1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

யாகவா -ஞானப்பறவை

1991 ஆம் வருசம் வெளிவந்த படம் ஞானப்பறவை.வியட்நாம் வீடுசுந்தரம் டைரக்சன் செஞ்ச இரண்டாவது சிவாஜி படம்.
சுந்தரம் சினிமா பீல்டுக்கு எப்படி வந்தார்?
அவரோட பூர்வீகம் பூண்டி. பூண்டி சர்ச்சுலே இருந்த பாதிரியார் சுந்தரத்துக்கு பழக்கம்.
சுந்தரத்துகிட்டே ஒரு திறமையிருக்குன்னு தெரிஞ்ச பூண்டி மாதா கோயில் பாதிரியார் நீ சென்னைக்கு போ  அங்க உனக்கு நல்ல எதிர்காலம் அமையும்னு ஆசி கூறி அனுப்பி வெச்சார்.சென்னைக்கு வந்த சுந்தரம் நாடகங்களுக்கு கதை வசனம் எழுதினார். வித்தியாசமான வசன நடை அவருக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்துச்சு. 
தனக்கு ஆசி கூறி அனுப்பி வெச்ச பூண்டி மாதா பாதிரியாரை மையமா வெச்சு ஒரு கதை எழுதினார்.கதையோட வித்தியாசத்துக்காக ஆண்டனிங்கற முரட்டு கேரக்டர் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் கேரக்டரை எல்லாம் வெச்சு ரொம்ப டிபரண்டா கதையை ரெடி பண்ணிட்டார். அது முதல்லே நாடகமா நடந்துச்சு. மேஜர் ஹீரோவா நடிச்சார். அந்த நாடகத்தை சிவாஜி பார்த்தார்.சினிமாவா எடுக்க சிவாஜி சொன்னார்.
அதுப்படியே ஞானஒளி சினிமாவா ரெடி ஆகி பெரிய ஹிட் ஆச்சு. அப்புறம் 
சிவாஜிக்கு வியட்நாம் வீடு செஞ்சார் சுந்தரம் .சிவாஜியோட செல்லப்பிள்ளையா ஆனார் வியட்நாம் வீடுசுந்தரம். 
அப்புறம் கௌரவம் படத்தை டைரக்சன் செஞ்சு மிரள வெச்சார்.

அதிகமா டைரக்சன் பண்ணலே சுந்தரம். கதை வசனம் மட்டும் ரொம்ப எழுதினார்.
என்னோட வாழ்க்கைலே ஒவ்வொரு காலகட்டத்துலே என்னை வழி நடத்த ஒரு ஞானி வருவார்.அப்படி கிடைச்ச ஞானிதான் பூண்டி பாதிரியார்.அதே மாதிரி 1991 லேயும் ஒருத்தர் வந்தார் .அவர்தான் யாகவா முனிவர்.இவர் சென்னை மேடவாக்கத்துலே வாழ்ந்தவர்.அந்த கால கட்டத்துலே பரபரப்பா பேசப்பட்டவர்.
யா'ன்னா காத்து
'க'ன்னா நீர்
'வா'ன்னா நட்சத்திரம் ..
இந்த மூணோட கலவையே யாகவா .யாகவா இல்லைன்னா இந்த பிரபஞ்சம் இல்லைன்னு அர்த்தம்.
யாகவா முனிவரோட பழகற வாய்ப்பு சுந்தரத்துக்கு அமைஞ்சது. பூண்டி பாதிரியாரை வெச்சு ஞான ஒளி எடுத்த மாதிரி ,இந்த யாகவா முனிவரை வெச்சு ஒரு படம் எடுக்கலாம்னு முடிவுக்கு வந்தார் சுந்தரம்.

யாகவா முனிவர்கிட்ட ஆசி வாங்கி அவரை மையமா வெச்சு ஞானப்பறவைன்னு படம் எடுக்க முடிவெடுத்தார்.
இந்த கதைலே யாரை நடிக்க வெக்கலாம்னு குழப்பத்துலே இருந்தார் சுந்தரம்.சிவாஜி இருக்கும் போது இப்படி அவர் குழப்பமடைய காரணம் இருக்கு. சிவாஜிக்கு அந்த நேரத்துலே உடல்நிலை அடிக்கடி சரியில்லாமே இருந்ததாலே இந்த படத்துலே நடிக்கறதுக்கு அவங்க குடும்பத்தார் சம்மதிக்க மாட்டாங்கன்னு நெனச்சுட்டு இருந்தார் சுந்தரம். யாகவா முனிவர் சிவாஜி கண்டிப்பா இதுலே நடிப்பார். இது நடக்கும் .போய் பேசி பாருன்னு சொல்லியிருக்கார்.

சிவாஜி அப்போ தஞ்சாவூர் பண்ணை வீட்டுலே இருந்தார்.சுந்தரமும் அவருடைய மனைவியும் சிவாஜியை பாத்து விஷயத்தை சொன்னாங்க.நீங்க கண்டிப்பா நடிக்கணும்னு கேட்டார்.
சுந்தரத்துக்கு  படம் பண்ணித்தர மகிழ்ச்சியோட ஒப்புக்கிட்டார் சிவாஜி.
உடம்புக்கு சரியில்லாமே இருந்தாலும் ,டாக்டர்களை எல்லாம் சமாளிச்சு ,ஏதாவது சொல்லி,நைட் 8 மணி வரை எல்லாம் நடிச்சுக் கொடுத்தார் சிவாஜி.ஞாயித்துகிழமையா இருந்தாலும் ரெஸ்ட் எடுக்காமே சூட்டிங்லே கலந்துகிட்டார் சிவாஜி.

கௌரவம் டைரக்சன் செஞ்சு பல வருஷம் ஆகி இருந்தாலும் ,அந்த படம் ரசிகர்கள் மனசுலே நீங்காத இடத்தை வாங்கி கொடுத்த படம்.மறுபடியும் ஞானப்பறவை மூலமா ஒரு மறு வாழ்வு கிடைக்கணும்னு சிவாஜி  எனக்கு செஞ்சு கொடுத்த படம் தான் ஞானப்பறவை. சிவாஜிக்குத்தான் என் மேலே எவ்வளவு அக்கறைன்னு சுந்தரம் சொன்னார்.

இந்த படத்துலே சிவாஜி யாகவா முனிவர் மாதிரியான கெட்டப்புலேயே நடிச்சிருப்பார்.சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து யாகவா முனிவர் சிவாஜி நடிச்சத பாத்தார்.

சுந்தரம்  அதுவரைக்கும் யாரும் செய்யாத ஒரு புதுமையை இந்த படத்துலே செஞ்சார். மனோரமாவை சிவாஜிக்கு ஜோடியா போட்டு படத்தை எடுத்தார். மனோரமாவோட ரொம்ப நாள் ஆசையான சிவாஜிக்கு ஜோடியா ஒரு படத்துலேயாவது நடிக்கணும்ங்கற ஆசை  இந்த படத்துலே நிறைவேறுச்சு.
TM.சௌந்திரராஜன் சிவாஜிக்கு பாடுன கடைசி படம் இதுதான்.

இந்த படத்துலே பல  சிறப்பான காட்சில ஒண்ணை சொல்லணும். நவரசங்களையும் ஒரு காட்சிலே சிவாஜி நடிச்சுக் காட்டற மாதிரியான காட்சி. காலேஜ் மாணவர்கள் முன்னாடி சிவாஜி நடிச்சுக் காட்டுவார். அது சிவாஜி ஸ்பெசல் சீனா அமைஞ்ச காட்சி. 

நடிகர்திலகமும் இந்த படத்துலே இதுக்கு முன்னாலே செய்யாத ஒரு வேஷத்துலே நடிச்சார்.
ஞானப்பறவை படம் சுமாரா போன படம்தான். சிவாஜி படம் சுமாரா போனாலும் ,
சிவாஜியோட எந்த படமா இருந்தாலும் ஏதோ ஒரு பெருமை கௌரவம் அந்த படத்துக்கு இருக்கு. இது சிவாஜிக்கு அமைஞ்ச கௌரவம்.

செந்தில்வேல் சிவராஜ் ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்