1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

டிவி சேனல்களில் சிவாஜி திரைப்படங்கள்

 சிவாஜி கணேசன் நடித்த வெற்றி திரைப்படங்களை அதிகமாக திரையிட்ட பிரபல சேனல்கள் ..

முதலாவதாக 2000 ஆண்டுகளில் சன் நெட்வொர்க்கின் சேய் நிறுவனமான கே. டிவி ஆரம்பித்த போது சிவாஜி கணேசன் நடித்த பல வண்ண திரைப்படங்களான  தங்கசுரங்கம், சிவந்த மண், எங்க மாமா, என்னைப்போல் ஒருவன் இந்த 4 திரைப்படங்களும் அதிகமாக கே டிவியில் மேட்னி ஷோவாக திரைப்படபட்டது. 

அதை ரசிக மக்கள் தவறாமல் பார்த்து மகிழ்ந்தனர். 

அந்த 4 திரைப்படங்களை சன் டிவி நிறுவனம் 1999-2005 வரை 5 வருட கால ஒப்பந்த முறையில் தியேட்டரிகள் ரைட்ஸ்சில் 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கபட்டது. 

இதை 5 வருட கால ஒப்பந்தம் தாண்டி அதை தியேட்டரிக்கல் ஒப்பந்தம் முடிந்து சன் நிறுவனம் படத்தை  வாங்கியவர்களிடம்  ஒப்படைத்தனர். பின்பு ஏல முறையில் ராஜ் டிவிக்கு ரூபாய் 7 லட்சம் ரூபாய்க்கு விற்க உடனே ராஜ் டிவி நிறுவனம் அவ்வளவு விலை எல்லாம் கொடுக்க முடியாது என்று கூற அந்த 4 திரைப்படங்களில் சிவந்த மண் படத்திற்கே ரூபாய் 20 ஆயிரம் ரூபாய் இருப்பதால் அந்த படத்தை மட்டும் தவிர்த்து விட்டு தங்க சுரங்கம், எங்க மாமா, என்னைப்போல் ஒருவன் படங்களை மட்டுமே ராஜ் டிவி வாங்கி கொண்டனர். 

மேலும் ராஜ் டிவியில் தங்க சுரங்கம் திரைப்படம் ரீல் மிகவும் தேய்மானம் ஆகிவிட்டதால் அதை அதிகமாக திரையிட படுவதில்லை. 

மேலும் 2017 ஆம் நியூ பிரின்ட் டிஜிட்டல் முறையில் மதுரை மார்டன் சினிமா தங்க சுரங்கம், சிவந்த மண், எங்க மாமா படத்தை தயாரித்து தர அதை திரையிட மெகா டிவி நிறுவனம் பெற்று கொண்டு தனது மெகா டிவி மற்றும் மெகா 24 சேனல்களில் அவ்வப்போது போடப்பட்டது. 

மேலும் தியேட்டரிகள் ரைட்சானது சிவந்த மண் படத்தை ஜெயா டிவி நிறுவனத்திற்கு ரூபாய் 20 ஆயிரத்துக்கும் அத்துடன் என் தம்பி, எங்க ஊர் ராஜா, திருடன், தங்கைகாக திரைப்படம் சேர்த்து ரூபாய் 1 லட்சத்திற்கு 2005 முதல் விற்றது. 

இதில் ஜெயா டிவி நிறுவனம் சிவந்த மண் படத்தை மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் கேட்காவிட்டாலும் 2009 ஆண்டு இலங்கையில் நடந்த ஈழ போராட்டத்தை நினைவு கூறும் விதமாக பாலிமர் டிவி ஜெயா டிவி இடம் இருந்து ரூபாய் 80.000 ஆயிரம் கொடுத்து  வாங்கியது. 


 ஜெயா டிவி நிறுவனத்தில் 2005 முதல் இன்று வரை என் தம்பி, எங்க ஊர் ராஜா, திருடன், தங்கைகாக திரைப்படங்கள் அவ்வபோது திரையிட படுகின்றன. 

