1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

youtube யார் top

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் மற்றும் 'எம்.ஜி.ஆர் ஆகியோரின் திரைப்பயணம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றின் ஒரு அங்கமாகும். கருப்பு-வெள்ளை காலம் முதல் வண்ணப் படங்கள் வரை இவர்கள் செய்த சாதனைகள் இன்று டிஜிட்டல் யுகத்திலும், குறிப்பாக யூடியூப் போன்ற தளங்களில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. இன்றைய தலைமுறையினர் கூட இவர்களது நடிப்பையும், வசன உச்சரிப்பையும், சண்டைக் காட்சிகளையும் வியந்து பார்த்து வருகின்றனர்.
​பழைய திரைப்படங்கள் பலவும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு (Remastered) யூடியூபில் பதிவேற்றப்படும்போது, அவை பல லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கின்றன. குறிப்பாக, பாடல்களைத் தாண்டி ஒரு முழுத் திரைப்படத்தையும் அமர்ந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இவர்களது அழியாத புகழுக்குச் சான்றாகும்.

கருப்பு-வெள்ளை காலத்திலிருந்து வண்ணப் படங்கள் வரை இவர்களது ஆதிக்கம் திரையரங்குகளில் திருவிழாக் கோலத்தை உருவாக்கியது.
ஒரு காலக்கட்டத்தில் திரையரங்கு வாசலில் முட்டி மோதிய ரசிகர்கள், இன்று தங்களது கைபேசிகளில் யூடியூப் (YouTube) தளத்தின் வழியாக இவர்களது சாதனைகளைக் கொண்டாடி வருகின்றனர். இந்த டிஜிட்டல் யுகத்திலும் இவர்களது திரைப்படங்கள் பல கோடி பார்வைகளைப் பெற்று வருவது, இவர்களது கலைத்திறன் காலத்தை வென்றது என்பதற்குச் சான்றாகும். 

இப்போது அதாவது 2026 ஜனவரி மாத நிலைப்பாட்டில் இப்போது இருக்கும் Youtube ஸ்டேட்டஸ் நிலவரம்.
இவர்களின் திரை ஆளுமையை விளக்கும் வகையில், தலா 11 திரைப்படங்கள் மற்றும் அவற்றின் யூடியூப் வரவேற்பு குறித்த விரிவான கட்டுரை இதோ:

1.நடிகர்திலகத்தின் படங்களில் முதலில் முண்ணனியில் இருப்பது வசந்த மாளிகை.பார்வைகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சம் பார்வைகள். இந்த வீடியோ Upload செய்யப்பட்ட தேதி 3 ஏப்ரல் 2021.அப்லோட் செய்த சேனல் சுரேஷ் புரொடொக்சன்ஸ்.61000 லைக்குகள் கிடைத்துள்ளன.1600 கமெண்டுகள் கிடைத்துள்ளன. 
எம்ஜிஆர் படங்களில் முண்ணனியில் உலகம் சுற்றும் வாலிபன்.98 லட்சம் பார்வைகள்.47000 லைக்குகள்.1800 கமெண்ட்டுகள் .வீடியோ அப்லோட் செய்யப்பட்ட தேதி 13.10.2019.ஆறு வருடம் ஆகி விட்டது.

Youtube தொடங்கியதில் இருந்து பல சேனல்கள்  பழைய திரைப்படங்களை மாறி மாறி  Upload செய்தது. அவற்றுக்கான காப்பிரைட் மாறியதில் இருந்து அவை நீக்கப்பட்டு மீண்டும் பல சேனல்களால் பதிவேற்றம் செய்யப்பட்டன. இது எல்லா வீடியோக்களுக்கும் பொருந்தும். 

இப்போதைய நிலவரப்படி வசந்தமாளிகை படம்தான்  இந்த ஒப்பீட்டில் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ அப்லோட் செய்யப்பட்டு நான்கு வருடங்கள் ஆனது.

2.இரண்டாவதாக..
முதல் மரியாதை படம் 88லட்சம் பார்வைகள் பெற்றுள்ளது .49000 லைக்குகள்,3300 கமெண்ட்டுகள் பெற்றுள்ளது. வீடியோ அப்லோட் செய்யப்பட்டு பதினோரு வருடம் ஆகி விட்டது
இதில் எம்ஜிஆரின் எங்க வீட்டு பிள்ளை பார்த்தவர்கள் எண்ணிக்கை 82 லட்சம்.39000 லைக்குககள்.1600 கமெண்ட்டுகள். வீடியோ அப்லோட் செய்யப்பட்ட தேதி 15 ஏப்ரல் 2016.வீடியோ அப்லோட் செய்யப்பட்டு 9 வருடங்கள் ஆகி விட்டது. வீடியோ அப்லோட் செய்த சேனல் tamil cinema.

3.முன்றாவதாக,
திருவிளையாடல் திரைப்படம் பார்வைகள் எண்ணிக்கை 79 லட்சம்.66000 லைக்குகள்.2100 கமெண்ட்டுகள்.வீடியோ அப்லோட் செய்யபப்பட்ட தேதி 31.7.2020.ஐந்து வருடங்கள் ஆகி விட்டது.அப்லோட் செய்த சேனல் Vision time tamil சேனல்.
இதில் மாட்டுக்காரவேலன் திரைப்படம் 58 லட்சம் பார்வைகள்.29000 லைக்குககள், ,521 கமெண்ட்டுகள் பெற்றுள்ளது.வீடியோ அப்லோட்  செய்யப்பட்ட தேதி 9.4.22. மூன்று வருடங்கள் ஆனது. வீடியோ அப்லோட் செய்த சேனல் tamilmovie.

4.வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் 50 லட்சம் பார்வைகள் .29000 லைக்குகள்.1800 கமெண்ட்டுகள். வீடியோ அப்லோட் செய்யப்பட்ட தேதி 5.11.2019.அப்லோட்செய்த சேனல் ராஜ் வீடியோ விசன்.
இதில் எம்ஜிஆரின் நம்நாடு பார்த்தவர்கள் 56 லட்சம்.24000 லைக்குகள் .823 கமெண்ட்டுகள் .வீடியோ அப்லோட் செய்யப்பட்ட தேதி 16.4.2016.அப்லோட் செய்த சேனல் tamil cinemas சேனல்

5.பட்டிக்காடா பட்டணமா பார்த்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சம். 21000 லைக்குகள்.801 கமெண்ட்டுகள்.வீடியோ அப்லோட் செய்த தேதி 7.7.2017.அப்லோட் செய்த சேனல் தமிழ்ப்படம் சேனல்.
எம்ஜிஆரின் நாடோடி மன்னன் பார்த்தவர்கள் 47 லட்சம்.18000 லைக்குகள்.923 கமெண்ட்டுகள். வீடியோ பதிவேற்றப்பட்ட தேதி 24.3.2016.பதிவேற்றிய சேனல் movizz.

6.சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் பார்த்தவர்கள் 51 லட்சம்.27000 லைக்குகள்.987 கமெண்ட்டுகள்.வீடியோ பதிவேற்றப்பட்ட தேதி 8.8.2020.பதிவேற்றிய சேனல் vision time tamil.
எம்ஜிஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் பார்த்தவர்கள் 32 லட்சம் .13000 லைக்குகள் 676 கமெண்ட்டுகள் .வீடியோ பதிவேற்றப்பட்ட தேதி 15.3.2016.பதிவேற்றிய சேனல் Moviezz.

7.சிவாஜியின் சவாலே சமாளி திரைப்படம் பார்த்தவர்கள் 35 லட்சம் .16000 லைக்குகள் .518 கமெண்ட்டுகள் .திரைப்படம்  பதிவேற்றம் செய்யப்பட்ட தேதி 19.2.2021.ராஜ் வீடியோ விசன் பதிவு செய்தது.
எம்ஜிஆரின் ஒளிவிளக்கு  பார்வைகளின் எண்ணிக்கை 35லட்சம்.17000 லைக்குகள்.591கமெண்ட்டுகள்.வீடியோ அப்லோடு செய்யப்பட்ட தேதி 9.10.2020.வீடியோவை பதிவேற்றிய சேனல் ரத்தத்தின் ரத்தமே சேனல் .

8.நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் திரைப்படத்தை பார்த்தவர்கள் 30 லட்சம் பேர். 19000 லைக்குகள்.706 கமெண்ட்டுகள்.வீடியோ அப்லோடு செய்யப்பட்ட தேதி 12.8.2020.வீடியோவை பதிவேற்றிய சேனல் Visin time சேனல்.
எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவனை பார்த்தவர்கள் 28 லட்சம்.17000 லைக்குகள்.561 கமெண்ட்டுகள். வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது 10.3.2021.பதிவு செய்த சேனல் ராஜலட்சுமி பிலிம்ஸ்.

9.சிவாஜியின் திருவருட்செல்வர் திரைப்படத்தை பார்த்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சம்.லைக் செய்தவர்கள் 19000.வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட தேதி 20.8.2020.வீடியோவை பதிவு செய்த சேனல் vision time சேனல்.
கமெண்ட்டுகள் 623.
எம்ஜிஆரின் குமரிக்கோட்டம் திரைப்படத்தை பார்த்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சம் .13000 லைக்குகள்.279 கமெண்ட்டுகள்.வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட தேதி24.2.2021.வீடியோவை பதிவேற்றம் செய்த சேனல் ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் .

10.சிவாஜியின் திரிசூலம் திரைப்படத்தை பார்த்தவர்களின் எண்ணிக்கை 42 லட்சம். 16000 லைக்குககள்.686 கமெண்ட்டுகள்.யூட்யூபில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட தேதி 28.6.2016.இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த சேனல் South movie  zone என்ற சேனல்.
எம்ஜிஆரின் பட்டிக்காட்டு பொன்னையா திரைப்படத்தை பார்த்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சம். 9800 லைக்குகள்.271 கமெண்ட்டுகள்.வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட தேதி 17.5.2017.வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்த சேனல் bravo hd movies சேனல்.

11.சிவாஜியின் கர்ணன் திரைப்படத்தை பார்த்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சம். 17000 லைக்குகள்.640 கமெண்ட்டுகள்.வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட தேதி 6.8.2020.வீடியோவை அப்லோடு செய்த சேனல் ராஜ் மூவீஸ்.
எம்ஜிஆரின் குடியிருந்த கோவில் திரைப்படத்தை பார்த்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சம் .9400 லைக்குகள்.228 கமெண்ட்டுகள்.வீடியோ அப்லோட் செய்த நாள் 29.4.2019.வீடியோவை பதிவேற்றம் செய்த சேனல் 4K tamil old film என்ற சேனல் ..

ஆய்வு முடிவுகளின் சுருக்கம்:
​வெற்றி விகிதம்: இதில் சொல்லப்பட்ட 11நேரடி ஒப்பீடுகளில், 9 படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முன்னிலை வகிக்கிறார். 1 படத்தில் எம்.ஜி.ஆர் முன்னிலை வகிக்கிறார். 1 படம் (சவாலே சமாளி vs ஒளிவிளக்கு) சமநிலையில் உள்ளது.

​அதிகபட்ச பார்வைகள்: தனித்த ஒரு படமாகப் பார்க்கும்போது, வசந்த மாளிகை (1.15 கோடி) ஒட்டுமொத்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

உலகம் சுற்றும் வாலிபன்: 98 லட்சம் பார்வைகள். 47,000 லைக்குகள் மற்றும் 1,800 கமெண்ட்டுகளுடன் எம்.ஜி.ஆர் படங்களில் முன்னணியில் உள்ளது .

யுடியூப் (YouTube) தளத்தின் இந்தத் தரவுகள் மூலம், டிஜிட்டல் பார்வைகளைப் பொறுத்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் முதலிடத்தில் (Top Performer) இருக்கிறார் என்பது தெளிவாகிறது. அதே சமயம், இரண்டு பேரின் படங்கள் சீரான மற்றும் வலுவான போட்டி அளிக்கும் ஒரு  சக்தியாகவும்  இன்றும் நிலைத்து நிற்கின்றன.
செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்