வணக்கம் மக்களே! இன்னைக்கு நம்ம பார்க்கப்போறது தமிழ் சினிமாவோட ரெண்டு மெகா ஹிட் காமெடி சரவெடிகளைப் பத்திதான்!
ஒண்ணு... ஊட்டியில் 'ஜில்'லுனு எடுத்த 'ஊட்டி வரை உறவு'.
இன்னொண்ணு... சென்னை சிட்டியில 'ஜாலி'யா டிராவல் பண்ணுன 'கலாட்டா கல்யாணம்'.
இந்த ரெண்டு படத்துக்கும் ஒரு செம கனெக்ஷன் இருக்கு. ஒண்ணு குரு ஸ்ரீதர் சார் எடுத்த படம்னா, இன்னொண்ணு அவரோட சிஷ்யன் சி.வி. ராஜேந்திரன் சார் எடுத்த படம். குரு-சிஷ்யன் ரெண்டு பேருமே சிவாஜி சாரை வச்சு காமெடி செஞ்சு மிரட்டியிருப்பாங்க!
ஆனா இந்த ரெண்டு படத்துக்கு பின்னாடியும் நிறைய சுவாரசியமான கதைகள் இருக்கு தெரியுமா?
'என் பாடி ரொமாண்டிக் பாடிடா'னு சொல்லி சிவாஜி சார் மிரட்டுன அந்த சீன் உருவான கதை தெரியுமா?
ஜெயலலிதா நடிக்க வேண்டிய படத்துல கே.ஆர். விஜயா எப்படி வந்தாங்க?
ஒரே நாள்ல ரிலீஸான ரெண்டு சிவாஜி படங்களும் எப்படி 100 நாள் ஓடி சாதனை படைச்சது.?
ஊட்டிவரை உறவு கலாட்டா கல்யாணம் .இந்த ரெண்டு பட ஒரு வரி கதை அமைப்பு என்னான்னா காதலி ,காதல் ..அந்த காதலை எப்படி கல்யாணத்துலே கதாநாயகன் முடிக்கிறான் அப்படிங்கறதுதான் .இந்த ஒரு வரி கதையை வெச்சுட்டு ரெண்டரை மணி நேரம் அந்த காட்சிகள்லே நம்மளை பயணம் செய்ய வைக்கற திரைக்கதை தான் ரெண்டு படங்களும். காமெடி நடிகர்கள் + குணசித்திர நடிகர்களை வெச்சு காமெடிலே அட்டகாசம் பண்ணுன காமெடி படங்கள்.
ஊட்டி வரை உறவு படத்துக்கு பின்னால திருமால் பெருமை ஹரிச்சந்திரான்னு இரண்டு படத்தை கொடுத்த சிவாஜி அடுத்ததா செஞ்ச படம்தான் கலாட்டா கல்யாணம் .
ரெண்டு படத்திலயும் ஸ்மார்ட்டா இருப்பார் சிவாஜி.
ஊட்டி வரை உறவு படத்துல முத்துராமன் கே ஆர் விஜயாவை வச்சு சிவாஜி விளையாண்ட 'Game 'ஆ இருக்கும்.கலாட்டா கல்யாணம் படத்துல ஜெயலலிதா நாகேஷ்.
ஊட்டில ஜில்லுனு எடுத்த படம் ஊட்டி வரை உறவு. சென்னை சிட்டில ஜாலியா டிராவல் பண்ணுன படம் கலாட்டா கல்யாணம்.
ஊட்டி வரை உறவு ஸ்ரீதர் டைரக்சன் செஞ்ச படம். ஸ்ரீதர் கிட்டே அஸிஸ்டன்ட்டா வொர்க் பண்ணுன CV.ராஜேந்திரன் தான் கலாட்டாகல்யாணம் படத்தை டைரக்சன் பண்ணினார். ஸ்ரீதரோட தம்பிதான் CV.ராஜேந்திரன்.ஊட்டி வரை உறவு அண்ணன் படம்னா கலாட்டா கல்யாணம் தம்பியோட படம். ரெண்டுமே 100 நாள் ஓடி ஹிட் அடிச்ச படங்கள்.
ஊட்டிவரை உறவு படத்துக்கு பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன்.கலாட்டா கல்யாணம் படத்துக்கு வாலி எழுதினார்.
ஸ்ரீதர் எழுதிய கதை ஊட்டி வரை உறவு .ஸ்ரீதர் கோபு இணைந்து எழுதிய கதை கலாட்டா கல்யாணம்.
ஸ்ரீதர் சீரியசான படங்களை எடுத்துட்டு இருந்தார்.தயாரிப்பாளர் கோவை செழியன் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை (1964) படத்தைப் போலே ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார்.சிவாஜியும் ஒரு காமெடி படம் எடுத்தா நல்லா இருக்கும்னு நெனச்சார்.
