1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி பற்றி பிரபு

அப்பா கூட  ஓரே வீட்டுலே இருந்தாலும் அவரை சந்திச்சு பேசறதே மாசத்துக்கு ஒரு தடவைதான்.அப்படி இருந்துச்சு எங்க சின்ன வயசு வாழ்க்கை. அந்தளவுக்கு அப்பா பிஸியா இருந்தார்னு இளையதிலகம் பிரபு அடிக்கடி சொல்வார். தன்னுடைய மகன்களிம் கூட மனம் விட்டுப் பேச முடியாத பிஸி நிலையிலேதான் சிவாஜி லைப்பும் அமைஞ்சு இருந்துச்சு.
இளையதிலகம் பிரபு தன்னோட குடும்பம் ,சித்தப்பா சண்முகம் ,பெங்களூர் ஸ்கூல் படிப்பு வாழ்க்கையை பத்தி  சொன்ன விஷயங்கள் ரொம்ப ஆச்சர்யமா , சுவராஸ்யமா இருக்கும்.
அது பத்தின சில இன்ட்ரெஸ்டிங்கான சில தகவல்களை இந்த பதிவுலே பாக்கலாம்.

இளையதிலகம் பிரபு பெங்களூர் பிஷப் காட்டன் ஸ்கூல்லே படிச்ச விஷயம் பல பேருக்கு தெரிஞ்சிருக்கலாம். பிரபு மட்டுமல்ல சிவாஜி 
குடும்பத்துலே இருந்து 12 பேர் இந்த ஸ்கூல்லே தான் படிச்சாங்க. சிவாஜி மகன்கள் ராம்குமார் பிரபு சிவாஜி தம்பி மகன்கள் அண்ணன் தங்கவேலு பிள்ளைகள் எல்லாம் பெங்களூர்லேதான் படிச்சாங்க.
அந்த நேரத்துலே எல்லாம் சிவாஜி ரொம்ப பிஸியா இருந்த நேரம்.பிள்ளைகள் சிவாஜியை சந்திச்சு பேசறது ரொம்ப அரிய விஷயமா இருந்தது.

பிள்ளைகளை பாக்க எப்போதாவது தான் சிவாஜி போவார்.சிவாஜி ஸ்கூலுக்கு போனா ஸ்கூலே அமர்க்களப்பட்டுடும்.ஒரு தேவதூதனை பாக்கற மாதிரி பெரிய கூட்டம் சேந்து ரொம்ப பரபரப்பா இருக்கும்னு பிரபுவே சொல்லியிருக்கார்.
இது பத்தி மேலும் பிரபு சொன்னது :
அப்பா ரொம்ப ஸ்டைலா இருப்பார்.அவர் நடந்து வர்ற அழகு ,அந்த அங்க அசைவுகளை ,அவரையே ரசிச்சு பார்க்கறதுக்குன்னே மாணவர்கள் எல்லாம் கூட்டமா திரண்டு வருவாங்க.
அப்போ கேரளாவைச் சேந்த பல மாணவர்கள் பிஷப் காட்டன் ஸ்கூல்லே படிச்சுட்டு இருந்தாங்க.சிவாஜி ரசிகர்கள் சிவாஜி வந்திருக்கார்னா ரொம்ப ஆர்வத்தோட ஓடி வந்து பாப்பாங்களாம்.

இதுக்கும் சிவாஜி நைட் பத்து மணிக்கு மேலேதான் போவார்.அப்படி வந்தாலும் இந்த களேபரம்தான் .சிவாஜிக்கு கை கொடுக்க பிரபுவே ரொம்ப ஆர்வமா இருப்பாராம்.

சித்தப்பா சண்முகத்தோட ரொம்ப அன்னியோன்யமா பழகுனாலும் ,  பிள்ளைகளை பெங்களூர்லே பாத்துக்கற பொறுப்பை பாத்துகிட்டவர் அவங்க மாமா வேணுகோபால்தான். இவர் சிவாஜியோட தங்கை பத்மாவதி கணவர். பின்னாலே சாந்தி தியேட்டர் நிர்வாகத்தை கவனிசுக்கிட்டவர் இவர்தான்.
வேணுகோபால் மிலிட்டரியில் வேலை செஞ்சவர் .ரொம்ப கட்டுப்பாடான மனுசர்.அதனாலேதான் பிள்ளைகளை பாத்துக்கற பொறுப்பை ஒப்படைச்சார் சிவாஜியும் தம்பி சண்முகமும்.

சித்தப்பா சண்முகம் அன்னை இல்ல குடும்ப நிர்வாக பொறுப்பு ,சிவாஜி கால்ஷீட் ,சிவாஜி பிலிம்ஸ் பட வேலைகள் எல்லாம் கவனிச்சுக்கிட்டார்.
அன்னை இல்ல 
நிர்வாகப் பொறுப்பு முழுதும் அவர் பாத்துகிட்டார்.

பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்து போடுவது எல்லாம் மாமா வேணுகோபால்தான்.பிரபு மூணாம் கிளாஸ் படிக்கும் போது ஒரு முறை புரோகிரஸ் ரிப்போர்ட்டில் மாமா வேணுகோபாலை போலவே கையெழுத்து போட்டு மாட்டிக் கொண்டார்.
இந்த விஷயம் சிவாஜிக்கு தெரிய வர , ரொம்ப கோபம் வந்து ,ஏண்டா மூணாம் கிளாசிலேயே திருட்டுத்தனமான்னு கேட்டு பிரெம்பெடுத்து ரெண்டு சாத்து சாத்திட்டார் சிவாஜி.அதுதான் பிரபுவை சிவாஜி அடித்த முதலும் கடைசியுமான அடி.

பிரபு சின்ன வயசுலே இருந்தே விளையாட்டுலே ஆர்வம் கொண்டவர் .ஜாவ்லின் த்ரோ விளையாட்டு நல்லா விளையாடுவார்.ஸ்கூல்லே
நடந்த ஒரு ஸ்போர்ட்ஸ் டேக்கு சிவாஜியும் பாக்க போனார்.அப்ப நடந்த போட்டிலே பிரபு ஜாவ்லின் த்ரோ போட்டிலே முதலிடம் பிடிச்சார்.
பிரபு நல்ல அத்லெட்டா இருக்கார்னு தெரிஞ்ச சிவாஜி
'இவன் ஒலிம்பிக்லே ஜாவ்லின் போடணும் னு'சிவாஜி தன்னோட விருப்பத்தை சொல்லி இருக்கிறார்.ஆனாலும் ஸ்டேட் லெவல்லே நடந்த போட்டிகளில் பிரபு கலந்திருக்கிறார்.

குழந்தைகளோட பேசி பழகுற வாய்ப்பு சிவாஜிக்கு கம்மியா  இருந்ததாலே,சம்மர் லீவு வந்தா சிவாஜி ஊட்டி கொடைக்கானல் ஷுட்டிங் போனா அங்க பிள்ளைகளை கூட்டிட்டு வரச் சொல்லிடுவார்.
அங்க போனாலும் ஷீட்டிங் பிஸிலே அவங்க சிவாஜி கூட நெருங்கிப் பழகற வாய்ப்பு அதிகமா அமைஞ்சதில்லே.
ஒரு தவிர்க்க முடியாத பிசி சூழ்நிலை சிவாஜிக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலே ஒரு பெருஞ்சுவரை உண்டாக்கிருச்சு.
அதனாலே சிவாஜி பல அடிப்படை விஷயங்களை மிஸ் பண்ணினார் .

அந்த காலத்துலே குழந்தைகளோட பக்கத்துலே இருந்து சந்தோசமா பொழுதை கழிக்கற வாய்ப்பு இல்லாமே போய்ட்டதா பின்னாட்கள்லே சிவாஜிநெனச்சு வருத்தப்பட்டதுண்டு.அதனாலேதான் பிற்காலத்துலே ஒரு பிரதர் மாதிரி சிவாஜி பிள்ளைக கிட்டே நடந்துகிட்டார்.

சிவாஜிக்கு இருந்த அதே சங்கட வாழ்க்கை மாதிரிதான் பிரபுவுக்கும்  திரைப்பட வாழ்க்கை அமைஞ்சது பின்னாலே.
என்னோட குழந்தைகளோட என்னாலே சந்தோசமா கழிக்க முடியலே ,அவுட்டோர்னு போனா ஒரு மாசம் ஒண்ணரை மாசம் ஆகுது .திரும்ப வீட்டுக்கு வர்றதுக்கு.அவங்க லைப்புலே நாமும் கலந்து இருக்க முடியாத வருத்தம் பிரபுவுக்கும்  இருந்தது.

இன்னைக்கு இருக்கற ஸ்கூல் படிக்கற மாணவர்களுக்கு பாடச்சுமை ரொம்ப அதிகமா இருக்குது.இப்படி பாடச் சுமையாலே கனத்து போய் இருக்கற குழந்தைகளுக்கு ஒரு பாச அரவைணைப்பு ,
சந்தோசத்தை ஒரு பெற்றோர்களாலே தான் தர முடியும். 
அதனாலே சென்னைலே இருந்தா முடிஞ்சவரை தன் குழந்தைகள் பக்கத்துலே இருப்பார் பிரபு.
குழந்தைகளோட நேரத்தை கழிக்க 
சிவாஜி பிரபுவுக்குபண்ணுன ஒரு அட்வைஸ் இது..

பிரபுவை விட அவருடடைய பிள்ளைகள் சிவாஜியோட பேசி பழகுற வாய்ப்பு அதிகமா இருந்துச்சு.ராம்குமார் மகன் துஷ்யந்த் பிரபு மகன்விக்ரம் பிரபு மகள் ஐஸ்வர்யா இவங்க கூட தான் சிவாஜியின் பிற்கால வாழ்க்கை சந்தோசமாக சென்றது.

அன்று மகன்கள் கிட்டே காட்ட முடியாத பாசத்தை பேரக்குழந்தைகளிடம் காட்டினார் சிவாஜி .இது அவருடைய கடைசி கால சந்தோச நாட்கள்னு சொல்லலாம்.
செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்