சிரிச்சே அரசிங்கற பேரு வாங்குன நடிகை கே ஆர் விஜயாதான்.
தான் அறிமுகமான முதல் படத்துலேயே டைட்டில் ரோல்லே நடிச்சவங்க இவங்க. அந்த படம் கற்பகம்.
நடிகர்திலகம் சிவாஜி கே ஆர் விஜயா சேந்து நடிச்ச படங்கள் 37.ஜோடியா சேந்து நடிச்ச படங்கள் 32.
சிவாஜி கே ஆர் விஜயா நடிச்ச படங்கள்லே என்னென்ன சிறப்புகள் :
1. சிவாஜியோட 3 வெள்ளிவிழா 20 நூறு நாள் படத்துலே நடிச்ச ஒரே நடிகை கே ஆர் விஜயா
2.தமிழ் சினிமாலே நடிக நடிகைகளுக்கு மேக்கப் இல்லாமே எடுத்த படம்னு நெஞ்சிருக்கும் வரை படத்தை சொல்வாங்க. இதுலே நடிச்சவரும் கே ஆர் விஜயா.
3.K.பாலசந்தர் சிவாஜியை வெச்சு டைரக்சன் பண்ணுன ஒரே படமான எதிரொலி பட கதாநாயகி கேஆர் விஜயாதான்.
4.போலீஸ் படத்துக்கே ஒரு முன்னுதாரணமா அமைஞ்ச படம் தங்க பதக்கம்.இந்த பட கதாநாயகியும் கே ஆர் விஜயாதான்.
5.சிவாஜி வக்கீலா நடிச்ச படங்கள் எதிரொலி சிம்ம சொப்பனம் ,பாடகரா நடிச்ச தவப்புதல்வன் ,போலீசா நடிச்ச தங்கபதக்கம் , திருடனா நடிச்ச திருடன் மிருதங்க வித்வானா நடிச்ச மிருதங்க சக்கரவர்த்தி,சினிமா டைரக்டரா நடிச்ச சாதனை ,லாரி டிரைவரா நடிச்ச கிரகப்பிரவேசம் ..இப்படி பல வகையான வேஷங்கள் அமைஞ்ச சிவாஜி படங்கள்லே நடிச்சவரும் கே ஆர் விஜயா.
6.,சிவாஜி சினிமா கேரியர்லே மட்டுமல்லே தமிழ் சினிமாலேயே பெரிய இன்டஸ்டரிஹிட் ஆனபடம் .சிவாஜியோட 200 வது படம்.ரெண்டு கோடிக்கு மேலே கலெக்சன் பண்ணுன முதல் தமிழ் படம்..இப்படி பல சிறப்புகள் அமைஞ்ச திரிசூலம் பட கதாநாயகியும் கே ஆர் விஜயா.
7.சிவாஜி நடிச்ச மலையாளப்படம் தச்சோளி அம்பு ,தெலுங்கு படம் விஸ்வநாத நாயக்கடு படங்கள்லேயும் கே ஆர் விஜயா ஜோடியா நடிச்சிருந்தாங்க.
8.சிவாஜி நடிச்ச புராண படங்கள்லே அதிகமா 4 படங்கள்லே நடிச்சிருந்தாங்க கே ஆர் விஜயா.அந்த படங்க சரஸ்வதி சபதம் கந்தன் கருணை திருமால் பெருமை திருவருட் செல்வர்.
9.சிவாஜிக்கு ஜோடியா நடிச்ச கே ஆர் விஜயா மகளாகவும் நடிச்ச படம் திருமால் பெருமை.
10.சினிமா பீல்டு சம்பந்தப்பட்ட கதையமைப்புலே வெளியான
சினிமா நடிகரா நடிச்ச ராமன் எத்தனை ராமனடி ,சினிமா டைரக்டரா நடிச்ச சாதனை படங்கள்லேயும் நடிச்சவங்க
கே ஆர் விஜயாதான்.
11.சிவாஜி நடிச்ச படத்தோட நெகடிவ் உரிமையை இந்திய அரசாங்கமே வாங்குன பெருமை பாரத விலாஸ் படத்துக்கு இருக்கு. தேசிய ஒற்றுமையை சிறப்பா சொன்னதுக்காக இந்த பெருமை பாரதவிலாஸ் படத்துக்கு கிடைச்சது. இதுலே கதாநாயகி கே ஆர் விஜயா.
.
12.சிவாஜியை வெச்சு கே ஆர் விஜயா தயாரிச்ச படம் நான் வாழ வைப்பேன்.
13.சிவாஜி நடிக்க k.பாலாஜி தயாரிப்பு முக்தா சீனிவாசன் தயாரிப்பு சிவாஜி புரொடொக்சன் தயாரிப்பு AVM ராஜன் தயாரிப்பு AP.நாகராஜன் தயாரிப்பு AC திருலோகசந்தர் தயாரிப்பு சின்ன அண்ணாமலை தயாரிப்பு கலைஞானம் தயாரிப்பு கலைப்புலி தாணு தயாரிப்பு படங்களில் நடித்தவர் கே ஆர் விஜயா மட்டுமே.
14.தொடர்ந்து வெளியான 5 நூறு நாள் பட சாதனையும் சிவாஜி கே ஆர் விஜயா படங்களுக்கு அமைந்தது.அந்த படங்கள்:ராமன் எத்தனை ராமனடி தவப்புதல்வன் சொர்க்கம் பாரதவிலாஸ் தங்கபதக்கம்
சிவாஜி கே ஆர் விஜயா நடிச்ச 37 படங்கள்:
கை கொடுத்த தெய்வம் சரஸ்வதி சபதம்
செல்வம் கந்தன் கருணை
நெஞ்சிருக்கும் வரை
தங்கை பாலாடை திருவருட்செல்வர்
இருமலர்கள் ஊட்டி வரை உறவு
திருமால் பெருமை
திருடன் எதிரொலி ராமன் எத்தனை ராமனடி
சொர்க்கம்
தவப்புதல்வன் பாரத விலாஸ்
தங்கப் பதக்கம் கிரகப்பிரவேசம்
நாம் பிறந்த மண்
ஜெனரல் சக்கரவர்த்தி
தச்சோளிஅம்பு
ஜஸ்டிஸ் கோபிநாத் திரிசூலம்
நான் வாழ வைப்பேன் ரிஷிமூலம் தர்மராஜா
சத்திய சுந்தரம் கல்தூண்
ஹிட்லர் உமாநாத் ஊருக்கு ஒரு பிள்ளை
ஊரும் உறவும்
நீதிபதி மிருதங்க சக்கரவர்த்தி
தராசு
சிம்ம சொப்பனம் வம்சவிளக்கு
படிக்காத பண்ணயார்
சாதனை விஸ்வநாத நாயக்கடு
கிருஷ்ணன் வந்தான்
மன்னவரு சின்னவரு
இந்த படங்கள்லே 3 வெள்ளிவிழா படம் 20 படம் 100 நாள் ஓடி சாதனை செஞ்சிருக்கு.
நடிகர்திலகத்தோட நடிச்ச நடிகைகள்லே அதிக வெள்ளிவிழா 100 நாள் படங்கள் அமைஞ்சது கே ஆர் விஜயாவுக்குத்தான்.
தங்கபதக்கம் திரிசூலம் நீதிபதி படங்கள் வெள்ளிவிழா ஓடி சாதனை செஞ்ச படங்கள்.
100 நாள் ஓடுன 20 படங்கள்:
1.கை கொடுத்த தெய்வம்
2.சரஸ்வதி சபதம்
3.கந்தன் கருணை
4.இரு மலர்கள
5.ஊட்டி வரை உறவு
6.திருடன்
7.ராமன் எத்தனை ராமனடி
8.தவப்புதல்வன்
9.சொர்க்கம்
10.பாரதவிலாஸ்
11.தங்க பதக்கம்
12.ஜெனரல் சக்கரவர்த்தி
13.திரிசூலம்
14.நான் வாழ வைப்பேன்
15.ரிஷிமூலம்
16.சத்திய சுந்தரம்
17.கல்தூண்
18.நீதிபதி
19.மிருதங்க சக்கரவர்த்தி
20சாதனை
சிவாஜியோட சேந்து நடிச்ச இப்படி ஒரு ரெக்கார்ட் இருக்கறது கே ஆர் விஜயாவுக்கு மட்டும் தான்.
இதுலே மலையாளப்படம் தச்சோளி அம்பு தெலுங்கு படமான விஸ்வநாத நாயக்கடு படங்கள் சேர்க்கப்படவில்லை.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக