"வணக்கம் மக்களே! 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்... கேமரா முன்னாடி நின்னா அவர் ஒரு சிங்கம், ஒரு மகா கலைஞன். ஆனா, அந்த மேக்கப் கலைஞ்சதுக்கு அப்புறம் அவர் எப்படிப்பட்ட மனுஷன்? 'ஏன் இவரை இவ்வளவு கொண்டாடுறோம்'னு நீங்க ஆச்சரியப்படுற மாதிரி, சினிமாவுல கூட பார்க்க முடியாத ரெண்டு ட்விஸ்ட்டான சம்பவங்கள் அவரோட நிஜ வாழ்க்கையில நடந்திருக்கு. அது என்னன்னு தெரிஞ்சுக்க வீடியோவை கடைசி வரைக்கும் பாருங்க!"
சம்பவம் 1: மதுரையில் நடந்த அந்த மர்மமான நட்பு!
"சிவாஜி சார் ஒரு ஊருக்கு போறாருன்னா அங்க இருக்குற பெரிய விஐபி-க்கள் எல்லாம் அவரைப் பார்க்க வரிசையா வருவாங்க.. ஆனா, மதுரையில ஒருத்தர் இருந்தாரு... அவருக்கு சினிமாவே பிடிக்காது, சினிமாவும் பாத்ததில்லே.
சினிமாவுலே இருக்கற சிவாஜி சினிமாவுலே எவ்வளவு பெரிய ஆளுன்னும் தெரியாது. சிவாஜியோட நடிப்பு ,சினிமா இதெல்லாம் தெரியாது. பாத்ததும் இல்லே.
அவரை பொறுத்த வரை சிவாஜி நல்ல மனுசர் .நல்ல நண்பர் அவ்வளவுதான்.
அவர்தான் 'பெரிய கருப்பண்ணம்பலம்'. இவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு விசித்திரமான நட்பு இருந்தது."
ஒரு நாள் இவரை வற்புறுத்தி
சிவாஜி நடிச்ச உயர்ந்த மனிதன் படத்துக்கு அழைச்சுட்டு போறாங்க.படத்தை பாத்த பின்னாலே அவர் என்ன சொல்ல போறார்னு நண்பர்கள் ஆர்வமா இருந்தாங்க.
"உலகமே வியந்து பார்க்குற சிவாஜியோட 'உயர்ந்த மனிதன்' படத்தை பார்த்துட்டு, இந்த நண்பர் என்ன சொன்னாரு தெரியுமா? எல்லாரும் பாராட்டித் தள்ளுவார்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்க, அந்த நண்பர் அசால்ட்டா, 'பரவாயில்லைப்பா, நல்லாத்தான் நடிக்கிறார்,அப்படின்னு ஒரு புது நடிகனைப் பாராட்டுற மாதிரி சொல்லிட்டுப் போயிட்டாரு. நண்பர்களும் சிவாஜி கிட்டே இதப்பத்தி சொன்னாங்க.சிவாஜி கிட்டே இருந்து என்ன ரியாக்சன் வந்திருக்கும்.?
சிவாஜிக்கு கோபம் வந்ததா? இல்லவே இல்லை! அந்த உண்மைதான் அவருக்குப் பிடிச்சிருந்தது."
தன்னையும் நடிப்பையும் எந்நேரமும் கேட்டுட்டு இருக்கற சிவாஜிக்கு கள்ளம் கபடம் இல்லாத அந்த மனுசனோட உள்ளத்தில இருந்து வந்த அந்த சத்தியமான வார்த்தைகள் புடிச்சிருந்தது.
சிவாஜியோட நட்பு வட்டத்துலே அவர் ரொம்ப நெருக்கமான நண்பரா இருந்தார்.
"ஆனா, இந்த கதையில ஒரு சோகம் இருக்கு. ஒருநாள் அந்த நண்பர் மாரடைப்புல இறந்துடுறாரு. ஆனா, சிவாஜிக்கு அந்தத் தகவல் சொல்லப்படவே இல்லை! பல மாசம் கழிச்சு மதுரைக்கு சிவாஜி வந்தப்போதான் அந்த அதிர்ச்சி செய்தி தெரிஞ்சது... தன் நண்பன் மாரடைப்புலே இறந்துட்டார்னு தகவல் தெரியுது .
சிவாஜி பிஸியா இருப்பார் ,அவருக்கு எதுக்கு சிரமம் கொடுக்கணும்னு அவரோட மகன்கள் அப்பா இறந்த விஷயத்தை சொல்லாமே விட்டுட்டாங்க
தன் உயிர் நண்பன் இல்லைன்னு தெரிஞ்சதும் அவர் என்ன செஞ்சாரு தெரியுமா?
ஷூட்டிங், கால்ஷீட் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு அந்த நண்பரோட வீட்டுல போய் ஒரு சாதாரண மனுஷனா கல்லு மாதிரி உக்காந்துட்டாரு.
அந்தப் பசங்ககிட்ட அவர் சொன்ன ஒரு வார்த்தைதான் இன்னைக்கு வரைக்கும் அந்த குடும்பத்தை சேந்தவங்க பெருமையா நினைக்கறாங்க.
'என்கிட்ட ஏன் சொல்லலை? நான் என்ன அவ்வளவு பெரிய மனுஷனா?
நான் ஒரு நடிகனா இருக்கலாம்.ஆனா..
