மாண்புமிகு நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று இருந்த நேரம். அவருக்கு பசும்பொன் பைன் ஆர்ட்ஸ் சார்பாக ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என முடிவெடுத்து, அந்த அமைப்பில் இருந்தவர்கள் சிவாஜி அவர்கள் 'சின்ன அண்ணாமலை' தயாரித்துக் கொண்டிருந்த 'மனிதனும் தெய்வமாகலாம்' என்ற படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு கோவூரில் நடந்து கொண்டிருந்த போது சந்தித்து விவரம் கூறினார்கள்..
அதைக் கேட்ட அவர் மிகவும் மகிழ்ச்சியுடன், "கட்டாயம் நடத்தப்பட வேண்டிய நமது குடும்ப விழா" என்று கூறி, "வெளியே ஹோட்டல்களில் தேநீர் விருந்து, சொற்பொழிவு, பாராட்டுரை என்று நடத்துவதை விட, தமது வீட்டில் புல்வெளியில் டேபிள் சேர் போட்டு இரவு விருந்துடன் பாராட்டு விழா நடத்தலாம்" என்று கூறிவிட்டு, மறுநாள் காலையில் தம்முடைய தம்பி வி.சி. சண்முகத்தை சந்தித்து தேதியை நிச்சயம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
சிவாஜியின் தம்பி வி.சி. சண்முகம், சிவாஜியின் தங்கையின் கணவர் மாப்பிள்ளை வேணுகோபாலும்
அதற்கான உதவிகளைச் செய்தார்கள்.
22-04-1974 உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு எஸ். ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் மாலை 7 மணிக்கு சிவாஜி வீட்டில் பாராட்டு விழா விருந்து, விருந்தினர்களை சிவாஜி அழைப்பது போலவும், நல்வரவை நாடும் வி.சி. சண்முகம் என்றும் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது.
படப்பிடிப்பில் இருந்து திரும்பிய சிவாஜி குளித்துவிட்டு, ஆடம்பரம் இல்லாத ஆடையில் அணிந்து கொண்டு புல்வெளியில் முகப்பில் வந்து அமர்ந்திருந்தார். 6:30 மணியில் இருந்தே விருந்தினர்கள் தங்களுடைய துணைவியாருடன் வரத் தொடங்கினார்கள். சிவாஜி முகப்பிலேயே நின்று கொண்டு, உடனிருந்தவரிடம் வருகிறவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, இன்முகத்தோடு கூறி ஒவ்வொருவரையும் வரவேற்ற அவருடைய பாங்கு வந்திருந்தோரை கவர்ந்தது.
மாண்புமிகு நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்கு நடிகர் திலகத்தின் இல்லத்தில் நடந்த அந்தப் பாராட்டு விழா, ஒரு சாதாரணச் சடங்காக இல்லாமல், பண்பாடும் பாசமும் கலந்த ஒரு "குடும்ப விழாவாகவே" அமைந்தது. அதன் சிறப்பம்சங்களைச் சற்று விரிவாகக் காண்போம்:
1. ஹோட்டலைத் தவிர்த்து இல்லத்தைத் தேர்ந்தெடுத்த பாசம்:
பொதுவாக இதுபோன்ற உயர் பதவியில் இருப்பவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தும்போது, பெரிய ஹோட்டல்களைத் தேர்ந்தெடுப்பதுதான் வழக்கம். ஆனால், சிவாஜி அவர்கள் அதை மறுத்தார். "நீதிபதி அவர்கள் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர், எனவே விழா நமது இல்லத்திலேயே (அன்னை இல்லம்) நடக்க வேண்டும்" என்று அவர் எடுத்த முடிவு, அந்த உறவின் ஆழத்தைக் காட்டியது. இது நீதிபதிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு பெரும் கௌரவமாக அமைந்தது.
2. ஒரு சாதாரண மனிதனாக நின்று வரவேற்ற உபசரிப்பு :
திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நேரத்திலும், தன் வீட்டு வாசலில் ஒரு சாதாரண இல்லத்தரசனைப் போல நின்று, வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றார் சிவாஜி. குறிப்பாக, மாலை 6:30 மணிக்கே தயார் நிலையில் வந்து நின்று, ஒவ்வொருவரையும் இன்முகத்தோடு வரவேற்றது அவர் மற்றவர்களுக்குக் கொடுத்த மரியாதையைப் பறைசாற்றியது.
3. "தஞ்சைத் தரணி" விருந்தோம்பல்:
அந்த விழாவின் மிக முக்கியமான அம்சம், சிவாஜி அவர்கள் கையாண்ட உபசரிப்பு முறை.
பரிமாறியவர்கள்: ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் பணியாட்களை வைத்துப் பரிமாறாமல், சிவாஜியின் தர்மபத்தினி கமலா அம்மாள், பிள்ளைகள் சாந்தி, ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் முன்னின்று பரிமாறினர்.
நேரடி கவனம்: விருந்து நடந்து கொண்டிருந்தபோது, சிவாஜி அவர்கள் ஒவ்வொரு மேஜைக்கும் நேரில் சென்று, "இது நம்ம வீட்டு விருந்து, கூச்சப்படாமல் நன்றாகச் சாப்பிடுங்கள்" என்று சொல்லி உபசரித்தார். ஒரு விருந்தினரை எப்படித் தன்வயப்படுத்த வேண்டும் என்பதற்கு இதுவே சான்று.
4. முக்கியமானவர்களின் சங்கமம்:
இந்த விழா வெறும் பாராட்டு விழாவாக மட்டும் இல்லாமல்,
மாண்புமிகு அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், பட அதிபர் சின்னப்பா தேவர், நடிகர் முத்துராமன், கதாசிரியர் பாலமுருகன், போலீஸ் அதிகாரிகள் பழனிவேலு, நாராயணசாமி, அரசின் உயர் அதிகாரிகள் ஆர். ஆறுமுகம், கேப்டன் திருவேட்டை, சிவனேசன், வழக்கறிஞர்கள் சந்திரன், ஜெய்பால், சேலம் செல்லமுத்து, கல்வியாளர் எம்.ஏ. கிருஷ்ணசாமி ஆகியோர் தங்கள் துணைவியாருடன் விழாவில் கலந்து கொண்டார்கள்.
கலைத்துறை அரசியல் துறை காவல்துறை மற்றும் சட்டத்துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் ஒருமிக்கச் சந்தித்த இடமாக அமைந்தது. நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்குத் திரையுலகின் சார்பாகக் கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக இது கருதப்பட்டது.
5. நெகிழ்ச்சியான விடைபெறுதல்
விருந்து முடிந்து கிளம்பும்போது, ஒவ்வொருவரையும் வாசலிலேயே நின்று வழியனுப்பி வைத்தார் சிவாஜி. நீதிபதி அவர்கள் விடைபெறும்போது, "வாழ்நாளில் மறக்க முடியாத இனிய அனுபவம்" என்று நெகிழ்ந்து கூறியது, அந்த விழாவைச் சிவாஜி எந்த அளவிற்கு நேர்த்தியாகவும், அன்பாகவும் நடத்தினார் என்பதற்குச் சாட்சி.
சுருக்கமாகச் சொன்னால், அந்த விழா நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் உயர் பதவியைக் கொண்டாடியதை விட, அவருக்கும் சிவாஜி குடும்பத்தாருக்கும் இடையே இருந்த அந்தத் தூய அன்பைத்தான் அதிகம் கொண்டாடியது.
சிவாஜி அவர்கள் சங்கக் கட்டிட நிதிக்காக சில கலை நிகழ்ச்சிகளையும், நாடகங்களையும், சிறப்பு ஓரங்க நாடகங்களையும் நடத்திக் கொடுத்துள்ளார். அதில் முக்கியமான ஓரங்க நாடகம் 'சாம்ராட் அசோகன்'.
சிங்கப்பூரில் நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக சிவாஜியின் ஆருயிர் நண்பர் கிட்னி பவுண்டேஷன் டி.டி. துரையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், சிவாஜி கணேசன் அவர்கள் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் நடித்துக் கொடுத்து பெரும் நிதி திரட்டினார்.
அந்த ஓரங்க நாடகத்தை நம்முடைய பசும்பொன் கட்டிட நிதிக்காக சென்னையில் நடித்துத் தர வேண்டும் என சிவாஜி அவர்களை உரிமையோடு பசும்பொன் பைன் ஆர்ட் குரூப்பை சேர்ந்தவர்கள் அந்த நாடகத்தை
தங்களது வளர்ச்சிக்காக நடித்து தர வேண்டுமாறு கேட்டார்கள் .
சென்னையில் நடிக்க வேண்டும் என்றால் சிவாஜி நாடகத்திற்கு ஒரு தொகை தர வேண்டும் என அப்போது செயலாளராக இருந்த மேஜர் சுந்தர்ராஜன் ஒரு விதி அமைத்திருப்பதாகக் கூறி, இது பற்றி மேஜரிடம் பேசும்படி சிவாஜி எங்களிடம் கூறினார். அதன்படி மேஜரை நேரில் சந்தித்துப் பேசி, தொகை தர ஒப்புக்கொண்டு தேதியைத் தரும்படி பலமுறை அவரிடம் கேட்டோம். அன்றைய சூழ்நிலையில் மேஜரால் எங்களுக்கு தேதி தர முடியாத நிலைமை ஏற்பட்டதால், அவர் எங்களிடம் "நீங்கள் சிவாஜியை நேராகச் சந்தித்துப் பேசி தேதி வாங்கி அந்த நாடகத்தை நடத்திக் கொள்ளுங்கள். இதற்கு நடிகர் சங்கத்திற்கு எந்தத் தொகையும் தர வேண்டியதில்லை" என்று கூறிவிட்டார்.
நாங்களும் சிவாஜியைச் சந்தித்து விவரங்களைக் கூறினோம். அவருடைய தம்பி சண்முகத்தைச் சந்திக்கும்படி கூறினார். இந்த நிகழ்ச்சி நடத்த சண்முகம் அவர்கள் செய்த உதவியை மறக்கவே முடியாது.
02-02-1975 நகரில் புகழ் பெற்ற சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் நட்சத்திர கலை விழா, சிவாஜி நடிக்கும் சாம்ராட் அசோகன் நாடகத்துடன், குன்னக்குடி வைத்தியநாதன் இன்னிசையுடன் நகரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சானது.. சென்னையில் முதன்முறையாக அந்த நாடகம் நடைபெறுவதால், ஏன் அதுதான் கடைசி முறையும் கூட.
எல்லா வகுப்பு நுழைவுச் சீட்டுகளும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன. நகரில் அரசுத் துறை உட்பட எல்லாத் துறையைச் சேர்ந்த மிகப்பெரியவர்களிடமிருந்தும் நாடகத்தைக் காண அனுமதிச் சீட்டு கேட்டு ஏகப்பட்ட நெருக்கடிகள், சமாளிக்க முடியாத தர்மசங்கடமான நிலைமை. சிவாஜியின் நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் இரண்டு வரிசையில் முழு இருக்கைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. நாடகத்தில் சிவாஜி அணியும் அந்த ஆடை அணிகலன்களை மெருகேற்ற மட்டும் ரூபாய் 3,000 செலவானது.
இருக்கை இடம் இல்லாததால் ரூபாய் 100 கொடுத்து நுழைவுச் சீட்டுகள் வாங்கிய பலபேர் கடைசியில் நின்று கொண்டு நாடகத்தைப் பார்த்தார்கள். "கலைத்தாயின் தலைமகன், உலக மகா நடிகர் திலகம் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் நடிக்கும் சாம்ராட் அசோகன்" என்று தஞ்சை கோ. பழனி அவர்கள் அறிவிக்க, அதிரடி பின்னணி இசையுடன் சிவாஜி கணேசன் அவர்கள் சாம்ராட் அசோகன் உடையில் மேடையில் தோன்றினார். அங்கமெல்லாம் கலை பேசும் சங்கத்தமிழ் கலைஞனின் ஒவ்வொரு அசைவும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.
பல்சுவை காட்டிய சிவாஜியின் நடிப்பும் வசனங்களும் ரசிகர்களை வேறு உலகத்திற்கு இழுத்துச் சென்றன. அரை மணி நேரம் தன்னுடைய அபார நடிப்பால் ரசிகர்களைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததால் அவர்கள் மெய்மறந்தார்கள். நாடகம் முடிந்ததும் ரசிகர்கள் எழுப்பிய கரவொலியும் வாழ்த்தொலியும் அரங்கையே அதிர வைத்தன. அந்த இனிய சூழ்நிலையில் பசும்பொன் கட்டிட நிதிக்கும் கணிசமான தொகை கிடைத்தது.நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் அன்பான பேராதரவால் இது நடந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக