சிவாஜியோட நடையழகை பாத்து யாரு தான் மயங்கலே.300 படம் நடிச்சாரு. அவரோட நடை ஸ்டைலை இதுக்கு மேலே எப்படி சொல்லறது.ஒரு ஆராய்ச்சியாளர் சொன்னது இது.ரெண்டு காலுலே 300 நடையை காட்டுனவர்னு சிவாஜி நடையை சொன்னார்.
கோல்ப் விளையாட்டெல்லாம் சிவாஜிக்கு விளையாண்டு பழக்கமா இருக்கு. ?கோல்ப் விளையாடறவங்களே அப்படி ஒரு ஷாட் பிரசண்டேசன் கொடுப்பாங்களான்னு தெரியலே. கௌரவம் படத்துலே பாருங்க.கோல்ப் ஸ்டிக்கை தூக்கி விசிறி அடிப்பார் பாருங்க. அந்த ஷாட்டுலே அப்படி ஒரு ஸ்டைல். ஆனா படத்துலே இது இருபது செகண்ட் கூட வராத காட்சி.
ஏழு சிவாஜியை ஒரே பிரேமுலே காட்டணும் நவராத்திரி க்ளைமேக்ஸ் காட்சிலே .படம் முழுதும் நடிச்சது வேற.ஒவ்வொரு கேரக்டருக்கும் வேற வேற நடை பாடி லாங்குவேஜ்.ஆனா மொத்தப்படத்தையும் முடிச்ச பின்னாலே அந்த க்ளைமேக்ஸ் காட்சி எடுத்தாகணும்.ஒவ்வொரு கேரக்டரா டிரஸ் மேக்கப் மாத்தி மாத்தி வந்து நடிச்சாகணும்.அந்த காட்சிலே ஒவ்வொரு வேஷமும் நடந்து வர்றப்போ படத்துலே முதல்லே பண்ணுன கேரக்டருக்கு என்ன நடை காட்டியிருப்பாரோ ,என்ன பாடி லாங்குவேஜ் காட்டி செஞ்சிருப்பாரோ அதை அப்படியே மாறாமே அந்த நாலஞ்சு செகண்ட் வர்ற காட்சிக்கு ஒன் பை ஒன்னா செஞ்சிருப்பார்.அந்த ஞாபகசக்தி ,மெனக்கெடல் சலிக்காத உழைப்பு எல்லாம் நடிப்பு மேலே வெச்ச பக்திதான் காரணம்.
இந்தியாவுலே எல்லாருக்கும் ஈசியா கிடைக்கற சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் பாரத் பட்டம் ,தவிர பாரதரத்னா சிவாஜிக்கு கிடைக்கலே. ஆனா யாருக்கும் கிடைக்காத உலக விருது ,உலக மரியாதை சிவாஜியை தவிர யாருக்கும் கிடைக்கலே. உதாரணம் ,ஆசிய ஆப்பிரிக்கா சிறந்த நடிகர் விருது ,செவாலியே பட்டம்,நயாகரா மேயர் சிறப்பு.
இதுதான் கௌரவம்.. இது தான் பெருமை.சிவாஜிக்கு மட்டுமிலே .நாட்டுக்கே..
97 வருஷமாச்சு ..வயசாச்சு.
அதுலே 73 வருசமா தமிழகம் கொண்டாடிட்டு இருக்கற ஒரே நடிகன் சிவாஜிதான் ..வருசா வருசம் பாருங்க. எத்தனை ஊருலே எத்தனை ரசிகர்கள். இன்னைக்கு சிவாஜிக்கு ஜம்முன்னு விழா எடுத்துட்டுதான் இருக்காங்க.சிவாஜிக்கு மவுசும் குறையலே ...ரசிகர்கள் மனசும் மாறலே...மாறவும் செய்யாது...
கோயமுத்தூர்லே ஒரு சிவாஜி ரசிகர் இருக்காரு. கை கால் வராத நிலையிலே இருக்கார். 65 வயசாச்சு ..50 வருசமா எந்த நடிகரோட படமும் பாத்ததில்லே. டிவிலே சிவாஜி படத்தை பாத்தே காலத்தை ஓட்டிட்டு இருக்கார். வீட்டுலே உக்காந்திருக்கும் போதும் கூட சட்டைப்பையிலே சிவாஜி போட்டோ இல்லாமே இருக்க மாட்டார்.அப்படி ஒரு ரசிகர்.
மைசூர் மகாராஜாவுக்கு கர்ணனை பாக்க ஆசை..
புட்டபர்த்தி சாய்பாபாவுக்கு சிவாஜி நடையழகை பாக்க ஆசை..
பாட்டுக்குயில் லதா மங்கேஷ்கருக்கு அண்ணனா நெனக்க ஆசை..
காஞ்சி பரமாச்சார்யருக்கு நேரில் பாக்க ஆசை...
எகிப்து அதிபர் நாசருக்கு நேரிலே பாராட்ட ஆசை...
ஜான்கென்னடிக்கு அமெரிக்காவுக்கு வரச் சொன்ன ஆசை..
இப்படி பல பெரிய மனுசங்களுக்கு பல ஆசைகள்.
இத்தனையையும் ஆசைப்பட்டே நிறைவேத்துனார் சிவாஜி.
கருத்துகள்
கருத்துரையிடுக