ஆனால் தற்போது பல புதுமை விரும்பிகள் இருப்பதால் ஜெயா-டிவி நைட் ஷோவில் ஒளிபரப்பு செய்யபடுகின்றன. 

மேலும் இந்த தங்க சுரங்கம், சிவந்த மண், எங்க மாமா, என்னைப்போல் ஒருவன் திரைப்படங்கள் சன் நிறுவனத்தில் வாங்குவதற்கு காரணம் அன்றைய சன் தொலைக்காட்சியின் கூட்டு தலைவரான முதல்வர் மு. கருணாநிதிக்கு மிகவும் பிடித்த சிவாஜி கணேசனின் அசாத்தியமான ஸ்டைலிஸ்ட் திரைப்படங்கள் என்று தனது புதிய குழந்தை தொலைக்காட்சியான கே. டிவியில் அதிகமாக திரையிடபட்டு பார்த்து மகிழ்ந்தார். 

 ஜெயா டிவி நிறுவனத்தில் சிவாஜி கணேசனின் ஸ்டைல்+ரீ ஆக்சன் மூவிகளாக என் தம்பி, எங்க ஊர் ராஜா, திருடன், தங்கைகாக திரைப்படங்களை அவ்வபோது திரையிடபட்டு மக்களால் அதிகம் ரசித்து பார்க்கப்படுகின்றன.

சன் டிவி தான் தில்லானாமோகனாம்பாள் பட ரைட்ஸை வைத்துள்ளது.இந்த திரைப்படத்தை முக்கியமான நாள்களாக தேர்ந்தெடுத்து அதிகமாக ஒளி பரப்பு செய்ததுள்ளார்கள்.இந்த படம் ஒளி பரப்படும்போதெல்லாம் மற்ற சேனல்களின் TRP ரேட்டிங்க் மிகவும் பாதிக்கப்படும் அளவுக்கு தில்லானாமோகனாம்பாள் படத்திக்கு மவுசு அதிகம்.வரைமுறை இல்லாத ரசிகர்கூட்டம் இந்த படத்துக்கு அதிகம்.

ஜெயா டிவி ராஜா படத்தை எத்தனை முறை ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள் என்ற கணக்கே இல்லை.ஜெயா டிவியில் அடிக்கடி ஒளி பரப்படும் சிவாஜி படங்களில் ராஜாவும் ஒன்று.

கர்ணன் திரைப்படம் டிஜிட்டலில் வெளியான பின் ராஜ்டிவியில் கணக்கில் அடங்காத வரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

பராசக்தி படத்தை பொறுத்தவரை கலைஞர்டிவி வைத்துள்ள ரைட்ஸ் ஆகும்.அவர்களின் ஸ்பெசல் திரைப்படங்களில் பராசக்தி மிகவும் முக்கியமானது.

சுதந்திரதினம் குடியரசு தினம் என்றால் டிவி சேனல்களின் முக்கிய படமாக வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் ராஜபார்ட் ரங்கதுரை படங்களை அநேக சேனல்கள் மாற்றி மாற்றி திரையிடுவார்கள்.

பண்டிகை கால ஸ்பெசல் திரைப்படங்களில் திருவிளையாடல் திருவருட்செல்வர் கந்தன் கருணை சரஸ்வதி சபதம் திருமால் பெருமை என்று சேனல்களின் கட்டாய படங்களாக இருக்கின்றது.

மாதம் 30 நாளென்றால் பிராண்டட் சேனல்கள் முதல் உள்ளூர் சேனல்கள் வரை  பல சேனல்களில் சிவாஜி திரைப்படங்கள் இல்லாத நாட்களே இல்லை என்னும் அளவுக்கு பழைய படங்களின் ஹீரோவாக என்றும் நடிகர்திலகமே முன்னிலை வகிக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்