1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

மலைச்சாமி குயிலு என்ன உறவு அது?

எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் காட்டாத ஒரு புதுமையை முதல் மரியாதை படத்துலே பாரதிராஜா செஞ்சிருப்பார்.
காதல் சினிமாக்களை எடுத்துக்கிட்டா கதாநாயகனோ கதாநாயகியோ காதலை சொல்லறமாதிரி காட்சி இருக்கும்.ஒரு தலைக்காதல் இருக்கும்.முக்கோண காதல் படங்கள் இருக்கு.இதெல்லாம் படத்துலேயே காட்சியமைப்புகளிலே காட்டிருவாங்க.முதல் மரியாதை படத்தை பொறுத்தவரை அது இருக்கா இல்லையான்னு நம்மளையே யோசிக்க வெச்ச படம்.
மலைச்சாமி குயிலை நேசிக்கறது எந்த அர்த்தத்துலேன்னு பாக்கறவங்க எண்ணத்துலேயே வெச்சிருப்பார் இயக்குனர்.நான் உன்னை விரும்பறேன்னு சொல்ல முடியாது.அப்படி காட்டவும் முடியாது.அது இருக்கா இல்லையான்னு பட்டவர்த்தனமா காட்ட முடியாது.மெல்லிசா சின்ன உணர்வுகளை கூட வெளிப்படுத்தற காட்சிகள் கூட இருக்காது.அதேசமயம் பாக்கறவங்களுக்கும் அவங்க உணர்வை சொல்லியாகணும்.அந்த ஒரு சின்ன நூலிலே தான் அவங்க உறவை சொல்லியாகணும்.
கட்டுன மனைவியையே 20 வருஷத்துக்கு மேலே தொடாம வாழ்ந்த ஒரு மனுஷனோட கௌரவம் ஒரு வார்த்தையாலே சிதைஞ்சு போகக் கூடாது.
மலைச்சாமி குயிலு உறவுலேதான் கதையோட முடிவே இருக்கும்.ரொம்ப நாசூக்கா ஒரு சின்ன நூல் அளவுக்கு கொஞ்ச கொஞ்சமா காட்டுனதுலேதான் அந்த படத்தோட பெரிய வெற்றியே அடங்கியிருக்கு.மலைச்சாமி குயிலு ரெண்டு பேருலே யாரொட பாவனைகள்லே அது பாசமா அதுக்கு மேலே ஒரு ஈர்ப்பா ,மெல்லிசான 
காதலான்னு நமக்கு காட்டுன காட்சிகள் எது?


மலைச்சாமி குயிலு ஆரம்ப காட்சியிலே ,பஞ்சம் பொழைக்க வந்த குயிலுகிட்டே ஒரு ஆதரவான சொல் வராது மலைச்சாமி கிட்ட இருந்து.ஒருத்தரை முதல் தடவையா பாக்கறப்பவே அவங்க பார்வையிலே ஆதரவு  தெரிஞ்சா அது தான் அவங்களை தேடி வந்தவங்களை அது சட்டுன்னு மனசுலே தங்க வைக்கும்.ஆனா மலைச்சாமியோட முதல் வார்த்தையே,சவுக்கடி மாதிரி வருது.இங்கையே பஞ்சம் அவுத்துப்போட்டு அம்மணமா ஆடுதுன்னு ஒரு திகைப்பை கொடுப்பார்.அது குயிலு மனசை நோகடிக்கற மாதிரிதான் இருக்கும்.மலைச்சாமியோட இரக்க குணம்  அடுத்த பேச்சுலே வரும்.சரி சரி பஞ்சம் பொழைக்க வந்துட்டீங்க.
தற்காலிகமா ஒரு ஓரமா இருங்க அப்படிம்பார் .
இந்த முதல் சந்திப்புல மலைச்சாமியோட கண்ணியத்தையும் குயிலோட குணத்தையும் பார்வையாளர்களுக்கு காட்டி விடுவார் இயக்குனர்.

மலைச்சாமி குயிலோட அடுத்த சந்திப்புலே...
குடிசை போட மண்பிசையும் குயிலை பாத்து ,எவன் அப்பன் வீட்டு இடத்துலே குடிசை போடறீங்கன்னு காட்டமா ஒரு கேள்வி.பட்டுன்னு பதில் வரும் குயிலுகிட்டே.பஞ்சம் பொழைக்க வந்தவங்க கிட்டே மல்லுக்கு நிக்கறீங்களே !
பட்டுன்னு சொல்லறதும் இறங்கிப் போறதும் தான் மலைச்சாமியோட குணம்.
மனசுலே இருக்கறத  பட்டுன்னு சொல்லறது குயிலோட குணம்.
இப்படி போற இந்த அறிமுக சந்திப்புகள் தான் எப்படி மாறுதுன்னு கொஞ்ச கொஞ்சமா மெல்லிசா சொல்லியிருப்பார் இயக்குனர்.