உங்க அப்பாவை பொறுத்த வரை நான் ஒரு நண்பன் .கவலைப்படாதீங்க. நான் இருக்கேன்.
அப்பா ஸ்தானத்துல இருந்து என்னைக்கும் உங்களுக்கு நான் இருப்பேன்,என்ன உதவி வேணும்னாலும் என் கிட்டே கேளுங்கன்னு 'மகன்கள்கிட்டே சொன்னார். .
அவர் சொன்ன வார்த்தைகள் இன்னைக்கும் அந்த குடும்பத்தோட காதுகள்ல ஒலிச்சுக்கிட்டு இருக்கு."
சம்பவம் 2: நள்ளிரவு 2 மணிக்கு தட்டப்பட்ட கதவு!
"இப்ப ரெண்டாவது சம்பவம். இது சினிமா உலகத்துல நடந்த ஒரு த்ரில்லர்னு கூட சொல்லலாம். நள்ளிரவு 2 மணி... சிவாஜி சார் வீட்ல எல்லாரும் நல்ல தூக்கத்துல இருக்காங்க. திடீர்னு கதவு பலமா தட்டப்படுது. கதவைத் திறந்தா அங்க நிக்கிறது ஒரு வில்லன் நடிகர்! அவர் வேற யாரும் இல்ல, நடிகர் அசோகன்."
"பதறிப்போன சிவாஜி, 'என்னப்பா அசோகன்? இந்த நேரத்துல? ஏதாவது பிரச்சனையா?'ன்னு கேட்க, அசோகன் செஞ்ச ஒரு விஷயம் சிவாஜியை உறைய வச்சது. சிவாஜியை அப்படியே கட்டிப்பிடிச்சுக்கிட்டு, 'உன்னை இப்பவே பார்த்து இத நா சொல்லலேன்னா எனக்குத் தூக்கமே வராதுயா!' அப்படின்னு கத்துறாரு. அப்போதான் விஷயம் தெரியுது ., 'ஆலயமணி' படம் பார்த்துட்டு அந்த நடிப்போட பாதிப்புல அசோகன் ஓடி வந்திருக்காருன்னு."
நைட் ஷோ முடிஞ்சதும் அசோகன் தன் வீட்டுக்கு கூட போகலே.அப்ப நைட் ரெண்டு மணி .அதுதான் இந்த சம்பவத்தோட த்ரில்லர் திருப்பம்.
"இங்கதான் சிவாஜியோட இன்னொரு முகம் தெரியுது. 'சரிப்பா கிளம்பு'ன்னு சொல்லாம, தன் மனைவி கமலா அம்மாவை எழுப்பி,'இவன் நம்ம திருச்சிக்காரன்... தொழில் தெரிஞ்ச ஆளு. இவன் பாராட்டுறான்னா அது எனக்கு அவார்டை விட பெருசு. சினிமா விட்டதும் அப்படியே வந்துட்டான் , சாப்பிட்டு இருந்திருக்க மாட்டான் ..இவனுக்கு உடனே சமைச்சுப் போடு 'ன்னு சொல்லி, விடிய விடிய ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கிட்டே சினிமாவை பத்தி பேசுறாங்க.
நட்சத்திரக் குடும்பங்கள்ல திடீர்னு விருந்தினர்கள் வர்றது சகஜம் தான். ஆனா ஒரு நடிகன் பாராட்ட வீட்டுக்கு வந்த அந்த நேரத்துலே , ஒரு குடும்பமே விடியற்காலையில எழுந்து சமைச்சு, விருந்து போடுறதுங்கிறது எவ்வளவு பெரிய விஷயம்! அசோகனும், சிவாஜியும் அன்னைக்கு விடிய விடிய சினிமாவைப் பத்தியும், அந்தப் படத்தோட நுணுக்கங்களைப் பத்தியும் பேசிக்கிட்டே சாப்பிட்டாங்க பாருங்க... அதுதான் உண்மையான 'கலை நட்பு'.
கொஞ்ச நாள் கழிச்சு இந்தக் கலை நட்பு இடையில பிரேக் ஆயிடுச்சு. ஆனாலும் , கதையில ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கு. ஒரு கட்டத்துல ரெண்டு பேருக்கும் இடையில மனக்கசப்பு வந்து பேச்சுவார்த்தையே நின்னு போச்சு. பல வருஷம் கழிச்சு அசோகன் உடம்பு முடியாம ஹாஸ்பிட்டல்ல இருக்காரு. இப்போ சிவாஜி என்ன செஞ்சிருப்பாருன்னு நினைக்கிறீங்க?"
"பழைய கோபத்தை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு ஓடிப் போறாரு. அசோகன் அக்காவைப் பார்த்து, 'அசோகன் இனிமே கஷ்டப்பட்டு நடிக்க வேணாம்... அவனுக்காக ரெண்டு படம் நான் நடிச்சுத் தர்றேன், அந்தப் பணத்துல அவன் நிம்மதியா இருக்கட்டும்' அப்படின்னு சொன்னாரு.
திரையில மேக்கப் போட்டு நடிச்ச நடிகர்களை நாம பார்த்திருக்கோம். ஆனா, மனசுக்குள்ள மேக்கப் போடாம வாழ்ந்த அந்த சிவாஜியைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அதை கமெண்ட்ல சொல்லுங்க
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக