1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

மிருதங்க சக்கரவர்த்தி படம் வெளியாகும் முன்பு நடந்த சம்பவங்கள்

மிருதங்க சக்கரவர்த்தி படத்துலே சுதீந்திரம் சுப்பையா பிள்ளையா வருவார் சிவாஜி.மிருதங்கம் வாசிக்கறதுலே சக்கரவர்த்தின்னு பேரெடுத்தவர்.அவருக்கும் சொக்கநாத பாகவதருக்கும் ஒரு கருத்து மோதல் ஏற்படும்.சபா கமிட்டியை சேந்தவங்ளை தூண்டிவிட்டு சுப்பையா பிள்ளை மேலே ஒரு பிரச்சினையை சபாகாரங்க கொண்டு வருவாங்க.தன்மானத்தை விட்டுக் கொடுக்காத வித்வான் சுப்பையா.பிரச்சினையோட முடிவா...
 தான் இனி மிருதங்கமே வாசிக்க மாட்டேன்னனு சபதம் போட்டுருவார் சுப்பையா.
இது படத்தோட மெயின் தீம். 
இது படத்துக்காக எழுதுன கற்பனை கதை அல்ல. நிஜமாகவே நடந்த விஷயம் தான்.

பாலக்காட்டு மணி அய்யர் பெரிய மிருதங்க வித்வான். பாடற வித்வான்களை விட அவருக்கு பேரும் புகழும் அதிகம்.இந்த ஒரு விஷயம்தான் பாடற வித்வான்களுக்கு பெரிய பொறாமையை கொண்டு வந்துச்சு.சின்ன சின்ன மனஸ்தாபங்கள் பெரிய கருத்து வேற்றுமையை கொண்டு வந்துருச்சு. பாடற வித்வான்களுக்கும் மணி அய்யருக்கும் கருத்து மோதல் வந்தது. எல்லாரும் மணி அய்யர் வாசிப்புலே நாங்க பாடமாட்டோம் ,அவரை ஒதுக்கி வைக்கிறோம்னு சொல்லிட்டாங்க. கோபமான மணி அய்யர் ,நீங்க என்னைய்யா என்னை  ஒதுக்கி வைக்கறது ,நான் உங்களை ஒதுக்கி வைக்கிறேன்னு சொல்லி 
மணி அய்யர் தான் இனி மிருதங்கமே வாசிக்க மாட்டேன்னு   மிருதங்கம் மேலே சத்தியம் பண்ணி  சொல்லிட்டாரு.
இந்த உண்மை சம்பவத்தை வெச்சுத்தான் மிருதங்க சக்கரவர்த்தி படம் உருவாச்சு.
படத்துலே இந்த காட்சியை பாருங்க. ஒவ்வொரு ஷாட்டையும் எப்படி எடுத்திருப்பாங்க. ரொம்ப உணர்ச்சிகரமா காட்சியை எடுத்திருப்பாங்க. இந்த மாதிரி காட்சி சினிமாக்கு சிவாஜியை விட்டா வேற யாரு ?

இந்த படத்துலே திருமுருக கிருபானந்த வாரியாரும் ஒரு காட்சிலே நடிச்சிருப்பார். படம் எடுத்து முடிச்சதும் வாரியாருக்கு போட்டு காமிச்சாங்க.படத்தை பார்த்த வாரியார் தன்னோட லெட்டர் பேடுலே இப்படி எழுதிக் கொடுத்தார்.
வாழ்த்து
நேரிசை வெண்பா

தண்ணார் இனியமிகு தங்கக் கலை வாழி 
கண்ணார் கணேசனுமே-
பண்ணார்
கலைஞானம் பைரவி காட்சி மிக ஓங்கி
நிறையாக வாழ்ந்து நிறைந்து
அன்பன் 
கிருபானந்த வாரி..
பைரவி பிலிம்ஸ் கம்பெனியார்கள் மிருதங்க சக்கரவர்த்தி என்ற படத்தை சிறப்பாக எடுத்து தமிழ் உலகுக்கு வழங்குகின்றார்கள். டைரக்டர் கே சங்கர் முழுமையாக எடுத்துள்ளார். இதில் பல அறங்கள்  ஒளி செய்கின்றன வாழி..
இப்படி எழுதிக் கொடுத்தார் ...

வாரியாருக்கு படம் போட்டுக் காட்டிய கலைஞானம் ,அடுத்து சிவாஜிகணேசன் தலைமையிலே படத்தில் வேலை செஞ்ச கலைஞர்களுக்கு படத்தை போட்டுக் காட்டினார்.

இந்த படத்துக்காக முதலில் பதிவு செய்யப்பட்ட பாட்டு சுகமான ராகங்களே பாட்டு.இந்த பாட்டு ரெக்கார்டிங் நடந்தப்போ அந்த பாட்டை சந்தோசமான மன நிலையிலே பாடி முடிச்சார் வாணி
ஜெயராம்.
இதே பாட்டு சோகமாகவும் படத்துலே வரும். இந்த பாட்டையும் வாணி ஜெயராம்தான் பாடுனாங்க. ரெக்கார்டிங் ரூமூலே இந்த பாட்டை பாடி முடிஞ்சதும் அவசரமா ஓடிப்போயி ஒரு ரூம்லே உக்காந்துட்டாங்க.
கலைஞானமும் MS .விஸ்வநாதனும் வாணி ஜெயராமை பாத்து பாராட்ட போனாங்க.அந்த ரூம்லே வாணி ஜெயராம் வாயை பொத்தி தேம்பி தேம்பி அழுதுட்டு இருந்தார்.
என்னம்மா என்னம்மான்னு பதறிப்போய் கலைஞானம் கேட்டார்.
அதுக்கு வாணி ஜெயராம் ,சார் மைலைப் மைலைப்னு சொல்லிட்டு வேற ஒண்ணுமே சொல்லாமே அழுதுட்டே கார் ஏறி அவசரமா போயிட்டார்.இது பாட்டு ரெக்கார்டிங் நடந்த சமயம் நடந்த விஷயம். 

படம் சிவாஜி தலைமையிலே எல்லாரும் பாத்துட்டு இருக்காங்க.
இப்போ க்ளைமாக்ஸ்லே சோக ராகத்துலே சுகமான ராகங்களே பாட்டு ஓடிட்டு இருக்கு. இதை பாத்த வாணிஜெயராம் ,திரையை
  பாத்து கை நீட்டி ,மை லைப் ,மை லைப்னு கதறிட்டே வெளியே ஓடிட்டார்.
கலைஞானமும்  பின்னாலேயே ஓடி அம்மா என்னாச்சும்மான்னு கேக்க ,பதில் சொல்லாமயே போயிட்டார் வாணிஜெயராம்.
மறுநாள் கலைஞானம் போனில் இது பத்தி விசாரிச்சார்.அதுக்கும் வாணி ஜெயராம் ,ஒண்ணுமில்லே சார்னு சொன்னதோட சரி. அவர் ஏன் அப்படி அழுதார்னு சொல்லவே இல்லே. கலைஞானத்துக்கும் அவர் ஏன் அப்படி அழுதார்னும் தெரியலே.
.இது கலைஞானமே சொன்ன விஷயம்.

படம் எப்படின்னு கேக்க மறுநாள் சிவாஜி வீட்டுக்கு போனார் கலைஞானம்.ஞானம் படம் பிரமாதமா வந்திருக்கு. சினிமா ஆளுகளுக்கு எல்லாம் நாலு அஞ்சு காட்சியாவது போட்டு காட்டுன்னு சிவாஜி சொன்னார். கலைஞானம் பத்து ஷோ போட்டுக் காட்டினார்.இந்த படத்தை பார்த்த YG.மகேந்திரன் அம்மா ,நாளைக்கும் நான் வந்து இந்த படத்தை மறுபடியும் பாக்கலாம்மானு கேட்டார். அந்தளவுக்கு படம் எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. கலைஞானத்துக்கு  ரொம்பவே திருப்தி மகிழ்ச்சி.

இந்த படத்தை அப்போ முதல்வரா இருந்த எம்ஜிஆருக்கு போட்டு காட்ட ஐடியா வெச்சிருந்தார்.நடிகர் சங்க கட்டிடத்துலே இருந்த தியேட்டர்லே படத்தை போட்டு காட்டுனார்.
முதல்வர் அவருடைய மனைவி ஜானகி இயக்குனர் கே சங்கர் கலைஞானம் ஆகியோர் உக்காந்து படம் பாத்தாங்க.லைட் எல்லாம் ஆப் பண்ணி படம் ஆரம்பிச்சது. கூட வந்த செக்யூரிட்டிகள், அதிகாரிகள் எல்லாம் உக்காந்து படம் பாத்தாங்க.
பட க்ளைமேக்ஸ்லே 15 நிமிசம் வசனமே இருக்காது. ஒரே மிருதங்க வாசிப்புதான். கேமராவை  பல கோணத்துலே வெச்சு மாத்தி மாத்தி எடுத்திருப்பாங்க.மிருதங்க வாசிப்பு கரை புரண்டு ஓடுது. முடிவுலே வாயிலே ரத்தம் வர வர சிவாஜி வாசிப்பை நிறுத்தாமே வாசிச்சுட்டு இருப்பார். மிருதங்க போட்டிலே சிவாஜி ஜெயிக்கற மாதிரி காட்சி முடியும்.
வணக்கம் கார்டு போட்டாச்சு. எல்லாரும் எந்திரிச்சுட்டாங்க. எம்ஜிஆர் மட்டும் எந்திரிக்கலே.
அஞ்சு நிமிஷம் நாடிலே கை வெச்சுட்டே ஸ்கிரினையே பாத்துட்டு இருக்கார். 
கலைஞானம் இயக்குனர் சங்கரை பாக்க சங்கர் முதல்வர் மனைவி ஜானகியை பாக்க ,முக பாவத்தாலேயே என்னாச்சுங்கற மாதிரி  இருந்தாங்க. 
ஆறாவது நிமிசம் எந்திரிச்சார் அவர் கையே மேலே தூக்கிட்டு பெருமூச்சு விட்டபடி ,சங்கரை பாத்து ,இந்த உலகத்துலே ஓரே ஒரு நடிகன் இருக்கான்னா ,அது தம்பி சிவாஜிகணேசன்தான்.இதை நான் சொன்னதா சொல்லுங்கன்னு சொன்னார்.
காருலே ஏறுனப்போ கலைஞானம் சங்கரை பாத்து ,இந்த படத்துக்கு நாலு அவார்ட் இருக்கு ,நாளைக்கு ஆபீஸ் வந்து என்னை பாருங்கன்னு சொல்லிட்டார்.
மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் மிருதங்க சக்கரவர்த்தி படம் வர்றதுக்கு முன்னாலேயே நடந்த விஷயங்கள்.

செந்தில்வேல் சிவராஜ் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்