சும்மா போகிற போக்கிலே கொடுத்த ட்யூனுக்கு வார்த்தைகளை அடிச்சு விடற வேலையெல்லாம் கண்ணதாசன் கிட்டே கிடையாது. ஒரு சாதாரண சிச்சுவேஷசனுக்கு கூட அதிகம் தெரியாத விஷயத்தை வார்த்தைகளா போட்டு காவிய பாட்டுகளா மாத்திருவார்.
இப்படி இவர் செஞ்ச பாட்டு வித்தைகள் ரொம்ப அதிகம். அந்த மாதிரி வித்தைகளை சிவாஜி பட படங்கள்லே இந்த பெரிய வேலைக்காரர் செஞ்ச பாட்டுகளை கொஞ்சம் பாக்கலாம்.
'ஓம்' அப்படின்னு ஒரு வார்த்தை . சிவாய மந்திர வார்த்தை. இந்த வார்த்தையை வெச்சு ஒரு சாகசம் பண்ணியிருப்பார் ஒரு பாட்டுலே.அதுவும் என்ன டைப் பாட்டுலேன்னு பாத்தா ஆச்சர்யம்
தாங்காது . இது நமச்சிவாய மந்திரம். இதை படத்துலே பாடறது ஒரு முஸ்லீம் கேரக்டர்.அதுவும் எப்படி வெச்சார் பாருங்க அந்த வார்த்தையை. யாருமே யோசிக்க முடியாத படி.
பாட்டு இதுதான். எல்லோரும் கொண்டாடுவோம்னு பாவ மன்னிப்பு பாட்டு. இதுலே எங்கப்பா ஓம் வருதுன்னு கேக்கத் தோணும். கொண்டாடுவோம்னு ஒரு வார்த்தை வருதில்லே.அதுலே கடைசியா அந்த ஓமைச் சேத்து முடிச்சிருப்பார்.இந்த ஒரு வரியை வெச்சு மட்டும் இத சொல்லலே..வந்ததை வரவில் வைப்போம்.வருவதை செலவில் வைப்போம்னு அந்த வார்த்தைகளிலியும் ஓமைச் சேத்து விளையாடியிருப்பார் மனுசர்.இன்னும் பல வரிகள் இது போல வரும் இந்த பாட்டுலே. ஓம் ஓம்னு முடியற மாதிரி பாட்டை எழுதி இருப்பார்.அல்லாவை புகழ்ந்து பாடற பாட்டுலே சிவனோட மந்திரத்தை சேத்து பாட வெச்சிட்டார்.
தமிழ் மாசம் பனிரெண்டையும் வெச்சு ஒரு பாட்டுலே எழுதுன ஒரு விஷயமும் இருக்கு.ராஜ ராஜ சோழன் படத்துலே மாதென்னை படைத்தான்னு ஒரு பாட்டு இருக்கும். இந்த பாட்டுலே பனிரெண்டு மாச பேர்களையும் வெச்சு பாட்டா வடிச்சிருப்பார் கவிஞர்களுக்கும் கவிஞன் கண்ணதாசன்.
இருக்கற காய்களை எல்லாம் வெச்சு ஒரு பாட்டுலே பெரிய வேலை செஞ்சிருப்பார் கவிஞர். அந்த பாட்டுதான் அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவேன்னு பலே பாண்டியா பட பாட்டு.அத்திக்காய் அவரைக்காய் பாவைக்காய் சுரைக்காய்னு பெரிய விருந்தா செஞ்சிருந்தார்.இதுலயும் அத்திக்காய் வார்த்தையிலே கூட ஒரு சிலேடை வித்தை செஞ்சிருப்பார் அது என்னான்னா அத்திக்காய்னா நாம
அத்திக்காய்னு நெனக்க ,அதை அத் 'திக்காய் ' அந்த திக்கு அதாவது அந்த திசையிலேன்னு அர்த்தம் வர்ற மாதிரியும் எழுதியிருப்பார்.அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவேன்னா அந்த திக்கில் இருக்கும் உலகத்துக்கு ஒளி கொடுக்கும் வெண்ணிலவேன்னு அர்த்தம்.ஆலங்காய்லே ஆலம்னா பிரபஞ்சம் உலகம்னு அர்த்தம்.
இத்திக்காய்னா இந்த திக்கு ,மாதுளங்காய்னா மாது அதாவது பெண்ணின் மனம் எனும் காய்னு அர்த்தம் வர்ற மாதிரி பாட்டுபுல்லா வார்த்தைகளை கொட்டியிருப்பார்.
மேங்கற வார்த்தையை வெச்சு கவிஞர் பண்ணுன ஒரு பாட்டு இது.அவன் தான் மனிதன் பட பாட்டையெல்லாம் எழுதிக் கொடுத்த கண்ணதாசன் ஒரு பாட்டை மட்டும் பென்டிங் வெச்சிருந்தார் .மே மாசத்துலே ஷூட்டிங் நடத்த பிளான் வெச்சிருந்தாங்க. MS.விஸ்வநாதனும் கண்ணதாசனை பல தடவை கேட்டுட்டார். கண்ணதாசன் டார்ச்சர் தாங்காமே விஸ்வநாதனை பாத்து ,என்னடா மே மேன்னு ஆடு மாதிரி கத்திட்டிருக்கேன்னு கேட்டார். அப்ப எழுதிக் கொடுத்த பாட்டுலே , ஒரு சங்கதியை சேத்திருந்தார். அதுதான் பாட்டுலே எல்லா வரியும் முடியறப்போ 'மே மே'ன்னு முடியற மாதிரி வரிகளை போட்டு ,கிண்டல் மாதிரி நெனச்சு அப்படி ஒரு அழகான பாட்டை எழுதிக் கொடுத்தார். அந்த பாட்டை பாருங்க எல்லா வரியும் மேன்னு முடியும். அந்த பாட்டுதான் அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மலை மேகமே ..
இதே மேங்கற வார்த்தையை வெச்சு கர்ணன் படத்துக்கும் ஒரு பாட்டை கொடுத்தார்.இரவும் நிலவும் வளரட்டுமே ,நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமேன்னு மேன்னு எல்லா வரியையும் முடிச்சிருப்பார்.
மே என்ன ..இதோ 'தா'ங்கற வார்த்தையை வெச்சும் ஒரு பாட்ட எழுதினார். அதுதான் கொடி அசைந்ததும் காற்று வந்ததான்னு பாட்டு. பார்த்தால் பசி தீரும் படத்துக்காக.முட்டைலே இருந்து கோழி வந்ததா கோழியில் இருந்து முட்டை வந்ததான்னு சொல்லற ஒரு குழப்பமான வார்த்தை விளையாட்டை இந்த பாட்டுலே செஞ்சிருப்பார்.எல்லா வரியையும் 'தா'ன்னு முடிச்சிருப்பார்.
ஒரு கல்யாண பத்திரிக்கைலே இருக்கறதே வெச்சே பாட்டா எழுதி அசர வெச்சிருக்கார் கவிஞர். நெஞ்சிருக்கும் வரை படத்துலே பூ முடிப்பாள் இந்த பூங்குழலி பாட்டை கல்யாண பத்திரிக்கைலே வர்ற விஷயங்களை எல்லாம் வரிகளா போட்டிருப்பார். கல்யாண வீட்டு ஸ்பெசல் பாட்டு இது. அந்த காலத்துலே இந்த பாட்டு ஒலிக்காத கல்யாண வீடு இல்லே..
எங்கள் தங்க ராஜா படத்துலே இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை பாட்டுலே ஒரு வரி இடையிலே வரும். ஆடை இதுவென நிலவினை எடுக்கும்னு ஒரு வரி. ஒண்ணும் புரியலே. பல தடவை கேட்ட பாட்டு. இந்த வரி புரியாமேதான் இருந்துச்சு. ஒரு அர்த்தம் இல்லாமயா எழுதியிருப்பார் கவிஞர்னும் நெனப்பு வரும்.ரொம்ப நாள் கழிச்சு தெரிஞ்ச விஷயம் இது. நாமெல்லாம் சங்க இலக்கியம் படிச்சிருந்தாத்தானே இதெல்லாம் புரியும்.அதென்ன சங்க இலக்கிய வரியை வெச்சு விளையாண்டார் கவிஞர்.சங்க இலக்கியத்துலே புறநானூறுலே இருந்து இதை எடுத்திருப்பார்.தலைவன் தலைவி கலவி முடிஞ்சதும் ,தலைவி தன்னோட வெண்ணிற ஆடையை எடுப்பார். ஆனா அது பளிங்கு போல தரையிலே இருக்கற நிலவோட பிரதிபலிப்பு. அந்த நிலவை ஆடைன்னு நினைச்சு எடுக்கறதா சங்க இலக்கிய பாட்டு ஒண்ணு இருக்கு. அதைத்தான் கவிஞர் எங்கள் தங்க ராஜா பட இந்த காதல் பாட்டுலே மிக்ஸ் பண்ணி ஜாலி பண்ணியிருப்பார்.
இப்படி பல சிறப்புகளை கண்ணதாசன் பாட்டுகள்லே சொல்லிட்டே போகலாம்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக