1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி லதாமங்கேஷ்கர்

இந்தியாவுலேயே சினிமா நடிப்புலே மிக உயர்ந்த இடத்துலே இருக்கற ஒரு நடிகரும் இந்தியாவிலேயே மிக உயர்ந்த பெண் பாடகியும் எந்த வித ரத்த பந்த சம்பந்தமும் இல்லாமே சிறந்த அண்ணன் தங்கையா இருந்த உறவை சொல்ல வர்றப்போ சிவாஜி லதா மங்கேஷ்கர் உறவுதான் எல்லாருக்கும் தெரியும்.

இவங்களோட  பிரெண்ட்ஷிப் ஆரம்பிச்சதே ஒரு சினிமா மாதிரியான இன்ட்ரெஸ்டிங் விஷயம்தான்.
சிவாஜி சொந்தமா உருவாக்குன  சினிமா பட கம்பெனி சிவாஜி புரொடொக்சன்ஸ்..தமிழ்லே பெரிய வெற்றி அடைஞ்ச அமரதீபம் படத்தை இந்திலே சிவாஜி புரொடொக்சன்ஸ்  தயாரிச்சது.1958 ஆம் வருஷம் அமரதீபம் 'அமர்தீப்'பேருலே ரிலீசாச்சு.
தேவானந்த்,வைஜெயந்திமாலா  பத்மினி ராகினி பிரான் நடிச்சாங்க.இந்திலே திரைக்கதை அமைச்சு டைரக்சன் பண்ணியவர் T.பிரகாஷ் ராவ்.
இந்த படத்துலே பாட்டுகளை பாடுனவங்க லதா மங்கேஷ்கர் ,ஆஷாபோன்ஸ்லே
சிவாஜி சொந்தமா தயாரிச்ச
இந்த படத்துலே லதாமங்கேஷ்கர் பாடியிருந்தாலும் சிவாஜிக்கும் லதா மங்கேஷ்கருக்கும் எந்த சந்திப்பும் நடக்கலே.ரெண்டு பேரும் நேரிடையா பாத்ததும் இல்லே.

இந்த படம் வெளியாகி மூணு வருஷம் கழிச்சு சிவாஜியோட பாவ மன்னிப்பு வெளியாகி சென்னையிலே ஓடிட்டு இருந்துச்சு. அந்த சமயம் சென்னைக்கு வந்திருந்தாங்க ஆஷா போன்ஸ்லே .
ஆஷா பாவமன்னிப்பு படத்தை தற்செயலா பார்க்க வாய்ப்பு வந்துச்சு.
பாம்பேக்கு திரும்பி போன ஆஷா அவங்க குடும்பத்தார்கிட்டே பாவமன்னிப்பு படத்தை சொல்லி இருக்காங்க.
லதாமங்கேஷ்கர் குடும்பம்  பாவமன்னிப்பு பாக்க விருப்பப்பட்டாங்க.

 அரோரா தியேட்டரில (வடக்கு மத்திய மும்பையின் கிங்ஸ் சர்க்கிளில்) பாவ மன்னிப்பு பார்த்தாங்க. . அவங்க  பார்த்த முதல் தமிழ் படம் அதுதான்.

 ​​யாருக்கும் தமிழில் ஒரு வார்த்தை கூடப் புரியலைன்னாலும்  எல்லாரும்  அழற நிலைமையிலே தான் படம் பாத்தாங்க. (சிவாஜி கணேசன்) தங்களோட அப்பா தினாநாத் மங்கேஷ்கரை ஞாபகப்படுத்தற மாதிரி அவங்க உணர்ச்சி இருந்துச்சு.

பாவமன்னிப்பு படம் லதாவோட குடும்பத்தை ரொம்பவே பாதிச்சது. அந்த பாதிப்பு சிவாஜியை உடனடியாக நேரிலே சந்திச்சு பேசணும்ங்கற நிலைமையிலே அவங்க உணர்வு இருந்துச்சு.

சிவாஜியை எப்படி மீட் பண்றது .யார் மூலமா கான்டாக்ட் பண்ணனும்னு நெனச்சப்போ பாம்பேலே இருந்த HMV இசை கம்பெனி ஞாபகம் வர,அவங்க மூலமா சிவாஜியை பாக்க சென்னைக்கு வந்தாங்க.

அன்னை இல்லத்துக்கு வந்தது லதா மங்கேஷ்கர் குடும்பம்.சிவாஜியை பாத்ததும் கட்டிப் பிடிச்சு அழ ஆரம்பிச்சுட்டாங்க.சிவாஜிக்கு ராக்கி கட்டி சந்தோசப்பட்டாங்க.இதுதான் சிவாஜி லதா குடும்பமும் சந்திச்ச முதல் சந்திப்பு.அந்த முதல் சந்திப்புலே இருந்த பாச உணர்வு கடைசி வரை மாறலே.சிவாஜியை அண்ணான்னும் கமலாம்மாவை அண்ணின்னும் தான் கூப்பிடுவாங்க.

1968 ஆம் வருசம் சிவாஜி மகள் சாந்தி கல்யாணத்துலே கலந்துகிட்டாங்க. ரொம்ப ஜாலி மூடுலே லதாவை சிவாஜி குனிஞ்சு கும்பிட்டு போட்டு வரவேற்பு கொடுத்தார்.

1978 லே திரிசூலம் படத்தோட சூட்டிங் மும்பைலே நடந்துச்சு.சூட்டிங் ஸ்பாட்டுக்கு லதா மங்கேஷ்கரும் குடும்பத்தாரும் அடிக்கடி வந்து பார்ப்பாங்க. அதே போலே ஷுட்டிங் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு சிவாஜி போவார்.

சிவாஜிகிட்டே லதாவும் மத்தவங்களும் ஹிந்தி மராத்திலே பேசுவாங்க.சிவாஜி தனக்கு தெரிஞ்ச உடைஞ்ச  ஹிந்தி பாஷையிலே பேசுவார்.
சிவாஜி சகஜமா பேசறதும் காமெடியா பேசறதும் மங்கேஷ்கர் குடும்பத்துக்கு ரொம்ப பிடிக்கும்.

சிவாஜியாச்சும் உடைஞ்ச இந்திலே பேசுவார் .அவருடைய மனைவி கமலாம்மாவுக்கு ஆங்கிலம் இந்தியெல்லாம் தெரியாது.ஆனாலும் லதாவும் ஆஷாவும் மணிக்கணக்குலே சிரிச்சுப் பேசிக்குவாங்க.ஒரு பாச உணர்வுதான் அவங்களை அவங்க கிட்டே இந்தளவு நெருக்கத்தை கொண்டு வந்துச்சு.

கலாம்மா தமிழ்லே பேசுனாலும் அதை லதா புரிஞ்சுக்குவாங்க.
அதே  போலத்தான் லதாவோட இந்தியும் கமலாம்மா புரிஞ்சுக்கற தன்மையும்.

ஒரு தடவை ரேடியோல பி. சுசீலாவோட " அத்தான் என்னதான்" பாட்டு ஒலிச்சுக்கிட்டிருந்தது .சிவாஜி அப்படிப் பாட  முடியுமான்னு  கேட்டார். லதாமங்கேஷ்கர்  மௌனமா இருந்தாங்க.

ஆறு மாதம் கழிச்சு சிவாஜி மும்பைக்கு போன போது லதாஜி அவரை வீட்டிற்கு வரச் சொன்னார், அவர் ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல போறார்னு சிவாஜி நெனச்சார். 
லதா ஆஷா ரெண்டு பேரும் அந்தான் என்னத்தான் பாட்டை சிவாஜிக்கு பாடிக் காட்டுனாங்க.

சிவாஜி  பி. சுசீலாவைப் போல நல்லா  பாட முடியுமான்னு கேட்டதால அவங்க தமிழில் பாடி காமிச்சாங்க .சிவாஜி ஆச்சர்யமா சிரிச்சுகிட்டே உங்களாலே முடியும் ,உங்களோட குரல் பெரிய விஷயம் ,ஆனாலும் அன்னைக்கு நான் கிண்டலுக்காகத்தான் அப்படிக் கேட்டேன்னு சொன்னார்.

லதா மங்கேஷ்கர் பி. சுசீலாவை இந்தியாவிலே  மிகச்சிறந்த பாடகிகள்லே  ஒருத்தரா மதிப்பு வெச்சிருக்காங்க.

சிவாஜியின் மகன்களான ராம்குமார் பிரபு மேலே அதிக ப்ரியம்.ராகுமாரை தான் நடிகனா வருவார்னு லதா அடிக்கடி சொல்வாங்க.ஆனா அப்படி நடக்கலே.இருந்தாலும் ராம்குமார் நடிகனாயிருக்கணும் என்பது லதாவின் விருப்பம்.

சிவாஜி குடும்பத்துலே நடந்த எல்லா திருமணத்துக்கும் லதா குடும்பம் வந்திருக்கு. அவங்க வராமே போனது ராம்குமார் திருமணத்துக்குத்தான்.அதுக்கு  காரணம் 
அது ஒரு விபத்து ஏற்பட்டு அவர்களின் சகோதரர் ஹிருதயநாத்ஜி மற்றும் அவரது மனைவி பாரதிஜி காயமடைந்ததாலே வராமே போனது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆஷாஜியும் லதாஜியும் வந்து வாழ்த்து தெரிவிச்சு பரிசு கொடுத்தாங்க.

சிவாஜி லதா குடும்பங்கள் ஒருபோதும் தவறவிடாத ஒரு பண்டிகை தீபாவளி. இங்கிருந்து துணி எடுத்து லதாகுடும்பத்துக்கு சிவாஜி குடும்பம் அனுப்பும் .அதேபோலே லதாவோட குடும்பமும் செய்யும்.
இந்த பாரம்பரியம் 1960-1961 இல் தொடங்கி அவங்க இருக்கறவரை நடந்த விஷயம்.
ஒரு தீபாவளியும் தவறுனது இல்லே.

ராம்குமாருக்கு இரட்டை குழந்தைகள்.
ஒரு தடவை அந்த  இரட்டைக் குழந்தைகள் கேட்டபோது அவர்களுக்காக மைனே பியார் கியா பாடலைப் பாடினார். அதை பாத்த சிவாஜி லதாவை  கேலி செஞ்சு , 'நீ எனக்காக ஒரு பாடலும் பாடியதில்லை. நீ என் என் பேரக்குழந்தைகளுக்குப் பாடுகிறாய்?'னு  என்று கேட்டார்.லதாகிட்டே இருந்து ஒரு புன்னகை தான் பதிலா வந்தது.

எதோ ஒரு சந்தர்ப்பம் வாய்ப்பு பாவ மன்னிப்பு படம் பாத்து வந்து சேர்ந்த நட்பு இது. இது ஒரு ஆச்சர்யமான விஷயமா இருக்குது. எவ்வளவு பெரிய நட்பை உருவாக்கியிருக்கு.

சிவாஜி லதாமங்கேஷ்கர் நட்பானது கடைசி வரை மாறாத ஓர் உன்னத நட்பாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்