1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

திருவள்ளுவர் சிலை - சிவாஜி

தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான சிலைகளை அமைத்த தந்த தனிநபர் ஒருவர்  உண்டு என்றால் நடிகர்திலகம் சிவாஜியாகத்தான் இருப்பார்.எந்த ஊருக்கு சென்றாலும் ஏதாவது ஒரு சிலையை சிவாஜியவர்கள் திறந்து வைத்திருப்பார்.கட்டபொம்மன் பாரதியார்அம்பேத்கார் வீரசிவாஜி பசும்பொன் தேவர் வஉசி என இவர்களுக்கு மட்டுமல்லாது இன்னும் பல தலைவர்களின் சிலை அமைப்புகளுக்கு உதவி செய்தவர் சிவாஜி.ஒரு தனிநபர் இவ்வளவு சிலைகளை திறந்து வைத்திருக்கிறார்,சிலைகள் அமைக்க நிதியுதவி செய்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தியாகும்.சிவாஜி அவர்களின் நாட்டுப்பற்று , தேசத்தின் மேல் கொண்ட பக்தியே இதற்கு முழுமுதல் காரணமாகும்.பெருந்தலைவர் காமராஜரின் சிலைகளை அதிகமாக திறந்து வைத்தவரும் சிவாஜிதான்.

சென்னையில் கடற்கரை சாலையில் இருக்கும் திருவள்ளுவர் சிலை சிவாஜியின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட சிலையாகும்.
இந்த சிலை எப்போது எதனால் அமைக்கப்பட்டது என்பது பற்றி இனிமேல் பார்க்கலாம்.

1968 ஆம் ஆண்டு இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்துவதாக அறிவித்தார் அண்ணா.
கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு தமிழ்மொழிக்கு சிறப்பு செய்ய வேண்டி இந்த மாநாட்டை நடத்த  அண்ணா திட்டமிட்டார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே உலகத்தமிழ் மாநாட்டை நடத்ததுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டது.
காங்கிரஸ் கட்சியினர் இந்த மாநாட்டை பற்றி அதிக சிரத்தை இல்லாதவர்களாக இருந்தார்கள்.பக்தவச்சலம் முதல்வராக இருந்த போது அறிவிக்கப்பட்ட உலகத்தமிழ் மாநாடு,சில ஆரம்பகட்ட வேலைகள் மட்டுமே நடந்த நிலையில் அண்ணா முதல்வரானதும் உலகத் தமிழ் மாநாட்டு வேலைகளை ஆரம்பித்து விட்டார்.
 இந்த மாநாடு உலகமே போற்றும் வகையில் அமைய வேண்டும் என்று அண்ணா நினைத்தார்.இதற்காக அண்ணா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

நெடுஞ்செழியன் திருக்குறள் முனுசாமி மயிலை சீனி வெங்கடசாமி, கருணாநிதி கவிஞர் சுரதா குன்றக்குடி அடிகளார் 
டாக்டர் மு வரதராசனார் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றார்கள் .

இந்த உலகத் தமிழ் மாநாடு தமிழர்களின் திருநாளான பொங்கலுக்கு முன் நடந்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை கொண்டு ஜனவரி 4-ம் தேதி மாநாடு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.


காலம் கடந்தாலும் இந்த மாநாடு மக்களின் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் அறிஞர்களின் திருவுருவ சிலைகளை நிறுவ வேண்டும் என்று அண்ணா முடிவெடுத்தார்.

நாற்பது நாடுகளில் இருந்து தமிழில் அறிவு பெற்ற கலை வித்தகர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

சென்னை கடற்கரை சாலையில் வைக்கப்படும் சிலைகளை பார்த்து எல்லோரும் வியப்பெய்த வேண்டும் என்று நோக்கத்துடன் திட்டம் உருவாக்கப்பட்டது.
சிலைகளை கடற்கரையில் நிறுவும் பொறுப்பை சென்னை  மாநகராட்சி எடுத்துக் கொண்டது .

கார்டுவெல் வீரமாமுனிவர் ஜி.யு.போப் போன்ற ஆங்கில சான்றோர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுக்காக அவர்களின் சிலைகளும் கடற்கரையில் நிறுவ முடிவெடுக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்த கிறிஸ்துவ அமைப்புகள் ஒன்று சேர்ந்து கிறிஸ்துவ மத சான்றோரின் சிலை ஒன்றை அன்பளிப்பாக தருவதாக ஒப்புக் கொண்டு அதன்படி வழங்கினார்கள்.

இப்படி பல சிலைகளை பல பெரியவர்கள் செய்து தருவதாக ஒப்புக் கொண்டார்கள்.

திருவள்ளுவர் சிலையை சிவாஜி அவர்களை செய்து தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.அண்ணாவின் 
விருப்பமே தன் விருப்பம் என்று அதை சிவாஜி அவர்கள்  நிறைவேற்றினார்.

இந்ததிருவள்ளுவர் சிலைக்கான பொருத்தமான மாதிரி எதுவும் சரியாக அமையவில்லை.
திருவள்ளுவர் சிலை மாடல் இல்லாமல் விழாக்குழுவினர் அல்லாடுவதை கேள்விப்பட்ட சிவாஜி தானே மாடலாக இருக்க முடிவெடுத்தார்.இதற்காக சிவாஜியவர்களுக்கு நல்ல மேக்கப் கலைஞரை கொண்டு திருவள்ளுவர் தோற்ற ஒப்பனை செய்யப்பட்டது.
புகைப்படம் எடுத்து பார்த்த போது எல்லோருக்கும் அது பிடித்திருக்கவே அதையே திருவள்ளுவர் சிலைக்கு உபயோகப்படுத்திக் கொள்ள முடிவானது.
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் இருக்கும் திருவள்ளுவர் சிலையின் முகத்தை  உற்று பார்த்தால் சிவாஜியின் சாயல் தெரியும்.


 தமிழ்மாநாட்டில் சிவாஜிக்கு கொடுத்த முக்கியத்துவம் சிலருக்கு  மனதில் உறுத்தலை ஏற்படுத்தியது.திமுக ஆட்சியில் நடக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் காங்கிரஸ் தொண்டனுக்கு முக்கியத்துவமா ? என்று பல பேருக்கு வயிற்றெரிச்சல்.இதை அண்ணாவிடம் கூட சொன்னார்கள்.

ஆனால் யார் சொன்தையும் காதில் வாங்காமல் தம்பி சிவாஜியின் மாடலில் திருவள்ளுவர் சிலை அமையட்டும் என்பதில் அண்ணா உறுதியாக இருந்தார்.

எல்லா கால கட்டங்களிலும் எதிர்ப்பிலேயே தன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு வளர்ந்த சிவாஜிஅவர்கள் திமுகவில் ஒரு சிலரின் எதிர்ப்பை கண்டு அஞ்சவில்லை.மன வருத்தமும் கொள்ளவில்லை.

அவ்வையார் கண்ணகி கம்பர் வஉசி பாரதியார் பாரதிதாசன் சிலைகளும் நிறுவப்பட்டன.
கண்ணகி சிலையை தமிழக ஆசிரியர்களும் மாணவர்களும் கூட்டாக அன்பளிப்பாக கொடுத்தார்கள் .

சிவாஜி அவர்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை 
கி அ பெ விஸ்வநாதம் திறந்து வைத்தார்.கம்பர் சிலையை பக்தவச்சலம் திறந்து வைத்தார்.
கண்ணகி சிலையை மபொசி திறந்து வைத்தார்.

மாநாட்டை குடியரசுத்தலைவர் ஜாகிர் உசேன் தொடங்கி வைத்தார்.
காமராஜர் வரவேற்புரை ஆற்றினார்.
மாநாட்டு அலங்காரங்களை SS .வாசன்,நாகிரெட்டி,
AL.சீனிவாசன்,
மெய்யப்பசெட்டியார் ஆகியோர் செய்திருந்தார்கள்.

AL.சீனிவாசன் ஒரு பேட்டியில் ,இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் சிவாஜி திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக கொடுத்தது மட்டுமல்லாமல் அலங்காரச் செலவுகளிலும் என்னுடன் சேர்ந்து சிலவற்றை ஏற்றுக் கொண்டார் என்று சொல்லியிருந்தார்.

அரசியல் விஷயங்களில் கட்சிப் பாகுபாடு பார்க்காமல் சிவாஜி கொடுத்த நிதியுதவிகளில் இதுவும் ஒன்று..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்