1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

பாபு - கை ரிக்சா

ஒரு படம் எடுத்தா இப்படி எடுக்கணும். ஒரு சமூக அவல பிரச்சினையையே தீத்து வெச்ச படம்.சினிமாவை ஏனோதானான்னு எடுக்கறவங்க இந்த படத்தை கண்டிப்பா பாக்கணும்.
அப்படி என்ன படம் ? என்ன சமூக அவலத்தை ஒழிச்சு கட்டுச்சு? 

அந்த காலத்துலே மெட்ராஸ் பட்டணத்துலே கை ரிக்ஷா ரொம்ப அதிகம் .டிராவல் பண்றதுக்கு செலவு கம்மியா இருந்த விஷயம்.பக்கமா போய்ட்டு வர்றதுக்கு சுலபமா கிடைச்ச டிரான்ஸ்போர்ட் அதுதான்.
மெட்ராஸ்லே மக்கள் அதிகமா இருக்கற இடங்கள்லே எல்லாம் இந்த கை ரிக்ஷா வண்டிகள் நிறைய இருக்கும். இன்னைக்கு ஆட்டோ ஸ்டாண்ட் மாதிரி கை ரிக்ஷா ஸ்டாண்ட் எல்லா இடத்துலயும் இருந்துச்சு.
தனியாளா மட்டுமல்ல ஒரு குடும்பமே டிராவல் பண்ண சௌகரியமா இருந்தது  கை ரிக்ஷா .
இதுலே என்ன கொடுமைன்னா கை ரிக்ஷாவை ஒரு மனுசன் இழுத்துட்டு போறதுதான்.மாஞ்சு மாஞ்சு வெயில் மழைன்னு பாக்காமே இழுத்துட்டு ஓடணும்.இதுலே நிறைய கை ரிக்ஷா தொழிலாளிகள் செருப்பே போட மாட்டாங்க. ஓட்டமா ஓடி ஓடி அடுத்த சவாரிக்காக வெயிட் பண்ணுவாங்க.அப்படி கஷ்டப்பட்டாத்தான் அவங்க குடும்பத்து வயிறு நிறையும்.

பாபு படத்துலே பாலாஜி பேசற மாதிரி ஒரு வசனம் வரும். என்ன இது ? ஒரு மனுசனை ஒரு மனுசனே இழுத்துட்டு போறாதான்னு கேப்பார்.
அது சாதாரண வசனம் இல்லே .கை ரிக்ஷா தொழிலாளிகளோட அவலத்தை கஷ்டத்தை சொன்ன வசனம்.
வெள்ளைக்காரன் காலத்துலே இருந்து இந்த கை ரிக்ஷா தொழில் ஜம்முன்னு நடந்துட்டுதான் இருந்துச்சு.
சுதந்திரம் அடைஞ்சு பல வருஷம் ஆகியும் ,பல அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சி  செஞ்சும் யாரோட கவனத்துக்கும் இது வராமே போனதுதான் கொடுமையான விஷயம்.
மனுசனே மனுசனே இழுத்துட்டு போற இந்த கை ரிக்ஷா தொழிலுக்கு ஒரு மாற்றமே இல்லையா.எப்பத்தான் 
இதுக்கு விடிவுகாலம் ? ஒரு மாட்டோட வேலையைத்தான் ஒரு கை ரிக்ஷா தொழிலாளி செஞ்சுட்டு இருந்தான்.
மாடா உழைச்ச மனுசன  ஒரு மனுச தொழிலாளியா மாத்துனது எப்போ ?

அதுக்கு முன்னாலே ஒரு சின்ன வரலாறு..
கேரளாவுலே கேசவதேவ்னு ஒரு மலையாள எழுத்தாளர் இருந்தார்.1942 ஆம் வருஷம் அவர்  எழுதுன ஒரு நாவல்தான் ஓடையில் நின்னு. இதுக்கு என்ன அர்த்தம்னா சாக்கடையில் இருந்துன்னு அர்த்தம் .
இந்த மலையாள நாவலை இயக்குனர் சேது மாதவன் திரைப்படமா எடுத்தார்.சத்யன் பிரேம் நஸீர் கே ஆர் விஜயா நடிச்சாங்க. இந்த படத்துலேதான்  நடிகர் சுரேஷ்கோபி கூட அறிமுகம் ஆனார்.பெரிய பேரும் புகழும் வாங்கி கொடுத்துச்சு படம்.இந்த திரைப்படம் வெளிவந்த வருஷம் 1965.

தமிழ்சினிமாவுலே படிச்ச டைரக்டர், வித்தியாசமான சிந்தனைகள் நிறைஞ்சவர் AC.திருலோகசந்தர்.
இவரோட பார்வைக்கு வந்த படம் தான் இந்த ஓடையில் நின்னு. படத்தோட கான்செப்ட் திருலோக்கை உலுக்கிருச்சு.
அந்த ஹீரோ கேரக்டர் திருலோக்கை ரொம்பவே பாதிச்சது.
அந்த படத்தை கண்டிப்பா தமிழ்லே எடுக்கணும்னு முடிவு பண்ணினார் திருலோக்.தமிழ்லே இந்த மாதிரி சப்ஜெக்ட்டை எல்லாம் சில சமயம் ரசிகர்கள் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க.
தயாரிப்பாளர்கள் கூட பணம் போட்டு படம் எடுக்க ரிஸ்க் எடுக்க விருப்பட மாட்டாங்க.
அதனாலேய திருலோகசந்தர் எடுத்த ரிஸ்க்தான் பாபு படம்.தன்னோட சினிபாரத் புரொடொக்சன் சார்பாவே படத்தை தயாரிச்சார்.

ஒரு கை ரிக்ஷா  தொழிலாளி படற கஷ்டத்தை இந்த படம் சொன்ன அளவுக்கு வேற படம் இல்லேன்னுதான் சொல்லணும். கை ரிக்ஷா தொழிலாளியா சிவாஜி வாழ்ந்து காட்டுன படம் பாபு.
சும்மா ஒப்புக்கு வந்துட்டு போயிடலை. பல பிராக்டிஸ் செயல்பாடுகளை செஞ்சு பாத்துட்டுதான் செஞ்சிருந்தார் சிவாஜி.
ஒரு பாலத்துலே சிவாஜி அடிச்சு பிடிச்சு வேகமா ரிக்ஷா ஓட்டிட்டு வர்ற மாதிரியான ஒரு காட்சிலே ரொம்ப வெயில்லே கை ரிக்ஷா இழுத்து நடிச்சார். நெஞ்சு வலிக்க சிவாஜி உக்காந்துட்டார்.இயக்குனர் திருலோக் பதட்டமாயிட்டார்.இந்த வேலை பழக்கம் இல்லே.அதனாலே கொஞ்சம் சிரமமாயிடுச்சு.
.ஒண்ணும் பிரச்சின இல்லேன்னு சொன்னாராம் சிவாஜி.

நாள் முழுக்க கை ரிக்ஷா இழுக்கற தொழிலாளிகளை நெனச்சுப் பாருங்க. சமூகத்துலே மேலோட்டமா பாத்துட்டு போயிடற விஷயம்தான்.மனசு வெச்சு சிந்திக்கறப்போதான் சில வலிகளை புரிஞ்சுக்க முடியும்.

பாபு  படத்துலே சிவாஜி உழைச்ச உழைப்பு பத்து பட உழைப்புக்கு சமம் ஆகும்.
கை ரிக்ஷா தொழிலாளிகளோட  உழைப்பையும் வேதனையையும் நல்லா உணர வெச்ச படம் பாபு.

சென்னைலே படிக்காத பாமரர்களோட நிரந்தர வேலை வாய்ப்பு வருமானம் எல்லாம் இந்த கை ரிக்ஷா தொழிலும் கொடுத்துட்டு வந்துச்சு. ஆனா அதே சமயம் மாடு இருக்கற இடத்துலே மனுசனை நெனச்சுப் பாத்தா அது எவ்வளவு வேதனையான விஷயம்.மாடு இழுக்கறது கூட தப்புதான்.அந்த மாட்டோட பலம் கூட இல்லாத மனுசன் கை ரிக்ஷா இழுக்கறது ஒரு சமூக அவல நிலைதானே! 

சென்னையிலும் கடலூரிலும் 2000 க்கும் அதிகமான கை ரிக்ஷா ஓடிட்டு இருந்துச்சு. சென்னை நகரத்துலே ஒரு பலமான மனுசனை உக்கார வெச்சு நோஞ்சான் உடம்பு தொழிலாளி இழுத்துட்டு போற காட்சிகளை எல்லாம் பாக்கறது சர்வசாதாரணமான விஷயம்.கேவலமான பேச்சுகளுக்கு எல்லாம் ஆளாவதுண்டு.

1973 லே இருந்த தமிழக அரசு இந்த கை ரிக்ஷா தொழிலை ஒழிக்க முன் வந்துச்சு.அரசாங்கம் இதற்கு ஒரு ஏற்பாட்டை செஞ்சது. 
கை ரிக்ஷா தொழிலாளிகள் எல்லாம் தங்களோட கை ரிக்சாக்களை ஒப்படைச்சுட்டு புதிய மூணு சக்கர சைக்கிள் ரிக்சாக்களை வாங்கிட்டு போனாங்க.

இந்த நிகழ்வு ராஜாஜி மண்டபத்துலே நடந்துச்சு.பெரிய கூட்டமா வந்து அவங்க கலந்துகிட்டது ஒரு வரலாற்று நெகிழ்வான சம்பவமாகும்.தமிழ்நாட்டு முதலைமைச்சரா இருந்த கருணாநிதி இந்த கை ரிக்ஷாவை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நினைவுப் பொருளா வெச்சார்.
கை ரிக்ஷாவுக்கு பதிலா மூணு சக்கர கை ரிக்ஷா அதிகம் வந்தது அதுக்கு பின்னாலேதான்.

சில விஷயங்கள்லே நெஜமா எந்த சம்பவத்தை பாத்தாலும் அந்த நிகழ்வை விட சினிமாங்கற சலனப்படம் விளைவிக்கற பாதிப்பு அதிகம். பாபு படத்தை பாத்தவங்களுக்கு அதோட தாக்கம் இல்லாமே இருக்காது. 
கை ரிக்ஷா ஒழிப்புக்கு மறைமுகமா பாபு படம் விளைவிச்ச  ஒரு பாதிப்பும் காரணமா இருந்திருக்கலாம்.

மனுசனை மனுசனே இழுக்கறதாங்கற அந்த ஒரு வரி வசனம் சாதாரணமான ஒண்ணு இல்லே. அதுக்கு பின்னாலே நிஜமாவே ஒரு வரலாறு இருக்குது.

ஒரு படம் எடுத்தா இந்த மாதிரி தான் எடுக்கணும்னு ஆரம்பத்துலே சொன்னதுக்கு காரணம் இதுதான்...

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்