மஞ்சுளாதேவி என்ற இயற்பெயரை "மஞ்சுளா" என்று திரையுலகுக்காக மாற்றி கொண்டவர் நடிகை மஞ்சுளா.
அவரது பள்ளிக் காலத்தில் ஒரு போட்டியில் மஞ்சுளாவின் ஆங்கிலப் புலமை பேச்சாற்றாலை ஒரு முறை திரைப்பட கதாசிரியர் சித்ராலயா கோபு பார்த்துவிட்டு அப்போது அவர் கதை வசனம் எழுதிய சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்..
திரைப்படங்களில் சிறு பெண்ணாக சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
பிரபலமான கதாநாயகியாக ஆன பின் ,அன்றைய பிரபல கதாநாயகர்கள் பெரும்பாலும் எல்லோருடனும் நடிக்கும் வாய்ப்பு பெற்றார் ..
நடிகர் திலகம் சிவாஜியுடன் 11 படங்களில் நடித்திருக்கிறார் மஞ்சுளா.
அந்த திரைப்படங்கள்: எங்கள் தங்க ராஜா என் மகன் அவன் தான் மனிதன் மன்னவன் வந்தானடி அன்பே ஆருயிரே டாக்டர் சிவா சத்தியம் உத்தமன் அவன் ஒரு சரித்திரம் நெஞ்சங்கள் .. முதல்குரல்..
இந்த படங்கள் போக நடிகர்திலகத்துடன் மேடை நாடகத்திலும் நடித்திருக்கிறார் நடிகை மஞ்சுளா.
ஸ்டைல் சக்கரவர்த்தியாக விளங்கிய நடிகர் திலகம் நடித்த எங்கள் தங்க ராஜா திரைப்படத்தில் தான் மஞ்சுளா முதல் முதலாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். 1973 ஆம் ஆண்டு வெளியான ஆன சூப்பரோ சூப்பர் ஹிட் திரைப்படம் எங்கள் தங்க ராஜா .
நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில்,
மஞ்சுளாவின் மகிழ்ச்சி துள்ளலில் திரையரங்கை எழுந்து ஆட வைத்த திரைப்படம்.
1973ல் மிளிர்ந்த தமிழ்சினிமா கண்ட மாஸ் மசாலா ...
இரு முகங்களில் காட்சிகள் மாறி மாறி ,உட்கார்ந்த நிலையில் கைதட்ட எழுந்த நிலையில் ஆட வைத்த திரைப்படம்.
தங்க ராஜாவும் பட்டாக்கத்தி பைரவனும் கலந்த, 'மல்டி ஸ்பிலிட் பர்சனாலிட்டி 'கதை களத்தை வைத்து விளையாடி இருப்பார் நடிகர் திலகம் .
காட்சிகள் புட் பால் கிரவுண்ட்டில் BALLகள் கோல்களாக அடித்த திருப்தியை கொடுத்தன.
வீரமும் எகத்தாளமும் நடையில் பிணைக்க,
சிவாஜி தன் நடிப்பில் அதிரி புதிரி திரைப்படத்தை காண வைத்தார்.
மஞ்சுளா.. ஒளிரும் முகம் ,
இளமை துள்ளல் ,சாந்தரசத்தில் சிவாஜியுடன் இணைந்ததை பெருமையாக்கி கொண்டார்.
கண்கள் பேசும் காதல் ராகத்தையும் சிறப்பாக கொடுத்தார்.
கேவி மகாதேவனின் இசை ஆனந்தமாய் ஓடியது.
கண்ணதாசனின் கவிதையில் வார்த்தைகள் உருகியது.
காதல், வீரமும் சேர்ந்த கலக்கல் திரைப்படம்.
எங்கள்தங்கராஜா எல்லோரையும் கவர்ந்து ,ரசிகர்களுக்கு போனஸ் படமாக அமைந்தது.
100 நாள் ஹிட் படமாக அமைந்தது.
1974 ரீமேக் படங்களின் ராஜா K.பாலாஜி தூக்கிய அடுத்த பொன்குடம் என் மகன்.
விஸ்க் விஸ்க்கென பாயும் துப்பாக்கி குண்டு போல காட்சிகளை கொண்ட அதிர்வெடி திரைப்படம் இது. எங்கிருந்து வந்தான் என் மகன் ?.இந்த தடாலடி திரைப்படத்திற்கு கை கொடுத்தது பீ இமான் இந்தி திரைப்படம்.மஞ்சள் நிலா மஞ்சுளாவும் ஒளி கொடுத்தார்.பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை என்ற அழகான காதல் பாடலும் ,
அரசியல்வாதிகளுக்கெனவே
ஸ்பேசல் பன்ச் விட கவிஞர் தொடுத்த நெருப்பு எழுத்தில் நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா பாடலும் என் மகனுக்கு சல்யூட் வைத்தவை.
மஞ்சுளாவின் இளமைக்கு 46 வயது சிவாஜி தன்னை மாற்றி ஈடு செய்திருப்பார்.இந்த பட ஓட்டமும் சிவாஜி மஞ்சுளா இணைவில் 100 நாளை கண்டது.
படத்தின் இன்னொரு ப்ளசாக இன்னொரு சிவாஜி . ஏட்டு ராமையா. போலீஸ் வேடங்களில் இவர் வேறவே மாதிரி. ஒரு பயலும் கிட்டக்க வர முடியாது .பிச்சிருப்பார்.
73 எங்கள் தங்க ராஜா ஆச்சு.
74 என் மகன் ஆச்சு.
75 என்ன பண்ணுச்சு ?
அதுதான் அவன் தான் மனிதன் ஆச்சு.கொஞ்ச நேரமே கெஸ்ட்டா வருவார் மஞ்சள் நிலா மஞ்சுளா. சிவாஜியையே கொஞ்ச வைப்பார்.ரெண்டு பாட்டு .லட்டு மாதிரி. அழகோ அழகு. அவ்வளவு அழகு பாட்டுகள்.மஞ்சுளா அதிகம் பேசாமே ,அதிகமா ரசிக்க வெச்ச படம்.சிவாஜி மஞ்சுளா வர்ற காட்சிகள் ஒரு ஜாலியான டூர் போனமாதிரி இருக்கும்.
சிவாஜிக்கு வயசு 47.
மஞ்சுளா வயசு 21.
சிவாஜி பட நெம்பர் 175.
படம் வந்த வருசம் 1975.
சிவாஜி மஞ்சுளா இணைஞ்ச 3 வது படம். ஓட்டத்துலே இது 100 நாளுக்கும் மேலே.
இந்த 1975 ல் சிவாஜி மஞ்சுளா ஜோடி இணைவில் காமெடி கலாட்டாவில் மர்மத்தையும் வைத்து P.மாதவன் செய்த ஜாலி மேளா திரைப்படம் மன்னவன் வந்தானடி. கோமாளி கதாநாயகனுக்கு வெகுளி நாயகி மஞ்சுளா அட்டகாச பொருத்தம்.சிவாஜியின் ஜாலி படங்களில் ஹோலி பெஸ்டிவல் படம் மன்னவன் வந்தானடி.
அதிக செலவு செய்யப்படாமல் நிறைவான வசூலுடன் திருப்தியான 100 நாள் ஓட்டத்திலும் பட்டியலானது மன்னவன் வந்தானடி.
சிவாஜி மஞ்சுளா ஜோடியின் 1975..ன் மூன்றாவது திரைப்படம் அன்பேஆருயிரே..தமிழ் திரையுலகத்துலே 1970கள் காதல், குடும்பம், இசைன்னு படங்கள் வந்துட்டு இருந்த காலம்.
இந்த சூழல்லே 1975 ஆம் வருசம் வெளிவந்த “அன்பே ஆருயிரே படத்தையும் அந்த டைப்புலேயே திருலோகசந்தர் எடுக்க முயற்சி செஞ்சார்.
குடும்பங்களுக்கு இடையிலான பகைமை, அதுக்கு இடையிலே மலரும் காதல், அதுக்கெதிரான தடைகள்னு ஒரு சுவாராஸ்யமான கதையைத்தான் செலக்சனும் பண்ணுனார்.
ரைட்டிங்கல்லே ஸ்பீடா போயிட்டாரோ என்னவோ ..படம் கொஞ்சம் பிரேக் பிரேக்கா விழுந்துச்சு.சுமாரா போன படம்.
அதே1975.. மறுடியும் சிவாஜி மஞ்சுளா காம்பினேசன்லே டாக்டர் சிவா. அன்பே ஆருயிரே சுமாரா போனதாலே நல்ல சப்ஜெக்டா பண்ணனும்னு திருலோக சந்தர் பண்ணுன படம் இது.அன்பே ஆருயிரே வெளியாகி ரெண்டே மாசத்துலே வெளியான படம் இது. இது ஒரு நல்ல சப்ஜெக்ட் ,கருத்தை சொன்ன படம்தான். தொழு நோயாளிகளை சமூகம் ஒதுக்க கூடாதுன்னு கருத்தை சொல்ல வந்த படம்.TMS சிவாஜிக்கு பாடிட்டு வந்த காலத்துலே ஜேசுதாஸ் சிவாஜிக்கு பாடுன ஒரு கிறங்க வைக்கற ஒரு காதல் பாட்டு மலரே குறிஞ்சி மலரே ..இது டாக்டர் சிவா ஸ்பெசல்னு சொல்லலாம்.இதுக்கு முன்னாலே வந்த படத்தோட பாதிப்பும் ,அப்ப இருந்த சிவாஜியோட அரசியல் சிச்சுவேசனும் இந்த படத்துக்கு பாதிப்பை உண்டாக்குச்சு.மஞ்சுளா தன்னோட கேரக்டரை குறை சொல்லாதபடி பண்ணியிருந்தார் இந்த படத்துலே.
1976 ல் சிவாஜியுடன் இரண்டு படங்களில் நடித்தார் மஞ்சுளா. சத்யம் படத்தில் ஜோடியில்லை. கமலஹாசனுக்கு ஜோடியாக மஞ்சுளா .
சிவாஜிக்கு ஜோடியாக நடித்து வந்த காலங்களில் கமலஹாசனுக்கு ஜோடியாக சிவாஜி படத்திலேயே நடித்திருந்தார் மஞ்சுளா.
இதற்கு அடுத்து வெளியான உத்தமன் படத்தில் சிவாஜியின் ஜோடியாக நடித்திருப்பார்.
பாடல்கள் ஸ்பெசலாக உத்தமன் படத்தை சொல்லலாம்.
இலங்கையில் பிளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது இந்த படம்.படம் வந்த காலத்தில் இலங்கை ரேடியாவை திறந்தால் தேவன் வந்தான்டியோ ,நாளை நாளை என்றிருந்தேனோ,கேளாய் மகனே பாடல்கள் அடிக்கடி காதுகளை குளிர வைத்த பாடல்களாக இருந்தன.
தமிழ்நாட்டில் 100 நாளும் இலங்கையில் 200 நாளும் ஓடிய படம் இது.சிவாஜி ரசிகர்களுக்கு பிடித்த டைட்டில்களில் இதுவும் ஒன்று.
1977.
அவன் ஒரு சரித்திரம்.
சிவாஜி மஞ்சுளா ஜோடியில் ஒர் நிறைவான படம் .
இந்த படத்தின் பாடல்கள்
"என் மனது ஒன்று தான்" பாடலை பீத்தோவனின் "Für Elise" இசையின் தாக்கத்தில் இருந்து உருவாக்கியதாக MS.விஸ்வநாதன் கூறியிருந்தார்.இந்த படத்துக்காக இசையமைக்கப்பட்ட இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை. பின் வேறொரு படத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
"அம்மானை" பாடல் தர்மவதி ராகத்தில் அமைந்துள்ளது. "வணக்கம்" பாடல் ஆபோகி ராகத்தில் அமைந்துள்ளது.
படத்தின் டைட்டில் பாடல் சிவாஜிக்கான ஸ்பெசல் பாடல்.
இந்த படமும் அன்றைய அரசியல் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டது .நல்ல கதை நல்ல பாடல் விறுவிறுப்பான கதைக்களம் என்று அமைந்த படம் இது.
நடிகர் விஜயகுமார் சிவாஜியை வைத்துதயாரித்த படம் நெஞ்சங்கள். சிவாஜி மஞ்சுளா நடித்த 10 வது திரைப்படம். படத்தின் திரைக்கதை அமைப்பில் வலுவில்லை.படத்தை எதிர்பார்க்கவும் இல்லை. எதிர் பார்க்காததை பூர்த்தி செய்யவும் இல்லை.
சிவாஜியுடன் மஞ்சுளா நடித்த கடைசிப்படம் முதல்குரல்.இந்த படத்தில் சிவாஜி பத்திரிக்கையாளராக நடித்திருப்பார் வில்லி வேடத்தில் மஞ்சுளா நடித்திருந்தார். நடிகர் அர்ஜூன் சிவாஜியுடன் நடித்த படம் இது.
மற்ற நடிகைகளைப் போலே வேறுபாடான பாத்திரங்கள் மஞ்சுளாவுக்கு அமையவில்லை என்றாலும் ஜனரஞ்சக ரசிப்பை சிறப்பாக கொடுத்த படங்களாக அமைந்திருந்தன.
கருத்துகள்
கருத்துரையிடுக