1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

பாத்தா பசு மரம்

திருவிளையாடல் ..
படம் ஆரம்பிச்சு முதல் பாட்டு பழம் நீயப்பா.
சுந்தராம்பாளுக்கு...
அப்புறம் புராண கதைகள் ஆரம்பிக்கும்.முதல் பகுதிலே பொதிகை மலை உச்சியிலே பாட்டு... தேவிகாவுக்கு.
அடுத்த பகுதிலே நீலச்சேலை கட்டிக்கொண்ட சமுத்திரகாரி பாட்டு... சாவித்திரிக்கு. அப்புறம் ஹேமநாத பாகவதருக்கு...
அதாவது பாலையாவுக்கு. ஒரு நாள் போதுமான்னு. அடுத்து மகாலிங்கத்துக்கு...
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை பாட்டு. இதெல்லாம் இவங்களுக்கு தனிப்பாட்டு வேற .பின்னி இருப்பாங்க.

பதினோரு பாட்டுக படத்துலே .சிவன் மீனவன்னு சிவாஜி போட்ட வேசத்துக்கு பாட்டே இல்லே.
படத்தோட கடைசி பகுதியும் வந்துருது.
எங்கடா தலைவனுக்கு பாட்டே இல்லையான்னு நெனச்சுட்டு இருக்கறப்போ தான் தலைலே விறகு கட்டை தூக்கிட்டு ,
லிங்கத்துலே இருந்து இறங்கி வருவார் சிவாஜி. 
இந்த பகுதிக்கு முன்னாலே வந்த அத்தனை பாட்டுகளும் கொடி கட்டி பறக்குது. இப்ப விறகுவெட்டியா சிவாஜி வர்றாரே .என்னப்பா இது இவ்வளவு பெரிய படம் ,
முக்கால் வாசி முடிஞ்சிருச்சி. தலைவருக்கு இதுலயும் ஒரு பாட்டு இல்லையான்னு நெனப்பு ஓடுது. அப்படியே இந்த விறகு வெட்டி கேரக்டரும் வந்தாச்சு. இதுலே போயி ..
என்ன பாட்டை வெச்சு என்ன ஆகப் போகுதுன்னு வேற நெனப்பு.

விறகு கட்டை, விலை கேப்பாரு ஒரு அம்மா. இவரும் சொல்வாரு. இவ்வளவு விலையான்னு அந்தம்மா அங்கலாய்ப்பு பட,அதுக்கு இவர் சொல்வாரு பாருங்க டயலாக்.தாயி ,ஒரு விறகை எரிச்சா சந்தன வாசனை ,இன்னொன்னு எரிச்சா ஜவ்வாது வாசனைன்னு பலதும் சொல்வாரு.அதைக் கேட்டுட்டு பக்கத்துலே இருக்கறவர் ,இன்னொரு விறகை எரிச்சான்னு கிண்டலா கேட்க,அதுக்கு சிவ சிவாஜி உங்க கதையையே  முடிச்சுடலாம்னு ஒரு பஞ்ச் அடிச்சு தியேட்டரையே அதிர வைப்பாரு.

இப்படி டயலாக்கும் அதிரடியுமா காட்சி போகயிலே,விறகோட அருமையை ஒருத்தர் கேட்க,தியேட்டர் ஸ்பீக்கர் எல்லாம் பெரிய சவுண்ட் வால்யூமுக்கு மாற ,
நாம எதிர்பார்க்காத அந்த செகண்ட் ,ஒரு ஆரம்ப மியூசிக்கும் எல்லாமே ,
படார்ன்னு  இடி போலே TMS வாய்சுலே ஆட்டம் ஆரம்பிக்கும் பாருங்க. 
அந்த காலத்துலே சூப்பரான காட்சின்னா பட்டையை கிளப்புதுன்னு சொல்வாங்க. இப்ப எப்படி தெறி ,மாஸ் ,வேற லெவல்னு சொல்றாங்க. அது மாதிரி ஒரு பட்டாசு வார்த்தை..

பாத்தா பசு மரம் 
படுத்து விட்டா நெடுமரம்னு ஒரு பிட்டை சிவாஜி ஆரம்பிக்கறவே தியேட்டர்லே சோர்வா இருக்கறவங்க,சாஞ்சு சாய்வா பாத்துட்டு இருக்கறவங்க ,பக்கத்துலே கிசு கிசுன்னு பேசிட்டு இருக்கறவங்க எல்லாம் ஆடி போயிருவாங்க.
கேட்டா விறகுக்காகுமா ?
ஞானத்தங்கமே 
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமான்னு ,வரியை முடிக்கைலே ,
அவங்கவங்க பாஷைலே ஒரு வார்த்தை சொல்லி ,
'போட்டாண்டா பாட்டை' ,சும்மா வெடி மாதிரின்னு சொல்ல வெச்சிரும்.

ங்கொப்புரானே !இதுக்காகத்தாண்டா இத்தனை நேரமும் காத்திருந்தோமுன்னு காத்திருந்த ரசிகர் படையை  படமெடுத்து ஆட வெச்சிரும். படம் ஆரம்பிச்சசு ரெண்டு மணி நேரத்துக்கு  மேலே ஆகுது.பட்டுன்னு 
போட்டு பொளக்க வெச்சுருவாங்க,APN,KVM,TMS...

இதுக்கு முன்னாலே வந்த பாட்டெல்லாம் ,சாதாரணம் கிடையாது தான் .எல்லாமே தேவ ராகங்கள். ஆனா தலைவனோட தனி பாட்டுக்காக ...
தவிக்கற கூட்டத்துக்கு தனி சுகம் வேணுமே. தவிச்ச வாயும் ,அதுக்கு கிடைச்ச மழைத் தண்ணி மாதிரியும் ,
அந்த தண்ணி சுகம் சுகமா தொண்டைலே இறங்கற மாதிரி , போகும்.. பசுமரம் பாட்டு  .

ஒரு தடவை தியேட்டர்லே வேற படம் போயிட்டு இருக்கு. எப்படியோ சைலண்டா படம் போயி இன்டர்வெல் கார்டு விழுது. சரிடாப்பா,சூடா ஒரு டீயை குடிச்சுட்டு வந்திடலாம்னு எந்திரிச்சா , இன்டர்வெலுக்காக  தியேட்டரேலே லைட்டுக போடலை .ஆனாலும் ஜனங்க எந்திரிக்க ,போட்டாம் பாரு தியேட்டர்காரன் ,சைடு ரீலு. பாத்தா பசுமரம்னு பாட்டை. சும்மா எக்கோவா அதிறுது. தியேட்டர் முழுக்க. எந்திரிச்ச கூட்டம் அலறி துடிக்குது. ஆ ,ஓன்னு.விசில் பறக்குது .காதை பொளக்குது.
அந்த சைடு ரீல் மேலயே ஸ்லைடு வரும் .மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடு இரவு 1 .30.மணிக் காட்சியாக ...
ஸ்லைடை மினுச் மினுச்சுனு போடறான். பாட்டு முடிஞ்சதும் லைட் எரியுது. ஜனங்க முகத்துலே அவ்வளவு குஷி.. சந்தோசம்.அந்த காலம் எல்லாம் இனி எங்க...

சாமி படத்துலே செம குத்து பாட்டு .சாமியே பாடற மாதிரி..வரிகளை எல்லாம் தீயா கொட்டியிருப்பார் கவிஞர். 
"கட்டழகு மேனியைப் பார் பொட்டும் பூவுமா 
நீட்டி கட்டையிலே படுத்துகிட்டா காசுக்காகுமா "
இந்த வரிக்கு முன்னால ஒரு பிஜிஎம் வரும். அதுலே சிவாஜி ஒரு நடை போடுவாரு.ஒரு 'ரேம்ப் வாக் 'மாதிரி.
அந்த மீனவன் நடையைத்தான்அதிகம் பேசறோம். அதே சிவாஜியோட இந்த நடையையும் பாருங்க. ஒரு சின்ன செகண்ட்தான்.சும்மா அள்ளிட்டு போகும் .
மறுபடி வர்ற இந்த வரிகளுக்கு சிவாஜி கஷ்டப்படாமே சில ஸ்டெப் போட்டிருப்பார்.அதே நம்மை ஆட்டம் போட வெச்சிரும்.
கண்ட மேனிக்கு விசில் பறக்கும். 
எந்த சவாரி செஞ்சாலும் யானை சவாரி மாதிரி வருமா ?அந்த கெத்தே தனி..அதான்  சிவாஜி நடிப்பும்.

'வட்டமிடும் காளையைப் பார் வாட்ட சாட்டமா..'
சும்மா ஏனோதானான்னு எல்லாம் நடிப்பு இருக்காது. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு நெல்லா உடைச்சு எடுக்கற மாதிரி நடிப்பு வந்து விழும். சர்வ சாதாரணமா ..
'வாட்டசாட்ட' வார்த்தைக்கு அது மாதிரி பாடியை ஏத்துவார் .இறக்குவார். அடுத்த வரி வர்றப்போ , 
கூனி வளைஞ்சுகிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமான்னு பாடறப்போ அதுக்கேத்த அந்தபாடி லாங்வேஜ்.

​பாட்டு அப்படியே சூடு பிடிச்சு ஏறிட்டே இருக்கு. அடுத்த வரியை ஆரம்பிக்கிறாரு  .
​"பொன்னும் பொருளும் மூட்டைகட்டி போட்டு வச்சாரு - இவரு"
APN என்ன ஐடியா வெச்சு இந்த பாட்டுலே கேம் ஆடலாம்னு நெனச்சாரோ தெரியலே .
கேம் வேற லெவல்லே போயிட்டு இருக்குன்னு தெரிஞ்சிருப்பார்.மொத்த GAME யும் ஒத்த சிவாஜி ஆடிட்டு இருப்பார்.

​"ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு - ஈசன் போட்ட கணக்கு மாறலையேபோய் விழுந்தாரு..."
இங்கதான் அந்த 'மாஸ்' அட்டாக். வானத்தை பாத்து கை காட்டி ,மொத்த கதையும் இந்த மனுசன நம்பித்தான்டான்னு சொல்லற மாதிரி இருக்கும் .

​அப்படியே அடுத்த அடியை எடுத்து வைக்கிறாரு...
"அறுவடையை முடிக்கு முன்னே வெதைக்க லாகுமா - அட"
அந்த 'அட'ன்னு ஒரு இழு இழுப்பாரு பாருங்க, அங்க நிக்குது நடிப்பு.
​"ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா?"
கடவுளைப் பார்த்து கேக்குற மாதிரி ஒரு கேள்வி. ஆனா கேக்குறது யாரு? அதே கடவுள்தான்!

​"பத்துப் பிள்ளை பெத்த பின்னும் எட்டு மாசமா? - இந்த
​"பாவி மகளுக் கெந்த நாளும் கர்ப்ப வேஷமா?"
அப்படின்னு முடிக்கும்போது, அந்த நக்கல் சிரிப்புல உலக தத்துவத்தையே நையாண்டியா சொல்லி முடிப்பாரு.

​அப்படியே அந்தப் பாட்டு முடியுறப்போ, ஒரு நிமிஷம் தியேட்டரே நிசப்தமாகும் பாருங்க... அங்கதான் நிப்பாரு அந்த பரமேஸ்வரன்!

​அதுவரைக்கும் "பழம் நீயப்பா"ன்னு பக்தி ரசத்துல நனைஞ்சவங்க, "ஒரு நாள் போதுமா"ன்னு கர்நாடக இசையில சொக்குனவங்க எல்லாம், இந்த "பாத்தா பசுமரம்" பாட்டு வந்தவுடனே அப்படியே சீட் நுனிக்கு வந்து "இதுதாண்டா எங்க தலைவன் ஆட்டம்"னு மெய்மறந்து நிப்பாங்க.

​நிஜத்தைச் சொல்லப்போனா, அந்தப் படத்துல வர்ற மத்த பத்து பாட்டும்  'தேவ ராகம்'னா, இது நம்ம ரத்தத்துல கலந்த 'தத்துவ ஆட்டம்'. ஒரு விறகுவெட்டியா, சாதாரண மனுஷனோட பாஷையிலயே உலகத்தோட மொத்த மாயையையும் போட்டு உடைப்பாரே சிவாஜி... அதுதான் அங்க APN செஞ்ச ஆகச்சிறந்த வித்தை.

​TMS சாரோட அந்த கணீர் குரல், KVM சாரோட அந்த அதிரடி இசை, இது எல்லாத்தையும் விட அந்த 'விறகுவெட்டி' வேஷத்துல சிவாஜி காட்டுற அந்த நக்கல், அந்த நடை, அந்த உடல்மொழி... இதெல்லாம் சேர்ந்து அந்தப் பாட்டை வெறும் பாட்டா மட்டும் வைக்காம, ஒரு 'எனர்ஜி பூஸ்டரா' மாத்திடுச்சு.

​கடைசியில அந்தப் பாட்டு முடிஞ்சு, "ஹேமநாதா... உன் செருக்கை அடக்க இதோ ஒரு சாதாரண விறகுவெட்டி வந்துவிட்டான்!"னு அந்த கம்பீரக் குரல்ல சொல்லிட்டு போற மாதிரி போறப்போ, தியேட்டர்ல விசில் சத்தம் காதை பிளக்கும்.

யானை சவாரிக்கு முன்னாடி எந்த சவாரியும் நிக்காது. அதே மாதிரி, எத்தனை 'மாஸ்' ஹீரோக்கள் வந்தாலும், அந்த விறகுவெட்டி சிவாஜியோட அந்த 'ரேம்ப் வாக்'குக்கும், அந்த தத்துவ ஆட்டத்துக்கும் முன்னாடி எதுவுமே ஈடாகாது! அந்த காலம் ஒரு பொற்காலம்... அந்த 'டிஜிட்டல்' இல்லாத காலத்துலயே நம்மளை 'தெறி'க்க விட்ட ஒரே நடிகன்  சிவாஜிதான்!

செந்தில்வேல் சிவராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்