1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

நீதி



நீதி திரைப்படத்தில ஒரு பிரபலமான பாடல் இருக்கும்.நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் பாட்டு .

இந்த பாட்டுக்கு மியூசிக் கம்போசிங் வேலை நடந்தப்போ  ஒரு சுவாராஸ்யமான சம்பவம் நடந்திருக்கு.
இந்த பாட்டுக்கு  போட்ட மெட்டு கவிஞருக்கு பிடிக்கலே போலிருக்கு.விசு வேற மெட்டு போடுன்னு கவிஞர் சொன்னார்.ஆனா பக்கத்துலே இருந்த டைரக்டர் தயாரிப்பாளருக்கு அந்த மெட்டு புடிச்சிருச்சசி.அதனாலேஅந்த மெட்டை வெண்டாம்னு சொல்ல  விருப்பமில்லை.அதனாலே அந்த மெட்டுக்கே கவிஞரை பாட்டெழுத வெச்சிடணும்னு குறிக்கோளா இருந்தாங்க

இதனால அதே மெட்டுக்கு பாட்டு எழுத வேண்டிய கட்டாயம் வந்துச்சு கண்ணதாசனுக்கு., 

எம்.எஸ்.விஸ்வநாதன் கிட்டே நீதான் மெட்டு போட்டுட்டு அதுக்கு  டம்மி வார்த்தைகளை போட்டு கொடுப்பியே.இதுக்கும் அப்படி ஏதாவது வார்த்தை வச்சிருக்கியான்னு கேட்டார்.. அப்போ எம்.எஸ்.வி ‘’இன்று முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம், இன்று ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’’ ன்னு  பாடியுள்ளார்.

இதை கேட்டு ஆச்சரியப்பட்ட கண்ணதாசன் சூப்பர்ன்னு சொல்லி  தன்னோட  பாக்கெட்டில  கையை விட்டு பணம் எடுத்தார். அதில ரூ10 இருந்தது. அதை எம்.எஸ்.வியிடம் கொடுக்க வந்த கண்ணதாசன், ஒரு சின்ன திருத்தம் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன்னு சொல்ல மாட்டான் அதனால் அதை நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று மாத்திக்கோன்னு  சொல்லிட்டார்..

கண்ணதாசனின் பேச்சை கேட்ட எம்.எஸ்.வி நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியடி தங்கம். இன்று ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் 
கொஞ்சம்ன்னு பாடினார்.இதை கேட்டு எல்லாரும் பாராட்டினாங்க. அப்போ  எம்.எஸ்.வி கண்ணதாசன் கிட்டே அந்த பரிசு 10 ரூபா கேட்டப்போ , அதுக்கு 
கண்ணதாசன் பாட்டுலே முக்கியமான வார்த்தையை நான் தான் மாத்துனேன் ,அதனாலே உனக்கு பரிசு தர முடியாது போடான்னு சொல்லிட்டாராம்.

நீதி படத்துலே நாளை முதல் குடிக்க மாட்டேன் பாட்டுலே,
குடிகாரன் பாட்டுதானேன்னு  ஏனோதான்னு வார்த்தைகளை  போட்டிருக்க மாட்டாரு கவிஞர்.மெல்லிசை மன்னரும் தன்னோட தாளத்துலே கலக்கியிருப்பார்.
பாட்டோட வரிகளை மட்டும் கேக்காமே அந்த பாட்டோட இசையை மட்டும் கேட்டுப் பாருங்க. தாலாட்ட வெக்கறமாதிரி இருக்கும்.ஏன்னா குடிகாரன் சொல்லறது
 'நான் இன்னைக்கு தூங்கணும்'
அதனாலே இன்னைக்கு மட்டும் குடிச்சுக்கிறேன்னு அவனோட நிம்மதியை அந்த குடி கொடுக்கும்னு நினைச்சு சொல்லறதாலே.

அன்னைக்கு பாட்டு ரொம்ப பிரபலம் ஆகணும்னா சொல்ல வந்த வார்த்தைகளை தெள்ளத்  தெளிவா சொல்லணும்.பாடகர் பாடறப்போ மியூசிக்கை அமுக்கி வாசிக்கணும்.
பாட்டுவரி புரியனும்.மியூசிக் லைட்டா பின்னிப் பிணைஞ்சு 
அடக்கி வரணும்.முதல் தடவை கேக்கறப்பவே வரிகள் எல்லாம் நெஞ்சுலே பதிஞ்சு போயிரும்.

போதைன்னு ஒரு அவசியம் மனுசனுக்கு இருந்தா அந்த மனுசன் எந்த விஷயத்தையும் நாளைக்கு நாளைக்குன்னு தள்ளிப் போட்டுட்டுட்டேதான் இருப்பான்.

இந்த குடிக்கறவங்களை நல்லா வாட்ச் பண்ணிப் பாத்தா ஒரு விஷயம் தெரியும். சில பேரு குடிக்காத நேரத்துலே ஒரு நார்மலா அவங்க பேச்சு இருக்கும்.இந்த குடி உள்ளே போன பின்னாடி அவங்க கிட்ட இருந்து தத்துவமா கொட்டறதா பாக்கலாம் .எல்லார் கிட்டயும் இருக்காது.மத்த சமயத்துலே பேசற பேச்சை விட அந்த குடி உள்ள போன பின்னாடி வெளிப்படற பேச்சு இருக்கே அது வேற மாதிரி இருக்கும்.
அதனாலேதான் கவிஞர் தத்துவ வரிகளா அள்ளி தெளிச்சிருப்பார்.
தனிமையா இருந்தா அது பொங்கும்.

குடி போன புத்தி சைத்தானுக்கு சொந்தமாயிடும்.ஏதோ ஒரு சுய பச்சாதாபத்துலே வாழற சில மனுசங்களுக்குத்தான் அந்த சைத்தான் புத்திய மீறி சுய பச்சாதாப புத்தி வேலை செய்யும்.இது அளவு குடிக்குத்தான். 
நீதி பட கதாநாயகனும் அந்த சுய பச்சாதாபத்துலேதான் இந்த பாட்டை  பாடற மாதிரி இருக்கும்.அது  பாட்டுலேயும் வெளிப்படும்.

தொட்டால் தொடரும்னு ஒரு அழகான வார்த்தை இருக்கு.இந்த குடிக்கு கூட அது பொருந்தும்.

பாட்டோட ஆரம்பம் பார்த்தா அது ஒரு புல்தரை இருக்கற பொட்டல் வெளி .ஹாய்யா ஜாலியா ராகம் போட்டு பாடற சூழ்நிலையை தரும்.
TMS சோட ஆரம்ப லாலாலாங்கற ஹம்மிங்கே அலாதியா இருக்கும்.
நாளைமுதல் குடிக்க மாட்டேன்னு பாடுவாரே சிவாஜி.அடுத்ததா சத்தியமடி தங்கம்னு கழுதைகிட்டே சொல்லற மாதிரி  எடுத்திருப்பாங்க.குடிகாரங்க சேஷ்டையே சிரிக்க வைக்கும் சில சமயங்கள்லே. பழக்கப்பட்ட கழுதைங்கலே பொதி சுமக்க விட்டா அது பாட்டுக்கு போய்ட்டே இருக்கும் போய்ச் சேர வேண்டிய இடம் வரைக்கும்.குடியும் அது போலத்தான் . தூக்கம் வரைலைன்னா போதை இறங்கற வரைக்கும் அது ஏதோ ஒண்ண செய்ய வெச்சுட்டே இருக்கும்.மட்டையாகாத கேசுகள்லேதான் இது பெரும்பாலும் இருக்கும்.
நான் சின்ன வயசுலே எங்க ஊர்லே பாத்த குடிகாரர் இப்படித்தான் .நைட் லேட்டானா ,வீதிலே இருக்காற நாயெல்லாம் குரைக்கும்.அந்தகுடிகாரர் நாயோட சண்டை போட்டுட்டும் பேசிட்டும் இருப்பார்.பகல்லே பாத்தா அவரை அப்படி சொல்ல முடியாது.நல்ல மனுசர் அவர்.குடி படுத்தற பாடு அந்த நைட் எபெக்ட்.

இந்தப் பாட்டுலே மேலே ‘போதை வந்த போது புத்தியில்லையே, புத்தி வந்த போது நண்பனில்லையே’ ங்கற  வரிகள் பாத்தா அது எவ்வளவு சிந்திக்க வைக்குது.

கடவுளை கூட குடிகாரன்னு சொன்ன ஒரே கவிஞர் கண்ணதாசனாத்தான் இருப்பார்.இடையிலே நான் சொன்னஅந்த சுய பச்சாதாபம் கவிஞர்கிட்டயும் இருந்ததாலேதான் அந்த வரிகளா வந்திருக்கு.
ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன்’னு எழுத தைரியம் வேணுமில்லையா...

குடிகாரன் வருத்தப்படற அளவுக்கு பேசறதுதான் அவங்களுக்கு தெரிஞ்ச மரியாதைன்னு வசந்தமாளிகை படத்துலே சிவாஜி ஒரு டயலாக் பேசியிருப்பார்.
இந்த சமூகத்திலேயும் அப்படி பேசறவங்கவ நிறைய பேர் இருக்காங்க.இந்த நீதி படத்துலே கூட கதாநாயகனுக்கு அப்படி ஒரு நிலைமை .இந்த சிச்சுவேசனுக்கு கவிஞர் எழுதுன பாட்டுதான் இந்த பாட்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்