1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

3 இன்டஸ்ட்ரி ஹிட் படங்கள்

தமிழ் சினிமா கேரியர்லே சிவாஜியோட மூணு படங்களோட கதை உருவாக்கம் சாதனைகள் ஒரு வரலாற்று பதிவுகள்ன்னு சொல்லலாம்.வசந்தமாளிகை பட்டிக்காடா பட்டணமா தங்கப்பதக்கம் படங்கள்தான் அது.மூணு படங்களுமே வெள்ளிவிழா ஓடுன படங்கள்.மூணு படங்களுமே ஒரே நேர்க்கோட்டுலே போற கதை அமைப்பை கொண்ட படங்கள்.எந்த விதமான திடீர் திருப்பங்களோ சஸ்பென்சோ த்ரில்லர்ரோ கிடையாது.
டைட்டில் ஆரம்பிச்சா கடைசிலே  வணக்கம் போடற வரைக்கும் எந்திரிச்சு போக வைக்காது.சிவாஜியோட சாம்ராஜ்யம் மூணு படத்துலே கொடி கட்டி பறக்கும்.
வாணிஸ்ரீக்கு வசந்த மாளிகைன்னா,
ஜெயலலிதாவுக்கு பட்டிக்காடா பட்டணமான்னா,
கே ஆர் விஜயாவுக்கு தங்கப்பதக்கம்.
அந்த படம் வேற .இந்த படம் வேற .அடுத்த படம் அது வேற மாதிரி.
வசந்த மாளிமை காதல் சப்ஜெக்ட்..
பட்டிக்காடா பட்டணமாவிலே தமிழ் கலாச்சாரம்..
தங்கப்பதக்கம் ஒரு காவல் துறை அதிகாரியோட நேர்மை கடமையை சொன்ன படம்.
மூணு படங்களும் மூணு டிராக்.
ரயில் மாதிரி ஜிவ்வுன்னு திரைக்கதை போற படங்கள் .

வசந்தமாளிகைலே நீங்க குடிக்ககூடாதுன்னு காதலி சொல்வாங்க.
பட்டிக்காடா பட்டணமா படத்துலே நான் அப்படித்தான் இருப்பேன்னு சொல்ற கதாநாயகி.
தங்கபதக்கத்துலே என்ன இப்படி பண்ணிட்டீங்களேன்னு நாயகி கேப்பாங்க.
இந்த மூணு வார்த்தை மூணு படத்துலே முக்கியமான ஒண்ணு.

மூணு படத்துலேயும் சிவாஜியோட கெத்து ஸ்டைல் எல்லாம்  தமிழ் சினிமா மிரண்டு போன விஷயங்கள் .வசந்தமாளிகை படத்துலே குடிகாரனா நடிச்சிருந்தாலும் ,அந்த கெத்து ஸ்டைல் எல்லாம் கூடவே பொறந்தது மாதிரி இருக்கும்.ராஜாய்யா மனுசன்னு நெனக்க வச்சது.
பட்டிக்காடா பட்டணமாலே அந்த வேட்டி ஜிப்பாலே மனுசனோட கம்பீரந்தான் என்ன? சொக்க வைக்கும்.
ஒரு போலீஸ் அதிகாரியோட மிடுக்க SP.சௌத்ரியா  சிவாஜி காட்டுனப்போ போலீஸ் டிபார்ட்மென்டே விரைப்பாச்சே.

கே ஆர் விஜயா கேரியர்லே தங்கபதக்கம் மாதிரியான போலீஸ் ஸ்டோரி படத்தை விட ரொம்ப கிரான்டான படம் வேற எதும் இல்லே.எல்லா போலீஸ் ஸ்டோரி படத்துலயும் வர்ற மனைவி கேரக்டர்களுக்கு முன்னோடியா அமைஞ்ச வேஷம்னா அது கே ஆர் விஜயா செஞ்ச சௌத்ரியோட மனைவி வேஷம்தான்.போலீஸ் ஸ்டோரி படங்கள்லே ,எல்லா பங்சுவல் போலீஸ் ஆபிசர்களும் வீட்டுக்கு லேட்டா வர்ற காட்சி,ஏதாவது பங்கசனுக்கு போகணும் வரச் சொன்னா வர முடியாம போறது,இப்படி பல காட்சிகள் வர்ற பெரும்பாலான போலீஸ் பட கதையிலே நடிச்ச கதாநாயகிகள் எல்லாம் கே ஆர் விஜயா செஞ்சத கொஞ்சம் கூட 'டச் ' பண்ண முடியாது.பேச்சுத் தமிழ்லே சொன்னா 'போலீஸ்காரன் பொண்டாட்டி'ன்னு சொன்னா அது கே ஆர் விஜயா தான்.
தங்கப்பதக்கம் படத்துலே 
கே ஆர் விஜயாவோட நடிப்ப சொல்ல பல காட்சிகள் எதுக்கு? ஒரு காட்சியை அதுவும் அந்த ஒத்த வரி  சொல்ற வசன காட்சி போதுமே.
மகன் ஜெகனை அரெஸ்ட் பண்ற காட்சிலே ,சிவாஜியை பாத்து,'என்னங்க இது! இப்படி மெளனமா இருந்தே எல்லாத்தையும் செஞ்சு முடிச்சீட்டீங்களே .அந்த சீனோட முக்கியத்துவத்தை 
கே ஆர் விஜயா பேசற வசனத்தை வெச்சே நமக்கு புரிய வெச்சுருவாங்க.பெரிய அனுபவசாலி ,நடிக்கறதுக்கே பொறந்தவங்க மட்டும் தான் இப்படி ஒரு எக்ஸ்பிரசனை கொடுக்க முடியும் .
பட ஆரம்பத்துலே சிவாஜிகிட்டே ,யூனிபார்மை கழட்டுங்க பேசறேன்னு சொல்லற காட்சிலே இருந்து ,கடைசிலே  சுகமில்லாமே பெட்லே படுத்த படுக்கையா இருந்து நடிச்ச காட்சி வரைக்கும் கே ஆர் விஜயா செஞ்ச  நடிப்பை ,ஒரு சின்ன ஷாட்டுலே கூட இது சரியில்லே! சொதப்பல்னு யாராச்சும் சொல்ல முடியுமா? கே ஆர் விஜயா கேரியர்லே மறக்க முடியாத ஒரு படம் தங்க பதக்கம்.வெள்ளிவிழா சரித்திரம்.

தமிழ்சினிமா கறுப்பு வெள்ளை படங்கள்லே அதுவும் கிராமிய படங்கள்லே பெரிய வசூல் சாதனை படமா அமைஞ்சது பட்டிக்காடா பட்டணமா. வெள்ளிவிழா ஓடி ஹிட்டடிச்ச படமும் கூட.
சிவாஜியோட நடிச்ச நடிகைகள்லே நிறைய பேருக்கு ரொம்ப பேருக்கு திறமையான நடிப்பு இருந்தாலும் இந்த படத்துக்கு ரொம்பவே மேட்ச் ஆனவர் ,ஆகிறவர்னு ஜெயலலிதாவை சொல்லலாம்.ஒரு வெஸ்டர்ன் டைப் கேரக்டரை கச்சிதமா செஞ்சிருப்பார் ஜெயலலிதா.அங்கிள் நான் லண்டன்லே படிச்சவள்..
மத்தவங்க நினைக்கறத யோசிக்காமே தன்னோட சுதந்திரத்திலும் யாரும் தலையிடக்கூடாதுங்ற நாகரீக பெண் வேஷம் ஜெயலலிதாவுக்கு.மத்த நடிகைகள் செஞ்சிருந்தா ஒரு வேளை கேலியாக் கூட போயிருக்கலாம். முரண்டு பிடிக்கற கல்பனாங்கற அந்த கேரக்டரை கடைசிலே மூக்கணாங்கயிறு போட்டு அடக்கற மூக்கையாவா சிவாஜி.
இதுவும் ஒரு சவாலே சமாளிதான்.
கேட்டுக்கோடி உருமிமேளம் ,அடி என்னடி ராக்கம்மா பாட்டு பட்டி தொட்டியெல்லாம் அடிச்சு தூக்குன பாட்டுக.
இந்த படத்தோட க்ளைமாக்ஸ் காட்சிலே ஜெயலலிதாவோட நடிப்பு,பட ஆரம்பத்துலே வந்த ஜெயலலிதாவான்னு ஆச்சர்யப் படற வைக்கற அளவுக்கு இருக்கும்.மதுரைலே ரெக்கார்ட் பிரேக் பண்ணுன படம் பட்டிக்காடா பட்டணமா. மதுரைலே வெள்ளிவிழா ஓடுனதுக்கு விழா எடுத்தப்போ சிவாஜி ஜெயலலிதா திறந்த ஜீப்புலே ஊர்வலமா வந்தாங்க.பெரிய கூட்டம் கூடி மதுரையையே அசர வைச்சது.
ஜெயலலிதாவோட திரைப்பட வாழ்க்கைலே முக்கியமான பத்து படங்கள சொல்லறப்போ சிவாஜி கூட நடிச்ச படங்கள் தான் அதிகம் இருக்கும். அதுலயும் ரொம்ப முக்கியமான படங்களா எங்கிருந்தோ வந்தாள் பட்டிக்காடா பட்டணமா படங்கள் வரும்.இதுல வெள்ளிவிழா வசூல் ரெக்கார்ட்டும் பண்ணுன படம் இந்த பட்டிக்காடா பட்டணமா .

வாணிஸ்ரீக்கு ஒரு வசந்தமாளிகை.தான் செஞ்சுகிட்ட உடை அலங்காரம் ,கொண்டை அலங்காரத்தை எல்லாம் ஊருலே ஒரு பேசன் டிசைனா அந்த காலத்துலேயே கொண்டு வர வெச்ச நடிகைன்னா அது வாணிஸ்ரீதான்.சார் நீங்க என் குடும்பத்தை காப்பாத்த வேணாம்  ,நேர்மையான வேலை ,நியாயமான சம்பளம் கொடுத்தா போதும்னு தடாலடியா வாணிஸ்ரீ பேசற இந்த ஆரம்ப வசனமே வாணிஸ்ரீயோட கேரக்டரை சொல்லிடும்.ஆனா இதை தடாலடியா பேச மாட்டார் வாணிஸ்ரீ .சைலண்டா அலட்டிக்காமே செஞ்சிருப்பார்.
வசந்தமாளிகை மொத்த பாட்டு டிராக்லே  ஒரு பாட்டு மட்டும் மத்த பாட்டுகள்லே சேராத தனி ரக பாட்டு. அந்த மெலடி பாட்டு எடுபடமா? ரசிகர்கள் உக்காந்து பாப்பாங்களான்னு ஆரம்பத்துலே ஒரு டவுட் இருந்துச்சு.போகப் போக அது ரீச் ஆனது ஒரு டிரெண்டிங்னு சொல்லணும்.சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே - இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமேன்னு பாடற  ஒவ்வொரு வரிக்கும் தியேட்டர் சைலன்ஸ்ஸா இருக்கும் .ஆனா பாட்டை ஆடியன்ஸ ரொம்ப ரசிச்சு பாக்க வெக்கும்.படத்துலேயே அமைதியா பாக்க வெச்ச பாட்டு இது ஒண்ணுதான். இந்த பாட்டுலேயும் ஒரே ஒரு இடத்துலே மட்டும் தியேட்டர் அதிறும். அது சிவாஜி வந்து நிக்கறப்போ.
இப்ப வரைக்கும் வாணிஸ்ரீயை பேச வெச்சுட்டே இருக்கற படம் வசந்தமாளிகை.
வசந்தமாளிகை படப்பெட்டி வெச்சிருந்தா அவன் பணக்காரன்னு சொல்லற அளவுக்கு வசந்தமாளிகை படத்துக்கு இருக்கு.

கே ஆர் விஜயாவுக்கு ஒரு தங்கப்பதக்கம்
ஜெயலலிதாவுக்கு ஒரு பட்டிக்காடா பட்டணமா 
வாணிஸ்ரீக்கு ஒரு வசந்த மாளிகை.
ஒண்ணு போலீஸ் ஸ்டோரி 
ஒண்ணு ரூரல் ஸ்டோரி
ஒண்ணு லவ் ஸ்டோரி
மூணுமே வேற வேறகளம்
வேற வேற ஆடுகளம்
மூணுமே செஞ்சுரியை தாண்டி அடிச்ச படங்கள்.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்