மெரினா கடற்கரை காந்தி சிலை இருக்கற இடத்துலே ஸ்ரீதரும் கோபுவும் கலந்து உரையாடி ரெண்டு மணி நேரத்துக்குள்ளே முடிச்ச கதைதான் ஊட்டி வரை உறவு.
கலாட்டா கல்யாணம் 1965 இந்தியா பாகிஸ்தான் போருக்காக நிதி திரட்டும் விதமா சித்ராலயா கோபு எழுதி சிவாஜி கணேசன் மற்றும் காமெடி நடிகர்கள் நடிக்க , கலாட்டா கல்யாணம் என்ற நாடகத்தை அடிப்படையா வெச்சு அதே பேருலே சிவாஜி தயாரிப்பில் வெளிவந்த திரைப்படமாகும்.
ஊட்டி வரை உறவு படத்திற்கு ஆரம்பத்துலே வெச்ச டைட்டில் வயசு 16 ஜாக்கிரதை , பின்னாலே வயசு 18 ஜாக்கிரதைன்னு டைட்டில் வெச்சார் ஸ்ரீதர்.
இந்த டைட்டில் எல்லாம் சரி இல்ல அப்படின்னு நெனச்சு கடைசியா மாத்துன டைட்டில்தான் ஊட்டி வரை உறவு.
ஜெயலலிதா சிவாஜி ஜோடியா நடிச்ச முதல் படம். படம் எடுத்ததுமே ஒரு பார்க்லே நல்வரவு போர்டை கட்டி ,நல்லஇடம் நீ வந்த இடம்னு சிவாஜி ஜெயலலிதாவை பாத்து பாடற மாதிரி பாட்டை வாலி எழுதினார்.
ஊட்டி வரை உறவு நவம்பர் 1, 1967 தீபாவளிக்கு ரிலீஸ் ஆச்சு. அதே நாளில வெளியான மற்றொரு சிவாஜி படம் இரு மலர்கள் ..சிவாஜி படத்துக்கு சிவாஜி படமே போட்டியா வந்தாலும் ரெண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகி 100 நாள் ஓடுச்சு.
சென்னை அண்ணா டவர் கட்டி முடிக்கப்பட்டு அங்கே எடுத்த முதல் பட சூட்டிங் கலாட்டா கல்யாணம். படத்துலே கடைசி பாட்டு எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் பாட்டு.நாலு ஜோடிகளும் சேந்து பாடற பாட்டு.சில ஷாட்டுகள் மட்டும் தான் ஒண்ணா சேந்த மாதிரி எடுக்க முடிஞ்சது.
நடிகர் நடிகை மத்த பட கால்ஷீட் பிரச்சினை காரணமா மாத்தி மாத்தி எடுத்து ஒண்ணா எடுத்த மாதிரி செட் பண்ணிட்டார்.
ஊட்டி வரை உறவு தெலுங்கில் ஸ்ரீ ரங்க நீத்துலு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது . டி.ஆர். ராமண்ணாவின் உறவினர் ஈ.வி. ராஜன், படத்தை இந்தியில் ரீமேக் செய்யறதுக்கான உரிமையை ஸ்ரீதரிடம் கேட்டார் , ஸ்ரீதர் அதை 50,000 க்கு வித்துட்டார்.
ஆனா பட தயாரிப்பாளர் கோவை செழியன் ஸ்ரீதருக்கு ஒரு சட்ட அறிவிப்பை அனுப்பினார், ரீமேக் உரிமை தயாரிப்பாளருக்குத்தான் சேரும்னு.ஸ்ரீதர் தன் கிட்டே கேக்காமே இதை செஞ்சுட்டார்னு ஒரு பிரச்சினையை கொண்டு வந்தார்.அதனாலே ஸ்ரீதருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
ஒரு நீதிமன்ற வழக்கு நடந்தது.கடைசியா வழக்கு ஸ்ரீதருக்கு சாதகமாக முடிக்கப்பட்டது.
தன் மகன் ராம்குமார் பெயரில் ஆரம்பிச்ச பேனர்ல 'கலாட்டா கல்யாணம்' படத்தை எடுக்கப் போறதா சிவாஜி சார் அறிவிச்சிட்டாரு. ஆனா, கதை எழுதின கோபு சாருக்கு ஒரு தயக்கம். ஏன்னா, அந்தப் படத்தோட ஹீரோ கேரக்டர் ஒரு கல்யாண புரோக்கர் மாதிரி. படம் முழுக்க மாப்பிள்ளை தேடி அலைவாரு, நிறைய இடங்கள்ல மத்தவங்ககிட்ட திட்டு வாங்கணும், அடி கூட வாங்க வேண்டியிருக்கும்.
வேற எந்தப் பெரிய ஹீரோவா இருந்தாலும், "என்ன சார், இதுல ஹீரோவுக்கே உரிய கெத்தே இல்லையே!"ன்னு சொல்லி நடிக்க மறுத்திருப்பாங்க. ஆனா, சிவாஜி அந்த கேரக்டரை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு நடிக்க ஒத்துக்கிட்டாரு. அவருக்கு ஒரு விஷயம் புடிச்சுட்டா அப்புறம் மத்த எதைப்பத்தியும் கவலைப்பட மாட்டாரு.
