1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி கல்யாணம்

நடிகர்கள் பெரும்பாலும் அவங்க சினிமா பீல்டுக்கு வந்து ஒரு நல்ல  நிலைமை ஏற்பட்ட பின்னாலேதான் கல்யாணம் செஞ்சுக்குவாங்க.
மத்த தொழிலுக்கும் சினிமா தொழிலுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு.எந்த அளவுக்கு பேரும் புகழும் கிடைக்குமோ அந்தளவுக்கு சொல்லடியும் வரும் .
கூத்தாடின்னு கேவலமா நடிகர்களை பேசுன, நடத்துன காலம் அது.நாடகம் சினிமாவை  ரசிச்சு மக்கள்  பாத்தாலும் அவங்களை விலக்கியே பாத்தது சமூகம்.
சினிமா நாடக நடிகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு தேடுனா ,கூத்தாடிக்கெல்லாம் பொண்ணு தர முடியாதுன்னு சொல்லிருவாங்க.

சிவாஜி பராசக்தி படத்துலே நடிச்சுட்டு இருக்கறப்பவே வேற ரெண்டு மூணு படத்துலே நடிக்க வாய்ப்பு வந்துருச்சு.
பராசக்தி படம் எடுக்க எடுக்கவே  
படத்தை பத்துன தகவல்கள் வெளிய வர ஆரம்பிச்சுச்சு. வெளியீட்டு நாள் நெருங்க நெருங்க எதிர்பார்ப்பும் அதிகமாயிட்டே போச்சு.
ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வந்து பரபரப்பை பண்ணுச்சு.ஒரு பெரிய எதிர்பார்ப்போட கலையுலகமே அதை பாக்க காத்திருந்துச்சு.

ஊரே இப்படி எதிர்பார்ப்போட இருக்குது. சிவாஜியோட அம்மா ராஜாமணிஅம்மாவுக்கு ஒரு பக்கம் பயத்தை கொடுக்குது.
ஒரு அம்மாவா அவங்களோட உண்மையான பயம் தான் அது.நடிகர்களை கூத்தாடின்னு அந்த கேவலமான சொல் தன்னோட மகனுக்கு வரக்கூடாதுங்கற எண்ணம்தான் அந்த பயம்.

பேரும் புகழும் பணமும் வர்றது இருக்கட்டும். நாளைக்கு ஒரு குடும்பம் வாழ்க்கைன்னு வர்றப்போ ,கல்யாணம் செய்ய பொண்ணு தேடறப்போ ,அவன் கூத்தாடியேச்சே ,கூத்தாடிக்கு பொண்ணு தர முடியாதுன்னுசொல்லிட்டா ,
என்ன பண்றதுன்னு ஒரு பயம்தான் ராஜாமணி அம்மாவுக்கு.

அதனாலே பராசக்தி படம் வெளி வர்றதுக்கு முன்னாலே கணேசனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிரணும்னு முடிவெடுத்தார்.

அப்போ சிவாஜி குடும்பத்துலே சிவாஜிக்கு மூத்தவரா அவரோட அண்ணன் தங்கவேலு இருந்தார்.அவருக்கு திருமணம் ஆகி இருந்துச்சு. சிவாஜிக்கு அடுத்து தங்கை பத்மாவதி தம்பி சண்முகம் இருந்தாங்க.

சிவாஜிக்கு சீக்கிரம் கல்யாணம்   செஞ்சுடணும்னு ராஜாமணி அம்மா பொண்ணு தேட ஆரம்பிச்சாங்க. அதிக பழக்க வழக்கம் இல்லாத குடும்பத்துலே போய் பொண்ணு கேக்கறத விட நெருங்குன சொந்தத்துலேயே பொண்ணு பாத்துடலாம்னு முடிவெடுத்தார்.
சிவாஜியோட ஒண்ணு விட்ட அக்கா வீடு சுவாமிமலை பக்கத்துலே களத்தூரிலே இருந்துச்சு.அவங்களுக்கு மூணு மகள்கள் இருந்தாங்க.அதுலே மூத்த பெண் பேர்தான் கமலா.அந்த கமலாவை தான் சிவாஜிக்கு பேசி முடித்தார் ராஜாமணி அம்மா.
சிவாஜி குடும்பம் தேவர் சமூகத்தை சார்ந்தது. அவங்க சமுக முறைப்படி அக்கா மகளை  கல்யாணம் பண்றது ஒரு முறைப்படியான விஷயம் தான்.

கல்யாணத்தை பொண்ணு ஊருலே நடத்தறதுதான் வழக்கம்.சிவாஜி அப்போ சென்னையிலே படத்துலே நடிச்சுட்டு இருந்தார்.பொண்ணு ஊருக்கு பக்கத்துலே இருக்கற சுவாமிமலையிலே கல்யாணத்தை நடத்திடலாம்னு முடிவு செஞ்சாங்க.

1952 ஆம் வருஷம் மே 1 ஆம் தேதி சுவாமிமலை.தொழிலாளர் தினம் அது.
சிவாஜியை கண்ணதாசன் கூப்பிட்டு வந்து மணவரையிலே உட்கார வெச்சார்.
சிவாஜியின் கரம் பிடிக்க போறோம்ங்கற ஆசையிலே புன்னகை  முகத்தோட கமலா அவர்கள் வந்து அமர்ந்தார்.கமலாவுக்கு ரெண்டு தங்கைகள் இருந்தாங்க. அவங்க பேரு விமலா ,அலமேலு.
இதுலே அலமேலு அவர்களைத்தான் சிவாஜி தன் தம்பி சண்முகத்துக்கு பல வருசம் கழிச்சு கல்யாணம் பண்ணி வெச்சார்.

சிவாஜி நடிச்ச பராசக்தி படம் வெளியிலே வராத நேரம் அது. இருந்தாலும் நாடக காலத்துலே இருந்தே சிவாஜிக்கு அறிமுகம் ஆன பிரபலங்கள் அந்த கல்யாணத்துல கலந்துகிட்டாங்க.அவங்க எல்லாம் சென்னையிலே இருந்து வந்திருந்தாங்க.அந்த பிரபலங்கள்
கண்ணதாசன் பிஏ பெருமாள் கருணாநிதி சகஸ்ரநாமம் எம்ஜிஆர் அரங்கண்ணல் .
சிவாஜியோட கல்யாணத்துலே கலந்துகிட்டு வேண்டிய உதவிகளை செஞ்சாங்க.

இந்த கல்யாணத்துலே ஒரு புதுமை நடந்துச்சு.வழக்கமா கல்யயாணத்துலே சமஸ்கிருத  மந்திரங்களைத்தான் சொல்லி கல்யாணம் செஞ்சு வைப்பாங்க.ஆனா சிவாஜி கல்யாணம் திருக்குறளை வேத மந்திரமா சொல்லி கல்யாண வைபவம் நடந்துச்சு. இந்த திருக்குறளை சொன்னவர் சிவாஜியோட தம்பி சண்முகம் படிச்ச பள்ளியோட தமிழ் ஆசிரியர்.அவர் திருக்குறள் சொல்ல ,கண்ணதாசன் மாலை எடுத்து கொடுக்க சிவாஜி கமலா கழுத்தில் தாலி கட்டினார்.
மணமக்களை வாழ்த்தி கண்ணதாசன் பேசினார்.
கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு விருந்து சாப்பாடு ஏற்பாடு நடந்தது.வந்தவர்களுக்கு எம்ஜிஆர் விருந்து பரிமாறினார்.
சிவாஜி கல்யாண செலவு 500 ரூபாய்லே முடிஞ்சிருச்சு.ரொம்ப எளிமையா மாலை மாத்தி கல்யாணம் நடந்தது.
சிவாஜியோட திருமணம் ஒரு தமிழ் முறை திருமணமா நடந்தது.
நடிகர்களை கூத்தாடின்னு சொன்ன சமூகத்தை தலையிலே தூக்கி வெச்சு கொண்டாட வெச்சவர் சிவாஜி.
சிவாஜி கல்யாணம் முடிஞ்சு அஞ்சு மாசம் கழிச்சு அக்டோபர் தீபாவளிக்கு வெளியாச்சு பராசக்தி.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்