1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

கலாட்டா கல்யாணம்

சென்னை அண்ணா நகரில் அமைந்திருக்கும் உலக வர்த்த மைய கட்டிடம் மிகவும் புகழ் வாய்ந்தது.ஏராளமான சினிமா படத்தின் படப்பிடிப்புகள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டிடத்தின் உச்சியில் நின்று பார்த்தால் சென்னை நகரையே கழுகுப் பார்வையில் பார்த்து விடலாம்.வளையம் வளையமாக சுற்றி மேலே ஏறுவது போன்ற கட்டமைப்புடன் ,வித்தியாசமாக மேலை நாட்டு பாணியில் உருவாக்கப்பட்ட கட்டிடம் இது.

பல சிறப்புகள் கொண்ட
இந்த கட்டிடத்தில் முதன்முதலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது ஒரு சிவாஜி படம்தான்.
என்னபடம் என்ன காட்சியை அங்கு எடுத்தார்கள் என்பதை சொல்லும் முன்பு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.
தமிழக அரசு நிதி திரட்டிக் கொடுப்பதற்காக சினிமா கலைஞர்கள் எல்லாம் இணைந்து ஆறு ஊர்களில் நட்சத்திர இரவு நடத்தினார்கள்.
இது சிவாஜி ஸ்ரீதர் தலைமையில் நடத்தப்பட்டது.இந்த நட்சத்திர இரவில் ஒரு காமெடி நாடகமும் நடத்தினார்கள்.அவசரம் அவசரமாக சித்ராலயா கோபு எழுதிய நாடகம் இது.

சிவாஜியுடன் நிறைய நடிக நடிகையர் நடித்த நாடகம் இது.இந்த நாடகத்துக்கு  அதிக வரவேற்பு கிடைத்தது.

இதை சினிமாவாக எடுத்தால் என்ன என்று ஒரு ஐடியா சிவாஜிக்கு பிறக்க,சினிமாவாகவும்  
எடுத்தார்கள்.
படத்தின் திரைக்கதை காட்சிகள் படத்திற்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

முதன்முதலாக ஜெயலலிதா சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.
சிவாஜி ஜெயலலிதாவை திருமணம் செய்ய விருப்பப்பட்டு ஜெயலலிதாவின் அப்பாவான தங்க வேலுவிடம் இது பற்றி பேச ,தங்கவேலுவோ எனக்கு நான்கு பெண்பிள்ளைகள்,அவர்கள் நாலு பேருக்கும் ஒரே  மேடையில் திருமணம் நடத்த விரும்புகிறேன் .அப்போதுதான் இது நடக்கும் என்று சொல்லி விடுவார்.
சிவாஜி தன்னுடைய திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் என்பதற்காக ,மற்ற மூன்று பெண்களுக்கும் மாப்பிள்ளை தேடி பிடித்து அலைவதுதான் கதை.
சிவாஜியுடன் ஜெயலலிதா நாகேஷ் மனோரமா சோ தங்கவேலு சச்சு கோபால கிருஷ்ணன் முதலானோரும் நடித்தார்கள்.

எல்லா பெண்களுக்கும் மாப்பிள்ளை பிடித்தவுடன் அவர்களின் ஜாலியை உற்சாகத்தை காட்ட ஒரு பாடல் வைத்தால் நன்றாக இருக்குமே என்று முடிவு செய்யப்பட்டது.
நான்கு ஜோடிகளும் பெரிய ரகளையாக ஆடி பாடுவது போன்ற பாடல்காட்சி பாடல் உருவானது.
இந்த படத்தின் இயக்குனரான C.V.ராஜேந்திரன் இந்த பாடல் காட்சியை அது வரை படம் பிடிக்கப்படாத இடத்தில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.சிவாஜியிடமும் இது பற்றி பேசினார். சிவாஜியும் ஓகே சொல்லிவிட்டார்.

1968 ஜனவரி மாதம் 21 ஆம் நாள் அன்றைய துணை குடியரசு தலைவர் vv.கிரி தமிழகத்தின் முதலைமைச்சரான அண்ணாவின் முன்னிலையில் உலக வர்த்தக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்ட இந்த உலக வர்த்தக மைய கோபுரத்தில் வைத்து இந்த பாடல்காட்சியை எடுத்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சிவாஜி ஜெயலலிதா நாகேஷ் சச்சு  மற்றும் குழுவினர் ஆடிப் பாடும் பாடலை படமாக்கினார்கள்.
கட்டிடம் திறக்கப்பட்டது ஐனவரி  21 ம்தேதி 1968ல்.
இங்கு படமாக்கப்பட்ட முதல் படமான இந்த திரைப்படம் வெளியானது 12.4.1968 ல் .
உலக வர்த்தக மைய கட்டிடத்தில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் கலாட்டா கல்யாணம் என்பது சிறப்பு.பாடல் க்ளைமாக்சுக்கு முன்பு வரும் எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்  பாடலாகும்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட கலாட்டா கல்யாணம் படம் 100 நாளை தாண்டி ஓடி வெற்றி பெற்ற படமாகும்.
இப்படத்துக்காக ஜெமினி மேம்பாலம் அருகில் பெரிய பேனர் வைக்கப்பட்டது.அந்த பேனரில் சிவாஜியின் தலையை மட்டும் போட்டு ஜெயலலிதா படுத்துக்கொண்டே போனில் பேசுவது போலே படம் வரையப்பட்டு இருந்தது. எல்லோரையும் கவரும் வண்ணம் இந்த பேனர் இருந்தது.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்