1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

வசந்தமாளிகை பாட்டில் நீக்கப்பட்ட வரிகள்

வசந்த மாளிகை படத்தில் இடம்பெற்ற குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் பாட்டுக்காக கண்ணதாசன் அந்த பாட்டோட பல்லவி தவிர சரணம் மட்டும் எட்டு எழுதினார் கண்ணதாசன்.ஆனா பாட்டுலே நாம கேட்டது மூணு சரணம்தான். பொதுவா சினிமா பாட்டுகன்னா நாலு அஞ்சு நிமிஷம் கொஞ்சம் பெரிசுன்னா ஆறு நிமிஷத்துலே பாட்டை முடிக்கறதுதான் வழக்கம்.அந்த எட்டு சரணத்தையும் பாட்டுலே வெச்சா பாட்டு ரொம்ப நீளமா போயிடும்.படத்துலே இந்த பாட்டு நாலு நிமிஷம் வரும்.
ரொம்ப முக்கியமான சரணங்களை மட்டும் வெச்சா பாட்டை கேக்கறவங்களுக்கும் சுவாராஸ்யமா இருக்கும்.போரும் அடிக்காது.இந்த எட்டு சரணத்துலே ரொம்ப முக்கியமான மூணு சரணத்தை மட்டும் பாட்டுலே வெச்சிருப்பாங்க. அதை செலக்சன் பண்ண KV.மகாதேவன் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார்.
பாட்டோட எல்லா சரணங்களையும் நீங்க பாத்தாலே தெரிஞ்சுக்குவீங்க.
அந்த மத்த சரணங்கள் என்னென்ன அப்படிங்கறதை நாம பாக்கலாம்.
அதுக்கு முன்னாலே வசந்தமாளிகை சூட்டிங் நடந்த சில விஷயங்களை பாக்கலாம்.

படத்தோட அந்த வசந்தமாளிகை செட் போடற வேலைகள் எல்லாம் நடந்துட்டு இருக்குது. படத்தோட பல முக்கால்வாசி காட்சிகள் எல்லாம் சூட்டிங் பண்ணி முடிச்சாச்சு.இனி 
படத்துலே வர்ற வசந்தமாளிகை  செட்லே சூட்டிங் எடுக்கணும்.
1972 ஜூலை மாசம் 15 ந்தேதி. அன்னைக்கு சனிக்கிழமை.செட்டிங் போடற வேலை புல்லா முடியலே.
நடிகர்திலகம் அந்த செட் போடற வேலை முடிஞ்சு அந்த செட்டுலே நடிக்கறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார்.
சாயந்தரம் 6 மணி ஆயிடுச்சு.வழக்கமா 6 மணிக்கெல்லாம் அந்த கால்ஷீட் படி 6மணிக்கெல்லாம் கிளம்பி போயிடுவார்.
ஆனா வழக்கத்துக்கு மாறாக நடிகர்திலகம் காத்துட்டு இருக்கார்.
செட்டிங் வேலை முடிஞ்சா அடுத்த நாள் இல்லேன்னா ரெண்டு நாள் கழிச்சு கூட அந்த ஷுட்டிங்லே நடிகர்திலகம் கலந்துக்கலாம்.ஆனா அன்னைக்கு நடிகர்திலகம் கிளம்பிப் போகலே.
அதுக்கான காரணத்தை பத்தி நடிகர்திலகம் சொன்னது என்னான்னா ,
 சனிக்கிழமை என்னோட அம்மாவுக்கு பிடிச்ச நாள். என்னோட நிறைய படங்கள் சனிக்கிழமைதான் ஆரம்பமாகும்.படங்களும் அதிகமா வெளியானது இந்த சனிக்கிழமை தான். இன்னைக்கு சனிக்கிழமை .அதனாலே தான் இத்தனை நேரம் காத்திருக்கேன்.செட்லே நடிக்கறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னாரு.
இந்த மாளிகை செட்டை அமைச்சவர் ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணா ராவ்.படத்தோட தயாரிப்பாளர் ராமாநாயுடு பெரிய செலவு இதுக்காக செலவு பண்ணியிருந்தார் .இந்த செட் போட மட்டும் மூணு லட்சம் செலவு செஞ்சிருக்கார்.
படத்தோட மத்த செட்டிங்குகளுக்கும் நிறைய செலவு செய்திருக்கார்.
நடிகர்திலகம் படத்துலே போட்டுட்டு வர்ற டிரெஸ்,ஆடை அலங்காரங்களுக்கு கூட பெரிய செலவு செஞ்சிருந்தார்.நடிகர்திலகம் இந்த படத்துலே போட்டுட்டு வர்ற டிரெஸ் மாதிரி வேற எந்த படத்துலேயும் இல்லேன்னு ராமாநாயுடு இது பத்தி சொல்லியிருந்தார்.அவ்வளவு செலவு ஆச்சு.
1972 ஜூலை மாசம் 15 ந்தேதி மாலை 7 மணிக்கு மேலே சில காட்சிகள் எடுக்கப்படடது.தொடர்ந்து அதற்கடுத்த நாட்கள்லே சூட்டிங் நடந்தது.

இந்த பட சூட்டிங் நடந்துட்டு இருந்த சமயம் 24.8.1972 ஆம் வருஷம் நடிகர்திலகத்தோட தாயார் ராஜாமணி அம்மையார் காலமாயிட்டாங்க.வீட்டுலே துக்கத்தோட இருந்த நடிகர்திலகம் படத் தயாரிப்பாளரை கூப்பிட்டு ஷுட்டிங் ஏற்பாடு பண்ண சொல்லிட்டாரு. ராமா நாயுடு திகைச்சு போயிட்டார் அவர் சொன்னதை கேட்டு.வீட்டுலே இருந்தா அம்மாவோட நினைவு பெரிய துக்கமா இருக்கு. என்னாலே உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியலே. அதனாலே தான் ஷீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணச் சொன்னேன்னு சொன்னாரு சிவாஜி.
இந்த டயத்துலே நடிகர்திலகம் நடிச்ச பாட்டு ,எந்த ஊர்லே எடுத்தாங்கன்னு நினைச்சா அது இன்னும் ஆச்சர்யமா இருக்கும்.நடிகர்திலகம் நடிச்சது மயக்கமென்ன இந்த மௌனமென் காதல் பாட்டு.ஊட்டி லோகேசன்.
எவ்வளவு ஆச்சர்யமான விஷயம் இது.

ஆரம்பத்துலே சொன்ன குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் பாட்டுலே இடம் பெற்ற எட்டு சரணங்கள் என்னென்ன அப்படிங்கறத பாக்கலாம்.
பாட்டொட ஆரம்பம் ஒரு கவிதையா ஆரம்பிக்கும்.


"குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம் - அவளை
மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம் - ஆனால்
இருப்பதோ ஒரு மனது
நான் என்ன செய்வேன்
என்ன செய்வேன்
இது நாலு வரி கவிதையிலே ஆரம்பிச்சு அதுக்கு பின்னாலே பல்லவி ஆரம்பமாகும்.

இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
இது பல்லவி..
இதுக்கு அடுத்ததா முதல் சரணம் இது..

சரணம் 1

சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும்
இந்த சரணம் பாட்டுலே இருக்கும்.ரெண்டாவது சரணமா கவிஞர் எழுதுன வரிகள் இதுதான்:

சரணம் 2
மேகம் போடும் கோலங்கள்
மின்னல் காட்டும் ஜாலங்கள்
காதல் கதையும் அதுவானால்
கண்ணும் மனமும் எதற்காக
இந்த சரண வரிகள் பாட்டுலே இருக்காது.

சரணம் 3
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்றே போதாதே
பாட்டோட இந்த மூணாவது சரணம் பாட்டுலே இருக்கும் நாலாவது சரணத்தோட வரிகள்:

சரணம் 4
கொடுத்ததும் அவன் தான் கொடுத்தானா
பறித்ததும் அவன் தான் பறித்தானா
நடந்தது இறைவன் செயலானால்
நானும் இன்னொரு நாஸ்திகனே
இதை பாட்டுலே தூக்கியிருப்பாங்க.

சரணம் 5
மயக்கம் நிறைந்த பார்வையிலும்
மனிதனின் தேவை புரிகின்றது
கலக்கம் நிறைந்து வரும்போது
கண்ணீர் தானே தெரிகின்றது
இந்த சரண வரிகளும் இருக்காது

சரணம் 6
அன்பு என்றொரு முள்வேலி
ஆசை என்றொரு விஷக்காற்று
காதல் என்றொரு பொய்க்கனவு
கடல் போல் துடிப்பது ஒரு மனது
இதுவும் இல்லே 

சரணம் 7
மண்ணில் பிறப்பது ஏழு முறை
மரணம் ஜனனம் ஏழு முறை
இன்னொரு பிறவி என வந்தால்
இரண்டு மனதுடன் தான் வருவேன்
இந்த சரண வரியும் பாட்டுலே இருக்காது 

சரணம் 8
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி
பாட்டோட எட்டாவது கடைசி சரணமான இந்த வரிகள் பாட்டுலே இருக்கும்.

இந்த எட்டு சரணத்தையும் கவிஞர் இப்படி அருமையா எழுதியிருந்தார்னா இசையமைப்பாளர் இதை தேர்ந்தெடுக்கறதுக்கு ரொம்பே குழம்பியிருப்பார்.கடைசியா அவர் தேர்ந்தெடுத்த இந்த வரிகளை பாருங்க.வைரவரிகளா அமைஞ்சிருக்கும்.
இந்த வரிகள்லே இருக்கற வரிகளுக்கு KV மகாதேவன் எப்படி இசையமைச்சு இருக்கார்.அந்த வரிகள்லே இருக்கற வார்த்தைகள் ஒவ்வொண்ணுக்கும் ஜீவனா உருக்கமா பாடுன 
TMSசைதான் என்னன்னு சொல்றது? அந்த குரல்லே இருந்து வெளிவந்த ஒவ்வொரு வார்த்தையையும் தன்னோட முகம் , உதட்டசைவிலே சிவாஜி நடிச்சசதும் எப்படின்னு எல்லோருக்கும் தெரியுமே ..

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்