1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சனிக்கிழமை சக்கரவர்த்தி


​நடிகர் திலகத்தின் சனிக்கிழமைச் சாதனைகள்: 
​பொதுவாகவே, புதிய திரைப்படங்களை சனிக்கிழமைகளில் வெளியிடத் தயாரிப்பாளர்கள் பெரும் தயக்கம் காட்டுவார்கள். வார இறுதி விடுமுறையைக் கணக்கில் கொண்டு பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளிலும், அல்லது பண்டிகை கால விசேஷ நாட்களிலுமே திரைப்படங்கள் திரைக்கு வருவது காலங்காலமாகப் பின்பற்றி வரும் ஒரு நடைமுறை.
​ஆனால், இந்த விதிகளுக்கெல்லாம் விதிவிலக்காகத் திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். தமிழ் சினிமா வரலாற்றில் சனிக்கிழமைகளில் அதிகப்படியான திரைப்படங்களை ரிலீஸ் செய்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. 
​சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்த நடிகர் திலகத்தின் திரைப் பயணத்தில், 
எண்ணற்ற படங்கள் இதுபோல சனிக்கிழமைகளில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றுள் காலத்தால் அழியாத  மிக முக்கியமான 25 திரைப்படங்களைப் பற்றி இந்தப் பதிவில் நாம் விரிவாகக் காணலாம்.
​தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு நடிகரின் இரண்டாவது படம் என்பது எப்போதும் ஒரு சவாலான விஷயம். முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.
அந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, 1952-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி, ஒரு சனிக்கிழமை அன்று 'பணம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்.அது வியாழக்கிழமை. ஆனால் அந்த தேதியில் கூட இப்படம் வெளியிடப்படவில்லை.
பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் 'காதல் காவிய ஜோடி' என்று புகழப்பட்ட சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி முதன்முதலில் இணைந்து திரையில் தோன்றியது அந்தச் சனிக்கிழமைதான்.

நடிகர் திலகத்தின் 25 வது திரைப்படம் கள்வனின் காதலி .இந்த திரைப்படம் வெளியான தேதி 13.11.1955.
இந்த தேதியும் ஒரு சனிக்கிழமை நாளே. நடிகை பானுமதி சிவாஜியுடன் நடித்த முதல் திரைப்படம் இது. கல்கியின் நாவல் திரைப்படம் ஆக்கப்பட்டது.

சிவாஜி கணேசன் நாடக சினிமா உலகுக்கு வர காரணமே அவர் சிறு வயதில் பார்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் தெருக்கூத்து தான். சினிமா உலகுக்கு வந்த பின்பு வீரபாண்டிய கட்டபொம்மனை  திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பதை தன்னுடைய கனவாகக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளியானது ஒரு சனிக்கிழமை நாளில் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான தேதி 16.5.1959.மாபெரும் வெற்றி பெற்ற வரலாற்று வெள்ளி விழா திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன். 

சிவாஜி கணேசன் அவர்கள் உடல் ஊனமுற்றவராக நடித்த திரைப்படம் பாகப்பிரிவினை. திரைப்படம் வெளிவந்த தேதி 31.10.1959.இதுவும் ஒரு சனிக்கிழமை நாளே. இந்த திரைப்படம் மதுரையில் 216 நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பாசத்தை மையமாகக் கொண்ட படங்களில்  மாஸ்டர் பீஸ் தலையான படம் பாசமலர். இந்த திரைப்படமும் ஒரு சனிக்கிழமை நாளில் வெளிவந்தது. வெளிவந்த தேதி 
27.5.1961.இது சிவாஜியின் அன்னையாரின் பெயரான ராஜாமணி பிக்சர்ஸ் என்ற பேனரில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு வெள்ளி விழா காவியம். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக டாக்டர் வேடத்தில் நடித்த திரைப்படம் பாலும் பழமும். இது சிவாஜி பீம்சிங்கூட்டணியின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று .இந்தத் திரைப்படம் வெளியானதும் ஒரு சனிக்கிழமை நாளில்தான்.படம் வெளியான தேதி 9.9.1961.
இது ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த முதல் திரைப்படம் பலே பாண்டியா. இந்த திரைப்படமும் ஒரு சனிக்கிழமை நாளில் தான் வெளிவந்தது. படம் வெளியான தேதி 26.5.1962.

சிவாஜி பிலிம்ஸ் வண்ணத்தில் எடுத்த காவிய காதல் திரைப்படம் புதிய பறவை. ஒரு காதல் கதையை ஹாலிவுட் தொழில் நுட்ப தரத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியானதும் ஒரு சனிக்கிழமை நாளில் தான்.இந்த திரைப்படம் வெளியான தேதி 12.9.1964.

நாத்திக உணர்வுகள் தலைதூக்கி கொண்டிருந்த அந்தக் காலகட்ட தமிழகத்தில் ஆத்திகப் படங்கள் எடுப்பது என்பது சவாலாக இருந்தது. அதை எதிர்க்கவே ஒரு நாத்திக கூட்டம் இருந்தது. அந்த நாத்திக கூட்டத்தை பொருட்படுத்தாமல் ஒரு பிரம்மாண்டமான ஆத்திகப் படத்தை சிவாஜி கணேசன் ஏ பி நாகராஜன் கூட்டணி எடுத்தது.பிரம்மாண்டமான வசூல் சாதனையையும்  செய்தது .அந்த திரைப்படம் திருவிளையாடல் .இந்த கடவுள் பக்தி படத்தையும் கூட ஒரு சனிக்கிழமை நாளில் தான் வெளியிட்டார் சிவாஜி. படம் வெளியான தேதி 31.7.1965.
மகா வெற்றியடைந்த வெள்ளி விழா காவியம் இது .

முப்பெரும் தேவிகள் போட்டி போட்ட கல்வியா செல்வமா வீரமா என்ற சாகச படத்தையும் சிவாஜி ஏ பி நாகராஜன் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு கொடுத்தது. இந்த திரைப்படமும் வெளிவந்த நாள் சனிக்கிழமை. திரைப்படம் வெளியான தேதி 3.9.1966.
100 நாள் வெற்றி திரைப்படம். 

நாதஸ்வரமா பரதமா எது உயர்ந்தது என்ற சிக்கலான கேள்விக்கு மிக அருமையான பதிலைச் சொன்ன தில்லானா மோகனாம்பாள்  திரைப்படமும் 
ஒரு சனிக்கிழமை நாளில் தான் வெளியிடப்பட்டது. தமிழகத்தை மிகவும் அருமையான சங்கீதத்தால் நனைத்த இந்த திரைப்படம் வெளியான தேதி 27.7.1968..இது 100 நாள் ஓடிய வெற்றிவிழா திரைப்படம். 

பிரெஸ்டீஜ் என்ற வார்த்தையை பட்டப் பெயர் ஆக்கிய கௌரவமாக கொண்ட பத்மநாப ஐயராக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொந்த திரைப்படம் வியட்நாம் வீடு. இந்தத் திரைப்படம் வெளியானதும் ஒரு சனிக்கிழமை நாளில் தான். படம் வெளிவந்த தேதி 11.4.1970.இதுவும் 100 நாள் ஓடிய வெற்றி காவியம் 

நடிகர் திலகத்தின் 150 வது சிறப்பு திரைப்படம் சவாலே சமாளி. இந்த படம் வெளிவந்த தேதி 3.7.1971.
இந்த திரைப்படம் வெளியானதும் ஒரு சனிக்கிழமை நாளில்தான்.
இது 100 நாட்களுக்கு மேல் கூடிய சூப்பர் ஹிட் திரைப்படம். 

சிவாஜி என்ற மகா நடிகனுக்கு ஏற்ற கதைக்களமாக அமைந்த திரைப்படம் ஞான ஒளி. இந்த திரைப்படமும் சனிக்கிழமை நாளில் தான் வெளிவந்தது. படம் வெளிவந்த தேதி 11.3.1972.
இதுவும் 100 நாள் ஓடிய வெற்றி விழா திரைப்படம் .

ஒரு கிராமத்தில் படத்தை எடுத்து பட்டணத்தையும் ஆட்டம் போட வைத்த கிராமிய மாஸ் மசாலா திரைப்படம் பட்டிக்காடா பட்டணமா. இந்த திரைப்படம் வெளிவந்தது ஒரு சனிக்கிழமை நாளில். படம் வெளியான தேதி 6.5.1972.
மிகப்பெரும் வெற்றி பெற்ற வெள்ளிவிழா திரைப்படம் இது. 

தமிழ் சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படம். ராஜராஜ சோழன் வாழ்க்கையின் ஒரு பகுதியை வரலாறாக சொன்னபடம். அந்த வரலாற்று அரசனை நினைக்கும் போது சிவாஜியையும், நடிகர் திலகத்தை நினைக்கும் போது அந்த ராஜராஜ சோழனையும் நினைவுகளில் வருவதை தவிர்க்க முடியாத வகையில் வெளிவந்த திரைப்படம் ராஜராஜ சோழன். இந்த திரைப்படமும் ஒரு சனிக்கிழமை நாளில் தான் வெளி வந்தது .படம் வெளியான தேதி 31.3.1973.

ஒரு நடிகனாக இந்த சமுதாயத்துக்கு தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை திறம்படச் செய்த நாடக நடிகனாக சிவாஜி அவர்கள் வாழ்ந்த திரைப்படம் பல வேடங்களில் நடித்த ராஜபார்ட் ரங்கதுரை. இந்த திரைப்படமும் ஒரு சனிக்கிழமை நாளில் தான் வெளிவந்தது. படம் வெளிவந்த தேதி 22.12.1973.இதுவும் ஒரு வெற்றி திரைப்படம். 

ஏட்டு கான்ஸ்டபிள் சப் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் டிஎஸ்பி கமிஷனர் இப்படி எத்தனை விதமான போலீஸ் வேடங்களில் எந்த ஒரு நடிகன் நடித்தாலும் அத்தனைக்கும் முன்னுதாரணமான போலீஸ் வேடம் என்றால் அது எஸ் பி சௌத்ரி.அந்த எஸ்பி சௌத்ரியாக  சிவாஜி வாழ்ந்த தங்கப்பதக்கம் திரைப்படமும் ஒரு சனிக்கிழமை நாளில் தான் வெளிவந்தது. படம் வெளியான தேதி 1.6.1974.இது சிவாஜி புரொடக்சன் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது .
அதிரடியாக வசூல் செய்த வெள்ளிவிழா திரைப்படம் இது. 

27.1.1979 ல் வெளியான திரைப்படம் திரிசூலம். இதற்கு முந்தைய தினம் குடியரசு தினம் வெள்ளிக்கிழமை. பெரும்பாலும் அந்த தேதியில் தான் படத்தை வெளியிடுவார்கள். சிவாஜி ப்ரொடக்சன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் அதற்கு அடுத்த நாளான ஒரு சனிக்கிழமையில் வெளியிடப்பட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.இது ஒரு இன்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படம் .

6.2.1982 ல் வெளியான  திரைப்படம் வா கண்ணா வா .இந்த திரைப்படமும் ஒரு சனிக்கிழமை நாளில் தான் வெளியானது. இதுவும் சிவாஜி ப்ரொடக்ஷன் தயாரிப்பு.
100 நாள் ஓடிய திரைப்படம் இது.

24.9.1983 ல் வெளியான திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. இந்த திரைப்படமும் சனிக்கிழமை நாளில் தான் வெளியானது.
100 நாள் ஓடிய படம்.

14.4.1984 ல் வெளியான திரைப்படம் வாழ்க்கை .இதுவும் சனிக்கிழமை நாளில் தான் வெளியானது.100 நாள் ஓடி வெற்றி அடைந்த திரைப்படம் இது .

நடிகர் திலகத்தின் 275 வது திரைப்படம் புதிய வானம். இந்த திரைப்படம் வெளியான  தேதி 
10.12.1988.இதுவும் 100 நாள் திரைப்படம். 

நடிகர் திலகத்துடன் மோகன்லால் இணைந்து நடித்த  மலையாள திரைப்படம் ஒரு யாத்ரா மொழி.இந்த திரைப்படம் வெளியான தேதி
13.9.1997.100 நாள் ஓடி  வெற்றி அடைந்த திரைப்படம். 

சனிக்கிழமையில் வெளியான ஒரு குறிப்பிட்ட 25 படங்களை மட்டுமே இந்த பதிவில் நான் சொல்லி உள்ளேன். இன்னும் நிறைய படங்கள் சனிக்கிழமையில் வெளியாகி உள்ளன. 

காலத்தை வென்ற சனிக்கிழமை நாயகன்...
​திரைத்துறையில் வெள்ளிக்கிழமை என்பது ஒரு படத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாளாகக் கருதப்படுகிறது. ஆனால், 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவர்களைப் பொறுத்தவரை, கிழமைகள் வெறும் நாட்கள்  மட்டுமே என்பதை இந்தச் சாதனைகள் நிரூபிக்கின்றன. தயாரிப்பாளர்கள் அஞ்சிய சனிக்கிழமைகளை, தன் அசாத்திய நடிப்பால் சரித்திர நாட்களாக மாற்றியவர் அவர்.
​ இந்தப் பயணம், 'பணம்' முதல் 'ஒரு யாத்ரா மொழி' வரை பல தசாப்தங்களைக் கடந்து, சனிக்கிழமைகளைச் சாதனைக் கிழமைகளாக மாற்றிக் காட்டியுள்ளது. ஒரு நடிகரின் மீது ரசிகர்கள் வைத்திருந்த அளப்பரிய காதலும், தன் கலைத்திறன் மீது அந்த மகா நடிகன் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுமே இந்த "சனிக்கிழமை விந்தைக்கு" மிக முக்கியக் காரணம்.
​தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும், எந்தக் கிழமையில் படம் வெளியானாலும், மக்கள் வெள்ளத்தைத் திரையரங்கிற்கு இழுத்து வர முடியும் என்று நிரூபித்த 'ஒரே ஒரு' சிம்மக்குரலோன் நடிகர் திலகம் மட்டுமே! காலங்கள் கடந்தாலும், இந்த சனிக்கிழமைச் சாதனைகள் அவர் புகழுக்கு மேலும் ஒரு மகுடமாய் என்றென்றும் நிலைத்திருக்கும்.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்