1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

காசிக்கு போன சிவாஜி

இப்ப நீங்க பாக்கற இந்த போட்டோ ஓரு அபூர்வமான போட்டோ. 
1998 ஆம் வருசம் எடுத்த இந்த போட்டோவை 2002 ஆம் வருசம் வரைக்கும் இந்த போட்டோவை யாரும் பாத்திருக்க முடியாது. கிட்டத்தட்ட 4 வருசமா இந்த போட்டோ எங்க இருந்துச்சு. இந்த போட்டோ எங்க எடுக்கப்பட்டது. இந்த போட்டோவுக்கு பின்னாலே இருக்கற விஷயம் என்ன ?

சிவாஜி காலமான பின்னாலே சிவாஜி பிலிம்ஸ் ஆபீசுக்கு போனவங்க பாத்திருக்கலாம் இந்த போட்டோவை. 
எட்டடி உயரத்துலே சுவத்துலே மாட்டி வெச்சிருந்தாங்க சிவாஜி பிலிம்ஸ் ஆபீஸ்லே.

நடிகர்திலகம் கங்கை நதியிலே குளிச்சிட்டு 
ரெண்டு கையையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிடறமாதிரி ,சூரிய நமஸ்காரம் பண்ற மாதிரி 
பாக்கவே பரவசமா இருக்கற இந்த அருமையான அம்சமான சிவாஜி போட்டோ பாத்தவங்க எல்லாரையும் ஆச்சர்யமாக பாக்க வெச்சது.

நடிகர்திலகம் சிவாஜி 
இந்தியா முழுக்க போயிருக்கிறார். ஆனால் காசிக்கு போனது இல்லே.
காசிக்கு போகணும் ,அங்க 
இருக்கற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு போய் சிவனை கும்பிடணும்னு ரொம்ப நாளாவே சிவாஜிக்கு ஆசை இருந்துச்சு.

சிவாஜியோட இந்த ரொம்ப நாள் ஆசையை நிறைவேத்தி வைக்கணும்னு அவங்க குடும்பம் நெனச்சது.
சிவாஜிக்கு அப்ப உடல் நலக் குறைவு அடிக்கடி வந்துட்டு இருந்த கால கட்டம் அது. இருந்தாலும் காசிக்கு போகணும்ங்கற அந்த முக்கியமான ஆசையை நிறைவேத்த கமலாமம்மா ஆசைபட்டாங்க.

1998 ஆம் வருஷம் அக்டோபர் 9 ஆம் தேதி தான் அதுக்கு ஒரு வாய்ப்பு வந்துச்சு.

நடிகர்திலகம் கமலாம்மா ராம்குமார் மற்றும் முக்கிய குடும்ப நண்பர்கள் சேந்து காசிக்கு போனாங்க.
சிவாஜி இங்க போறதுக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கு. சிவாஜியை விருந்தாளியா கூப்பிட்டு இருந்தார் பனாரஸ் மகாராஜா.சிவாஜிக்கு நல்ல வரவேற்பு கொடுத்து அரண்மனையில் தங்க வெச்சார் பனாரஸ் மகாராஜா.

சிவாஜி கங்கையிலே குளிக்க  ஆசைப்பட்டதை தெரிஞ்ச மகாராஜா அதுக்கு சௌகரியமா ஏற்பாடு பண்ணி கொடுத்தார்.கங்கையிலே எப்பவும் அதிகப்படியான கூட்டம் இருந்துட்டே இருக்கும்.மகாராஜாவோட உத்தரவு படி அரண்மனையிலே வேலை செஞ்ச ஆட்கள் எல்லாம்  சிவாஜிக்கு பாதுகாப்பா இருந்து ஸ்நானம் செய்ய ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க.
காலையிலே 8.15 மணிக்கு 
கங்கையிலே கூட்டம் கம்மியா இருந்த இடத்துலே சிவாஜியும் குடும்பத்தாரும் ஸ்நானம் செஞ்சாங்க.

சிவாஜி ஸ்நானம் பண்ணிட்டு இருக்கார்.கங்கை நதியிலே அப்ப டூரிஸ்ட்டுக எல்லாம் படகுலே போய்ட்டு இருக்காங்க.
அந்த படகுலே இருந்த லோக்கல் போட்டோ கிராபர் இதை பாத்திருக்கார். டூரிஸ்ட்டுகளுக்காக படம் எடுக்க போனவர் ,உடனே காமிராவை எடுத்து சிவாஜி ஸ்நானம் செய்யறதை போட்டோவா எடுத்துட்டார்.
அவர் எடுத்தது யாருக்கும் தெரியாது.

ஸ்நானம் எல்லாம் முடிஞ்ச பின்னாலே சிவாஜி குடும்பத்துக்காக ஒரு விசேஷ பூஜை ஒண்ணு ஏற்பாடாகி இருந்துச்சு.
இந்த பூஜை காரியத்தை செஞ்சவர் சுவாமிமலை கிருஷ்ணமூர்த்தி ஐயர்..அவரோட வீட்டுலே நடந்த சிறப்பு பூஜையிலே சிவாஜியும் குடும்பத்தாரும் கலந்துகிட்டாங்க.

பூஜையெல்லாம் 
முடிஞ்சபின்னாலே...

காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு சிவாஜி  போனப்போ சிவாஜிக்கு தனி மரியாதை கொடுத்து வரவேற்பு கொடுத்தாங்க.அரை மணி நேரம் சிவாஜியை உக்கார வெச்சு கடவுளை பக்கத்துலே இருந்து தரிசனம் பண்ண வெச்சாங்க.

சிவலிங்கத்தின் மேலே கையை வெச்சு சிவாஜியும் குடும்பத்தாரும் தொட்டு கும்பிட்டாங்க.சிவாஜி தன்னோட கழுத்துலே போட்டிருந்த ஸ்படிக மாலையை  சிவன் மேலே வெச்சு எடுத்து ஆசாரத்தோட போட்டுக்கிட்டார்.
பிறந்த பயனை எல்லாம் நான் அடைஞ்சுட்டேன்னு சிவாஜி ரொம்ப பூரிப்போட சொன்னார்.
இதெல்லாம் 1998 அக்டோபர் மாசம் காசியிலே நடந்த விஷயம்.

2001 ...
சிவாஜி காலமான பின்னாலே அவரோட அஸ்தியை கங்கை நதியிலே கரைக்கறதுக்காக சிவாஜி மூத்த மகன் 
ராம்குமார் போனார்.
4 வருஷத்துக்கு முன்னாலே சிவாஜி காசிக்கு போனப்போ பூஜை பண்ணுன அதே சுவாமிமலை கிருஷ்ணமூர்த்தி ஐயர்தான் சிவாஜியோட இந்த அஸ்தி கரைப்பு காரியத்துக்கும்  உதவி செஞ்சார்.

அஸ்தியை கரைச்சுட்டு கிருஷ்ணமூர்த்தி ஐயர் வீட்டுக்கு ராம்குமார் போனார் .அந்த வீட்டுலே பூஜையறை பக்கத்துலே அந்த போட்டோவை பாத்ததும் ராம்குமாருக்கு இன்ப அதிர்ச்சியா இருந்துச்சு.அந்த போட்டோ வேற ஏதும் இல்லே. சிவாஜி கங்கா ஸ்நானம் செய்யற நாலு வருசத்துக்கு முன்னாலே காசிலே எடுத்த போட்டோதான் அது.சிவாஜி படத்துக்கு மாலை போட்டு வெச்சிருந்தார் ஐயர்.அந்த போட்டோவை பாத்ததும் ராம்குமாருக்கு அழுகையே வந்துருச்சு.

அப்புறம் அந்த போட்டோ ராம்குமார் தனக்கு வேணும்னு  கேக்க ,உடனே ஐயர் சிவாஜியை போட்டோ எடுத்த அந்த போட்டோகிராபரை வரவழைச்சு ,அன்னைக்கு நைட் ராம்குமார் ஊருக்கு திரும்பறதுக்குள்ளே பெரிய அளவுலே ஒரு பிரிண்ட் போட்டுத் தரச் சொன்னார்.அந்த படத்தை மிகப் பெரிய சைசுலே புளோஅப் போட்டோவா செஞ்சு அன்னைஇல்ல வீட்டு பூஜையறையிலும் சிவாஜி  பிலிம்ஸ் ஆபீசிலும் மாட்டி வெச்சார்.

காசி போகணும்ங்கற சிவாஜியோட ஆசை ரொம்ப நாளா தள்ளி போய்ட்டு இருந்தததும் 1998 லே பனாரஸ் மகாராஜாவோட கெஸ்ட்டாகவே சிவாஜி போக  நேரம் வந்ததும் அந்த சமயத்துலே எடுத்த இந்த போட்டோ சிவாஜிக்கும் அவங்க குடும்பத்துக்கும் தெரியாமே இருந்ததும் ,நாலு வருஷம் கழிச்சு அந்த போட்டோ சிவாஜியோட அன்னை இல்லத்துக்கு வர நேர்ந்ததும் ஒரு ஆச்சர்யமான விஷயம்தான்.சிவாஜி 
ஒரு மகான் மாதிரி தோற்றமளிக்கற இந்த போட்டோவுக்கு பின்னாலே இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கு....

செந்தில்வேல் சிவராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்