1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ராமாராவுக்கு மேக்கப் போட்ட சிவாஜி

நடிகர்திலகத்தை பத்தி தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கு.சினிமா ஸ்கிரீன்லே நடிகர்களோட  நடிப்பை மட்டும் தான் நாம பாக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு.நடிகர்களா இருந்தாலும் தனிப்பட்ட முறையிலே பல திறமைகள் நெறஞ்ச பல நடிகர்கள் இருக்காங்க.நடிகர்திலகம்னா மாபெரும் நடிகர்னு சொல்லிட்டு போயிருவாங்க. வெறும் நடிகரா வந்து போகாமே சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்களையும் தெரிஞ்சு வெச்சவர் நடிகர்திலகம்.
சிவாஜி நல்ல ஒரு மேக்கப்மேன்  அப்படிங்கறது பல பேருக்கு தெரியாது .சிவாஜிக்கு மேக்கப்போட மேக்கப்மேன் இருந்தாலும் முக்கியமான மேக்கப் ,நகாசு வேலை மேக்கப்பெல்லாம் சிவாஜி பெர்பெக்டா தனக்குத்தானே போட்டுக்குவார். மேக்கப் கலையிலே நல்ல விஷய ஞானம் வெச்சிருந்த சிவாஜி ,வேற ஒரு பிரபல நடிகருக்கு மேக்கப் போட்டுருக்கார்ங்கற விஷயம் எல்லாம் நடந்திருக்கு. சிவாஜி யாருக்கு மேக்கப் போட்டார் ,எப்ப நடந்தது அப்படிங்கறத மேற் கொண்டு பாக்கலாம்

இந்த சம்பவம் நடந்தது 1975 லே.சென்னையிலே வாகினி ஸ்டியோவுலே தெலுங்கு சூப்பர்ஸ்டார் ராமாராவோட சூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு.
அதே வாகினி ஸ்டியோவுலே சிவாஜிக்கும் சூட்டிங் இருந்துச்சு.
சிவாஜியும் ராமாராவும் தனித்தனி தளங்கள்லே நடிச்சுட்டு இருந்தாங்க.மதிய நேரம் .லன்ச் பிரேக். ராமாராவை பாக்கலாம்னு சிவாஜி வந்தார்.

அப்போ  நடிகர் திலகம் என் டி ராமராவ்வின் டிரஸ்சை பாத்தார்.பளபளன்னு டிரெஸ் போட்டு இருந்தார் ராமாராவ்

ராமாராவோட முகத்தை சிவாஜி பாத்ததும்  முகத்துலே இருந்த புருவ மேக்கப் சரியா பண்ணலேன்னு தெரிஞ்சுகிட்டார்.மேக்கப்மேன் ராமாராவுக்கு அந்த புருவ ஒப்பனையை சரியா வரயலையேன்னு டைரக்டர் கிட்டே சொல்லி ,அவசரப்பட்டு காமிரா ஸ்டார்ட் பண்ணிராதே ,கொஞ்சம் பொறுன்னு சொன்னார்.டைரக்டரும் நீங்க பேசிட்டு இருங்க நான் லைட்டிங்  சரி பண்ணிட்டு இருக்கேன்னு போயிட்டார்.

 பதினைந்து நிமிஷம் என் டி ராமராவை நாற்காலியில உட்கார வைச்சு  ,, நடிகர் திலகம் eyebrow பென்சிலை எடுத்து அழகா என் டி ராமராவின் புருவத்தை மிக அழகாக வரைஞ்சு  அதை கச்சிதமாக முடிச்சார்.

டைரக்டரை கூப்பிட்டு இப்ப ஷுட்டிங் ஸ்டார்ட் பண்ணுன்னு சொன்னார்.
உடனே டைரக்டர் ,அண்ணே நீங்க யாரு ,சும்மாவான்னு சிவாஜியை பாராட்ட சிவாஜி கன்னத்துலே தட்டிக் கொடுத்தார்.

அந்த மேக்கப்போட ராமாராவை கேமிரா முன்னாலே நிக்கவெச்சு  சரியா இருக்குன்னு தெரிஞ்ச பின்னாலேதான் சிவாஜி போனார்.

செட்டில் இருந்த அத்தனை பெரும் நடிகர் திலகத்தின் சுறுசுறுப்பு, வேலையை  ஆச்சரியமாக ரசிச்சு பாத்தாங்க.

ஷுட்டிங் ஷ்பாட்லே நடிகர்கள் தங்களோட வேலையைத்தான் செஞ்சுட்டு இருப்பாங்க பெரும்பாலும்.பக்கத்துலே செட்டுலே ஒரு நடிகர் இருக்கார்னா அவரை பாத்து பேசறது எல்லாம் நடக்கறது எல்லாம் எப்பாச்சும் நடக்கற அபூர்வ விஷயம். அப்படியே பாத்து பேசுனாலும் ஒரு நலம் விசாரிப்போட முடிச்சுக்குவாங்க. 

தன்னோட நடிக்கறவங்களுக்கு  நடிப்பை பத்தி அறிவுரை சொல்லற சிவாஜி ஒரு பெரிய சூப்பர்ஸ்டார் அதுவும் தெலுங்கு  மொழி நடிகருக்கு செஞ்சதெல்லாம் சிவாஜியோட பெருந்தன்மையை காட்டுது.

என்ன ஒரு மனுசர் இவர்னு நெனைக்க  தோணுது. நடிகர் திலகம் இவரை போல் இனி யாரால் வரமுடியும் ..... 
அது அவரொட குணம் .
சிவாஜியை ராஜாவை போல் கடவுள்  படைச்சார் .

இது ராமாராவ் படத்தை டைரக்சன் செஞ்ச வேணுவோட மகன் சொன்னது .இதுலே சொன்ன சிவாஜியை பத்துன பாராட்டு வார்த்தைகள் அவர் சொன்னதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்