படத்துல வில்லனா நடிச்ச செந்தாமரை, ஒரு சீன்ல சிவாஜி நாகேஷை போட்டுப் புரட்டி எடுத்து வெளிய தள்ளுவாரு. இந்த சீன் கூட சிவாஜியோட அன்னை இல்லத்துலேதான் எடுக்கப்பட்டது.அடி வாங்கின சிவாஜிக்கு, படத்துல அவரோட காதலியா நடிச்ச ஜெயலலிதா ஒத்தடம் கொடுப்பாங்க. இதைப்பார்த்து வயிறு எரியுற நாகேஷ்,
"உனக்கு என்னடா... அடி வாங்கினாலும் ஒத்தடம் கொடுக்க காதலி இருக்கா. ஆனா நான் வாங்குன அடி தான் மிச்சம்!" அப்படின்னு சொல்லிட்டு, ஜெயலலிதா கிட்ட, "இவன் பெரிய ஹீரோன்னு நினைச்சு அந்த ரவுடியை அடிக்க கூட்டிட்டுப் போனா, அங்க போய் அடி வாங்கிட்டு பொசுக்கு பொசுக்குன்னு விழுறான்"னு கிண்டல் பண்ணுவாரு.
அதுக்கு சிவாஜி சார் அசால்ட்டா, "அவனோட பாடி அடியாள் பாடிடா... அடிக்கிறதுக்குன்னே உடம்பை வளர்த்து வச்சிருக்கான். ஆனா என் பாடி வெறும் ரொமாண்டிக் பாடி!" அப்படின்னு சொல்லிட்டு ஜெயலலிதா ஒரு லுக் விடுவாரு. தியேட்டரே அதிருன சீன் இது!
இந்த வசனத்தை ஸ்கிரிப்ட்ல படிச்சதும் டைரக்டர் சி.வி. ராஜேந்திரன் பயந்துட்டாரு. "கோபு, சிவாஜி அண்ணன் இதைத் தப்பா நினைச்சுக்கப் போறாரு, மாத்திடு!"ன்னாரு. ஆனா கோபு சாருக்கு அந்த சீனை மாத்த மனசே இல்லை.
ஷூட்டிங் அன்னைக்கு சிவாஜி சார் கிட்ட அந்த சீனை கோபு சார் படிச்சுக் காட்டினாரு. அதைக் கேட்டுட்டு சிவாஜி சார் விழுந்து விழுந்து சிரிச்சாரு. "இந்த சீன்ல எந்த வசனத்தையும் மாத்தக் கூடாது, குறிப்பா அந்த 'ரொமாண்டிக் பாடி' வசனத்தை கண்டிப்பா வைக்கணும்"னு சொல்லி ரசிச்சு நடிச்சுக் கொடுத்தாரு.
அப்படியே கோபுவுக்கு ஒரு அன்பான கட்டளையும் போட்டாரு சிவாஜி .
"ஒரு வசனத்தாலயோ, சீன் அமைப்பாலோ ஹீரோவோட இமேஜ் குறைஞ்சிடும்னு ஒரு எழுத்தாளன் என்னைக்குமே நினைக்கக் கூடாது. அப்படி வசனத்தை மாத்தச் சொல்றவன் உண்மையான நடிகனே கிடையாது. 'அம்மா தாயே பிச்சை போடு'ன்னு நீ வசனம் எழுதினா கூட, அந்த கேரக்டரா மாறி நடிச்சு பேர் வாங்குறவன் தான் உண்மையான கலைஞன். நான் எப்படி நடிச்சாலும் என் ரசிகர்கள் ஏத்துப்பாங்க. அதனால நீ எனக்காக யோசிக்காம, கதைக்கு என்ன தேவையோ அதை தைரியமா எழுது!"ன்னு சொன்னார்.
ஊட்டி வரை உறவு படத்துல முதல்ல நடிக்க ஒப்பந்தமானவர் ஜெயலலிதா தான்.ஜெயலலிதா இந்த படத்தில் நடிக்க சில நெருக்கடி இருந்ததா சொல்லுவாங்க. அதனால ஜெயலலிதாவுக்கு பதிலா கே ஆர் விஜயா ஒப்பந்தம் செய்யப்பட்டார் .
அந்த ஒரு விஷயத்துக்காக இந்த படத்துல இந்த பாட்டு எழுதினதா சொல்லுவாங்க. புது நாடகத்தில் ஒரு நாயகி அப்படிங்கற பாட்டு.
சிவாஜியோட காமெடி பட வரிசையில ஊட்டி வரை உறவு கலாட்டா கல்யாணம் இந்த ரெண்டு படங்களும் கண்டிப்பா இருக்கு. இந்த ரெண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக