1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

பத்மினியா கே ஆர் விஜயாவா?

நடிகர்திலகம் சிவாஜிக்கு ஜோடியா 60 நடிகைகள் நடிச்சிருக்காங்க.இதுலே யார் பெஸ்ட் சாய்ஸ்னு ரசிகர்கிட்டே கேட்டா ஒவ்வொருத்தர் ரசனையும்  ஒவ்வொரு விதமா இருக்கும். யார் பெஸ்ட்னு சொல்லறத விட எல்லாருக்குமே பெஸ்ட்டா சிவாஜி படங்கள் இருக்கு அப்படிங்கறதுதான் உண்மை. சரி கடைசியா ஒரு பில்டர் பண்ணினா நிறைய ரசிகர்களோட சாய்ஸ் இந்த வகையிலே அதிகமா இருக்கு. வடக்கிருந்து பாத்தா வாணிஸ்ரீ
தெக்க இருந்து பாத்தா தேவிகா
மேற்கே இருந்து பார்த்தா பத்மினி 
கிழக்கே இருந்து பாத்தா கே ஆர் விஜயான்னு ரிசல்ட் வருது.
சூரியன் உதிக்கறதும் மறையறதும் கிழக்கும் மேற்குந்தானே .
அந்த டைரக்சன்லே நிக்கறது கே ஆர் விஜயா பத்மினி .
இதுலே யார் ரொம்ப பொருத்தம் ..எத்தனை படங்கள் .எத்தனை ஹிட் ..
இப்ப ஒரு அலசல் ..

கே ஆர் விஜயாவா ? அவங்க சிரிச்சே பேரை தட்டிட்டு போயிடுவாங்களேன்னு ஒரு பேர் இருக்கு.
பத்மினியோட டான்சை யாராலும் ஆட முடியாதுங்கறது நிச்சயம்.
புன்னகை அரசியா ?
நாட்டியப் பேரொளியா ?

நடிகர்திலகத்துடன் பத்மினி நடிச்ச படங்கள் 41.கே ஆர் விஜயா  நடிச்ச படங்கள் 43.
சிவாஜிக்கு ஜோடியா பத்மினி நடிச்ச படங்கள் 33.,கே ஆர் விஜயா ஜோடியா நடிச்ச படங்கள் 33.

சிவாஜியோட சரித்திர புராண படங்கள்லே பத்மினி நடிச்ச படங்கள் :
சம்பூர்ண ராமாயணம் ,கட்டபொம்மன்,
ஸ்ரீவள்ளி ,சரஸ்வதி சபதம் ,திருவருட்செல்வர்,
திருமால் பெருமைன்னு 6 படங்கள்.
கே ஆர் விஜயா நடிச்ச சிவாஜியின் சரித்திர  புராண படங்கள் :
சரஸ்வதிசபதம்,
கந்தன்கருணை,
திருவருட்செல்வர்,திருமால் பெருமை, ராஜரிஷின்னு 5 படங்கள். இது போக விஸ்வநாதநாயக்கடு சரித்திர தெழுங்கு படமும் இருக்கு
சரஸ்வதிசபதம் திருவருட்செல்வர் திருமால் பெருமை இந்த 3 படத்திலும் ரெண்டு பேருமே நடிச்ச படங்கள்.

சிவாஜி  பத்மினி  ஜோடியா நடிக்காத படம் வீரபாண்டிய கட்டபொம்மன் .இந்த ஒரே படம் தான் வெள்ளிவிழா ஓடி இருக்கு. சிவாஜி பத்மினி ஜோடியா நடிச்ச எந்த படமும் வெள்ளிவிழா ஓடியதில்லை.
கே ஆர் விஜயா நடிச்ச தங்க பதக்கம் திரிசூலம் நீதிபதி இந்த 3 படமும் வெள்ளிவிழா ஓடியிருக்கு. இந்த 3 படத்திலும் ஜோடியா நடிச்சார் விஜயா .

சிவாஜி நடித்த 20 இரட்டை வேட படங்ளில் பத்மினி கே ஆர் விஜயா இருவரும் தலா ஒரு படத்தில் நடித்துள்ளார்கள்.
பத்மினிக்கு உத்தம புத்திரன் ,
கே ஆர் விஜயவுக்கு சரஸ்வதி சபதம்.

சிவாஜி புரொடொக்சன் தயாரிப்பில் பத்மினி நடித்த ஒரே படம் வியட்நாம் வீடு.
கே ஆர் விஜயா நடித்த படங்கள் இரண்டு. தங்கப்பதக்கம் திரிசூலம்.

கே ஆர் விஜயா சிவாஜியை வைத்து சொந்தமாக தயாரித்த ஒரே படம் நான் வாழ வைப்பேன்.பத்மினி சொந்தமாக படங்களே தயாரித்ததில்லை.

சிவாஜியின் வீடான அன்னைஇல்லத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட திரிசூலம் படத்தில் கேஆர் விஜயா நடித்துள்ளார்.சிவாஜியின் அன்னை இல்ல வீட்டில் நடிக்கும் வாய்ப்பு பத்மினிக்கு வாய்க்கவில்லை.

சிவாஜி கே ஆர் விஜயா நடித்த தர்மராஜா வெளிநாட்டில் ,சிங்கப்பூர் ஹாங்காங் நகரங்களில் படம் எடுக்கப்பட்டது.அந்த வகையில் கே ஆர் விஜயாவுக்கு சிவாஜியுடன்  ஒரு வெளிநாட்டு வாய்ப்பு அமைந்தது.பத்மினிக்கு அந்த வகையில் ஏதும் அமையவில்லை.

சிவாஜி பத்மினி நடிச்சு 100 நாள் ஓடுன படங்கள் 20.
சிவாஜி கேஆர் விஜயா நடிச்சு 100 நாள் ஓடுன படங்கள் 25.

சிவாஜி பத்மினி வேற மொழி படத்துலே எதிலயும் நடிக்கலே.. எல்லாமே தமிழ் படங்கள் தான்.
கே ஆர் விஜயா சிவாஜி நடிச்சு தெலுங்கு மலையாளப்படங்கள்   வெளியாகியிருக்கு. தச்சோளிஅம்பு மலையாளம் விஸ்வநாத நாயக்கடு தெலுங்கு.

சிவாஜிக்கு காதலியா பத்மினி ,மனைவியா கே ஆர் விஜயா நடிச்ச படம் இரு மலர்கள்.

சிவாஜிக்கு பத்மினி ஜோடியா நடிச்ச முதல் படமாகட்டும் கடைசி படமாகட்டும்.பத்மினி ஜோடியா நடிச்சிருப்பார்.
முதல் படம் பணம் .கடைசி படம் லட்சுமி வந்தாச்சு .
கே ஆர் விஜயா அப்படி இல்லே. சிவாஜி யோட நடிச்ச முதல் படமான கை கொடுத்த தெய்வம் ,கடைசி படமான மன்னவரு சின்னவரு ..முதலும் முடிவுமான படங்கள்லே சிவாஜிக்கு கே ஆர் விஜயா ஜோடியா நடிக்கலே.

தமிழ் கலையை இசையை மையமா வெச்சு எடுத்த படங்கள் தில்லானா மோகனாம்பாள்,மிருதங்க சக்கரவர்த்தி.இந்த வகையிலே பத்மினிக்கு பெருமை தேடித்தந்த படம் தில்லானா மோகனாம்பாள்.அது போலே கே ஆர் விஜயாவுக்கு மிருதங்க சக்கரவர்த்தி.ஒண்ணுலே சிவாஜி நாதஸ்வர சக்கரவர்த்தி. இன்னொன்னுலே மிருதங்க சக்கரவர்த்தி.

சிவாஜி சினிமா நடிகராகவும் ,சினிமா  டைரக்டராகவும் நடிச்ச படங்கள் ரெண்டு .நடிகரா ராமன் எத்தனை ராமனடி..டைரக்டரா நடிச்ச படம் சாதனை. இந்த ரெண்டு படத்துலேயும் நடிச்ச பெருமை கே ஆர் விஜயாவுக்குத்தான் அமைஞ்சது.ராமன் எத்தனை ராமனடி படத்துலே ஒரே ஒரு காட்சிலே பத்மினி நடிகை பத்மினியாவே வருவாங்க.

நடிகர்திலகம் அவரோட மகன் இளையதிலகம் பிரபு ரெண்டு பேரும்  சேந்து நடிச்ச பல படங்கலே நடிச்ச சிறப்பு  கே ஆர் விஜயாவுக்கு இருக்கு. நீதிபதி சிம்ம சொப்பனம் சாதனை வம்சவிளக்குன்னு பல படங்கள்.இப்படிப்பட்ட வாய்ப்பும் பத்மினிக்கு அமையலே..

சிவாஜி பத்மினி நடிப்புலே தொடர்ந்து வெளியான 5 படங்களும் 100 நாள் ஓடுன சாதனை இருக்கு.
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தூக்குத்தூக்கி எதிர்பாராதது காவேரி மங்கையர் திலகம்.
இதே சாதனை சிவாஜி  கே ஆர் விஜயா நடிச்ச படங்களுக்கும் இருக்கு.
ராமன் எத்தனை ராமனடி சொர்க்கம் தவப்புதல்வன் பாரதவிலாஸ் தங்கபதக்கம்.

சிவாஜியின் 200 வது படம் திரிசூலம்.கே ஆர் .விஜயாவின் 200 வது படம் படிக்காத பண்ணையார்.



பத்மினி கே ஆர் விஜயா நடிச்ச படங்கள்லே பல சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கு. இதுலே ஓரளவு சொல்லி இருக்கேன்.ஆரம்ப கால சிவாஜி படங்கள் பத்மினிக்கு சிறப்பா அமைஞ்சிருக்கு. பிற்கால படங்கள் கே ஆர் விஜயாவுக்கு சிறப்பா  அமைஞ்சிருக்கு.

செந்தில்வேல் சிவராஜ்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்