காங்க.

1987 லே உடல் நிலை சரியில்லாமே  போயி ,மீண்டு வந்தார்னுதான் சொல்லணும்.சிவாஜியோட மெலிஞ்ச உடலமைப்பை பாத்து AVM உடனடியா திருலோகசந்தர் டைரக்ஷன்லே அன்புள்ள அப்பா  படத்தை எடுத்து வெளியிட்டாங்க.ரொம்ப ஸ்மார்ட்டான சிவாஜியை பாத்தோம்.திரைக்கதை கொஞ்சம் சரியா அமையலே அந்த படம்.அதனாலே சுமாரா போச்சு.அந்த வயசுலே சிவாஜி ஹேன்ட்சம்மா இருந்தார்.திரைக்கதையை மட்டும் சரியா அமைச்சிருந்தா அந்த படம் பாசமலர் மாதிரி பாசமகளா ஹிட் ஆகியிருக்கும்.

இடைப்பட்ட வருசங்கள்லே கட்சி அரசியல்னு சில பிரச்சினைகள்.சுயநலமே இல்லாத சிவாஜிக்கு தேவையில்லாமே வந்த பிரச்சினை இது .

1992 லே ,விதை நான் போட்டது.இதெல்லாம் பெருமையான்னு சொன்னார் தேவர்மகன்லே.அந்த உண்மை சாகலே..எல்லாமே மறைஞ்சு போச்சு.வளந்துட்டே இருக்கு..
ஊருக்குள்ள  ஒத்தமரம்
சாகாத ஆலமரம்
விழுதெல்லாம் 
முளைச்சு வர
வேரெல்லாம் புடிச்சு 
புதுசாத்தான்
அது 
இருக்கு.....

செந்தில்வேல் சிவராஜ்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்