ஊர் மக்கள் முன்னாடி மலைச்சாமியை அவமானப்படுத்தறத பாக்கறறா குயிலு...
மலைச்சாமி மனசொடிஞ்சு பாடற பாட்டு பூங்காத்து திரும்புமா ..சோகத்துக்கு பதில் சொல்லற குயிலோட எதிர்ப்பாட்டு..குயிலோட பாட்டும் பேச்சும் 
மலைச்சாமியை கவர வெக்கறது அந்த காட்சியிலேதான்..குயிலோட எதார்த்தமான பேச்சு மலைச்சாமியோட சோகத்தை போக்குது..அந்த பேச்சு வளர வளர ..
குயிலு பேச்சுலே மலைச்சாமி ஆச்சர்யம் காட்ட அதுலே ஒரு லேசான உணர்வ முகத்துல காட்டுவார்.சோகமான மனசு ஒரு ஆதரவு தேடறத மலைச்சாமியோட முகம் அப்போ  காட்டும்.ஓடி வர்ற குயிலை ஷாட்டா வெச்சிருப்பார் இயக்குனர்.மலைச்சாமி இதயத்துலே ஒரு ஓரமா குயிலு வர்றது இந்த இடம்தான்.
இளவட்டம்கற மரியாதை குயிலு கொடுப்பாளான்னு மலைச்சாமிக்குள்ளே ஒரு உணர்வை தூண்டும் .அதை வாய் விட்டே கேட்டுருவார்.இளவட்டம்கற மரியாதைய எனக்கு தர்றியா.அந்த இடந்தான் குயில திகைக்க வெக்குது.இது வரைக்கும் குயிலு கிட்டே இல்லே அது.
விட்டா கட்டறதுக்கு தாலியோட வந்துருவீங்க போலிருக்குன்னு குயிலு சொல்ல,
வந்தா என்னான்னு மலைச்சாமி சொல்லற பதில்லதான் அது ஆரம்பிக்கும்.இது மலைச்சாமிகிட்டே உள்ள இருக்கற ஒரு உணர்வு. கொடி படர ஒரு நிலைய தேடறது மாதிரி மலைச்சாமிக்கு அது தேவையாயிருக்குன்னு ,நாம புரிஞ்சுக்க அந்த கட்டம்..

இந்த கல்லை தூக்குய்யா ,உன்னை குமரன்னு  ஒத்துக்கறேன்.குயிலு கேட்ட கேள்வி மலைச்சாமியை உசுப்புது.அந்த உணர்வுக்கு அவர் ஆட்பட்டிருக்கார்னு ,அவர் தொடர்ந்து செய்யற அந்த விஷயந்தான் மலைச்சாமியோட உணர்வை சொல்லறதா இருக்கும்.

பாறையை தூக்கறதும் அது முடியாம போறதுமா மலைச்சாமியோட நடவடிக்கைகள ஒண்ணா ஆயிருது.அத குயிலும் பாக்கறா.அவங்களை அறியாமயே ஏதோ ஒண்ணு மனசுக்குள்ளே ஆடிட்டு இருக்கு.
மெல்லிசா ஒரு நூல் போல.

சந்தையிலே ஆட்டை பேரம் பேசி குயிலுக்கு மலைச்சாமி  செஞ்சு குடுக்கற காரியம் அவங்களை நெருக்கமாக்க வைக்கிற ஒரு விஷயம்.

ஆத்துலே மீன் பிடிக்கற காட்சி.
ரெண்டு ராசியிலயும் ஒரு ஒத்துமை இருக்கறத அவங்களுக்கே புரிய வைக்கிற கட்டம்.
மீனை வீட்டுக்கு கொண்டுபோக முடியாதுன்னு மலைச்சாமி சொல்லற விஷயத்துலே குயிலு மனம் கனத்து போகுது.இப்படிப்பட்ட ஒரு மனுசனுக்கு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையான்னு யோசிக்க வைக்குது.அது ஆதரவான அனுதாபம்.அந்த அனுதாபம் அப்போ கூட அந்த கோட்டை தாண்டாத நிலை.

அந்த மீன் சாப்பிடற காட்சி ..அது கொஞ்சம் நெருக்கமாக வைக்குது.

எத்தனை நாளுதான் இது முடியாம போறது.ஒரு ரோசம் அன்னைக்கு அதிகப்படியாவே.எல்லாம் அந்த கல்லு தூக்கற விஷயம் தான்.அன்னைக்கு நடக்குது.ஒரே தூக்கா தூக்கிருவார் மலைச்சாமி .தூரத்துலே பாக்குற குயிலுல திகைச்சுப் போயிடறா .ஓடி வர்றா.அவ பாத்துட்டாளேன்னு பதைபதைப்புலே மலைச்சாமி ஓடிருவார்.
இது வரைக்கும் ஒண்ணுமில்லே .இருக்கலாம் மனசுக்குள்ளே.எப்படியும் வெச்சுக்கலாம்.இதை இப்படித்தான் சொல்ல முடியும் .வெளிக்காட்ட முடியாத சிநேகமா ..வாஞ்சையா..

ஊர்ப்பெரிசு மலைச்சாமியையும் பஞ்சம் பொழைக்க வந்த நாடோடி குயிலையும் ,ஒண்ணாக்க முடியுமா? கௌரவம்னு ஒண்ணு இருக்கே.ஆனா இதுதான்.எப்படி கொண்டு போறது.இதுலே தான் இயக்குனரோட சாமார்த்தியமே அமைஞ்சிருந்தது.

மலைச்சாமி குயிலு சாதாரணமா ஜோடியா எடுத்த போட்டோ ஒண்ணு அதச் செய்யுது.
பொண்டாட்டியோட கோபம் ஊரோட பேச்சும் ஒண்ணா சேந்து பஞ்சாயத்துலே வந்து நிக்குது.

மலைச்சாமி தன்னோட மனசுக்குள்ளே என்ன நெனச்சு வந்தாரோ ..போன கௌரவம் போனதுதானே.
அதுக்காகத்தானே அவர் இத்தனை காலம் அடக்கி வந்திருக்கலாம்.இந்த இடத்துலே தான் .
பஞ்சாயத்துலே இதை வாய்ப்பா பயன்படுத்திக்கிறார்.
இனி என்ன ஊர்ப்பேச்சு...
ஆமா!  அவளை நான் வெச்சிருக்கேன்.
ஏதோ கோபத்துலே சொல்லிட்டாரு போலே ..அப்படித்தான் நெனக்க வைக்கும்.

ஆனா அடுத்ததா குயிலு கேக்கற கேள்வியிலே தான் 
இது வரைக்கும் தொட்டும் தொடாமே பட்டும் படாமே இருந்து வந்த அந்த விஷயத்தை அந்த இடத்துலே தான் தெரிய வைக்கற அந்தகாட்சி.
ஏய்யா உண்மையை சொல்லுய்யா..உண்மையா உன்னோட மனசுக்குள்ளே இல்லையான்னு ,கேப்பா குயிலு...
குயிலு கேட்டதுலே மலைச்சாமிக்கு ஒரு கோபம்.அது கௌரவம் தர்ற இடைஞ்சல்.அவ்வளவு வயசுலே  ,அதை சொல்ல முடியாமே தடுக்கற வைராக்யம்.
இப்பத்தாய்யா நீ தப்பு பண்ணிட்டே ..
உண்மையாத்தான்யா நீ சொன்னே ..
பாத்த நம்மளை அதிர வெச்ச காட்சி..இது மாதிரி பாக்காத காட்சி..
இந்த இடந்தான் அத சொல்லுது.. முதன்முதலா மலைச்சாமிக்குள்ளே வந்திருக்கலாம் .அதை ஆணித்தரமா சொன்னது குயிலு..அதுக்கு இந்த நேரம்தான் அமைஞ்சது.

குயிலு கிட்ட கூட சொல்ல முடியாத ஒரு நிலைமை, மலைச்சாமியோட கௌரவம் .
அதே கௌரவத்தை குயிலு செஞ்ச காரியத்தாலே அவ ஜெயிலுக்கு போயிடுவா.

சீர்கெட்ட பொண்டாட்டியோட வாழ்ந்து வந்த மலைச்சாமியோட கதை தெரிஞ்சவ குயிலு.மலைச்சாமியோட கௌரவத்தை காப்பாத்த அவ செஞ்ச ஒரு காரியந்தான் ஜெயிலுக்கு போனது.

ஜெயில்லே குயிலு சொன்ன விஷயம்தான் மலைச்சாமியை அவளை இன்னும் உசரமா பாக்க வெக்குது.

பச்சைப்புள்ளேன்னு நெனச்சு உன் கூட பழகுனேன் பாருன்னு குயிலுகிட்டே சொன்ன அதே மலைச்சாமிதான் அதே குயிலுகிட்டே ,நீ மட்டும்தான் என் மனசுலே இருக்கேன்னு சொல்லுவார்.
அந்த இடத்துலே கூட சொல்லாமே ஒரு மனுஷனாலே இருக்க முடியுமா? 

அப்ப கூட அது நேசமா ..பாசமான்னு ...இல்லே அதுக்கும் மேலயா அப்படின்னு ஒரு உணர்வுலே நம்மை ஆட்டி வெச்ச படம்.

செந்தில்வேல் சிவராஜ்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்