"14 குழந்தைகள்.. நூலிழையில் உயிர் தப்பிய சிவாஜி!" - எங்க மாமா படப்பிடிப்பில் சம்பவம் !
சினிமான்னா நமக்கு உடனே ஞாபகம் வர்றது ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட். ஆனா, ஒரு ஆக்டிங் யுனிவர்சிட்டி-யே ஒரு இடத்துல தடுமாறி நின்னார்னா அது எங்க தெரியுமா? குழந்தைகளோட நடிக்கும்போதுதான்!
அவர் எத்தனையோ சவாலான கதாபாத்திரங்களை பண்ணியிருக்கார். ஆனா, 14 குழந்தைகளோட ஒரே நேரத்துல நடிச்சு, அந்தப் படப்பிடிப்புல அவருக்கு மரண பயமே வந்த ஒரு சம்பவத்தைப் பத்தி உங்களுக்கு தெரியுமா?
"1970-ல ஏ.சி. திருலோக்சந்தர் இயக்கத்துல வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தான் 'எங்க மாமா'. இது ஹிந்தியில் ஷம்மி கபூர் நடிச்ச 'பிரம்மச்சாரி' படத்தோட ரீமேக். இந்தப் படத்துல சிவாஜி சார் கூட ஜெயலலிதா , வெண்ணிற ஆடை நிர்மலா பாலாஜின்னு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருந்தாங்க.இந்தப் படத்துல சிவாஜி ஒரு ஹீரோவா நடித்திருந்தாலும்
படத்துலே அந்த 14 குழந்தைகளும் உண்மையான ஹீரோக்கள் தான்.
நடிகர்திலகம் ஒரு பழைய பேட்டிலே சொல்லும்போது சிரிச்சுக்கிட்டே சொன்ன விஷயம் என்னன்னா, 'ஒரு குழந்தையோட நடிக்கிறதே பெரிய வித்தை. இதுல 14 பேர்னா சும்மாவா?'. படப்பிடிப்பு தளத்துல கேமரா ஓடிக்கிட்டு இருக்கும்போது ஒரு குழந்தை சிரிக்கும், ஒரு குழந்தை அழும், இன்னொன்னு திடீர்னு ஓடும். அவங்களைச் சமாளிச்சு, தன் நடிப்பையும் சரியா கொடுக்கிறதுக்குள்ள சிவாஜிக்கு போதும் போதும்னு ஆகிடுச்சாம்."
நான் தன்னந்தனி காட்டு ராஜா
'பாட்டு படப்பிடிப்பு நடக்குற நேரம். ஒரு பெரிய ஜயண்ட் வீல்ல சிவாஜி சார் குழந்தைகளை பக்கத்துலே வச்சுக்கிட்டு மேல போயிட்டு வர்றார்.
அப்போ ராம் அப்படின்ற ஒரு சின்ன பையன், ஆர்வத்துல அந்தத் தொட்டியோட கொக்கியை (Chain/Latch) கழட்டி விட்டுட்டான்! யோசிச்சு பாருங்க.. ஜயண்ட் வீல் உச்சியில இருக்கும்போது பேலன்ஸ் இல்லாம அந்தத் தொட்டி ஆட ஆரம்பிச்சதுமே சிவாஜி சாருக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. 'அன்னைக்கு நான் செத்துருப்பேன், கையில் இருந்த குழந்தையை இருக்கப் பிடிச்சுக்கிட்டு எப்படியோ தப்பிச்சு கீழ வந்தேன்'னு அவரே சொல்லியிருக்கார். அந்த நிமிஷம் அந்த இடமே உறைஞ்சு போயிருக்கு!"
"சிவாஜி சார் செட்-க்கு வந்தாலே ஒரு கம்பீரம் இருக்கும். ஆனா இந்தக் குழந்தைகள் முன்னாடி அவர் வெறும் 'மாமா' தான். அவர் மடியில ஏறி உட்காருறது, அவரோட மேக்கப் கலைக்கிறதுன்னு குழந்தைகள் பண்ணின சேட்டைகளை அவர் ரொம்பவே ரசிச்சு பண்ணாராம். ஆனா, 'குழந்தைகளோட நடிக்கும்போது நாம ரொம்ப முன்னெச்சரிக்கையா இருக்கணும், இல்லைன்னா என்ன வேணா நடக்கும்'னு ஒரு பெரிய பாடத்தையே அந்தப் படம் அவருக்குக் கத்துக்கொடுத்திருக்கு."
"இந்தப் படத்துல வர்ற இந்தப் பாட்டு ஆகட்டும் செல்லக்கிளிகளாம் பள்ளியிலே பாட்டாகட்டும், சிவாஜி சார் குழந்தைகளோட சேர்ந்து பண்ற அந்த எமோஷனல் சீன்களும் சரி, இன்னைக்கு வரைக்கும் எவர்க்ரீன். சிவாஜி சார் நடிப்பு பல்கலைக்கழகம்னு ஏன் சொல்றாங்கன்னா, ஒரு பக்கம் வீரபாண்டிய கட்டபொம்மனா கர்ஜிக்கவும் தெரியும், இன்னொரு பக்கம் 14 குழந்தைகள் முன்னாடி ஒரு குழந்தையா மாறி அவங்ககிட்ட தமாஷா விளையாடவும் தெரியும். அதுதான் அவரோட ஸ்பெஷாலிட்டி!"
குழந்தைகளோட நடிக்கிறது நிஜமாவே ஒரு கலைதான், அதை சிவாஜி சார் எவ்வளவு அழகா கையாண்டிருக்கார் பாருங்க!
கருத்துகள்
கருத்துரையிடுக