வணக்கம் நண்பர்களே! இன்னைக்கு இருக்கிற டெக்னாலஜில, சும்மா ஒரு பட்டனை தட்டுனா போதும்... கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்ல ஆயிரம் அதிசயங்களை நம்ம கண் முன்னாடி கொண்டு வந்திடலாம்.
ஆனா, எந்த டெக்னாலஜி வசதியுமே இல்லாத அந்த காலத்துல, 'இயற்கையோட பிரம்மாண்டத்தை அப்படியே திரையில எப்படிக் கொண்டு வர்றது?' அப்படின்னு யோசிச்சப்போ கிடைச்ச ஒரு விடைதான் 'அணைக்கட்டுகள்,
பார்க்குகள்.
கேமரா லென்ஸுக்கும், சினிமா பாட்டுக்கும் அணைக்கட்டுகள் ,பார்க்குகள் ஒரு பெரிய 'லவ் ஸ்பாட்'னே சொல்லலாம். குறிப்பா, அந்த காலத்துல 35mm கேமராக்களுக்கு பெரும்பாலும் அணைக்கட்டு ,பார்க்குகளை விட ஒரு சிறந்த தீனி வேற எதுவுமே இல்லைன்னு சொல்லலாம்.. அந்த நீளமான அணை, மேல இருந்து ஆர்ப்பரிச்சு கொட்டுற தண்ணி... இதையெல்லாம் வைட் ஆங்கிள்ல பார்க்கும்போது தியேட்டர்ல உட்கார்ந்திருக்கிற நமக்கு ஒரு மிரட்டலான உணர்வைத் தரும்.
தண்ணியில பட்டுத் தெறிக்கிற சூரிய வெளிச்சம், ஒரு நேச்சுரலான ஃபில்டர் மாதிரி கேமராவுக்கு உதவியா இருக்கும்.கறுப்பு-வெள்ளை காலத்துல அந்த சாம்பல் நிற நிழல்களும், கலர் படங்கள் வந்தப்போ அந்த நீல நிற நீரும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு பெரிய கிஃப்ட்னே சொல்லலாம்.
அதுமட்டும் இல்லாம, அந்த மதகுகள் திறக்கும்போது வர்ற 'ஹோ'ங்கிற சத்தம் இருக்கே... அது இசையமைப்பாளர்களுக்கு ஒரு தனி உத்வேகத்தையே கொடுத்துச்சு. அந்த இரைச்சலுக்கு ஈடுகொடுத்து, கணீரென்ற குரல்ல பாடி அசத்துற பாடகர்கள் கிடைச்சப்போ, காட்சியும் இசையும் ஒண்ணா சேர்ந்து வேற லெவல் பரவசங்களை கொடுத்தது .
குறிப்பா, கர்நாடகா கிருஷ்ணராஜ சாகர் அணை மாதிரியான இடங்கள்ல சாயங்கால நேரத்துல ஷூட் பண்ணும்போது, அந்த ஆர்டிபிஷியல் லைட்டுகளும் , தண்ணியும் சேர்ந்து ஒரு மாயலோகத்தையே கேமராவுக்குள்ள கொண்டு வந்திடும். சொல்லப்போனா, அணைக்கட்டுகள்ங்கிறது வெறும் இன்ஜினியரிங் அதிசயம் மட்டும் இல்ல, அது ஒளிப்பதிவாளர்களோட ஒரு கனவு இல்லம்! அதே போலே பார்க்குகளும் ரம்மியமான இயற்கை சூழலை காட்ட உதவியா இருந்துச்சு.
சரி, இப்போ இந்த இன்ஜினியரிங் பிரம்மாண்டத்தை, கலை அற்புதமா மாத்துன 'நடிகர்திலகம்' சிவாஜி கணேசன் பட பாடல்களைப் பத்தி நாம பார்ப்போம்..."
முதல் விஷயமா உத்தமபுத்திரன். மைசூர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுலே ,உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே பாட்டு எடுக்கப்பட்டது. இந்தப் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்ற சமயம் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்திருக்கு. அது என்னான்னா ,அந்தக் காலத்துல காட்சிகளை ஜூம் பண்ணி எடுக்கிற டெக்னிகல் விஷயம் அந்த கால கேமராவில் இல்லை .படப்பிடிப்பு நடந்த இருந்த சமயத்திலே வெளிநாட்டுகாரர் ஒருத்தர் அங்க இருந்த இயற்கை காட்சிகளை படம் பிடிச்சுட்டு இருந்தார். அவர் வைத்திருந்த கேமராவில் ஜூம் லென்ஸ் வசதி இருந்துச்சி .அது தெரிஞ்ச ஒளிப்பதிவாளர் அவர் கிட்ட இருக்கிற அந்த ஜூம் லென்ஸ் வாங்கி, இந்தப் பாட்டுல வர்ற ஒரு ஷாட்டை மட்டும் எடுத்தார் ..அப்படி தமிழ் சினிமாவுல ஜூம் லென்ஸ் மூலமாக எடுக்கப்பட்ட முதல் முதல் படம் முதல் காட்சி இந்த உத்தமபுத்திரன் திரைப்படம் தான். சிவாஜி பத்மினி இந்த பாடல் காட்சியில் நடிக்க, மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டுல படம் பிடிக்கப்பட்டது இந்த பாடல் காட்சி.
சாத்தனூர் அணைக்கட்டு. அந்த காலத்துல நிறைய தமிழ் சினிமாக்கள்ல இந்த அணைகட்ட பார்த்து இருக்கலாம் நீங்க .
தெய்வமகன் படத்துலே வர்ற காதல் மலர்க் கூட்டம் ஒன்று பாட்டு கூட அதுலே ஒண்ணு. சாத்தனூர் அணைக்கட்டு பார்க்கை நல்லாவே கவரேஜ் பண்ணி எடுத்திருப்பாங்க இந்த பாட்டுலே.
ஜெயலலிதாவையும் தோழிகளையும் ஈவ் டீசிங் செஞ்சு சிவாஜி பாடற ரகளையான பாட்டு இது.
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே பாடல். அருணோதயம் படத்தில இடம் பெற்ற இந்த பாடலும் சாத்தனூர் அணைக்கட்டுலே படம் பிடிக்கப்பட்டதுதான்.
செல்வம் படத்துலே இடம் பெற்ற அவளா சொன்னால் இருக்காது பாட்டையும் ஒரு அணைக்கட்டுலே படம் பிடிச்சு இருப்பாங்க.
எங்கிருந்தோ வந்தாள் படத்தில் வரும் சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டும் மைசூர் பிருந்தாவன் அணைக்கட்டு பகுதிலே எடுக்கப்பட்ட பாடலே.
நெய்யாறு அணைக்கட்டில் எடுக்கப்பட்ட பாடல் தீபம் படத்துலே இடம் பெற்ற அந்தப்புரத்தில் ஒரு மகாராணி பாட்டு.சிவாஜி சுஜாதா டூயட் பாட்டு .
மன்னவன் வந்தானடி படத்துலே இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாட்டு காதல் ராஜ்ஜியம் எனது.இந்த பாட்டை மணிமுத்தாறு அணைக்கட்டில் எடுக்கப்பட்டது.
நேபாளத்தில் உள்ள அணைக்கட்டு பகுதிகள்லே எடுக்கப்பட்ட பாட்டுதான் இமயம் படத்துலே வர்ற கங்கை யமுனை இங்குதான் சங்கமம் பாட்டு. சிவாஜி ஸ்ரீவித்யா டூயட் பாட்டு .
அந்தமான் காதலி படத்துலே வர்ற நினைவாலே சிலை செய்து பாட்டும் அந்தமானை பாருங்கள் பாட்டும் அந்தமான் தீவு அணைக்கட்டுலே எடுக்கப்பட்டது.
நல்லதொரு குடும்பம் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல் செவ்வானமே பொன்மேகமே. இந்தப் பாடல் எடுக்கப்பட்ட இடம் ஆழியாறு அணைக்கட்டு பொள்ளாச்சி .
திரிசூலம் படத்தில் இடம் பெற்ற என் ராஜாத்தி வாருங்கடி பாட்டு காஷ்மீர் ஸ்ரீநகர் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த கார்டன்லே படம் பிடிக்கப்பட்டது.
அன்பைத் தேடி பட பாடல்கள் ரெண்டு மைசூர் பிருந்தவன் அணைக்கட்டுலே படம் பிடிக்கப்பட்ட பாடல்களாகும். அந்த ரெண்டு பாட்டுகள், ஒரு சித்திர மண்டபத்தில் ,புத்தி கெட்ட பொண்ணு ஒண்ணு..
இன்னும் நிறைய பாட்டுக இருந்தாலும் இந்த பதிவுலே ஓரளவுக்கு சொல்லியிருக்கேன். இதுல விடுபட்ட விஷயங்கள் இருந்தால் அதை கமெண்ட்டுலே சொல்லுங்க.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக